
Date uploaded in London – – 7 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

உலகில் மூலிகைகள், மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது . முதலிடம் வகிக்கும் நாடு சீனா .
ஆறாயிரத்து 600க்கும் மேலான மூலிகைச் செடிகள் (6,600) இருக்கின்றன. இந்தியா ஏற்றுமதி செய்யும் மூலிகை அல்லது மருத்துவ குணமுள்ள முக்கிய தாவரங்கள் :
மஞ்சள், சீரகம், கருமிளகு , ஏலம் ,கொத்தமல்லி, கருவேப்பிலை , பட்டை சோம்பு, இஞ்சி, கிராம்பு, கடுகு, குங்குமப்பூ , ஜாதிக்காய், ஜாதிபத்திரி, வெட்டிவேர் , கத்தாழை , அசுவகந்தி , வேப்பிலை, வெந்தயம், கசகசா
மருந்துச் சரக்கு என்பதைவிட அறுசுவை உணவு தயாரிக்கவே இந்தப் பொருட்கள் அதிகம் பயன்படுகின்றன.
ஆயுஷ் என்னும் மத்திய அரசின் துறை ஏற்றுமதி விஷயங்களை கவனிக்கிறது; லைசென்ஸ் அனுமதி பெற்றே உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
இந்திய மருந்து அல்லது மருத்துவ குணமுள்ள உணவுச் சரக்குகளை அதிகம் இறக்குமதி செய்யும் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. இதையடுத்து ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் வருகின்றன .

5000 கோடி ரூபாய் வியாபாரம் !
இந்தியாவும் சீனாவும் மூலிகை வியாபாரத்தில் 70 சதவிகிதத்தை வைத்துக் கொண்டுள்ளன.
இந்திய ஏற்றுமதிகளின் மதிப்பு 2017ஆம் ஆண்டில் 5000 கோடி ரூபாய். இது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது .
2017ம் ஆண்டின் இறுதியில் ஆயூஷ் இலாகா சார்பில் 4 நாள் மகாநாடு நடந்தது ஆயுஷ் என்பது ஆயுர்வேதா, யோகா, நாட்டு மருந்து , யுனானி, சித்த , ஹோமியோபதி மருத்துவ முறை என்பதன் சுருக்கம் ஆகும்
Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homoeopathy (AYUSH).
சர்வதேச ஆரோக்கிய மகாநாட்டில் 60 நாடுகளைச் சேர்ந்த 1500 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தியாவில் இந்தத் துறையில் வியாபாரம் செய்யும் 250 கம்பெனிகள் இருக்கின்றன .
ஹோமியோபதி மருந்துச் சரக்குகளின் உள்நாட்டு வியாபாரம் ரூ.500 கோடி ; ஏற்றுமதி அளவு ரூ.200 கோடி.
2020-21ல் சுமார் 61 கோடி டாலராக இருந்த மூலிகை ஏற்றுமதி 2021-22 நிதியாண்டில் 63 கோடி டாலராக அதிகரித்தது .
இது தவிர இந்தியாவுக்கு வந்து செல்லுவோர் வாங்கிச் செல்லும் சரக்குகள் இதில் வராது. (நான் ஒவ்வொரு முறை இந்தியா செல்லும்போதும் சித்தரத்தை, கண்டத்திப்பிலி , சுக்கு, சுண்டைக்காய், மணத்தக்காளி வத்தல், பனங்கற்கண்டு , இஞ்சி முரப்பா, அஷ்ட சூர்ண பொடி முதலியன வாங்கி வருகிறேன்).
ஆயுஷ் துறை பல நாடுகளுடன் ஏற்றுமதி ஒப்பந்தமும் செய்துவருகிறது.
மஞ்சள் ஏற்றுமதி

உலகிலேயே மஞ்சள் உற்பத்தி, நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 2022-23 ஆம் ஆண்டில், இந்தியாவில் 3.24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு, 11.61 லட்சம் டன் (உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 75% க்கும் அதிகமானது) உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவில் 30 க்கும் மேற்பட்ட வகையான மஞ்சள் பயிரிடப்படுகிறது, மேலும் இது நாட்டின் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மஞ்சளை அதிகம் உற்பத்தி செய்கின்றன.
மஞ்சளின் உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 62% ஆகும். 2022-23 ஆம் ஆண்டில், 207.45 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1.534 லட்சம் டன் மஞ்சள் மற்றும் மஞ்சள் பொருட்கள் 380 க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
தேசீய மஞ்சள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு, 2023 அக்டோபரில் வெளியிட்டது.
மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி, தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மற்றும் தமிழகத்தில் ஈரோடு என 3 இடங்களில் தேசிய அளவில் தரமான மஞ்சள் சந்தைகள் உள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஈரோடு மஞ்சள் அனுப்பப்படுகிறது. இதனால் மஞ்சள் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு பிறகு மஞ்சளின் தேவை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிகரித்து உள்ளது.
(லண்டனில் எங்கள் வீட்டுக்கு சமையல் செய்து தரும் குஜராத்தி பெண்மணி தினமும் காலையில் மஞ்சள் பொடி கலந்த வெந்நீரைக் குடிப்பாளாம் . எங்கள் வீட்டுக்கு வருகையிலும் அவள் கொண்டுவந்த பாட்டிலில் உள்ள மஞ்சள் நீரைத்தான் குடிக்கிறாள். இன்னொரு இந்தி பேசும் நண்பரை முதல் தடவையாக வீட்டுக்கு அழைத்தேன். காப்பி , தேநீர் , சமோசா எதையும் சாப்பிட மறுத்து விட்டார் . கடையிலிருந்து வாங்கிய பேமஸ் பிராண்ட் தண்ணீர் பாட்டிலை வைத்தேன். அதையும் சாப்பிட மறுத்த அவர் என்னை வியப்பில் ஆழ்த்திய செய்தியைச் சொன்னார். தினமும் தாமிரச் சொம்பில் தண்ணீரை ஊற்றிவைத்து அதை மட்டுமே அருந்துவாராம். வெளியே செல்லும்போதும் அந்த தண்ணீரை மட்டுமே பாட்டிலில் எடுத்துச் செல்லுகிறார்.
என் அப்பா, அம்மாவுடன் சிறு வயதில் ரயில் பயணம் செய்தபோது வெண்கல கூஜாவில் தண்ணீர் கொண்டு சென்ற நாட்கள் நினைவுக்கு வந்தன. மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டேன். என் மகனிடம் இதைச் சொன்னால் கூட கூஜா என்றால் என்ன என்று கேட்பான். அதற்கான படத்தைத் தேடித்தான் கண்டு பிடிக்கவேண்டும்!).
கரு மிளகு ஏற்றுமதி
மிளகு ஏற்றுமதியில் , உலகில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. நாம் ஏற்றுமதி செய்யும் மிளகு அமெரிக்கா, பிரிட்டன், கனடாவுக்குச் செல்கிறது முதலிடம் வகிக்கும் நாடு வியட்நாம். மூன்றாம் இடத்தில் இலங்கை உள்ளது.
—subham–
Tags- மூலிகை, மஞ்சள் , ஏற்றுமதி, ஆயுஷ், மிளகு,