
Post No. 12,895
Date uploaded in London – – – 8 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஒரு வரி சுபாஷிதங்கள்
அதிகஸ்யாதிகம் பலம்!
ச.நாகராஜன்
அழகிய சில சொற்களிலேயே மிக உயர்ந்த கருத்துக்கள் உள்ள சம்ஸ்கிருத சுபாஷிதங்களில் மேலும் சில இதோ:
1. அங்கீக்ருதம் சுக்ருதின: பரிபாலயந்தி|
தான் செய்வதாக ஒத்துக்கொண்ட ஒன்றை நல்லவன் செய்து விடுவான்.
2. அஜீர்ணே பத்யம்ப்யன்னம் வ்யாதயே மரணாய வா|
அஜீர்ணம் இருக்கும்போது, ஒத்துக்கொள்ளும் உணவு கூட உடலைப் படாத பாடு படுத்தும், ஏன் மரணத்தையே கூட விளைவிக்கும்.
3. அதிநிர்மிதனாதக்னிஸ்சந்தனாதபி ஜாயதே|
அதிகமாகக் கடைந்து கொண்டே இருப்பதன் மூலம் சந்தனக்கட்டையிலிருது கூட அக்னியை உருவாக்க முடியும்.
4. அதீத்ய ஹி குணான்சர்வான் ஸ்வபாவோ மூர்தின் திஷ்டதி|
மற்ற எல்லாக் குணங்களையும் விட ஒருவனின் ஒழுக்கம் தலையாயதாக முதலில் நிற்கிறது.
5. அத்யந்தவிமுகே தைவே வ்யர்தம் யத்னம் பௌருஷம்|
விதி எதிராக இருக்குமானால், முயற்சியும், வீரமும் கூட பயனை அளிக்காது.
6.அதிகஸ்யாதிகம் பலம்|
அதிகம், இன்னும் மிக அதிகம் என்பது பலத்தைத் தரும்.
7. அனுயுக்தமப்யூஹதி பண்டிதோ ஜன:|
சொல்லாத கருத்துக்களைக் கூட ஒரு பண்டிதன் புரிந்து கொள்வான்.
8. அந்தஸ்த்ரீபாலமூர்காணாமாக்ரஹோ பலவான் கலு|
கண்பார்வையற்றவர், ஸ்திரீகள், குழந்தைகள், மூர்க்கர்கள் ஆகியோரின் ஆசைகள் மிக அதிகம்.
9. அபராதபரம்பராவ்ருதம் நஹி மாதா சமுபேக்ஷதே சுதம்|
மகன் அதிக பாவங்களைச் செய்தால் கூட அவன் தாயார் அவனை இகழ மாட்டாள்.
10. அமோகோ தேவதானாம் ச ப்ரஸாத: கின்ன சாதயேத்|
தேவதைகளின் ஆசீர்வாதம் அனைத்தையும் தரும்.
11. அர்தஸ்ய புருஷோ தாஸ: தாஸோ ஹ்ரார்தோ ந கஸ்யசித்|
மனிதர்கள் செல்வத்தின் சேவகர்களே, செல்வம் யாருக்கும் சேவகம் செய்வதில்லை.
12. அவஞாத்ருடிதம் ப்ரேம் நவிகர்தும் க ஈஸ்வரK
அலக்ஷியத்தினால் அறுந்துபோன ஒரு காதல் விஷயம் யாராலும் திருப்பிச் சேர்க்கப்பட முடியாது.
13. அசமீக்ஷய ந கர்தவ்யம் கர்தவ்யம் சுசமீக்ஷிதம்|
ஆழ்ந்து சிந்திக்காமல் ஒரு காரியத்தை ஒருவன் செய்யக் கூடாது, சிந்தித்து விட்டால் காரியத்தைச் செய்ய வேண்டும்.
14. அஸ்ய பாபோதரஸ்யார்த்தே கிமநாடி ந நாடகம்!
இந்தப் பாழும் வயிறுக்காக எந்த பாவ காரியத்தைத் தான் நான் செய்யவில்லை?!
15. ஆகதம் து பயம் வீக்ஷ்ய ப்ரதிகுர்யாத்யதோசிதம்|
வரப்போகின்ற அபாயத்தைக் கண்டவுடனேயே ஒருவன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
16. ஆக்ஞா குரூணாம் ஹ்ராவிசாரணீயா|
ஒருவன் தனது குருவின் (அல்லது மூத்தவர்களின்) ஆணையைப் பற்றி சிந்திக்கக் கூடாது. (அதை செயல்படுத்த வேண்டும்)
17. ஆத்மன: ப்ரதிகூலானி பரேஷாம் ந சமாசரேத்|
தனக்கு நலமில்லாத (ப்ரதிகூலமாக இருக்கும்) ஒன்றை பிறருக்கும் செய்யக் கூடாது.
18. ஆபத்காலே ச கஷ்டோபி நோத்ஸாஹசத்யஜுஅதே புதை:|
ஆபத்த்துக் காலத்திலும், கஷ்ட காலத்திலும் அறிஞர்கள் ஒருபோதும் உற்சாகத்தையும் சத்யத்தையும் இழக்கக் கூடாது.
19. ஆஹாரே வ்யவஹாரே ச த்யக்தலஜ்ஜ: சுகீ பவேத்|
உணவிலும் தொழில் விஷயங்களிலும் ஒருவன் வெட்கப்படக் கூடாது, சந்தோஷமாக இருக்க வேண்டும்.
20. இதோ ப்ரஷ்டஸ்ததோ ப்ரஷ்டK
இங்கு வழுக்கி விழுந்தவன் அங்கும் வழுக்கி விழுந்தான்.
21.இந்த்ரோபி லகுதாம் யாதி ஸ்வயம் ப்ரக்யாபிதைர்குணைK
தனது நற்குணங்களை ஒருவன் சொல்லத் தொடங்கினால் இந்திரன் கூட மோசமானவனாகி விடுவான்.
22. ஈர்ஷ்யாம் ஹி விவேகபரியந்திநீ|
மேன்மையான விஷயங்களில், பொறாமை அவற்றைத் துடைத்து அழித்து விடும்.
23. உபாயம் சிந்தயேத்ப்ராஞஸ்ததாபாயம் ச சிந்தயேத்|
ஒருவன் சாதனைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும், அதை அடைவதில் உள்ள அபாயங்களையும் சிந்திக்க வேண்டும்.
24. உபாயேன ஹி யச்சக்யம் ந தச்சக்யம் பாராக்ரமைK
உபாயத்தால் அடையமுடியாத ஒன்று பராக்ரமத்தால் அடைய முடியாது.
25. க்ருத்திச்சித்தவிகாரிணீ|
ஒருவனின் மனதை மாற்ற வல்லது செழுமை.
***