எறும்பு சட்னி சாப்பிடுங்கள் (Press Cutting)

compiled by London Swaminathan

Date – 10-1-2024 

சிவப்பு எறும்பு சட்னிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு!

புவனேஸ்வர்: ஒடிசாவின் பாரம்பரிய உணவான எறும்புச் சட்னிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

ஒடிசாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வருடம் முழுவதும், சிவப்பு `வீவர்’ எறும்புகள் (Red Weaver Ants) ஏராளமாகக் காணப்படும். மலைப் பகுதியில் ‘கை’ என்ற ஒரு வகை நெசவு செவ்வெறும்பு காணப்படுகிறது. Oecophylla smaragdina எனும் இந்த எறும்பு வகை, தான் வாழும் மரத்தின் இலைகளைக் கொண்டு நெய்து ஒரு வீட்டை அமைக்கிறது.

இந்த எறும்பு சட்னி ஒடிசா மக்களால் அதிகம் விரும்பப்படக் காரணம், அதில் உள்ள சத்துகள். அதிக அளவு புரதம், கால்சியம், ஜிங்க் Zinc, வைட்டமின் B-12, இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம்/செப்பு மற்றும் 18 வகையான அமினோ அமிலங்கள் (Amino acids)  இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அங்குள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் சிவப்பு எறும்புகளை அனைத்து இடங்களிலும் காண முடியும்.

மரங்களின் இலைகளில் கூடுகட்டி வாழும் இந்த எறும்புகளைப் பிடித்து சட்னி செய்து சாப்பிடுவது அம்மாநில மக்களின் வழக்கம்.

இந்த எறும்புச் சட்னிக்கு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

இதன் மூலம் எறும்புச் சட்னியின் பயன்கள், சுவை குறித்து உலக மக்கள் அறிந்து கொள்வதற்கு மாநில அரசின் ஆதரவுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஒடிசா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (Press cutting)—subham—

tags- எறும்பு , ஒடிசா மாநிலம், சட்னி, செவ்வெறும்பு 

Leave a comment

Leave a comment