
Date uploaded in London – – 12 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 55
கோவில் எண்கள் –105, 106
105.ஆட்டுக்கல் /ஆற்றுக்கால் பகவதி கோவில்

திருவனந்தபுரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் ஆட்டுக்கல்/ ஆற்றுக்கால் பகவதி கோவில் உள்ளது. அங் கு நடக்கும் பொங்கல் விழா நாடு முழுதும் பிரசித்தி பெற்றது . இதை கண்ணகி கோவில் என்றும் அழைப்பார்கள்.
இந்தக் கோவிலின் தோற்றம் பற்றி ஒரு கதை உள்ளது .
திருவாங்கூர் ராஜ்யத்தின் வீரர்களா கப் பணியாற்றியவர்கள் நாயர்கள் ஆவர். அவர்களில் ஒரு குழுவான முல்லக்கல் வீடு பிரிவின் தலைவர் அருகிலுள்ள ஆற்றில் குளிக்கச் சென்றார். அங்கே ஒரு சிறுமி தனியாக இருப்பதைப் பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்து இளநீர் கொடுத்தார். அதை சாப்பிடுவதற்குள் அந்தப் பெண் மாயமாக மறைந்தாள். அவருக்கு வியப்பும் திகைப்பும் ஏற்பட்டது. ஒன்றும் புரியவில்லை. அன்றிரவு கனவில் அதே பெண் தோன்றி, அவர் வண ங்கிவரும் பகவதியே, தான் என்று அவருக்கு அறிவித்தாள் . அவள் சொன்னபடியே பகவதிக்கு ஒரு கோவிலை எழுப்பினார்.
இந்தக் கோவிலில் கருவறைக்கு மேல், பெரிய விமானம் இருக்கிறது. கோவிலின் நுழைவாயிலை அழகான சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா இந்தக் கோவிலைப் புதுப்பித்தார். ஆஸ்த்தான ஜோதிடர் சங்கரானந்தா சொன்னது போல 1912லம் ஆண்டில் பழைய சிலையை எடுத்துவிட்டு மரத்தினால் ஆன புதிய உருவத்தைப் பிரதிஷ்டை செய்தார் .

பெண்களின் சபரி மலை
சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருப்பது போலவே பல்லாயிரக் கணக்கான பெண்கள் விரதம் இருந்து இங்கு வந்து பொங்கல் படைக்கிறார்கள் இதனால் பெண்களின் சபரி மலை என்ற சிறப்பு அடைமொழியும் இந்த இடத்துக்கு உண்டு ; அப்போது பெண்கள் மட்டுமே கோவில் அருகில் வரலாம். கோவிலைச் சுற்றி பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் பொங்கல் பானைகளைக் காணலாம். உலகின் மிகப்பெரிய சமையல் திருவிழா அல்லது பொங்கல் விழா என்று இதை அழைத்தாலும் மிகையாகாது
பத்துநாள் பொங்கல உற்சவம் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். ஒன்பதாவது நாள் விழாவில் வெல்லம், தேங்காய் கலந்த சர்க்கரைப் பொங்கலை உண்டாக்கி அம்மனுக்கு படைப்பார்கள். அப்போது கோவில் பூஜாரி , தேவியின் வாளை கையில் ஏந்தி வலம் வருவார். புனித நீரைத் தெளித்த்து பொங்கல் படைக்கும் பெண்மணிகளை ஆசீர்வதிப்பார்.
இது முடிந்த பின்னர், தேவியை அருகிலுள்ள சாஸ்தா கோவிலுக்கு எழுந்தருளச் செய்வார்கள் செண்டை மேளம், நாகஸ்வரம் முழங்க, யானைகள் பவனி வர, குதியோட்டம் , தாளப் பொலி, கும்பக் குடம் புடை சூழ, பகவதி அம்மன் செல்வாள். வழி நெடுகிலும் பக்தர்கள் சம்பிரதாய முறையில் அம்மனுக்கு வரவேற்பும் வழிபாடும் நல்குவார்கள் . அடுத்த நாள் காலையில்தான் இந்த ஊர்வலம் கோவிலுக்குத் திரும்பும் .
விழாக்காலத்தில் செவிக்கு விருந்தளிக்க இன்னிசை கச்சேரிகளும் , கண்களுக்கு விருந்து படைக்க பரத நாட்டியம் , மோகினியாட்டம், கதகளி ஆட்டம் ஆகியவையும் நடக்கும்.
இப்பொங்கல் விழாவில் சுமார் 10 லட்சம் பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.
கோவிலில் நடக்கும் மற்ற வைபவங்கள் :
மண்டல விரதம், வினாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, சிவராத்திரி, கார்த்திகை தீபம், ஆயில்ய பூஜை, ஐஸ்வர்ய பூஜை, நிரையும் புத்தரிசியும் (இது வயலில் அறுவடைக்கு முன்னர், கொஞ்சம் நெற்கதிர்களை அறுத்து வந்து சாமிக்குப் படையலிடுவது), அகண்ட நாம ஜபம்.
xxxxxxx
106.சிறையின்கீழ் சர்க்கரா தேவி கோவில்
Sarkara Bhagavathy temple located at Chirayinkeezhu Taluk, Thiruvananthapuram


திருவனந்தபுரத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் மேலும் ஒரு புகழ்பெற்ற பகவதி கோவில் இருக்கிறது.
கருவறைக்கு வெளியே நாலம்பலம் இருக்கிறது. கோவிலின் சிறப்பு அங்குள்ள சிறபங்களும் ஓவியங்களும் ஆகும்.
நாலம்பலத்துக்கு நான்கு வாயில்கள் உள்ளன. சுவரில் ஆயிரக் கணக்கான சுட்டு விளக்குகளை பொருத்தியுள்ளனர் . விழாக்காலத்தில் இவைகள் அனைத்தும் ஜெகஜ்ஜோதியாக ஒளி வீசும்.
ஆண்டுதோறும் இரண்டு விழாக்களை கோவில் கொண்டாடுகிறது. தேவியின் பிறந்த நாளாகக் கருதப்படும் பரணி உற்சவம் மிகவும் கீர்த்தி வாய்ந்தது. கடைசி நாளில் கருடன் தூக்கம் நடக்கும். அன்று உருச்சா என்னும் பூமியில் உருண்டு வரும் நேர்த்திக் கடனும் நடைபெறும். கோவில் விளக்குகள் அனைத்தும் எரியும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக திகழும் . பத்தாம் நாளில் தேவி தோன்றுவாள் என்ற நம்பிக்கை உள்ளதால் அவளது தெய்வீக ஆசீர்வாதங்களுக்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
எல்லா கேரள திருவிழாக்களில் இருக்கும் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் இங்கும் நடைபெறுகிறது.
இரண்டாவது முக்கிய விழா காளியூட்டு உற்சவம் ஆகும்; இது எட்டு நாட்களுக்கு நடக்கிறது; 64 கிராமங்களின் தலைவர்கள் தாருகா என்ற அசுரனை காளி கொன்றதை நடத்திக் காட்டுவார்கள்
இந்த தேவி- அசுரன் மோதல் கட்டடம் கட்டமாக நடக்கும். தம்புரான் புலையன், புலையி புறப்பாடு, தம்புரான் புறப்பாடு என்ற வரிசையில் நிகழும். கடைசி நாளன்று 100 அடி உயர விசேஷ மேடையில் தேவியும் அசுரனும் மோதுவார்கள். அதைக் காண பல்லாயிரக் கணக்கானோர் வருகின்றனர் . இதைக் காண்பவர்கள் மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருக்கும். இதை பரனேத்து என்றும் அழைப்பர் .
திருவிதாங்கூர் மன்னர் அனிசம் திருநாள் மார்த்தாண்ட வர்மா 1748 ஆம் ஆண்டு காளியூட்டு விழாவை அறிமுகப்படுத்திய பிறகு இது முக்கியத்துவம் பெற்றது. அந்தத் திருவிழா பிப்ரவரி-மார்ச் மாதங்களில் முதல் அறுவடையின் விளைச்சலை தேவிக்கு சமர்ப்பிக்கும் போது வருகிறது.

காளியூட்டு என்றால் என்ன?- விக்கிபீடியா தகவல்
காளியூட்டு என்பது கும்ப மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை நாளில் நடக்கும் கலை. இதை காளிநாடகம் என்றும் அழைப்பர். காளிக்கும் தாரிகனுக்கும் நிகழ்ந்த போரைக் குறித்து நிகழ்த்துவது ஆகும்.
ஐதீகம்
கும்ப மாதத்தின் மூன்றாவது வெள்ளிக் கிழமையன்று, சர்க்கர கோவிலில் நடக்கும் ஒரு விழா காளியூட்டு. மக்களை வதைத்து, துன்பங்கள் ஏற்படுத்திய தாரிகனை, காளி கொன்று மக்களைக் காத்து நிற்பதை நினைவுகூர்வர்.
வரலாறு
திருவிதாங்கூர் பரணாதிகாரியாக இருந்த பேரரசர் மார்த்தாண்ட வர்மா, காயங்குளம் ராஜாவாக ஆன பின்பு, போருக்கு] புறப்படும் முன்பு சர்க்கரர் கோவி லில் காளியூட்டை நிகழ்த்தினார்.. அந்த யுத்தத்தில் வென்று, காயங்குளம் , திருவிதாங்கூரோடு சேர்த்ததினால் ஆண்டுக்கொரு முறை நடத்தி வரும் நிகழ்வு இது.
சடங்குகள்
‘முடியுழிச்சில்’ என்னும் சடங்கு நிகழ்த்தப்படும். அன்று காளி, தாரிகனை நிலத்தில் போரில் வென்றதால், அதைக் கொண்டாடும் விதத்தில், குலைவாழையும் கும்பளவும் வெட்டி நட்டுக் கொண்டாடுவர். இது கைலாயத்தில் வாழும் பரமசிவனை சென்றடைவதாக நம்புகின்றனர். இத்துடன், வெள்ளாட்டம் களி, குருத்தோலையாட்டம், நாரதன் புறப்பாடு, நாயர் புறப்பாடு, ஐராணி புறப்பாடு, கணியாரு புறப்பாடு, புலையர் புறப்பாடு, முடியுழிச்சில், நிலத்தில் போர் என்னும் ஒன்பது சடங்குகளும் நிகழ்த்தப்படுகின்றன.
—subham–
Tags– காளியூட்டு, சிறையின்கீழ், சர்க்கரா தேவி, கோவில் , ஆட்டுக்கல்/ ஆற்றுக்கால் பகவதி