கர்ம ரகசியம்! – 3 (Post No.12,914)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,914

Date uploaded in London –  –   14 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கர்ம ரகசியம்! – 3

ச.நாகராஜன் 

கர்ம ரகசியத்தை விளக்கும் நூல்கள் சனாதன தர்மத்தில் ஏராளமாக உள்ளன.

அவற்றில் மிக முக்கியமான ஒன்று யோக வாசிஷ்டம்.

அதில் மரணத்தைப் பற்றிய ஏராளமான செய்திகள் கூறப்படுகின்றன.

ராமருக்கு வசிஷ்டர் மரணம் பற்றிக் கூறுவதை இங்கு பார்க்கப் போகிறோம்.

முதலாவதாக ‘மரணம் ந பயாவஹம்’ என்று கூறப்படுகிறது.

இதன் பொருள் :

‘மரணம் பயத்தை (அல்லது அபாயத்தை) தருவதல்ல’.

அடுத்து வருவது:-

உபசயோ மஹான்

IT IS A GREAT PROPERITY.

அது மிகப்பெரும் வளமை.

இறந்து போகும் ஒருவன், திருப்பிப் பிறக்கவில்லையெனில் அது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம்.

உத்ஸவோ வா!

It is a Joyous occation.

இது ஒரு சந்தோஷகரமான வைபவம்.

உடல் மறைந்து போகிறது என்பதால் அது ஆத்மாவிற்கான ஒரு சந்தோஷகரமான தருணம்.

புது உடல் கிடைக்கிறது என்றால் அதுவும் கூட சந்தோஷத்திற்குரிய ஒரு விஷயம் தானே!

முட்டாள்களே!

சந்தோஷம் தரும் ஒரு தருணத்தால் ஏன் வருந்துகிறீர்கள்?

மூர்த்தி ஸ்வரூபம்

மரணத்தின் ஸ்வரூபம் என்று அடுத்து சொல்லப்படுவது இது:

மரணம் சர்வநாஷாத்ம ந கதாசன வித்யதே!

Death is not, at anytime, of the nature of complete destruction.

மரணம் ஒரு போதும் சர்வநாசத்தை விளைவிப்பதல்ல.

இறந்து போன ஒருவனை நஷ்டமடைந்து விட்டதாகக் கூறுகிறோம். ஆனால் இது உண்மையல்ல. அதுமட்டுமல்ல, இது தவறான கூற்று.

திருப்பித் திருப்பிப் பிறப்பதால் காலத்தாலும் இடத்தாலும் அவன் பிரிக்கப்பட்டவனாகவே பார்க்கப்பட வேண்டும்.

குரங்கானது காட்டில் உள்ள ஒரு  மரத்தை விட்டு இன்னொரு மரத்திற்குப் போவது போலவே இதைப் பார்க்க வேண்டும்.

ஆத்மாவானது ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுக்குப் போகிறது.

ஓ, ராமா! ஆத்மாக்கள் தனிப்பட்ட ஆசைகளினாலும்,தங்களது வாசனைகளாலும் (மனப்பதிவுகள்) இன்னொரு இடத்தில் இன்னொரு காலத்தில் இருக்கிறது.

கனவு காணும் ஒருவன் கனவுலகத்தில் தனது சாவைச் சந்தித்த பிறகு விழிப்படைந்த பிறகு இன்னொரு கனவைப் பார்க்க எப்படி உயிர்த்தெழுகிறானோ அப்படியே தான் விழிப்புலகில் சாவை அடையும் ஒருவன் இன்னொரு முறை பிறந்து இன்னொரு விழிப்புலகில் ஒரு கனவைக் காண்கிறான்.

 சாவில் பிரக்ஞையை இழந்த பிறகு ஆத்மாவிற்கு அனைத்து உலகங்களும் உடனடியாக, கண்களை விழித்தவுடன், தெரியக் கூடிய உலகங்களாகத் தெரிகின்றன.

சாவில் பிரக்ஞையை இழந்த பிறகு மூன்று உலகங்களில் உள்ள எல்லாப் பொருள்களும் ஒரு க்ஷணத்தில் வந்து தெரிகின்றன.

பிறகு ஆகாயம் உள்ளிட்ட முடிவற்ற விஷயங்கள் அனைத்தும் அவனுக்குத் தெரிகின்றன.

 மரணத்தைப் பற்றிய ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கூட ஶ்ரீராமருக்கு வசிஷ்டர் பிட்டுப் பிட்டு வைக்கிறார் இப்படி.

கர்ம ரகசியத்தை அறிய அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களுள் ஒன்று யோக வாசிஷ்டம்.

***

Leave a comment

2 Comments

  1. Balasubramanian Ammunni's avatar

    Balasubramanian Ammunni

     /  January 15, 2024

    Can we expect English version for part2&3 of karma secret?

  2. Balasubramanian Ammunni's avatar

    Balasubramanian Ammunni

     /  January 15, 2024

    Can we get English version of Karma Secret for part2 & 3? Thanks.

Leave a comment