முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்! – 3 (Post No.12,968)

 ஆடுதின்னாப்பாளை

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,968

Date uploaded in London – –   29 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part 3

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

XXXXX

21 .ஆதண்டம் காய் வற்றலிட்டு உண்டியுடன் உபயோகித்துவந்தால் பித்த ரோகங்களைக் கண்டிக்கும்; சகல பத்தியத்திற்கு உபயோகிக்கலாம்.

XXXX

22 . கபால வலிக்கு : ஆடுதின்னாப்பாளை சாறு– வ படி எடுத்து நல்லெண்ணெய் அரைப்படி  கலந்து மென் குப்தமாய்க் காய்ச்சி வாரத்திற்கிருமுறை தலை முழுகி வந்தால் மண்டைக்குள் பீனிசம், சிறை பாரம் தீரும் .

xxxx

23 . ஆவாரை வேரின் பட்டை, விஷ்ணுகாந்தி, வகைக்கு எலுமிச்சங்காய்ப் பிரமாணம் அறைத்து பசும்பாலில் கலக்கி மூன்றுநாள் கொடுக்க இரத்த பிரிமியம் தீரும்.

xxxx

24 . மூக்கில் ரத்தம் வருவதை நிறுத்த :-ஆடாதோடையிலைச்சாறும் தேனும் சமனிடை கலந்து ஒரு பலம் கொடுக்கவும் ; இப்படி மூன்று நாள் கொடுக்கவும். மூக்கினால் ரத்தம் வருவது நிவர்த்தியாகும்.

xxxx

25.அறையாப்புக்கட்டிக்கு :-ஆடுதின்னாப்பாளைசமூலம்  வசம்பு  இரண்டும் சமனிடை எடுத்து நன்றாய் இடித்துக் கட்டியின் மேல் பில்லை யாக வைத்து  அந்த அளவுக்கு பானையோட்டை வட்டமாக நறுக்கி அதின்மேல் வைத்து கட்டிவைக்கவும். இப்படி மூனு கட்டுக் கட்ட அறையாப்புக்கட்டி கரையும்.

xxxx

26.பதினெட்டு எலிக் கடிக்கும் சாந்தி : ஆதளை சமூலத்தை பால்விட்டரைத்து பாலில் கலக்கிக் கொடுத்து வந்தால் 18 எலி விஷமும் நிவர்த்தியாகும் . பார்வதி பரணீயம் என்னும் விஷ வைத்திய சிந்தாமணியில் சகலவித சர்ப்பங்களுக்கும், தேள், நட்டுவாக்காலி ,வண்டு நாய், பூனை, எலி முதலிய எல்லா விஷத்துக்கும் அந்தந்த விஷக்கடியின் அடையாளத்துடன் மருந்துகளும் மந்திரங்களும் சொல்லியிருக்கின்றது.; யாவரும் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.  

xxxx

27.  ஆவாரங்கொழுந்தை சட்டியிலிட்டு விளக்கெண்ணெய் தெளித்து வறுத்து சீலையில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் முளை மூலத்தின் முனை கருகும். அதனுடைய கடுப்பும் ஊரலும் தணியும்.

xxxxx

28.ஆனை திப்பிலியை இடித்து வஸ்திரகாயம் செய்து தேனில் குழைத்துச் சாப்பிட ஈளை, இருமல், கபம் வாய்வுகள் இதுகள் தீரும் . ஜீரண சக்தியுண்டாகும்.

xxxx

29.ஆகாசத் தாமரை இலையை இடித்து உலத்தி, வடிகட்டின தூளும் கருங் குருவை அரிசி மாவும் ஒன்றாய்க்கலந்து, பிட்டவயல் செய்தெடுத்து  நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து  உள்ளுக்குள் கொடுத்துவிட்டு மாதுளங்கொழுந்தை  காடியில் அவித்து  மூலத்தில் வைத்துக் கட்டினால் முளை விழுந்துவிடும்.

xxxx

30.ஆடாதோடை ,தூதுவளை ,பற்பாடகம், பங்கம் பாளை, சிறுவழுத்தலை சுக்கு, சந்தனம், நன்னாரி வகைக்கு கால் பலம் எடுத்து  இடித்து 2 படி தண்ணீர் விட்டு   கால் படியாக  வற்றக்  காய்ச்சி  இருத்துக்கொடுக்க குளிர்  சுரம்  நிவர்த்தியாகும் .பார்வதீ பரணீயமென்னும் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் சர்வ சுர மாத்திரையைக் கொடுத்து இந்த கிஷாயமும் கொடுத்தால் 64  சுரத்தில்  எந்த சுரமானாலும் உடனே தீரும்.

—subham—-

Tags- முனிசாமி முதலியார்,   மூலிகை அதிசயங்கள் 3, ஆடாதோடை,  மூக்கில் ரத்தம், எலிக்கடி, விஷக்கடி, வைத்தியம்

QUIZ  யமுனோத்ரி, கங்கோத்ரி பத்து QUIZ (Post No.12,967)

Gangotri Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,967

Date uploaded in London – –   29 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ SERIAL NO 101

‘சார் தாம்’ எனப்படும் நான்கு இமய மலை புனிதத் தலங்களில் முதலில் நிற்பது  யமுனோத்ரி ; ஏனைய மூன்று கங்கோத்ரி, கேதார்நாத்,பத்ரிநாத் .

1.யமுனோத்ரி எங்கே இருக்கிறது ? 2.எப்படிப் போவது எளிதானது?

XXXX

2.அங்கே தரிசனம் செய்ய என்ன கோவில் இருக்கிறது ?

XXXX

3.யமுனை நதி உற்பத்தியாகும் இடத்துக்கு என்ன பெயர் ?

XXXX

4.யமுனோத்ரியில் வேறு என்ன கோவில்கள் உள்ளன ?

xxxx

5.யமுனோத்ரியில் உள்ள இயற்கை அதிசயம் என்ன ?

XXXX

6.கங்கோத்ரி எங்கே இருக்கிறது எப்படிப்போவது எளிதானது ?

xxxx

7.கங்கோத்ரியின் சிறப்பு என்ன ?

xxxx

8.தோன்றும் இடத்தில் கங்கை நதிக்கு என்ன பெயர் ?

xxxx

9..கங்கோத்ரி அருகில் வேறு என்ன கோவில்கள் உள்ளன ?

xxxx

10 . பைரவநாத் கோவில் எங்கே இருக்கிறது ?

xxxx

விடைகள்

1.உத்தராஞ்சல் அல்லது உத்தரகண்ட் எனப்படும் இமயமலை மாநிலத்தில் உள்ளது;  இங்குதான் யமுனை நதி உற்பத்தியாகிறது . கடல் மட்டத்துக்கு 3293 மீட்டர் உயரமான இடம்; .நன்றாகக் குளிரும்.

டேராடூன் அல்லது ஹரித்வாரிலிருந்து போகலாம். சம்பா, தேரி,பார்கோட் என்னும் இடங்கள்  அருகிலுள்ளன. 

xxxx

2.யமுனோத்ரி கோவில்( Yamunotri temple)  இருக்கிறது. யமுனை அன்னையை அங்கே தரிசிக்கலாம் . கோவிலில் நுழையும் முன்னர் திவ்ய சிலா என்னும் தெய்வீகப் பாறையை வணங்கவேண்டும்.

xxxxx

3.சப்தரிஷி குண்டம் (Saptarishi Kund) என்னும் இயற்கை வனப்புமிக்க ஏரியில்தான் யமுனை நதி தோன்றுகிறது . சங்க இலக்கியத்தில் அதைத் தொழுனை நதி என்று குறிப்பிடுகிறார்கள்.

XXXX

4.சோமேஷ்வர்  (Lord Someshwar) என்னும் சிவ பெருமான் வீற்றிருக்கும் கர்சாலி ( Kharsali) கோவில் முக்கியமானது இதை பாறைகளைக் குடைந்து உருவாக்கியுள்ளனர் .மூன்று அடுக்கு உயரமானது .

 XXXXX

5.கடுமையான இமயமலைக் குளிருக்கு இடையே கொதிக்கும் வெந்நீர் ஊற்றுகள் இருப்பது பெரிய இயற்கை அதிசயம்! இதில் சுகமாகக் குளித்துவிட்டு மக்கள் சார்தாம் யாத்திரையைத் துவங்குவது வழக்கம் . சூர்ய குண்டம் என்னும் (Surya Kund, the thermal spring) ஊற்றில் 190 டிகிரி (190°F), பாரன்ஹீட் வெப்பத்தில் தண்ணீர் பொங்கும். ஜானகி சட்டி என்னும் இன்னுமொரு வெந்நீர் (Janki Chatti is another well known thermal springs) ஊற்றும் அருகில் உள்ளது .

XXXX

6.இதுவும் உத்தராஞ்சலின் உத்தரகாசி மாவட்டத்தில்தான் இருக்கிறது. ஆயினும் யமுனோத்ரியிலிருந்து 227  கிலோமீட்டர் தொலைவு. ஏனெனில் நேராக இணைக்கும்  சாலை கிடையாது. பார்கோட் என்னும் இடத்திற்கு வந்து கங்கோத்ரிக்குச் செல்ல வேண்டும்

XXXX

7.இங்குதான் இந்துக்களின் மிகப்புனிதமான கங்கை நதி உற்பத்தியாகிறது . உலகிலேயே இந்துக்கள் மட்டுமே நதிகளை தாயாராக வணங்குகின்றனர். உலகிலேயே இந்துக்கள் மட்டுமே நதிகள் தோன்றும் இடங்களை புனிதமாகக்கருதி கோவில் கட்டியுள்ளனர். இந்துக்கள் இந்த நாட்டிலேயே தோன்றியதால் ரிக்வேத  காலம் முதல் கங்கையையும் சரஸ்வதியையும் வணங்கி வருகின்றனர் .

xxxx

Go mukhi 

8.பாகீரதி என்ற பெயரில் கங்கை பிறக்கிறாள் ; வானுலகத்திலிருந்து விழுந்த கங்கை நதியை சிவபெருமான் தனது தலையில் தாங்கி வேகத்தைக் குறைத்த இடம் கங்கோத்ரி.  கடல் மட்டத்திலிருந்து 4200  மீட்டர் உயரத்திலுள்ள கோ முகி பனி க்கட்டு  ஆற்றில்தான் நதி  உற்பத்தி ஆகிறது.

xxxx

9.ஜலமக்ன சிவலிங்கம் (Jalamagna Shivling, a natural rock Shivling) இங்கே இருக்கிறது.இது  இயற்கையான பாறை; குளிர்காலத்தில் மட்டுமே காண முடியும். நந்தவனம் என்னும் இடத்திலிருந்து ஆறு கி.மீ மலை ஏறிச் சென்றால் இந்த சிவலிங்கப் பாறையைக் கண்டுகொண்டே நடக்கலாம்.

xxxx

10.கங்கோத்ரியிலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற பைரவநாத் சிவலிங்கக் கோவில் இருக்கிறது. ஜாட் கங்கா நதியும் பாகிரதி நதியும் சங்கமம் ஆகும் இடம் இது. 

இமய  மலையிலுள்ள எல்லா புனிதத்தலங்களும் இப்போது சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்து இழுக்கிறது.

Bhairava Temple

–subham—

Tags- QUIZ யமுனோத்ரி, QUIZ , கங்கோத்ரி ,பத்து, சார் தாம்

ராம நாம மஹிமை – 6 (Post No.12,966)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,966

Date uploaded in London –  –   29 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

2024 ஜனவரி 22. தெய்வீகத் திருவிழா நன்கு தெய்வீகமாக நடந்து முடிந்துள்ளது.  ராம நாம மஹிமை பற்றிய சிறப்புக் கட்டுரைத் தொடரில் இது ஆறாவது கட்டுரை!

ராம நாம மஹிமை – 6

ச.நாகராஜன்

வால்மீகி ராமாயணத்தில் ஏராளமான நல்ல கருத்துக்களும் ரகசியங்களும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளும் உள்ளன.

இவற்றைத் தொகுத்து ஏராளமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

லிப்கோவின் தொகுப்பு குறிப்பிடத்தகுந்தது. அதில் சிலவற்றை தமிழாக்கத்துடன் இங்கு தருகிறேன்:

பொறுமையின் சிறப்பு

அலங்காரோ ஹி நாரீணாம் க்ஷமா து புருஷஸ்ய வா!

                                பாலகாண்டம் 33-9

க்ஷமா (பொறுமை) பெண்களுக்கு ஒரு சிறந்த ஆபரணம், ஆண்களுக்கும் தான்!

தந்தையே கடவுள்

பிதா ஹி ப்ரபுரஸ்மாகம் தைவதம் பரமம் ஹி ந:!

தந்தைக்கு நம் மீது அதிகாரம் உண்டு. அவரே நமது தலையாய கடவுள்.

பாலகாண்டம் 32-31

ஆன்மீக பலமே உயர்ந்த பலம்

திக்பலம் க்ஷத்ரியபலம் ப்ரஹாந்தேஜோ பலம் பலம்!

உடல் வலிமை ஒரு வலிமையா என்ன, ஆன்மீக பலமே நிஜமான பலம்!

பாலகாண்டம் 56-22

பொறுமையே அனைத்து நலன்களையும் தரும்

க்ஷமா தானம் க்ஷமா சத்யம் க்ஷமா யக்ஞஸ்ச புத்ரிகா:|

பொறுமையே தானம். பொறுமையே சத்யம். பொறுமையே யக்ஞம்

(அனைத்து நலன்களும் பொறுமையில் அடங்கியுள்ளன என்பது பொருள்)

பாலகாண்டம் 33-8

பொறுமையே தர்மம்

க்ஷமா யஷஸ் க்ஷமா தர்ம: க்ஷமயா விஷ்டிதம் ஜகத்|

பொறுமையே யசஸ். பொறுமையே தர்மம். பொறுமையிலே தான் உலகமே நிலைநிற்கிறது.

பாலகாண்டம் 33-9

தத்ரூபமாக காட்சிகளைச் சித்தரிக்கும் கீதம்

அஹோ கீதஸ்ய மாதுர்யம் ஸ்லோகானாம் ச விசேஷத:|

சிரநிர்வ்ருத்தமப்யேதத் ப்ரத்யக்ஷமிவ தர்ஷிதம் ||

அடடா, கீதம் மதுரம். கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை இன்று நம் கண் முன் நடப்பது போல அப்படியே ஸ்லோகங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

பாலகாண்டம் 4-17

சீதையின் மகத்தான சரிதம் கூறும் ராமாயணம்

காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் சீதாயாஸ்சரிதம் மஹத் |

சீதையின் மகத்தான சரித்திரத்தை ராமாயண காவியம் சித்தரிக்கிறது.

பால காண்டம் 4- 7

காமத்தினாலும் கோபத்தினாலும் அலட்சியப்படுத்தக் கூடாது!

நசாவஞா ப்ரயோக்தவ்யா காமக்ரோதவசாதபி|

காமத்தினாலும்  க்ரோதத்தினாலும் எதுவும் அலட்சியப்படுத்தப்படக் கூடாது.

                                பாலகாண்டம் 13- 14

மற்ற கவிஞர்களுக்கு வழிகாட்டும் காவியம்!

ஆச்சர்ய மிதமாக்யானம் முனினா சம்ப்ரகீர்த்த்தம் பரம் கவீனாமாதாரம்|

முனிவரால் இயற்றப்பட்ட இந்தக் காவியம் ஆச்சரியகரமானது. மற்ற கவிஞர்கள் பின்பற்றத்தக்க முன்மாதிரியாக இது அமைந்துள்ளது.

பாலகாண்டம் 4- 26,27

அனைத்தையும் காப்பவர் ராமர்

ரக்ஷிதா ஜீவலோகஸ்ய தர்மஸ்ய பரிரக்ஷிதா|

ராமர் அனைத்து உயிர்களையும் காக்கிறார்; முக்கியமாக தர்மத்தைக் காக்கிறார்.

பாலகாண்டம் 1- 13

ராமர் சத்ய தர்மம் பரிபாலிக்கும் சத்புருஷர்

ராம: சத்புருஷோ லோகே சத்யதர்ம பராயண: |

சத்யத்தையும் தர்மத்தையும் பரிபாலிக்கும் ராமர் இந்த உலகில் ஒரு சத்புருஷர்.

அயோத்யா காண்டம் 2- 29

பெரியோரின் மனம் தர்மத்திலேயே நிலையாக நிற்கும்

சதாம் து தர்மநித்யானாம் க்ருதஷோபி ச ராகவ |

பெரிய மனிதர்களின் மனம் எப்போதும் தரமத்திலேயே நிலைத்திருக்கிறது, ராகவ!

அயோத்யா காண்டம் 4- 27

பயம் பயப்படுபவரிடமிருந்தே உருவாகும்

பயம் பீதாத்தி ஜாயதே |

பயம் அதற்கு இடம் கொடுப்பவரிடமே ஊற்றெடுக்கும்.

அயோத்யா காண்டம் 8- 5

நெருங்கிய தொடர்பு தாவரங்களிடம் உருவாக்கும் நட்புணர்வு

சன்னிகர்ஷாச்ச சௌஹாதம் ஜாயதே ஸ்தாவரேஷ்வபி |

நெருங்கிய தொடர்பினால் தாவரங்களிடம் கூட ஒரு நல்ல நட்புணர்வு ஏற்படுகிறது.

அயோத்யா காண்டம் 8- 28

நீர் வற்றிய பின் அணை கட்டி பயன் என்ன?

கதோதகே சேது பந்தோ ந கல்யாணி விதீயதே |

எல்லா நீரும் வற்றிய பின்னர் அணையைக் கட்டி என்ன பிரயோஜனம்?

அயோத்யா காண்டம் 9- 54

***

Amazing Facts about Dwaraka; Exodus & Tsunami(Post No.12,965)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,965

Date uploaded in London – –   28 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Dwaraka in Gujarat is the last of the Seven Holy Cities called Spata Puri.

Krishna walked 800 miles with the Yadavas from Brindhavan, Mathura in Uttar Pradesh to Dwaraka in Gujarat fearing the tyrant Jarasandhan. Later Krishna killed him.

In the history of Dwaraka we have the world’s largest Exodus older than the Exodus in the Bible.

In the history of Dwaraka we have the world’s largest Tsunami that drowned Dwaraka.

Marine archaeologists have found out the underwater Dwaraka confirming our Puranic accounts.

Along with submerged Dwaraka, Indus-Sarasvati Valley seals are also discovered near Dwaraka, which proved that is one of the oldest cities like Kasi. Mahabharata which is at least as old as 3102 BCE Kaliyuga links Kasi the oldest city in the world with Dwaraka. (Remember Amba Ambalika Ambika story of Bhisma)

xxxx

Fanatic Muslim destroyed the original temple.

According to tradition, the original temple Dwaraka was built by Krishna’s grandson, Vajranabha, over the hari-griha (Krishna’s residential place). The original structure was destroyed by fanatic muslim looter Mahmud Begada in 1472.

Adi Shankara , the greatest of the World Philosophers, established one of his four Mutts here ; he was the one who established four mutts  in four corners of India. This torpedoed fools’ argument that India was united by foreigners.

Like Parasurama established a colony in Kerala, Krishna started a colony in Dwaraka in Gujarat. Both used the land reclaimed from the sea.

xxxx

Dwarkadhish Temple (Jagat Mandir),

Krishna’s temple here is called Dwarkadhish temple

The Sanskrit proverbial saying is AS LONG AS THE SUN AND MOON EXIST. It is shown in the Dwraka temple flag with sun and moon symbols. The temple spire is 256 feet tall, probably the highest in India. The flag is 50 feet long and changed four times every day. Devotees offer money for it.

The temple has two entrances. The name Dwaraka meant entrance to Swarga or Gateway to Heaven. It was proved by Krishna’s death nearby and Saint Poetess Meerabai’s merger with God in this place.

The temple stands on a small hill accessed by 50 plus steps, with heavily sculptured walls that cocoon the sanctum with the main Krishna idol. Around the complex lie other smaller shrines.

River Gomati merges with the Arabian sea here

Bet Dwaraka, an island is nearby, is the place where Krishna lived in a palace. Now there is a temple which can be reached by boat from Okha.

Guru Vallabhacharya built a temple here. Apart from the main temple of Krishna, others in the complex commemorate Hanuman, Vishnu, Shiva, Lakshmi Narayan, Jambavati, Devi and others. Bet Dwarka is known by the name of ‘Antardvipa’.

Porbandar and Jamnagar are closest airports to Dwaraka.

xxxx

Krishna’s Death

Krishna died at the age of 120 in a place called Bhalka near Veraval on west coast. He was shot by a hunter called Jara , who mistook him for some animal. When Arjuna and others came there, they saw only dead bodies of Krishna and Balrama. Both  were cremated there. But the mystery about the cremation is that Krishna’s heart did not become ash. It was taken to Puri and kept there. As there is no heart in Puri now, one should not take it literally. Krishna is in sleeping pose under the Peepal tree here

Like Vraj Bhumi in Uttar Pradesh, there is a huge circuit of Krishna Leela here. Earlier part of his life was in Uttar Pradesh and later part of his life was spent here in Gujarat.

It is amazing to see his activities in these two states and Kurukshetra in Haryana .

xxxx

Tsunamis in India

Dwaraka went into sea during a Tsunami before 1000 BCE .We saw Dhanushkodi in Tamil Nadu going under sea in our own time in one of the Tsunamis. Sangam Tamil literature also mentioned two Tsuamis which devoured two Pandyan capitals 2000 years ago.

Five great Tamil Vaishnavite saints, known as Alvars, composed poems in praise of Lord Krishna of Dwaraka

xxx

Two Shiva Shrines

Those who go to Dwaraka wont miss two great Shiva temples in this area. Nageshwar Shiva temple is one of the 12 Jyotirlingas. Somanath Shiva temple was looted and destroyed by fanatic Mahmed of Gazni . Now both temples are visited by lakhs of pilgrims. Girnar and Raivatak hills  in this area are connected with Krishna’s life. Girnar has beautiful historic inscriptions covering one thousand year period.

—-subham—

Tags—Amazing Facts, Dwaraka, Bet Dwraka , Somnath, Nageshwar,Krishna’s death

February 2024 Calendar with Kabir Quotes (Post No.12,964)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,964

Date uploaded in London – –   28 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Festival days  : 9 -Thai Amavasya ; 16- Ratha Saptami  ; 24- Masi Makam.

Auspicious days – 1, 2, 8, 11, 19, 22, 26

New moon day -9;  Full moon day -24; Ekadasi Fasting days —5, 19

Please see quotations from Kabir Dohas.

xxxx
 

February 1 Thursday

“साधो, देखो जग बौराना ।
साँची कही तो मारन धावै, झूठे जग पतियाना ।
हिन्दू कहत,राम हमारा, मुसलमान रहमाना ।
आपस में दौऊ लड़ै मरत हैं, मरम कोई नहिं जाना ।

Saints, I see
The world is mad
If I tell the truth
They rush to beat me
If I lie they trust me

xxxx

 February 2 Friday
Hindus claim Ram as the one
Muslims claims Raheem
Then they kill eachother
Knowing not the essence”
― Kabir, Kabir’s Poems

xxxx

 February 3 Saturday

“The sun is within me, and so is the moon.”
― Kabir

xxxx

 February 4 Sunday

“The devout seeker is he who mingles in his heart the double currents of love and detachment, like the mingling of the streams of Ganges and Jumna.”
xxxx

 February 5 Monday

I laugh when I hear that the fish in the water is thirsty. I laugh when I hear that people go on pilgrimage to find God.

Xxxx

 February 6 Tuesday

I went in search of a bad person; I found none as I, seeing myself, found me the worst.

xxxx

February 7 Wednesday

“Why run around offering water?
There’s a sea in every house.
If anyone is thirsty,
by hook or crook, he’ll drink.”
xxxx

 February 8 Thursday

Wherever you are, that’s the entry point.

xxxx

 February 9 Friday

 I felt in need of a great pilgrimage, so I sat still for three days and God came to me.

xxxx

 February 10 Saturday

I sell mirrors in the city of the blind.

xxxx

 February 11 Sunday

Listen to your own Self. If you listen to that Self within, then you find the Truth.

xxxx

 February 12 Monday

Be quiet in your mind, quiet in your senses, and also quiet in your body. Then, when all these are quiet, don’t do anything. In that state truth will reveal itself to you.

xxxx

 February 13 Tuesday

All darkness vanished, when I saw the Lamp within my heart.

xxxx

 February 14 Wednesday

Who is a holy person? The one who is aware of others’ suffering.

xxxx

 February 15 Thursday

A learned man’s knowledge will be of no avail to him if he doesn’t have control over his tongue

xxxx

 February 16 Friday

Wear a crown of flowers on your head, let its roots reach your heart

xxxx

 February 17 Saturday

My heart is so intoxicated with love that I have no wish to speak.

xxxx

 February 18 Sunday

The man who is kind and who practices righteousness, who remains passive against the affairs of the world, who considers all creatures on earth as his own self, he attains the Immortal Being; the true God is ever with him.

xxxx

 February 19 Monday

As the bee collects honey with great zest, so the fool collects wealth.

xxxxx

 February 20 Tuesday

The river that flows in you also flows in me.

xxxx

February 21 Wednesday

All know that the drop merges into the ocean but few know that the ocean merges into the drop.

xxxx

 February 22 Thursday

The truth of love is the truth of the universe: it is the lamp of the soul that reveals the secrets of darkness

xxxx

 February 23 Friday

The Beloved is inside you and also inside me. You know the tree is hidden inside the seed. Let your arrogance go. None of us has gone far. Inside love there is more power than we realize.

xxxx

 February 24 Saturday

When the flower opens, the bees will come.

xxxx

 February 25 Sunday

The purpose of labor is to learn;
when you know it, the labor is over.

xxxx

 February 26 Monday

For millions of years you have slept. This morning, will you not wake?

xxxx

 February 27 Tuesday

If you haven’t experienced it, it’s not true.

xxxx

 February 28 Wednesday

Love does not grow on trees or brought in the market, but if one wants to be “LOVED” one must first know how to give (unconditional) LOVE.

xxxx

 February 29 Thursday

He is the real Guru Who can reveal the form of the formless before your eyes; who teaches the simple path, without rites or ceremonies; Who does not make you close your doors, and hold your breath, and renounce the world; Who makes you perceive the Supreme Spirit whenever the mind attaches itself; Who teaches you to be still in the midst of all your activities. Fearless, always immersed in bliss, he keeps the spirit of yoga in the midst of enjoyments.

xxxx

Bonus quotes

Music without words means
leaving behind the mind.
And leaving behind the mind
is meditation.
Meditation returns you
to the source.
And the source of all is sound.

xxxxx

“O How may I ever express that secret word? O how can I say He is not like this, and He is like that? If I say that He is within me, the universe is ashamed: If I say that He is without me, it is falsehood. He makes the inner and the outer worlds to be indivisibly one; The conscious and the unconscious, both are His footstools. He is neither manifest nor hidden, He is neither revealed nor unrevealed: There are no words to tell that which He is.”
― Kabir, Songs of Kabir

—subham—

Tags- Kabir, Doha, Quotes, February 2024, Calendar

அருணகிரிநாதர் /திருப்புகழ் பொன்மொழிகள்; பிப்ரவரி 2024 காலண்டர் (Post No.12,963)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,963

Date uploaded in London – –   28 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

30 திருப்புகழ் மணிகள் / மேற்கோள்கள் ஏப்ரல் 2020  காலண்டரில் l  வெளியானது; இதோ மேலும் 29 அருணகிரிநாதர் /திருப்புகழ் பொன்மொழிகள்

பண்டிகை நாட்கள் – 9 தை அமாவாசை; 16 ரதசப்தமி ; 24- மாசிமகம்.

சுபமுகூர்த்த தினங்கள் – 1, 2, 8, 11, 19, 22, 26

அமாவாசை -9;  பெளர்ணமி -24; ஏகாதசி விரத நாட்கள்—5, 19

பிப்ரவரி 1 வியாழக்கிழமை 

நினைத்தது எத்தனையில் தவறாமல்

நிலைத்த புத்திதனைப் பிரியாமல்

கனத்த தத்துவம் உற்றழியாமல்

கதித்த நித்தியசித்தருள்வாயே

xxxx

பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட

கொடிதான துன்ப மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து

குறைதீர வந்துகுறுகாயோ

xxxxx

பிப்ரவரி 3 சனிக்கிழமை

தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய

     சகலசெல்வ யோக மிக்க …… பெருவாழ்வு

தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து

     தவிபுரிய வேணு நெய்த்த …… வடிவேலா

xxxx

பிப்ரவரி 4 ஞாயிற்றுக்கிழமை

கால னெனையணு காம லுனதிரு

     காலில் வழிபட …… அருள்வாயே

பிப்ரவரி 5 திங்கட்கிழமை

XXXX

இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி …… வரவேணும்

XXXX

பிப்ரவரி 6 செவ்வாய்க்கிழமை 

யமன் வரும் போதும் முருகன் வந்து ‘அஞ்சாதே’ என்று சொல்லிக் காப்பாற்றுவானாம்: “ படிக்கும் திருப்புகழ் போற்றுவன், கூற்றுவன் பாசத்தினால்பிடிக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் ”

XXXX

பிப்ரவரி 7 புதன் கிழமை

எமக் கயிற்றின் சிக்கி நி(ல்)லா முன் உன் மலர்ப் பதத்தின்

பத்தி விடா மனது இருக்கு(ம்) நல்

தொண்டர்க்கு இணையாக உன் அருள் தாராய்

xxxx

பிப்ரவரி 8 வியாழக்கிழமை 

குணமும் மனமும் உடைய கிளைஞர் குறுகி விறகில் உடல்

போடாக் கொடுமை இடுமுன்

அடிமை அடிகள் குளிர மொழிவது அருள்வாயே

xxxx

பிப்ரவரி 9 வெள்ளிக்கிழமை

புகலி வனப்பு ஏறப் புகல் மதுரை மன் வெப்பு ஆறத் திகழ்

பொடி கொ(ண்)டு புல் பாய் சுற்றிகள் கழு

பொருத சமர்த்தா குத்திர துரக முகக் கோதைக்கு இடை

புலவரில் நக்கீரர்க்கு உதவிய வேளே ..

XXXX

பிப்ரவரி 10 சனிக்கிழமை

லளித அவிர் சிங்கார தனம் உறு சிந்தூர நம சரண் என்று ஓத

அருள்வாயே ( நளின, அணிகள் கூடியமார்பில் அணையும் செந்நிறச் செல்வனே, உன்னை வணங்குகிறேன் என்று உன்னைப் போற்ற அருள் புரிக)

XXXX

பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை

செம் பொன் பீலி உலா மயில் மாமிசை பக்கத்தே குற

மாதொடு சீர் பெறு தெற்குக் கோபுர வாசலில் மேவிய

பெருமாளே.( மயில் மீது,குறப் பெண்ணாகிய வள்ளியோடு சிறப்புற்று சிதம்பரத்தின் தெற்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் பெருமாளே)..

XXXX

பிப்ரவரி 12 திங்கட்கிழமை

வெம் குண்டர் தம் குலகாலா …

பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும் பண்பு

நண்பும் பெறும் பெருமாளே. … (கொடிய சமணர் கூட்டத்துக்கு நமனாய்த் திகழ்ந்தவனே,கலை வல்லவன், கந்த பிரான் என்று உலகமே

தொழுது, பண்பும் உனது நட்பும் பெற்றுக் களிக்கும் பெருமாளே.)

XXXX

பிப்ரவரி 13 செவ்வாய்க்கிழமை 

நினைத்தது அளிக்கும் மனத்தையும் உருக்கும்

நிசிக்கரு அறுக்கும்       –பிறவாமல்

நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்

நிறைப் புகழ் உரைக்கும்   –செயல் தாராய்

XXXX

பிப்ரவரி 14 புதன் கிழமை

“சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்

செகுத்தவர் உயிர்க்கும் சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்

xxxxx

பிப்ரவரி 15 வியாழக்கிழமை 

“ துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்

நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக் களையும்

எனக்கோர் துணையாகும்

xxxxx

பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமை

குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர்

கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன் …

(யானைமுகத்தைக் கொண்ட விக்ன விநாயகன்,  அங்குசம், பாசம் கையில் கொண்டவன், ஒற்றைக் கொம்பன்,பெரு வயிறன், முக்கண்ணன்,

வலிமை வாய்ந்தவன், கணபதி,)

xxxxx

பிப்ரவரி 17 சனிக்கிழமை

கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன்

நக்கர் பெற்று அருள் குன்றைய ரூபக கற்பக பி(ள்)ளை

இளையோனே ( துதிப்பவர்களுடைய வினைகளையும் ஆசையையும்

தீர்ப்பவன், எங்கள் விநாயக மூர்த்தி, சிவபெருமான் பெற்ற, மலை போன்ற உருவத்தன், ஆகிய கற்பக விநாயகப் பிள்ளைக்குத் தம்பியே)

xxxxx

பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை

துஞ்சல் இலாத சட அக்ஷரப் பிரபந்த சடானன துஷ்ட

நிக்ரக ( அழிவு இல்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்தின்

பெருமை கூறும் நூல்களுக்கு உரியவனே, ஆறு திருமுகத்தனே,

துஷ்டர்களை அழிப்பவனே)

பிப்ரவரி 19 திங்கட்கிழமை

தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா …

(மதுரையில் சொக்கநாதர் ஆலயத்தில் செதுக்கப்பட்டுள்ள அஷ்ட)

கஜங்கள் தாங்கும் மணி மண்டபத்தில் (இயல்இசைநாடகம் என்ற)

முத்தமிழை ஆதரித்து வளர்த்தவனே*,

xxxx

பிப்ரவரி 20 செவ்வாய்க்கிழமை 

தடக்கைத் தண்டு எடுத்துச் சூரரை வீரரை நொறுக்கிப்

பொன்றவிட்டுத் தூள் எழ நீறு எழ தகர்த்துப் பந்து அடித்துச்

சூடிய தோரண கலை வீரா (பெரிய கையில் தண்டாயுதத்தை

எடுத்து சூரர்கள் ஆன வீரர்களை பொடிபடுத்தி அழித்து, சின்னா

பின்னமாக்கி, புழுதி எழவும், சாம்பலாகும்படியும் உடைத்து, பந்தடிப்பதுபோல் அடித்து, வெற்றி மாலையைச் சூடியவனே, சகலகலைகளிலும் வல்ல வீரனே,)

xxxx

பிப்ரவரி 21 புதன் கிழமை

திருப் பொன் பங்கயத்துக் கேசவர் மாயவர் அறியாமல்

திமித்தத் திந்திமித்தத் தோவென ஆடிய சமர்த்தர்ப் பொன்

புவிக்குள் தேவர்கள் நாயகதிருச் சிற்றம்பலத்துள் கோபுர(ம்) மேவிய பெருமாளே. ( தாமரை மலரில் வீற்றிருக்கும் கேசவர், மாயவர் என்ற திருமால் அறிய முடியாதபடி, தாளத்துடன்,சாமர்த்தியமாக சிவபெருமான் நடனம் செய்த பொன்னம்பலத்தில் வந்து,குழுமிய தேவர்களின் நாயகனாக,சிதம்பரத்தின் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.)

xxxx

பிப்ரவரி 22 வியாழக்கிழமை

 எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர …

எனது அற நினது கழல் பெற மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே … ((உலக மயக்கம் தீரவும், மமகாரம் நீங்கவும், உனது திருவடியைப் பெறவும், மவுன உபதேசத்தை அருள்க )

.xxxx

பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை

களிகூர என்றனுக்கு மயிலேறி வந்து …

முத்தி கதியேற அன்பு வைத்து உன் அருள்தாராய் …( (மகிழ்ச்சி மிகுந்து ஏற்பட,

நீ எனக்காக மயில் மீது ஏறி வந்து, முக்தி வீட்டை அடைய, என்மீது அன்பு வைத்தருள்க.)

xxxx

பிப்ரவரி 24 சனிக்கிழமை

நொதியா முன் எடுமின் யாக்கையை என இடு காட்டு எரி

இடை கொ(ண்)டு போய்த் தமர் சுடுநாளில்

எயினர் குல உத்தமை உடன் மயில் மேல் கடிது எனது உயிர்

காத்திட வரவேணும் … (தூக்கடா பிணத்தை என்று உறவினர் விரைகையில் நீ

வள்ளியோடு மயில் ஏறி என் உயிரைக் காப்பதற்கு வரவேண்டும்.)

xxxx

பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை

வளமொடு செந்தமிழுரைசெய … சொல் வளம், பொருள் வளத்துடன்

செந்தமிழ்ப் பாக்களால் உன்னைப் புகழ,

அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே … அப்பாடல்களைக்

கேட்டு அன்பர்கள் அகம் மகிழ, வரங்களைத் தந்து அருள் புரிவாயாக.

xxxxx

பிப்ரவரி 26 திங்கட்கிழமை

பத்தியால் யானுனைப் …… பலகாலும்     பற்றியே மாதிருப் …… புகழ்பாடி

முத்தனா மாறெனைப் …… பெருவாழ்வின்     முத்தியே சேர்வதற் கருள்வாயே

xxxxxx

பிப்ரவரி 27 செவ்வாய்க்கிழமை 

திருப்புகழ் படித்தால் இடர்கள் பறந்தோடும் :இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும் எனவோதும்”

பிப்ரவரி 28 புதன் கிழமை

“ துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர்

நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக் களையும்

எனக்கோர் துணையாகும்

சொலர்க்கறிய திருப்புகழை உரைத்தவரை

அடுத்த பகை அறுத்து எறிய உறுக்கி எழு

மறத்தை நிலை காணும்”

xxxx

பிப்ரவரி 29 வியாழக்கிழமை 

ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம்

வாலியோடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும் ஓத

கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக

ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு

மார்பன் அரி கேசன் மருகா எனவே ஓத மறை

ராமெசுர மேவும் குமரா அமரர் பெருமாளே

*********

30 திருப்புகழ் மணிகள் / மேற்கோள்கள் (Post No. …

Tamil and Vedas

https://tamilandvedas.com › 30-தி…

·Translate this page

28 Mar 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. ஏப்ரல் 13 … TAGS – ஏப்ரல் 2020 காலண்டர், திருப்புகழ்பொன்மொழிகள்.

–subham—

TAGS- திருப்புகழ், அருணகிரிநாதர், பொன்மொழிகள் , பிப்ரவரி 2024 , காலண்டர்

அஹம் ஸ்புரணா – தமிழில் (Post No.12,962)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,962

Date uploaded in London –  –   28 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

புத்தக அறிமுகம்

அஹம் ஸ்புரணா – தமிழில் 

ச.நாகராஜன்

தமிழ் அன்பர்களுக்கு ஒரு நற்செய்தி. அஹம் ஸ்புரணா என்ற நூல் தமிழில் வெளியாகியுள்ளது.

பகவான் ஶ்ரீ ரமண மஹரிஷியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உபதேசங்களை ஶ்ரீ கஜபதி ஐயர் என்ற அணுக்கத்தொண்டர் 1936ஆம் ஆண்டில் தனது குறிப்பேட்டில் ஆங்கிலத்தில் பதிவு செய்து வந்துள்ளார்.

இதுவரை வெளியிடப்படாத பல செய்திகளும் பகவானின் உபதேச உரைகளும் இதில் அடங்கியுள்ளனர்.

இதை அஹம் ஸ்புரணா – ஆத்ம ஞானத்தின் ஒளிக்கீற்று என்ற தலைப்புடன் தமிழில் ஓபன் ஸ்கை பிரஸ் தொகுத்து வழங்கியுள்ளது.

362 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் 60 அத்தியாயங்கள் உள்ளன.

1936, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் ஶ்ரீ கஜபதி ஐயர் ரமணாஸ்ரமத்தில் தங்கி இருந்தார். அப்போது மேலை நாட்டிலிருந்து வருவோரும் உள்ளூர் பக்தர்களும், பாரத நாட்டின் இதர பகுதிகளிலிருந்து வருவோரும் பகவானிடம் ஏராளமான ஆன்மீக சம்பந்தமான தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

ரமணாஸ்ரமத்திலிருந்து அதிகாரபூர்வமான ஏராளமான புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் இல்லாத செய்திகளை இதில் படிக்க முடிகிறது.

ஓபன் ஸ்கை பிரஸ்ஸின் இயக்குநரான ஜான் டேவிட் ஶ்ரீ கஜபதி ஐயர் எழுதி வைத்துள்ள கைப்பிரதிகளை ஆராய்ந்து அவற்றில் சுவையான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் நூலாக வெளியிட்டார். அதன் தமிழ் மொழிபெயர்ப்பே இது.

திருவண்ணாமலையில் உள்ள அதிதி ஆஸ்ரமத்தின் நிறுவனர் ஸ்வாமி ஹம்ஸானந்தா இதை ஒரு ஞானப்பொக்கிஷம் என்று கண்டு இதை வெளியிடுமாறு ஜான் டேவிட் அவர்களை ஊக்குவித்தார். அழகிய ஒரு முன்னுரையையும் வழங்கியுள்ளார்.

நான் யார்? என்று கேட்டு ஆத்மவிசாரத்தை மேற்கொள் என்பதே ரமண மஹரிஷியின் உபதேசங்களின் மொத்த சாரமாகும்.

நூலிலிருந்து சில பகுதிகளை இங்கு பார்ப்போம்:

நான் எவ்வாறு குருவை தேடி அடைவது?

தீவிரமான தியானமே உன்னை குருவின் சன்னிதானத்திற்கு தானாகவே எடுத்துக் கொண்டு செல்லும்.   (பக்கம் 22)

அஹம் ஸ்புரண நிலையை அடைந்த பின் எந்தவித முயற்சியும் சாத்தியமில்லை….அஹம் ஸ்புரணம் நிலையை அடைந்து அதனால் ஆட்கொள்ளப்பட்டு, அதனில் ஐக்கியமானவனுக்கு நான் ஆன்மாவை அடைந்து விட்டேன் என்ற எண்ணம் இருக்காது. இந்த நிலையில் எந்த எண்ணமும் எழாது.                                (பக்கம் 27)

பக்தரின் கேள்வி

அஹம் ஸ்புரணம் ‘ஒளி வீசும் போது’ அதை உணர்வது எப்படி?

பகவானின் பதில்

அந்த அனுபவமானது நிகழும் போது அதை அறியாமல் இருப்பது சாத்தியமல்ல. எந்தவித விவரணம் கொடுத்தாலும் அது பயனற்றது மட்டுமல்ல; எதிர்விளைவை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.

(பக்கம் 29)

கேள்வி :ஞானோதயத்திற்கு உதவுபவை யாவை?

பதில் :மனத்தை உள்முகமாகத் திருப்புவது ஒன்றே வழி.

கேள்வி :நான் அதை அடைவது எப்படி?

பதில் :எண்ணங்கள், ஆசைகள் மற்றும் புலன் உணர்வுகளினாலான கற்பனைகளின் பின்னால் மனம் அலைவதைத் தடுப்பதன் மூலம்.

                                     பக்கம் 39

கேள்வி : நிலையான சந்தோஷம்?

பதில் : ‘நான்’ என்பதன் பொருள்.

கேள்வி : என்றும் உள்ள துன்பம்?

பதில் : விருப்பம்.

கேள்வி: பிரிக்க முடியாத ஜோடி?

பதில் : மெய்ப்பொருளும் ப்ரக்ருதியும் (பரிபூரண சத்தியமும் ஆதியான இயற்கையும்)

கேள்வி: என்றுமுள்ள ஒருவருக்கொருவர் எதிரான ஜோடி எது?

பதில் : அறிவும் உறக்கமும்

கேள்வி : என்றுமுள்ள ரகசியம்?

பதில் : அருணாசலா!

                                                (பக்கம் 54)

கேள்வி : நான் ஞானோதயம் உதிக்கும் வரை முயற்சி செய்து கொண்டேதான் இருக்க வேண்டுமா?

பதில் : ஆம். எந்த சிந்தனையும் எண்ணமும் இன்றி மனம் ஆத்மாவில் ஒடுங்கி இருக்கும் வரை தொடர்ந்து விசாரத்தைப் பயிற்சி செய்வது அவசியம்.

இது போன்ற ஏராளமான ஆன்மீகம் சம்பந்தமான கேள்விகளுக்கு அற்புதமான பதில்களை பகவான் அருளியிருப்பதை இந்த நூலில் படித்து மகிழலாம்.

ஆசிரமத்தில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளையும் நூல் விவரிக்கிறது.

இந்த நூலில் உள்ள குறிப்புகளைத் தொகுத்த ஶ்ரீ கஜபதி ஐயர் யார் என்ற கேள்விக்கும் நூலில் பதிலைக் காணலாம்.

ஶ்ரீ கஜபதி ஐயர் ஒரு புகழ்பெற்ற வக்கீல். மஹரிஷியின்  மிகச் சிறந்த பக்தர். 1936ஆம் ஆண்டு அவர் ரமணாஸ்ரமத்திற்கு வந்தார். அவர் அங்கு சுமார் ஆறு மாதம் தங்கி இருந்தார். அங்கு ஹாலில் நடந்த உரையாடல்களைக் கூர்ந்து கவனித்து குறிப்புகளை எடுக்க ஆரம்பித்தார் 1936ஆம் ஆண்டின் இறுதியில் அவரது குடும்பம் அவருக்குத் திருமணம் செய்ய நிச்சயித்தது. இருபதே வயதான இளைஞரான அவர் பகவானைப் பிரிய மனமில்லாமல் பகவானிடமிருந்து விடை பெற்றார். வக்கிலாக ஆனார்.

இந்த நூலை வெளியிட்டுள்ள ஓபன் ஸ்கை பிரஸ் 2005ஆம் ஆண்டு முதல் அநேக ஆன்மீக நூல்களை வெளியிடத் தொடங்கியது. இதன் இயக்குநரான ஜான் டேவிட் இந்தியாவில் ஓஷோ உள்ளிட்ட பல ஆன்மீக ஞானிகளுடன் தொடர்பு கொண்டவர்.

ஊக்கமுடன் ஆன்மீக நூல்களை வெளியிட ஆரம்பித்த அவர் ஆங்கிலம், ஜெர்மானிய, ரஷிய, ஸ்பானிய மொழிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

தமிழில் நான் யார் என்ற நூலை வெளியிட்டு அதன் தொடர்ச்சியாக இந்த அரிய நூலை அளிக்கிறார்.

நூலில் உள்ள சில அத்தியாயங்களின் தலைப்புகள் : சும்மா இரு; நான் யார்; மனதில் மட்டுமே உலகம் உள்ளது; விசாரம், ஆத்ம விசாரம், காலமும், விஞ்ஞானமும், சரணாகதி; வாழ்க்கையின் நோக்கம் என்ன?: குருவின் கருணை; ஒரு அற்புதமான நியூயார்க் பயணம்; விதி; நல்லதும் கெட்டதும், ஆத்மாவை உணர்.

நூலை வெளியிட்டுள்ள்  ஓபன் ஸ்கை பிரஸ் இந்த நூல் அதிகாரபூர்வமான ஒன்று தானா என்ற கேள்விக்கு ‘பொறுப்புத் துறப்பு’ என்ற தலைப்பில் பதிலைத் தருகிறது.

அஹம் ஸ்புரணா கைப்பிரதி, அதன் பழமை காரணமாக நேரடியாக அதை அங்கீகரிக்க முடியவில்லை. கையெழுத்துப் பிரதியின் நம்பகத்தன்மை பற்றி நிபுணர்களிடம் ஆலோசனை செய்த போது அவர்களில் பெரும்பாலானோர் இவற்றை பகவானின் உரையாடல்கள் தான் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். கைப்பிரதியில் உள்ள சில பகுதிகள் மிகைப்படுத்தப்பட்டதா இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்..

ஆகவே இதை திறந்த மனத்துடன் ஆராயவும் மகத்தான மற்றும் ஆச்சரியமிக்க ரகசியமாகக் கருதவும் வாசகர்களை அன்புடன் வேண்டுகிறது ஓபன் ஸ்கை பிரஸ்.

நூல் மிக அழகிய முறையில் வடிவமைத்துக் கொடுத்தவர் ஓம் என்னும் பகவானின் மேலை நாட்டு பக்தர்.

தமிழில் இதை திருத்தமுற வெளியிட வழி வகுத்தவர் pustaka.comஇன் உரிமையாளர் டாக்டர் ராஜேஷ் தேவதாஸ்.

நூல் பற்றிய விவரங்களை www.openskypress.com இல் பெறலாம்.

இணையதளத்தில் உள்ள பெரும் விற்பனை நிலையங்களில் ஆர்டர் செய்து நூலைப் பெறலாம்.

Opensky pressஇன் Whatsapp நம்பர் : 49 152 22 473 253

நூலை வெளியிட்ட திரு ஜான் டேவிட் அவர்களைப் பாராட்டுகிறோம்.

***

VISHNU AND HANUMAN INSIDE MOSQUE

Exclusive: ASI finds Shivling, miniature temple, idols of Hindu gods and more buried in Gyanvapi cellars which were ‘deliberately blocked’ with debris

A miniature temple, sculptures of Vishnu, Shaiva Dwarpala, Hanuman and other stone idols, objects as well as terracotta figurines were found buried under debris in cellar S2

27 January, 2024

Raju Das

The Archaeological Survey of India (ASI) report on the Gyanvapi structure released on 25 January has made it clear that a large Hindu temple existed in the past where the current mosque structure is present. The over 800-page report gives a very detailed accounts of the structure and the artefacts found in it, proving that it was a Hindu temple dedicated to Lord Shiva.                                                                                                 

Shockingly but not surprisingly, the report states that several artefacts related to the temple were deliberately kept hidden, they were found in cellars which were blocked by debris and walls. As per the ASI report, on the Eastern part of the complex, there are six cellars, three on southern side and three on the northern side on the both sides of the sealed area. There are two more cellars on the north, closer to the structure.

The cellars were made below the ground level when the pre-existing structure was modified and extended towards the east, the report states. The underground cellars were used for various purposes, however most of the cellars were found blocked, either completely or partially. For the study, ASI cleaned the cellars and removed a large amount of debris, recovering several signs of a pre-existing Hindu temple.

Vishnu figure

The most important artefacts were found in the southern cellars, S1, S2 and S3. ASI says that there are five entrances from S2 to S1, but all of them were blocked with lakhauri bricks and/ or stone blocks set in lime mortar. Similarly, all four entrances to S3 were blocked filling soil or keeping stones and architectural materials.

When the ASI teams entered cellar S3 by clearing the entrances, the found that the cellar was deliberately filled with soil and debris. Holes were make on the ceilings and soils and debris were dumped through that holes, blocking the cellar.

The report says that cellar S2 was used as a dumping place of large number of diverse things ranging from bamboos, to terracotta and metal pots, doors and windows, architectural members, etc. A number of architectural members were found stacked over the blocked entrances of the western wall.

When the debris was removed from the cellar, several things purposefully buried were exposed. This included a miniature temple, sculptures of Vishnu, Shaiva Dwarpala, Hanuman and other stone objects as well as terracotta figurines. “A miniature shrine with sculptural depiction of deities is another noteworthy find,” the ASI report says, talking about the miniature temple found in S2.

The report added that Shiva linga and Yonipatta in good numbers were doing in cellar S2 and the western wall area. It states that Two sculptures of Vishnu were also recorded from cellar S2, one of which is a complete image and another one is only the parikara part of an image depicting the figure of seated Vishnu.

Two fragmentary images of Krishna and a head of Ganesh made of marble was found from the cellar S2. Two damaged sculptures of Nandi were also found during the debris clearance in the western chamber. Apart from these, several specimens could not be identified with certainty as they were either too fragmentary like body parts or defaced and worn out.

A broken part of a marble slab inscribed with ‘Ram’ in Devnagari script and painted with black was also found in S3. A makara depicted in seated posture on a pedestal with its raised snout was found in very condition.

Other items found in S2 included a larger number of broken pots such as chillum, hookah base, miniature pots, lamps, etc.

A larger number of pottery and terracotta items were found in S3, apart from S2. It is notable that as the Hindu side, the S3 cellar could not be searched fully as it was filled with debris to the ceiling and there was not approval for excavation. As a result, it is possible that more artefacts related to the Hindu temple are buried in the cellar.

One small stone Shiva Linga was also found during debris cleaning on the east side of the structure.

The cellars were made of stone pillars, with stone slabs placed on them supported by stone beams. Later masonry pillars were also added in some cellars to support the ceilings. ASI has found that pillars from an earlier Hindu temple were used to make these cellars.

The artefacts found in the cellars are just part of massive evidence of the Hindu temple found by ASI at the Gyanvapi structure. The ASI report has concluded that large Hindu temple existed at the place prior to the construction of the existing structure. This temple had a big central chamber, surrounded by four chambers on north, south, east and west. Remains of three chambers to the north, south and west can still be seen.

This news storey is lifted from OP India dated 27-1-2024

–subham—

Tags- Kasi, Mosque, Hindu gods, Vishnu, Hanuman,Gyanvapi

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்! – 2 (Post No.12,961)

 .

அதிமதுரம் 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,961

Date uploaded in London – –   27 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part 2

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன

XXXXX

இந்த நூலில் எனக்குப்பிடித்த விஷயங்கள் ;

நாம் சாதாரணமாகக் கேள்விப்படாத பல மூலிகைகளின் பெயர்கள் வருகின்றன. மேலும் ஓரிரு வரிகளில் செய்தி கிடைக்கிறது.

மூன்றாவதாக அகர வரிசையில் மூலிகைகள் இருப்பதால், நாம் தேடும் மூலிகையைக் கண்டுபிடிப்பது எளிதாகிறது.

XXXXX

11அதிமதுரம்-கடுக்காய்-மிளகு மூன்றும் சமனிடை எடுத்து இளம் வறுப்பாய் வறுத்து சூரணம் செய்து , ஒரு வேளைக்கு துட்டிடை சூரணம் எடுத்து தேனில் குழைத்துக் கொடுக்க சூட்டிருமல் நிவர்த்தியாகும்.

அதிமதுரம் 

XXXX

12. அக்கிரா காரத்தைதை பொடி செய்து , பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் , நா  வறட்சி, தோஷம், ஜன்னி, தோஷம்- வாந்தி, கபம்- இவைகள் நிவர்த்தியாகும்.

XXXX

13. ஆண்குறி கெட்டிப்பட : அபினி– அக்கிரா காரம்- மரு தோன்றி விறை — இதுகள் சமனிடை எடுத்து தேன்விட்டு அறைத்து பத்துப்போடுவது போல ஆண்குறி மீது தடவிவருவது . இப்படி 15  நாள் தடவினால் ஆண்குறி பெருத்தும் நீண்டும் நன்றாய்க் கெட்டிப்படும். தாது புஷ்டி பற்றி அநேகமான விசேஷ முறைகள் பார்வதி பரணீயத்தில் சொல்லியிருக்கிறது.

XXXXX

(பார்வதி பரணீயம் என்னும் நூலில் கண்ட விஷயங்களைத் தான் தருவதாக ஆசிரியர் முன்னுரையில் கூறியிருக்கிறார் ).

XXXX

எச்சரிக்கை – இந்தக் கட்டுரையில் நான்  எழுதும் விஷயங்களை தகுதி பெற்ற டாக்டரின்/ வைத்தியரின் ஆலோசனையைக் கேட்டுப் பயன்படுத்தவும் .

ஒரு சுவையான விஷயத்தைச் சொல்கிறேன் . பெண்களுக்கு முடியை அகற்ற சில வகைக் கிரீம்கள் / களிம்புகள் Hair Removing Creams உள்ளன. ஒரு ஆண்மகன் கல்யாணத்துக்கு முதல் நாள்,  கீழ்ப்பகுதியில் உள்ள முடிகளை கற்ற, அந்த க்ரீமை தடவிக்கொண்டு எரிச்சல் காரணமாக தவியாய்த் தவித்துவிட்டார் ; கொஞ்சமும் கூச்சப்படாமல் இதை ஆங்கிலப் பத்திரிக்கையில் எழுதி மற்ற கல்யாண மாப்பிள்ளைகளை எச்சரித்து இருந்தார் ; வாழ்க அந்த ஆண்மகன்!

XXXX

சஞ்சீவி மூலிகை !!!

14 . அழுக்கண்ணிச்செடியை ஆதிவாரத்தில் சந்திரன் கடக ராசியில் இருக்கும்போது  தன்னுடைய நிழல் செடியின் மேல் படாமலே பிடிங்கிவந்து ஐந்து நாள் ராத்திரியில் பனியில்வைத்து எடுத்து, நிழலில் உலர்த்திஇடித்து  வஸ்திரகாயம் செய்து ஒரு வேளைக்கு ஒரு விராகன் எடை சூரணம் எடுத்து , அதற்குச் சமபாகம் கற்கண்டுத் தூளும் தேனும் இழைத்துச் சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டியுண்டாகும் . தாது புஷ்டியுண்டாகும்; பசியதிகரிக்கும் ; சகல ரோகங்களும் தீரும். இதனால் ஒரு பொல்லாங்கு வராது. இந்த அழுக்கண்ணிச்செடியின் நிறமும் …. இலைகளின் அளவும் இது இருக்கும்படியானயிடமும் அதனுடைய  ருசிபாகமும் பார்வதி பரணீயம் என்னும் சாஸ்திரத்தில் பார்த்துக்கொள்ளவும் .

XXXX

15. இளைத்த உடம்புக்கு : அயக்கம்பியை சிவக்க காய்ச்சி பசும் மோரில் தோய்த்து சாதத்திற்கும், வேண்டியபோது தாகத்திற்கும்  உபயோகித்து வந்தால் , பழைய சுரம் , சகல கழிச்சல், பழைய பேதி இவைகள் நிவர்த்தியாகும்.

XXXX

16.மயிர் வேண்டாத இடத்திற்கு :- அரிதாரம் இரண்டு  பங்கு சுண்ணாம்பு ஒரு பங்கு இவ்விரண்டும் சேர்த்து தண்ணீர் விட்டறைத்து , மயிர் வேண்டாத இடத்தில் சந்தனம் பூசுவது போல் நன்றாய்த் தடவி சற்றுநேரம் கழித்துக் கழுவிப்போடவும் ;உதிர்ந்துவிடும் .

XXXX

17.வயிற்றில் இறந்த பிள்ளை கீழே விழ : அதிமதுரம், தேவதாரம் வகைக்குப் பலம் 1 வெந்நீர் விட்டரைத்துக் கலக்கி இரண்டு வேளை உள்ளுக்குக் கொடுக்க பிள்ளை கீழே விழும்.

XXXXX

இந்த மூலிகை மர்மத்திற்குத் தாய் நூலாகிய பார்வதி பரணீயமென்னும் சாஸ்திரத்தை சகலமான வெளிநாட்டிலுள்ளவர்கள் யாவரும் பிராணாதாரமாய் கையில் வைத்திருக்கவேண்டியதவசியம்.

XXXX

18.பால் உண்டாக :- ஆலம் விழுதும் ஆலம் விரையும்  சம அளவு  கொண்டு பாலில் காய்ச்சியுண்டால் பாலில்லாத பெண்களுக்குப் பால் உண்டாகும். முகத் தேஜசு உண்டாகும்.

XXXX

19. சிலந்தி வீக்கத்திற்கு :- ஆளி விரையை முலைப்பால் விட்டறைத்து வெண்ணெயில் மத்தித்து சிலந்தி , வீக்கம் இதுகளில் தடவ வற்றிப்போகும்.

XXXX

20.ஆவாரைப் பஞ்சாங்க சூரணம் மூன்று பங்கும், கோரைக்கிழங்கு கிச்சிலிக் கிழங்கு சூரணம் ஒரு பங்கும் கூட்டி தினந்தோறும் உடம்பிற்குத் தேய்த்துக் குளித்துவந்தால் கற்றாலை நாற்றம் தீரும் .

XXXX

குறிப்பு – இந்தக் காலத்தில் நிறைய மருந்துகள் வந்துவிட்டதால் மேற்படி விஷயங்கள் தேவை இல்லாமல் போகலாம். ஆயினும் அந்தக் காலத்தில் நம்மவர்கள் என்னெவெல்லாம் செய்தனர் என்பதையும் அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் எவை என்பதையும் அறிய இவை உதவும் ; இக்காலத்தில் இந்த மூலிகை அனைத்தையும் அடையாளம் காணக்கூடியவர்கள் இருக்கிறார்களா என்பது சந்தேகமே ; கிராமப்புற்ற சந்திக்களில் மூலிகை விற்போரிடம் இவைகளை அறிந்து வீடியோ படங்களுடன் வெளியிட்டால் ஆராய்ச்சி செய்வோருக்கு பேருதவியாக இருக்கும்.  . அவைகளை ஒப்பிட்டு குறைகளையும் நிறைகளையும் அறியலாம் . லணடனிலுள்ள வெல்கம் லைப்ரரியில் ஏராளமான ஓலைச் சுவடிகளை படம் எடுத்துக் பாதுகாத்து வருகின்றனர் ; அங்குள்ள  ஒரு ஆராய்ச்சியாளருக்கு தமிழ் சுவடிகளை மொழிபெயர்த்துத் தந்தேன் . லண்டன் நகரிலுள்ள உலகப் புகழ் பெற்ற கியூஉ தாவர வியல் பூங்காவில் அனைத்து உலக தாவர விஷயங்களையும் , தாவர விதைகளையும் சேமித்து வைத்துள்ளனர் ; இது போன்ற பயனுள்ள பணிகளைத் தமிழர்கள் செய்யவேண்டும்.  

–subham—

Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள், பார்ட்2,  part 2,  அதிமதுரம் , Munisami Mudaliyar

லண்டன் அருகில் மூலிகை உலகம்; அறிவியல் அதிசயம்! (Post No.12,960)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,960

Date uploaded in London – –   27 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

லண்டனில் தெற்கு புறநகர்ப்பகுதியில் கியூ தாவரவியல் பூங்கா Royal Kew Botanical Gardens இருப்பதை பலரும் அறிவார்கள் (இந்தக் கட்டுரையாளர் 1987ல்L  லண்டனில் வந்து இறங்கிய சில மாதங்களில் சென்றது இந்தப் பூங்காவுக்குத்தான் ; ஏனெனில் மதுரையில் படித்தது  பி. எஸ்சி பாட்டனி ; B.Sc. Botany  பின்னர்தான் எம்.ஏ படிப்பு. அதற்குப்பின்னர் வருவோர் போவோர் எல்லோரையும் அழைத்துப் போவேன் அல்லது கியூ ஆற்றுப்படை சொல்லி வழி அனுப்புவேன் )

இங்கு என்ன அதிசயம் இருக்கிறது ?

உலகத்திலுள்ள முக்கியமான , அழிந்துவரும் தாவரங்ககளின் விதைகளை எல்லாம் சேகரித்து வைத்துள்ளனர் .

எங்கே தெரியுமா?

நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்ட பாதாள குளிர் அறையில் !

இந்த விதைகள் பாங்கு கியூ பூங்காவில் இல்லை . அங்கிருந்து சுமார் ஒரு மணி  நேரம் கார் பயணம். வேக் ஹர்ஸ்ட் பிளேஸ் (Wakehurst, previously known as Wakehurst Place, West Sussex) , என்னுமிடத்தில் இருக்கிறது ..  இதை கியூ தாவரவியல் பூங்கா நிர்வகிக்கிறது.

மேலும் கியூ பூங்காவில் உலக மூலிகைகள்,  தாவரங்கள் பற்றி எழுதப்பட்ட புத்தககங்கள், அதி பயங்கரக் காடுகளில் உள்ள தாவரங்கனின் படங்கள், ஓவியங்கள்  அனைத்தையும் சேகரித்து ஆராய்ச்சியாளர்களை அழைத்து ஆய்வும் செய்து வருகிறார்கள் .

மில்லென்னியம் The Millennium Seed Bank (MSB) விதைகள் வங்கியில் 240  கோடி விதைகள் இருக்கின்றன. இவை 39 ,௦௦௦ தாவரங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை.

is home to over 2.4 billion seeds, representing over 39,000 different species of the world’s storable seeds. 

பூமியில் வேறெங்கும் இந்த அளவுக்கு விதைகள் சேகரிக்கப்பட்டது இல்லை. இந்த விஷயத்தில் கியூ கார்டனுக்கு உதவ  உலகெங்கிலும் பார்ட்னர்கள் உள்ளனர்.

இந்த ஆராய்ச்சி நிலையம் நிலத்துக்கு அடியில் இருக்கிறது. லண்டன் மீது அணுகுண்டு விழுந்தாலும் விதைகளைக் கதிரியக்கம் தாக்காதபடி பாதுகாப்பு செத்துள்ளனர். வெள்ளம் வந்தாலும் பாதிக்காது (-20°C)  மைனஸ் -20°சி டிகிரில் குளிர் நிலையில் விதைகளை வைத்துள்ளனர்.

மில்லன்னியம் என்னும் 2000  ஆவது ஆண்டில் இது துவக்கப்பட்டது . லண்டனிலுள்ள வெல்கம் ட்ரஸ்ட், ஆய்வுப்பணி விஷயங்களில்,  இதற்கு உதவி வருகிறது.

–subham—

Tags- விதைகள் வங்கி , பாங்கு , கியூ  கார்டன்ஸ், தாவரவியல் பூங்கா,  Millennium Seed Bank