சம்பங்கி மலரின் மருத்துவ பயன்கள் (Post No.12,913)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,913

Date uploaded in London – –   13 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

சம்பந்திப் பூ வெள்ளை நிறத்தில் இருக்கும்; இதன் தாவரவியல் பெயர்  பாலியான்தஸ் ட்யூபெரோசா Polianthes tuberosa. இதன் வேர் கிழங்கு போல பருத்து இருப்பதால் டியூபர் Tuber என்ற சொல் ஒட்டிக்கொண்டது .நல்ல நறுமணம் வீசும்; பூஜைக்கும், நறுமணப் பூச்சுகளுக்கும்  பயன்படும் இந்தப் பூ,  தென் அமெரிக்காவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையிலுள்ள மெக்சிகோவில் தோன்றி உலகெங்கிலும் பயணம் செய்துவிட்டது; வங்க தேசத்தில் இதை ஒரு மருத்துவ மூலிகையாக பயன்படுத்துகின்றனர் ; ஸ்பெயின் நாட்டு கிறிஸ்தவ பாதிரிகள், அஸ்டெக் the Aztecs , மாயா Mayan நாகரீகங்களை சூறையாடி அழிப்பதற்கு முன்னர், 500 ஆண்டுகளுக்கு முன் வரை, இதை மாயா , அஸ்டெக் நாகரீக மக்கள் பயன்படுத்தி வந்தனர். சம்பங்கி மலரின் மருத்துவ குணங்கள் பற்றி மருத்துவ பத்திரிகைகளில் ஆதாரபூர்வ செய்திகள் கிடைக்கின்றன .

இந்த மலரை நாட்டு வைத்தியத்தில் கட்டிகளைக் குணப்படுத்தகவும் , அழகு ஊட்டவும், மலம் இளக்கியாகவும் , தேகத்தில் சூட்டைத் தணிக்கவும், பாலியல் நோய்களைக் குணப்படுத்தவும் , முடி வளர் தைலமாகவும், வாந்தி உண்டாகக்கூடிய பொருளாகவும், உடலில் நீரைக் குறைக்கவும் பயன்படுத்துகின்றனர்.(used for treating tumour, cosmetic, laxative, cooling, placebo, sexual disorder, hair colour, emetic, diuretic, and gonorrhoea.)

வட இந்தியாவில் இதை ராஜ கந்தம் (மணங்களின் அரசன் Rajanigandha or Nishigandha), என்பர்; இரவில் பூப்பதால் நிசி கந்தம் என்றும் அழைப்பார்கள் . கந்தம் என்றால் நறுமணம்; நாம் சுகந்தா, சுகந்தி என்ற பெயர்களை பெண்களுக்கு சூட்டுகிறோம் அல்லவா?

அனைத்து வகை மண்ணிலும் சம்பங்கி வளரும். சரளை, செம்மண்ணில் நன்றாக வளரும். எல்லாக் காலத்திலும் சாகுபடி செய்யலாம்.

இதைத் தோட்டங்களில் அழகிற்காகவும் வளர்க்கின்றனர். மஞ்சள் நிற , இளம் சிவப்பு நிற சம்பங்கிகளும் உண்டு.

விலை அதிகம்

உலகின் புகழ் பெற்ற, எல்லோரும் விரும்பும், நறுமண உடற் பூச்சுகளில் (perfumes பெர்ப்யூம் ) இது கொஞ்சமாவது இருக்கும்; கரணம் என்னவெனில் விலை மிக அதிகம் . 3600 கிலோ பூக்களில் இருந்தது அரை கிலோ நறுமண எண்ணெய்தான் கிடைக்கும் என்றால் இதன் விலையை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம் (Voluptuous,  intoxicating and expensive, so expensive!  It takes over 3600 kilos of flowers to produce just half a kilo of tuberose oil), இதனால் இதை சிறிதளவே கலந்து ஏனைய ஆயில் (oils) களை அத்தோடு சேர்க்கின்றனர்.

அறைகளில் கொஞ்சம் மலர்கள் இருந்தாலும் நல்ல மணம் வீசும். மல்லிகை போல வாடிவிடாது. சில நாட்களுக்கு புதுமை மாறாது இருக்கும்.

தமிழ் நாட்டில் சம்பங்கி சாகுபடி பற்றியும் அதன் மூலம் ஏராளமான வரும்படி கிடைப்பது பற்றியும் வெப் சைட்டுகளிலும் விவசாயப் பத்திரிகைகளிலும் நிறைய தகவல்கள் உள்ளன. ஆயினும் ஏற்றுமதி விவரங்களைத் தரும் இணைய தளங்களில் எந்தச் செய்தியும் இல்லாததால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி ஆகிறதா என்று தெரியவில்லை. பெர்ப்யூம் தொழிலில் முதலிடம் வகிக்கும் பிரான்ஸ் இதை அதிகம் வாங்குகிறது . பிரான்ஸ் நாடுதான் உலக பெர்ப்யூம் தலைநகர் ஆகும்.

கீழ்கண்ட பெர்ப்யூம்களில் சம்பங்கி மலரின் மணம் இருப்பதை நல்ல மூக்கு இருப்போர் எளிதில் அறிவர்.

Smell tuberose in:

Goutal Tubéreuse

Chanel Gardénia

Clive Christian C for Women

Dior Poison

Dior J’Adore Dior

Diptyque Do Son

Floris Tuberose

Frederic Malle Carnal Flower

Givenchy Amarige

Givenchy Organza

Guerlain Jardins de Bagatelle

L’Artisan Parfumeur Tubéreuse

சம்பங்கிப்  பூவை தேங்காய் எண்ணெய் , ஆலிவ் ஆயில் ஆகியவற்றில் கலந்து அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர் .

இந்திய மொழிகளில் இதன் பெயர் :

சம்ஸ்க்ருதம் ரஜினி கந்த Rajnigandha, ரஜோனி கந்த Bengali i- Rajoni-Gandha,)  உருது மொழியில் குல் ஷாபி  in Urdu Gul Shabbi) மராத்தியில் நிசி கந்த , (in Marathi, NishiGandha) கன்னடத்தில் சுகந்த ராஜ , (in Kannada Sugandharaja), தமிழில் சம்பங்கி (in Tamil Sambangi) தெலுங்கு மொழியில் , நில சம்பங்கி ( in Telugu NelaSampenga) .

இந்து திருமணங்களில் (Wedding Garlands) மாலைகளில் உதிராத பூவாக நிலைத்து நிற்பதும் சம்பங்கி ஒன்றுதான். ஏனைய மலர்கள் நாள் முடிவதற்குள் வாடி உதிர்ந்து விடும்.

இந்தி , வங்காளி மொழிக் கதைகளில் ரஜினிகந்த பெயரைக் காணலாம். 17ம் நூற்றாண்டில் இப்ராஹிம் அட்டையில் ஷா எழுதிய  Ibrahim Adil Shah II (1571- 1627), எழுதிய குறிப்பில் இதை திருமண அறையில் பயன்படுத்துவதைப் பற்றி  எழுதிவைத்துள்ளார்.

—subham—

Tags- சம்பங்கிப் பூ, சம்பங்கி

திருவல்லம் பரசுராமர், உல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்கள்- 56 (Post No.12,912)

picture of Ulloor Subrahmanya Swami temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,912

Date uploaded in London – –   13 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 56

கோவில் எண்கள் –107, 108

107.திருவல்லம் பரசுராமர் கோவில்

திருவனந்தபுரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் திருவல்லம் என்னும் இடத்தில் பரசுராமர் கோவில் இருக்கிறது. கேரள மாநிலத்தையே கடலிலிருந்து மீட்டுத் தந் த பரசுராமருக்கு உள்ள ஒரே கோவில் இதுதான். கேரளத்தில் பஞ்ச பாண்டவர்களோ, அவருக்கு முந்தைய ராம லெட்சுமண  பரதரோ , அவருக்கும் முந்தைய பரசுராமரோ சம்பந்தப்படாத கோவில்கள் மிகச் சிலவே .

கரமணை ஆற்றின் கரையில் அமைந்த பரசுராமர் கோவில் , கோவலம் கடற்கரையிலிருந்து 6 கி.மீ தொலைவுதான்.

கருவறையைச் சுற்றி நாலம்பலம் உள்ளது. இந்தக் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது . கேரள தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்படுகிறது; அடிக்கடி நடத்த திருப்பணிகளால் பல பழைய கட்டிடங்கள் மறைந்துவிட்டன .

இங்கும் முன்னோர்களை வழிபடும்  பலி சடங்குகள் நடக்கின்றன.ஆடி அமாவாசை தினத்தன்று கரமனை ஆற்றில் குளித்து விட்டு  தர்ப்பணம் செய்கிறார்கள்.’கர்க்கிடக வாவு’ எனப்படும் இந்த நாள் அரசு விடுமுறை நாளாகும் .

ஆண்டுதோறும் அக்டோபர் – நவம்பரில் பத்து நாள் உற்சவம் நடக்கும். எட்டாம் நாளன்று திடம்பு வடிவில் புறப்படும் ஊர்வலம் மறுநாள்தான் கோவிலுக்குத் திரும்பும். ஒன்பதாம் நாள் நடக்கும் யானைகள் பவனி, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலுக்குச் செல்லும் . போகும் வழியில் சங்குமுகம் கடலில் மூர்த்தியை நீராட்டுவார்கள்.. இது ஆராட்டு ஆகும். திரு வனந்தபுரத்தில் பல சடங்குகள் நடக்கும். மறுநாள் காலையில் பரசுராமர் திருவல்லத்துக்குத் திரும்புவார்.

XXXX

108.உல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருவனந்த புரத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இருக்கிறது.  . இது ஒரு அழகான கோவில் . மார்ச் (பங்குனி உற்சவம்) மாதத்தில் எட்டு நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கும்.  கேரளத்துக்கே உரித்தான அத்தனை வகை நடனங்களும், சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கும். ஏழாவது நாளில் ஆறாட்டு நடக்கிறது. யானைகள் பவனி, அருகிலுள்ள சாஸ்தா கோவில் வரை சென்று, மாலையில் திரும்பிவிடும்.

தை (ஜனவரி) மாதம் தைப்பூச உற்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது; .நூற் றுக்கணக்கான பக்தர்கள் காவடிகளை சுமந்து கொண்டு, கொட்டு மேளத்துக்கு ஏற்ப நடனம்  ஆடிக்கொண்டு வருவார்கள். சுமார் 300 காவடிகள் அருகாமையிலுள்ள கெளரீபட்டம் கோவிலில் புறப்பட்டு உல்லூரை  வந்தடையும்.

XXXX

109.குளத்தூர் சிவன் கோவில், த்ரிப்பாத புரம்

Thrippadhapuram Mahadeva Temple (aka Major Thrippappoor Shree Mahadevar Kshethram)

திருவனந்தபுரம்  நகரிலிருந்து 15 கிமீ தொலைவில் மனோரம்யமான சூழ்நிலையில் சிவன்- விஷ்ணு கோவில் இருக்கிறது . குளத்தூர் என்பது ஊரின் பெயர். அங்கு சிவா- விஷ்ணுவோடு கணபதி, ஐயப்பன் ஆகிய தெய்வங்களையும் தரிசனம் செய்யலாம்.

திரு பாத புரம் என்றால் இறைவனின் கால் FEET பதித்த புனித இடம் என்று பொருள். இங்கு விஷ்ணுவின் பாதங்களைக் காணலாம். ஆயினும் பிரதான தெய்வம் சிவ பெருமான்தான்.

திவாகர முனிவரின் முன்னால், விஷ்ணு தோன்றிய போது  அவருடைய தலை திரு வனந்த புரத்திலும் , கால்கள் இங்கும் தோன்றியதாம் . அதன் நினைவாக இங்கே பாதங்கள் உள்ளன. கோவிலுக்கு அருகில் கண் தீர்த்தம் இருக்கிறது .

  கோவிலில் இரண்டு கருவறைகள் உண்டு. சிவனுக்கும் கிருஷ்ணன்/விஷ்ணுவுக்கும் உள்ள அவை எதிரெதிரே அமைந்து ள்ளன .  ஆறு சிவலிங்கங்களும் இரண்டு விஷ்ணு பாதங்களும் இருப்பது தனிச் சிறப்பு ஆகும்

கோவிலில்  கண் EYE  வடிவிலுள்ள தீர்த்தம் தவிர , வெளியே பாபநாஸத் தீர்த்தக் குளமும் இருக்கிறது 

சிவ பெருமானுக்கு 7 நாள் உற்சவத்தையும், விஷ்ணுவுக்கு பத்து நாள் உற்சவத்தையும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது . விழாக் காலங்களில் எல்லா வகை கலை நிகழ்ச்சிகளையும் காணலாம் . இத்துப் பாண்டிகை தினங்களில் பெரும் பக்தர் கூட்டத்தைக் காணலாம்.

XXXXX

110.பழம் சிரா தேவி கோவில்

திருவனந்தபுரம் நகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் பழம்சிறை என்னுமிடத்தில் தேவி கோவில் அமைந்துள்ளது; நாகர் ஊட்டு என்பது கோவிலின் சிறப்பு வழிபாடு. விரதம் இருக்கும் புலவர்கள் என்போர் நள்ளிரவுக்குப் பின்னர் நாகர் / பாம்பு படத்தை பாடிக்கொண்டே வரைவார்கள் . நாகர் குறித்து அவர்கள் பாடுவார்கள். கடைசி நாளன்று பக்தர்கள் பொங்கல் வைத்து தேவிக்குப் படைப்பார்கள். மார்ச் மாதம் நடக்கும் 7 நாள் விழாவில் ஐந்தாம் நாள் தான்  நாகர் களம் என்னும் நாகர் படம் வரைதல்  நடக்கும். விழாக்காலத்தில் கோவில் விளக்குகளில்  ஜொலிக்கும். கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். தாளப்பொலி ஏந்தி பெண்கள் பவனி வருவார்கள் .

கர்ப்பகிரகத்தை சுற்றிலும் 17 யானைகள், ஆறு சிங்கங்கள் தாங்கி இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேற்பகுதியில் மும்மூர்த்திகள் அவர்களது தேவியர்களுடன் காட்சி தருகின்றனர். இவை சமீப கால படைப்புகள் .பிரகாரத்தில் தசாவதார காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சசன், நவகிரகங்கள் மூர்த்திகளும் இருக்கின்றனர் .

–SUBHAM—

TAGS- பழம் சிரா தேவி கோவில், த்ரிப்பாத புரம், திருவல்லம் பரசுராமர்

நியூக்ளியர் மன இறுக்கச் சோதனை! (Post No.12,911)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,911

Date uploaded in London –  –   13 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஜனவரி 2024 ஹெல்த்கேர் மாத இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை

நியூக்ளியர் மன இறுக்கச் சோதனை!

தமிழாக்கம் : ச.நாகராஜன்

நியூக்ளியர் மன இறுக்கச் சோதனை (Nuclear Stress Test) என்பது இதய தசைக்கு இரத்த ஓட்டம் எப்படிப் பாய்கிறது என்பதை மதிப்பிடும் சிகிச்சைக்கான ஒரு சோதனை முறையாகும்.

இதை மையோகார்டியல் பெர்ஃப்யூஷன் இமேஜிங் (Myocardial perfusion Imaging – MPI) – அதாவது இதயத்தசை மருந்து உட்கொள்ளலைப் படமாக்கல் – அல்லது ரேடியோநியூக்ளிட் டெஸ்ட் -அதாவது கதிரியக்கச்சிதைவு அணுக்கரு சோதனை (Radionuclide Stress Test) என்றும் கூறுவர்.

இது, கரோனரி தமனி வியாதி (Coronary artery disease CAD) பற்றி அறியவும், இதயத்தின் செயல்பாடு மற்றும் ஆரோக்கியம் பற்றிய முழுத் தகவலையும் பெறுவதற்காகவும் செய்யப்படும் ஒன்று. இந்தச் சோதனையில் சிறிய அளவு கதிரியக்கப் பொருள் பயன்படுத்தப்படும். அத்துடன் இதயத்தின் விவரமான படங்களை உருவாக்க, படமாக்கும் தொழில்நுட்பம் (Imaging Technology) பயன்படுத்தப்படும்.

இதைப் பற்றிய முழுவிவரங்களையும் இங்கு பார்ப்போம்:

செயல்முறை:

1. ரெஸ்ட் பேஸ் (ஓய்வு நிலை- Rest Phase);

நோயாளிக்கு முதலில் கதிரியக்க சுவடறியும் (Radioactive Tracer) சிறிய அளவு – பொதுவாக 99M – டெக்னெடியம் (technetium) ஊசி போடப்படும். இந்த சுவடறியும் மருந்து இதய தசை உயிரணுக்களிலிருந்து எடுக்கப்பட்ட கூட்டுப்பொருள்களுடன் இணைக்கப்பட்டதாக இருக்கும். பின்னர் நோயாளி சிறிது நேரம் ஓய்வான நிலையில் இருப்பார் – அப்போது சுவடறியும் மருந்தானது இதயம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு விடும்.

2. இமேஜிங் அட் ரெஸ்ட் (Imaging at Rest)

ஒரு விசேஷமான கேமரா – காமா கேமரா என்று அறியப்படும் ஒரு கேமரா – அல்லது ஒரு ஸ்பெக்ட் (SPECT – Single Photon Emission Computed Tomography) ஒய்வான நிலையில் இதயத்தைப் படங்களாகப் பிடிக்கும். மன இறுக்க நிலையில் உள்ள போது இருக்கும் நிலையுடன் இவை ஒப்பிடுவதற்கு, ஒரு அடிப்படையாக அமையும்.

3. ஸ்ட்ரெஸ் பேஸ் – மனஇறுக்க நிலை (Stress Phase)

இதயத்தை இறுக்கத்திற்கு உட்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று உடல்பயிற்சி (Exercise) ஆகும். இன்னொன்று பார்மாகோலோஜிகல் மன இறுக்கம் (Pharmacological Stress) ஆகும். உடல்பயிற்சி செய்யும் போது, நோயாளி ஒரு ட்ரெட் மில்லில் நடக்கவோ அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இருக்கும் சைக்கிளை பெடல் செய்யவோ சொல்லப்படுவார். நோயாளி உடல்பயிற்சி செய்ய முடியாத நிலையில் இருப்பின், உடல்பயிற்சி செய்தால் ஏற்படக்கூடிய நிலையைப் பெறுவதற்காக அடினோசைன் (Adenosine) அல்லது டோபுடாமைன் (Dobutamine) செலுத்தப்படுவார்.

4. இமேஜிங் அட் ஸ்ட்ரெஸ் – மன இறுக்க நிலையில் படங்கள் (Imaging at Stress)

மன இறுக்க நிலைக்குப் பின்னர், நோயாளி இன்னும் ஒரு முறை ரேடியோஆக்டிவ் ட்ரேஸர் ஊசி போடப்படுவார். இப்போது கேமரா  மன இறுக்க நிலையில் இருக்கும் இதயத்தின் படங்களைப் பிடிக்கும். மருத்துவர்களை இந்தப் படங்கள் இரத்த ஓட்டம் பற்றி அறியவும், மன இறுக்கத்தின் போது போதுமான அளவு ரத்தம் பெறாத பகுதிகளை இனம் கண்டு அறியவும் உதவும்.

சுவையான தகவல்கள்

1. பாதுகாப்பான ரேடியோஆக்டிவ் ட்ரேஸர்கள்

மன இறுக்க சோதனியில் பயன்படுத்தப்படும் ரேடியோ ஆக்டிவ் ட்ரேஸர்கள், மிகக் குறைந்த அளவு கதிரியக்கத்தையே வெளிப்படுத்தும். அத்துடன் மிகச் சிறிய அளவிலான பாதி அளவு உயிரியக்கத்தையே கொண்டிருக்கும். ஆகவே சிகிச்சை பற்றி அறிவதற்காக, பாதுகாப்பாகவே இவை இருக்கும். கதிரியக்க பாதிப்பை குறைப்பதற்காக கொடுக்கப்படும் அளவும் மிகவும் கவனத்துடன் கட்டுப்படுத்தப்படும்.

 2. தனிப்பயனுக்குத் தக்கபடியான மன இறுக்க வழிமுறைகள் (Customized Stress Methods).

உடல்பயிற்சியா அல்லது பார்மகோலாஜிகலா என்பது ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட சூழ்நிலைகளுக்குத் தக்கபடி தேர்ந்தெடுக்கப்படும். சில நோயாளிகள் உடல் அங்கங்களின் இயக்கக் குறைபாட்டினால் உடல்பயிற்சியைச் செய்ய முடியாதவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட நிலைகளில் பார்மலோலாஜிகல் மன இறுக்கம் கடைப்பிடிக்கக் கூடிய  மாற்று வழிமுறையாக அமையும்.

3. டைனமிக் ஹார்ட் ஃபங்ஷன் அசெஸ்மெண்ட் – இதய இயக்கத்தை மதிப்பீடு செய்தல் (Dynamic Heart Function Assesment)

இரத்த ஓட்டத்தை மதிப்பீடு செய்வதோடு, நியூக்ளியர் ஸ்ட்ரெஸ் சோதனைகள் இதயத்தின் இயக்கத்தைப் பற்றிய உள்ளீடுகளையும் தருகின்றன. இதயத் துடிப்பில் இதயம் பம்ப் செய்வதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை மருத்துவர்கள் சிகிச்சை செய்ய கரோனரி தமனி வியாதி தவிர இதர நிலைகள் பற்றியும் அறியச் செய்வதில் உதவும்.

4. பாலின வித்தியாசங்கள்

ஆண்கள் மற்றும் பெண்களின் இதயங்கள் மன இறுக்கத்தின் போது வித்தியாசமாக செயல்படுகின்றன என்பதை ஆய்வு முடிவுகள் காண்பிக்கின்றன. பெண்கள் மிக அதிகமாக தவறான உடன்மறை மற்றும் எதிர்மறை அநுபவங்களைப் பெறுகின்றனர்.  இந்த வித்தியாசங்களை அறிவது துல்லியமான சிகிச்சைக்கு இன்றியமையாததாக ஆகிறது.

5. சிடி ஆஞ்ஜியோகிராபியுடன் சேர்த்தல் (Combination with CT Angiography)

சில கேஸ்களில் இரத்த ஓட்டம் பற்றிய விரிவான மதிப்பீட்டிற்காகவும் கரோனரி தமனிகளின் அங்க அமைப்பிற்காகவும்  நியூக்ளியர் மன இறுக்கச் சோதனைகள் சிடி ஆஞ்ஜியோகிராபியுடன் இணைக்கப்படுகின்றன.

முடிவுரை:

நியூக்ளியர் மன இறுக்கச் சோதனைகள் இதய இயக்கம் மற்றும் இரத்த ஓட்டம் பற்றி மிக அரிய தகவல்களை அறிய உதவும் நவீன கருவிகளாக அமைகின்றன. அவை சிகிச்சை பற்றி அறியவும் இதய நிலைகளை நிர்வகிக்கவும், தனிப்பட்ட திறன் வாய்ந்த கவனிப்பை நோயாளிக்கு அளிக்கவும் உதவுகின்றன. தொழில்நுட்ப மேம்பாடுகளும் முன்னேற்றங்களும் இந்த சோதனைகளை மேம்படச் செய்வதோடு இன்னும் அதிக தகவல்களைத் தந்து பாதுகாப்பாக இருக்க உதவுகின்றன.

*****

English Original

A nuclear stress test, also known as myocardial perfusion imaging (MPI) or radionuclide stress test, is a diagnostic procedure used to evaluate blood flow to the heart muscle. It’s commonly employed to detect coronary artery disease (CAD) and assess the overall health and function of the heart. The test involves the use of a small amount of radioactive material and imaging technology to create detailed pictures of the heart.

Here’s a more in-depth exploration of the nuclear stress test:

Procedure:

1.     Rest Phase: The patient is injected with a small amount of a radioactive tracer, often technetium-99m. This tracer is typically attached to compounds that are taken up by heart muscle cells. The patient then rests for a short period to allow the tracer to distribute throughout the heart.

2.     Imaging at Rest: A specialized camera, known as a gamma camera or a SPECT (Single Photon Emission Computed Tomography) camera, captures images of the heart at rest. These images provide a baseline for comparison with the stressed state.

3.     Stress Phase: There are two main methods to stress the heart – exercise or pharmacological stress. During exercise, the patient might walk on a treadmill or pedal a stationary bike. If the patient can’t exercise, drugs such as adenosine or dobutamine may be administered to simulate the effects of exercise.

4.     Imaging at Stress: After the stress phase, the patient is again injected with the radioactive tracer, and the camera captures images of the heart under stress. This allows physicians to compare blood flow and identify areas of the heart that may not be receiving an adequate blood supply during stress.

Interesting Facts:

1.Safe Radioactive Tracers: The radioactive tracers used in nuclear stress tests emit very low levels of radiation and have short half-lives, making them safe for diagnostic purposes. The doses used are carefully controlled to minimize radiation exposure.

2. Customized Stress Methods: The choice between exercise and pharmacological stress is often tailored to the patient’s individual circumstances. Some patients may not be able to perform physical exercise due to physical limitations, and in such cases, pharmacological stress is a valuable alternative.

3. Dynamic Heart Function Assessment: In addition to assessing blood flow, nuclear stress tests can provide insights into the dynamic function of the heart. They can reveal abnormalities in the heart’s pumping ability, helping physicians diagnose conditions beyond just coronary artery disease.

4. Gender Differences: Studies have shown that there can be differences in the way men and women’s hearts respond to stress. Women may experience more false positives or negatives, and understanding these differences is crucial for accurate diagnosis.

5. Combination with CT Angiography: In some cases, nuclear stress tests are combined with CT angiography to provide a more comprehensive evaluation of both blood flow and the anatomical structure of the coronary arteries.

Conclusion:

Nuclear stress tests are sophisticated diagnostic tools that provide valuable information about the heart’s function and blood flow. They play a crucial role in diagnosing and managing heart conditions, contributing to more personalized and effective patient care. Advances in technology continue to refine these tests, making them even more informative and safe.

*************

tags- nuclear stress test

மருக்கொழுந்து ஏற்றுமதி (Post No.12,910)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,910

Date uploaded in London – –   12 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ரோஜாச்செடியில் முள் நிறைந்த தண்டு, கிளைகளுக்கு இடையே ரோஜா மலர் இருக்கும். மல்லிகைச் செடியில் காம்பின் மீது பூக்கள்  இருக்கும். அங்கு மட்டுமே வாசனை. ஆனால் ஒரு செடி முழுதுமே வாசனை அடிக்கிறதென்றால் , அது மருக்கொழுந்து செடியாகவே இருக்கும். பச்சை  நிறத்தில் இருந்தாலும் அது பூ மாலையில், கதம்ப மாலையில் , கடவுளின் பாதத்தில் மணங் கமழ இடம்பெறும்.

ஆங்கிலத்தில் இதை Wormwood வோர்ம் வுட் என்பர். இது ஒரு மூலிகை; மருந்தாகவும் நறுமணப் பொருளாகவும் பயன்படுகிறது .

மரிக்கொழுந்து என்றும் எழுதுவார்கள். பசுமை வண்ணத்தில் சிறிய இலைகளுடன், மெலிதான உருவில் தண்டுகளாகக் காட்சியளிக்கும் அவை, இருக்கும் இடங்கள் எல்லாம், நறுமணத்தைப் பரப்பும்!

மருக்கொழுந்து செடியை இந்தியா உள்பட  48 நாடுகள்  ஏற்றுமதி செய்கின்றன. ஆண்டுதோறும் 1851 கப்பல் லோடு loads விற்பனை ஆகிறது  (Global Export Trade data of Wormwood:1851 Export Shipments found from 48 exporting Countries)

xxxxx

மருக்கொழுந்து சாகுபடி

மரிக்கொழுந்து, வண்டல் நிலம், கரிசல் நிலம், மற்றும் செம்மண் நிலங்களில் அதிக அளவில் வளரும். மிதமான மழை மற்றும் சூரிய ஒளி மரிக்கொழுந்து செடிகளை நன்கு வளர வைக்கும் தன்மை உள்ளவை. அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி, உரம் மற்றும் மருந்து தெளிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே, நன்கு செழித்து வளரும் தன்மை மிக்கது. ஓராண்டு காலம் வரை இலைகள் மற்றும் தண்டுகள் மூலம், நறுமணப் பயன்கள் தரும் மரிக்கொழுந்து, அடர்த்தியாக, நிறைய கிளைகளுடன் வளரும்.

மரிக்கொழுந்து சாகுபடி, இந்தியாவில் காஷ்மீர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் சுமார் 1000 எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.

மரிக்கொழுந்து ஓராண்டு வாழும் வகையை சார்ந்த பயிராகும். 45-80 செ.மீ. உயரம் நேராக வளரக்கூடிய இச்செடிகள் சாம்பல் நிறம் கலந்த பச்சை வண்ண இலைகளை கொண்டது. மாலைகளுக்கு உபயோகிப்பதற்காக பயிரிடப்படும் மரிக்கொழுந்து விதைத்ததில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அறுவடை செய்யபடுவதால் எந்த பருவத்திலும் சாகுபடி செய்யலாம். ஆனால், வாசனை எண்ணெய்க்காக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மார்ச் வரை சாகுபடி செய்வது நல்லது. பின்பு மறுதாம்பு பயிரை ஏப்ரல் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.

பூக்கும் தாவர வகைப் பிரிவில் ஆஸ்டரேசி ( family Asteraceae) குடும்பத்தில் 2000 வகைகள் உடைய துணைக் குடும்பத்த்தில் இதுவும் ஒன்று. ஆங்கிலத்தில் இதற்கு பல பெயர்கள் இருக்கின்றன (artemisia plant, the artemisia herb, the sweet annie herb, and “sweet wormwood.). இதன் தாவரவியல் பெயர் Artemisia absinthium ஆர்டிமிஸியா அப்சிந்தியம்.

xxxxx

மருத்துவ உபயோகங்கள்

பசியின்மையைக்  குணப்படுத்தவும் பித்த நீர்ப் பிரச்சனைகளை அகற்றவும், வயிற்று நோய்களை நீக்கவும் மருக்கொழுந்து பயன்படுகிறது ; குடலில் ஏற்படும் பிடிப்பு, காய்ச்சல், கல்லீரல் பிரச்சனை, புழுக்கள் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை போக்கவும் இதை உபயோகிக்கிறார்கள் . யாருக்காவது உடலுறவு கொள்வதில் விருப்பமின்மை இருந்தால் அதை மாற்றவும் இது டானிக்காக செயல்படுகிறது ; வியர்வையை வெளியேற்றவும் உதவுகிறது

காயங்கள் ஏற்பட்டாலோ, பூச்சிக்கடி ஏற்பட்டாலோ அந்த இடத்தில் மருக்கொழுந்தை வைத்து வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். சோப்புகளிலும், அழகு சாதனப் பொருட்களிலும் , வாசனைப் பூச்சுகளிலும் மருக்கொழுந்து எண்ணை பயன்படுகிறது .

சருமத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றுகளுக்கு (Anti fungal) , மருந்தாகிறது. உடல் வீக்கங்கள் கட்டிகள் தரும் வலியைப் போக்கி, அவற்றை சுருங்க வைக்கிறது. மன நல பாதிப்புகளுக்கு ஆற்றல்மிக்க, நிவாரணமாகத் திகழ்கிறது., நல்ல தூக்கம் வர உதவும்.

தினமும் உறங்கப் போகுமுன், தலையணையின் கீழே, ஒரு கொத்து, மரிக்கொழுந்து இலைகளைத் தண்டுடன் வைத்துக்கொண்டு, அதன் பின் உறங்கச் செல்ல கண்களைத் தூக்கம் மெள்ளத் தழுவும்.

xxxxx

மதுபானத்தில் மருக்கொழுந்து

சிலவகை மதுபானங்களில் மருக்கொழுந்து எண்ணையைப் பயன்படுத்துகிறார்கள் . வெர்மவுத் , அப்சிந்த்தே (alcoholic drinks  Vermouth, Absinthe ) முதலியவற்றில் இது உள்ளது.

19, 20 ஆம் நூற்றாண்டுகளில் பிரான்ஸ் நாட்டில் அப்சிந்த்தே மதுபானம் பிரபலம் ஆகியது. இதை அருந்தினால் போதை ஏற்பட்டு மாயக் காட்சிகளைக் காணுவார்கள் என்ற எண்ணம் பரவியதால் இதை பச்சை தேவதை என்று அழைத்தார்கள் Absinthe  was thought to have hallucinogenic properties – hence its nickname “la fee verte” (the green fairy). வெர்மவுத் என்பது இத்தாலிய ஒயின் பானம் (Vermouth, a fortified Italian wine) இதில் மருக்கொழுந்து மணம்  வீசும். .  பிரபல பெர்ப்பியூம் நிறுவனங்கள் அதிக விற்பனையாகும் வாசனைப் பூச்சுகளில் மருக்கொழுந்து ஆயிலை பயன்படுத்துகின்றன ( popular fragrances like Burberry Body and Ralph Lauren Polo Black.)

xxxx

மருக்கொழுந்துக்கு தடை விதித்தது ஏன்?

சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உள்பட சில ஐரோப்பிய நாடுகள் மருக்கொழுந்த்து உபயோகத்துக்கு தடைவிதித்தன . இதை அதிகம் பயனபடுத்தினால் அது நரம்பு மாண்டலத்தை பாதிக்கும் அமைதியற்ற மன நிலை, வலிப்பு, மூளை பாதிப்பு  ஏற்படும்  ஆயினும் இப்போது கட்டுப்பாடுகளுடன் இதன் உபயோகம் மீண்டும் வந்துவிட்டது.

அமெரிக்காவிலும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் தடை இருந்தது . இப்போது அமெரிக்கா , கனடாவில் இது பயிராகிறது.

செடியின் தண்டு, பூ, இலைகளைக் கொதிக்க வைத்து அதிலிருந்து வரும் ஆவியைக் குளிர வைத்தால் அசுலின் எண்ணெய் கிடைக்கும்; நீலப் பச்சை நிறத்தில் இருக்கும் azulene. எண்ணெயில் துஜோன், போர்னியோல், பைனின் ஆகிய ரசாயனப் பொருட்கள் இருக்கின்றன ( The oil is blueish-green due to the oil’s concentration of azulene.  The extract is rich in other organic chemicals such as thujone, borneol, and pinene) The main components of artemisia oil are ñ-thujone, Ã-thujone, sabinene, myrcene, trans-sabinol, trans- Sabinyl acetate, and linalyl acetate and geranyl propionate.

 —subham—

Tags- மருக்கொழுந்து, மரிக்கொழுந்து, சாகுபடி, ஏற்றுமதி, மருத்துவ, பயன்கள், நறுமணம், மதுபானம், தடை

ஆட்டுக்கல்/ ஆற்றுக்கால் பகவதி கோவில்-55 (Post No.12,909)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,909

Date uploaded in London – –   12 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 55

கோவில் எண்கள் –105, 106

105.ஆட்டுக்கல் /ஆற்றுக்கால் பகவதி கோவில்

திருவனந்தபுரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் ஆட்டுக்கல்/ ஆற்றுக்கால் பகவதி கோவில் உள்ளது. அங் கு நடக்கும் பொங்கல் விழா நாடு முழுதும் பிரசித்தி பெற்றது . இதை கண்ணகி கோவில் என்றும் அழைப்பார்கள்.

இந்தக் கோவிலின் தோற்றம் பற்றி ஒரு கதை உள்ளது .

திருவாங்கூர் ராஜ்யத்தின் வீரர்களா கப் பணியாற்றியவர்கள் நாயர்கள் ஆவர். அவர்களில் ஒரு குழுவான முல்லக்கல் வீடு பிரிவின் தலைவர் அருகிலுள்ள ஆற்றில் குளிக்கச் சென்றார். அங்கே ஒரு சிறுமி தனியாக இருப்பதைப் பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்து இளநீர் கொடுத்தார். அதை சாப்பிடுவதற்குள் அந்தப் பெண் மாயமாக மறைந்தாள். அவருக்கு வியப்பும் திகைப்பும் ஏற்பட்டது. ஒன்றும் புரியவில்லை. அன்றிரவு கனவில் அதே பெண் தோன்றி, அவர் வண ங்கிவரும் பகவதியே,  தான் என்று அவருக்கு அறிவித்தாள் . அவள் சொன்னபடியே பகவதிக்கு ஒரு கோவிலை எழுப்பினார்.

இந்தக் கோவிலில் கருவறைக்கு மேல், பெரிய விமானம் இருக்கிறது. கோவிலின் நுழைவாயிலை அழகான சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா இந்தக் கோவிலைப் புதுப்பித்தார். ஆஸ்த்தான ஜோதிடர் சங்கரானந்தா சொன்னது போல 1912லம் ஆண்டில் பழைய சிலையை எடுத்துவிட்டு மரத்தினால் ஆன புதிய உருவத்தைப் பிரதிஷ்டை செய்தார் .

பெண்களின் சபரி மலை

சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருப்பது போலவே பல்லாயிரக் கணக்கான பெண்கள் விரதம் இருந்து இங்கு வந்து பொங்கல் படைக்கிறார்கள்  இதனால் பெண்களின் சபரி மலை என்ற சிறப்பு அடைமொழியும் இந்த இடத்துக்கு உண்டு ; அப்போது பெண்கள் மட்டுமே கோவில் அருகில் வரலாம். கோவிலைச் சுற்றி பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் பொங்கல் பானைகளைக் காணலாம். உலகின் மிகப்பெரிய சமையல் திருவிழா அல்லது பொங்கல் விழா என்று இதை அழைத்தாலும் மிகையாகாது 

பத்துநாள் பொங்கல உற்சவம் பிப்ரவரி  மாதத்தில் நடைபெறும்.  ஒன்பதாவது நாள் விழாவில் வெல்லம், தேங்காய் கலந்த சர்க்கரைப் பொங்கலை உண்டாக்கி அம்மனுக்கு படைப்பார்கள். அப்போது கோவில் பூஜாரி , தேவியின் வாளை கையில் ஏந்தி வலம் வருவார். புனித நீரைத் தெளித்த்து பொங்கல் படைக்கும் பெண்மணிகளை ஆசீர்வதிப்பார்.

இது முடிந்த பின்னர், தேவியை அருகிலுள்ள சாஸ்தா கோவிலுக்கு எழுந்தருளச் செய்வார்கள் செண்டை மேளம், நாகஸ்வரம் முழங்க, யானைகள் பவனி வர, குதியோட்டம் , தாளப் பொலி, கும்பக் குடம்  புடை சூழ, பகவதி அம்மன் செல்வாள். வழி நெடுகிலும் பக்தர்கள் சம்பிரதாய முறையில் அம்மனுக்கு வரவேற்பும் வழிபாடும் நல்குவார்கள் . அடுத்த நாள் காலையில்தான் இந்த ஊர்வலம் கோவிலுக்குத் திரும்பும் .

விழாக்காலத்தில்  செவிக்கு விருந்தளிக்க இன்னிசை கச்சேரிகளும் , கண்களுக்கு விருந்து படைக்க பரத நாட்டியம் , மோகினியாட்டம், கதகளி ஆட்டம் ஆகியவையும் நடக்கும்.

இப்பொங்கல் விழாவில் சுமார் 10 லட்சம் பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.

கோவிலில் நடக்கும் மற்ற வைபவங்கள் :

மண்டல விரதம், வினாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, சிவராத்திரி, கார்த்திகை தீபம், ஆயில்ய பூஜை, ஐஸ்வர்ய பூஜை, நிரையும் புத்தரிசியும் (இது வயலில் அறுவடைக்கு முன்னர், கொஞ்சம் நெற்கதிர்களை அறுத்து வந்து சாமிக்குப் படையலிடுவது), அகண்ட நாம ஜபம்.

xxxxxxx

106.சிறையின்கீழ் சர்க்கரா தேவி கோவில்

Sarkara Bhagavathy temple located at Chirayinkeezhu Taluk, Thiruvananthapuram

திருவனந்தபுரத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் மேலும் ஒரு புகழ்பெற்ற பகவதி கோவில் இருக்கிறது.

கருவறைக்கு வெளியே நாலம்பலம் இருக்கிறது. கோவிலின் சிறப்பு அங்குள்ள சிறபங்களும் ஓவியங்களும் ஆகும்.

நாலம்பலத்துக்கு நான்கு வாயில்கள் உள்ளன. சுவரில் ஆயிரக் கணக்கான சுட்டு விளக்குகளை பொருத்தியுள்ளனர் . விழாக்காலத்தில் இவைகள் அனைத்தும் ஜெகஜ்ஜோதியாக ஒளி வீசும்.

ஆண்டுதோறும் இரண்டு விழாக்களை கோவில் கொண்டாடுகிறது. தேவியின் பிறந்த நாளாகக் கருதப்படும் பரணி உற்சவம் மிகவும் கீர்த்தி வாய்ந்தது. கடைசி நாளில் கருடன் தூக்கம் நடக்கும். அன்று உருச்சா என்னும் பூமியில் உருண்டு வரும் நேர்த்திக் கடனும் நடைபெறும். கோவில் விளக்குகள் அனைத்தும் எரியும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக திகழும் . பத்தாம் நாளில் தேவி தோன்றுவாள் என்ற நம்பிக்கை உள்ளதால் அவளது தெய்வீக ஆசீர்வாதங்களுக்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

எல்லா கேரள திருவிழாக்களில் இருக்கும் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் இங்கும் நடைபெறுகிறது.

இரண்டாவது முக்கிய விழா காளியூட்டு உற்சவம் ஆகும்;  இது எட்டு நாட்களுக்கு நடக்கிறது; 64 கிராமங்களின் தலைவர்கள் தாருகா என்ற அசுரனை காளி கொன்றதை நடத்திக் காட்டுவார்கள்

இந்த தேவி- அசுரன் மோதல் கட்டடம் கட்டமாக நடக்கும். தம்புரான் புலையன், புலையி புறப்பாடு, தம்புரான் புறப்பாடு என்ற வரிசையில் நிகழும். கடைசி நாளன்று 100 அடி உயர விசேஷ மேடையில்  தேவியும் அசுரனும் மோதுவார்கள். அதைக் காண பல்லாயிரக் கணக்கானோர் வருகின்றனர் . இதைக் காண்பவர்கள் மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருக்கும். இதை பரனேத்து என்றும் அழைப்பர் .

திருவிதாங்கூர் மன்னர் அனிசம் திருநாள் மார்த்தாண்ட வர்மா 1748 ஆம் ஆண்டு காளியூட்டு விழாவை அறிமுகப்படுத்திய பிறகு இது முக்கியத்துவம் பெற்றது. அந்தத் திருவிழா பிப்ரவரி-மார்ச் மாதங்களில் முதல் அறுவடையின் விளைச்சலை தேவிக்கு சமர்ப்பிக்கும் போது வருகிறது. 

காளியூட்டு என்றால் என்ன?- விக்கிபீடியா தகவல்

காளியூட்டு என்பது கும்ப மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை நாளில் நடக்கும் கலை. இதை காளிநாடகம் என்றும் அழைப்பர். காளிக்கும் தாரிகனுக்கும் நிகழ்ந்த போரைக் குறித்து நிகழ்த்துவது ஆகும்.

ஐதீகம்

கும்ப மாதத்தின் மூன்றாவது வெள்ளிக் கிழமையன்று, சர்க்கர கோவிலில் நடக்கும் ஒரு விழா காளியூட்டு. மக்களை வதைத்து, துன்பங்கள் ஏற்படுத்திய தாரிகனை, காளி கொன்று மக்களைக் காத்து நிற்பதை நினைவுகூர்வர்.

வரலாறு

திருவிதாங்கூர் பரணாதிகாரியாக இருந்த பேரரசர் மார்த்தாண்ட வர்மா, காயங்குளம் ராஜாவாக ஆன பின்பு, போருக்கு] புறப்படும் முன்பு சர்க்கரர் கோவி லில் காளியூட்டை நிகழ்த்தினார்.. அந்த யுத்தத்தில் வென்று, காயங்குளம் , திருவிதாங்கூரோடு சேர்த்ததினால் ஆண்டுக்கொரு முறை நடத்தி வரும் நிகழ்வு இது.

சடங்குகள்

‘முடியுழிச்சில்’ என்னும் சடங்கு நிகழ்த்தப்படும். அன்று காளி, தாரிகனை நிலத்தில் போரில் வென்றதால், அதைக் கொண்டாடும் விதத்தில், குலைவாழையும் கும்பளவும் வெட்டி நட்டுக் கொண்டாடுவர். இது கைலாயத்தில் வாழும் பரமசிவனை சென்றடைவதாக நம்புகின்றனர். இத்துடன், வெள்ளாட்டம் களி, குருத்தோலையாட்டம், நாரதன் புறப்பாடு, நாயர் புறப்பாடு, ஐராணி புறப்பாடு, கணியாரு புறப்பாடு, புலையர் புறப்பாடு, முடியுழிச்சில், நிலத்தில் போர் என்னும் ஒன்பது சடங்குகளும் நிகழ்த்தப்படுகின்றன.

—subham–

Tags– காளியூட்டு, சிறையின்கீழ், சர்க்கரா தேவி,  கோவில் , ஆட்டுக்கல்/ ஆற்றுக்கால் பகவதி

விவேகானந்த அதிசயம்! – 2 (Post No.12,908)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,908

Date uploaded in London –  –   12 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

விவேகானந்த அதிசயம்! – 2 

ச.நாகராஜன் 

ஹிந்து யோகி!

சீனாவில் சுவாமிஜி தங்கி இருந்த போது ஒரு சீன மடாலயத்திற்குச் செல்ல விரும்பினார். ஆனால் அங்கோ எந்த ஒரு அன்னியருக்கும் நுழைய அனுமதி இல்லை. ஒரு நாள் சுவாமிஜி தன்னுடன் வந்த மொழிபெயர்ப்பாளரிடம் மடாலயத்திற்குள் நாமாக நுழைந்தால் என்ன நடக்கும் என்று கேட்டார். அடியும் உதையும் தான் கிடைக்கும் என்றார் மொழிபெயர்ப்பாளர். “என்ன, அடித்துக் கொன்று விடுவார்களோ, வாருங்கள் பார்ப்போமே’ என்று கூறிய சுவாமிஜி ஒரு பெரிய மடாலயத்திற்குள் நுழைந்தார். மொழிபெயர்ப்பாளரோ அப்படிச் செல்லக் கூடாது என்று தடுத்தார். ஆனால் சுவாமிஜி உள்ளே நுழைந்து விட்டார்.

அதைப் பார்த்த மடத்தில் இருந்த சிலர் தடிகளுடன் ஓடி வந்தனர். . வேர்த்து விறுவிறுத்துப் போன மொழிபெயர்ப்பாளர் அங்கிருந்து ஓட எத்தனித்தார். அவரைப் பிடித்த சுவாமிஜி இந்தியாவிலிருந்து வந்துள்ள யோகி என்பதை சீன மொழியில் எப்படிச் சொல்ல வேண்டும் என்று சொல்லி விட்டுப் போங்கள் என்றார். மொழிபெயர்ப்பாளர் அதைச் சொல்லி விட்டு ஓடிப் போய் ஒரு ஒரத்தில் மறைந்து கொண்டு நின்றார்.

சுவாமிஜி அந்த வார்த்தைகளை உரக்கக் கூறியவாறே அந்த தடிக் கம்புகளுடன் வந்து கொண்டிருந்தவர்களை நோக்கி நடந்து கொண்டிருந்தார். என்ன ஆச்சரியம்! இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அவர்கள் தங்கள் கைத்தடிகளைக் கீழே போட்டு விட்டு அவர் முன்னால் விழுந்து வணங்கினர். அவர்கள் ஏதோ சொல்ல ஆரம்பித்ததைக் கண்ட மொழிபெயர்ப்பாளர் ஓடி வந்து அதைக் கேட்டார். பின்னர் சுவாமிஜியிடம் அவர், “இவர்கள் உங்கள் ஆற்றலையும் பாதுகாப்பையும் தீய சக்திகளை ஓட்டவும், பேய் பிசாசுகளை விரட்டவும் வேண்டுகின்றனர். ஆசி அளியுங்கள்” என்றார். சுவாமிஜியும் மனம் மகிழ்ந்து அவர்களை ஆசீர்வதித்தார்.  தனது பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அதைப் பல துண்டுகளாக்கினார். ஒவ்வொரு துண்டுச் சீட்டிலும் ஓம் என்று வடமொழியில் எழுதி அதை ஒவ்வொருவரிடம் கொடுத்தார். கிடைத்தற்கரிய பொக்கிஷத்தைப் பெற்றது போல மகிழ்ந்த அவர்கள் அதைக் கண்ணில் ஒற்றி வைத்துக் கொண்டனர். சுவாமிஜியும் மடாலயத்தைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தார். அவருக்கு அங்கு உரிய மரியாதைகளை மடாலயத்தினர் செய்தனர்.

பிரம்ம யோனியை தரிசித்தவர்!

பஞ்சவடியில் தீவிர தியானத்தில் ஈடுபட்ட நரேந்திரர் (சுவாமி விவேகானந்தரின் பூர்வாசிரமப் பெயர்) பல தெய்வீகக் காட்சிகளைக் கண்டார்.

ஒரு நாள் அவர் தியானத்தில் ஈடுபட்டிருந்த போது முக்கோண வடிவமாக ஒரு பேரொளி பிரகாசிப்பதைக் கண்டார்.  அது உயிருள்ள உணர்வைக் கொண்டிருப்பதாகவும் அவர் கண்டார்.

இது பற்றி தனது குருவான ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் கூறினார் நரேந்திரன். உடனே அவர், “நீ பிரம்மயோனியைப் பார்த்திருக்கிறாய்! வில்வமரத்தடியில் சாதனைகள் செய்த போது நானும் அதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு வினாடியும் அதிலிருந்து பிரம்மாண்டமான பேரண்டங்கள் தோன்றிக் கொண்டே இருந்ததைப் பார்த்தேன்” என்றார் அவர்.

யாரும் எளிதில் பார்க்க முடியாத பிரம்மயோனியை தரிசித்தவர் சுவாமி விவேகானந்தர்.

இது போன்ற ஏராளமான தெய்வீக தரிசனங்களை அவர் கண்டுள்ளார்!

அதிசயமான துறவி!

சுவாமிஜி  முற்றும் துறந்த ஒரு அதிசயமான துறவி. ஒருவரைப் பார்த்தவுடன் அவரது கடந்த காலம் நிகழ் காலம் வருங்காலத்தைப் படம் போல அவரால் பார்க்க முடிந்தது. சிறந்த தேச பக்தராக விளங்கிய அவர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றியே சிந்தித்தார். ஆன்மீக வாழ்வில் அனைவரையும் ஈடுபடச் செய்ததோடு அவர்களை மிக மிக உயரத்திற்கு ஏற்ற வல்ல அருள்சக்தியைக் கொண்டவராக இருந்தார்.

மேலுலகில் ராமகிருஷ்ணர் அவரை, “வா, கீழே பூவுலகில் சில காலம் சென்று இருப்போம்” என்று கூறி அழைத்த போது மறுத்தார் அவர். பூவுலகில் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். மிகவும் குறுகிய காலம் இருக்கலாம்’என்று ராமகிருஷ்ணர் கூறியதைக் கேட்டு அவதாரம் எடுத்தார் விவேகானந்தர்.

ஆனால் பூவுலகில் மனிதர்கள் படும் பாட்டையும் துயரையும் கண்ட அவர், “இவர்களில் கடைசி மனிதன் விடுதலை பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் நான் வருவேன்” என்று மனம் கசிந்து கூறினார்.

“நான் மீண்டும் வருவேன்” என்ற அவரது உறுதி மொழி ஒரு நாளும் பொய்யாகப் போகாது.

அதிசய விவேகானந்தர் மீண்டும் நமது பூமிக்கு வருவது உறுதியே!

***

ஆதாரம் : சுவாமி ஆசுதோஷானந்தர் தொகுத்திருக்கும் சுவாமி

புதிய கூந்தல் வளர் தைலம்:  பெண்களுக்கு நற்செய்தி! (Post No.12,907)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,907

Date uploaded in London – –   11 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஆங்கில நாளேடு இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் 10-1-2024 ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதன் சுருக்கம் பின்வருமாறு

வெந்தயத்தில் (Fenugreek seeds) நிறைய புரதச் சத்தும் (ப்ரோட்டீன்), வைட்டமின் பி-3 சத்தும் B3 (nicotinic acid) இருப்பதால் தலை முடி உதிர்வதைத் தவிர்க்க அவை உதவுகின்றன என்று மும்பை பாட்டியா மருத்துவ மனை டாக்டர் செளரப் ஷா ( Dr Saurabh Shah) கூறுகிறார். அவர் தோல் நோய் சிகிச்சை நிபுணர். மேலும் அவர் அழகுக்கலை , முடி மாற்று சிகிச்சையிலும் (dermatologist, cosmetologist, dermatosurgeon and hair transplant surgeon) வல்லவர்.

பெண்களின், குறிப்பாக இளம் பெண்களின், பெரிய கவலை, முடி உதிர்ந்து கொண்டே இருக்கிறதே , இப்படித் தலை மயிர் கொட்டினால், கல்யாணம் ஆவதற்குள் டோப்பா (wig)  முடி வைக்க நேரிடுமோ என்பதுதான் .

(முதலில் இப்படி எண்ணுவதே முடியை உதிர வைக்கும். ஆட்டோ சஜ்ஜஷன் Auto Suggestion) என்னும் முறைப்படி ஒவ்வொரு முறை தலையைத் தொடும்போதும் எனக்கு நல்ல முடி வளரவேண்டும், வளரும் என்று சொல்ல வேண்டும்; எண்ண  வேண்டும் )

அது ஒரு புறம் இருக்க புதிய கூந்தல் வளர் தைலத்தைக் காண்போம் .

தினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே நல்ல வளமான தலை முடியை வளரச் செய்யலாம். கருவேப்பிலை , கடுகு எண்ணெய், வெந்தயம் (மேதி ) ஆகியவற்றைக் கொண்டு நல்ல  தைலத்தைத் தயாரிக்கலாம். சத்துணவு நிபுணர் லீமா மஹாஜன் ( nutritionist Leema Mahajan) இதை விளக்குகிறார்.

மேலே சொன்ன பொருட்களுடன் ரோஸ்மேரி செடி இலையையும் கலந்தால், ஆறு மாத காலத்தில் நல்ல தலை முடி வருவதைக் காணலாம் என்று சத்துணவு நிபுணர் லீமா மஹாஜன் சொல்கிறார்.

அவர் சொல்லும் கூந்தல் வளர் தைலத்தில்

கடுகு எண்ணெய் , கருவேப்பிலை, ரோஸ்மேரி செடி இலைகள் வெந்தயம், வாதாம் பருப்பு எண்ணெய் , விளக்கெண்ணெய் ஆகியன இருக்கும் (Mustard oil, Curry leaves, Rosemary leaves, Fenugreek seeds, Almond oil, Castor oil)

எவ்வாறு செய்வது?

ஒரு இரும்புச் சட்டி அல்லது வாணலியில் கடுகு எண்ணெயை சூடாக்கவும் ; அதில் வெந்தயம், கருவேப்பிலை , ரோஸ்மேரி இலைகளைப்  போடவும். அவற்றின் நிறம் சிறிது மாறியவுடன் அடுப்பை அணைத்துவிடவும். அது ஆறிய பின்னர் ஒரு பாட்டிலில் விட்டு, வாதாம் பருப்பு எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை சம அளவில் சேர்க்கவும் .

Method

*In a pan, heat mustard oil.

*Add rosemary, curry leaves, and fenugreek seeds. Once the colour changes, switch off the flame.

*Let it cool down.

*Transfer to a glass bottle.

*Add almond, and castor oil in equal parts.

இந்தப் பொருட்களில் உள்ள ஒவ்வொரு சத்தத்தையும் டாக்டர் ஷா விளக்கியிருக்கிறார். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் அவை முடிகள் தோன்றும் மயிர்க்கால் வரை சென்று ஆரோக்கியமான, அடர்ந்த, கருமையான, பள பளப்பான  முடி வளர உதவுகின்றன. அதற்கான வைட்டமின்களும், ஒமேகா , கொழுப்பு அமிலங்களும் அவைகளில் உள்ளன.

–SUBHAM—

Tags- புதிய , கூந்தல்,  வளர் தைலம், தலைமுடி வளர ,

ரோஜா மலரே ராஜகுமாரி ;   குல்கந்து, அத்தர் -Part 2 (Post No.12,906)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,906

Date uploaded in London – –   11 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

இந்தியாவை ஆண்ட ஒரே முஸ்லீம் பெண்மணி நூர் ஜஹான் (Nur Jahan) . மொகலாய சக்ரவர்த்தி ஜஹாங்கிரின் மனைவி. முக அழகு, வசீகரம், ஆளும் திறமை, புதுமை விரும்பி, கண்டுபிடிப்பாளர் , அதிர்ஷ்டம் ஆகிய அத்தனையும் ஒட்டுமொத்தமாக உருவம் எடுத்து வந்தவர்; புதுவகை உணவு, . பலவகை பாஷன்  ஆடைகள், ரோஜா மலர் அத்தர் ஆகியவற்றைக் கண்டுபிடித்த பெருமை உடையவள். ஏராளமான ஆங்கில புத்தகங்களின் கதாநாயகி. இவ்வளவுக்கும் இந்தியர் அல்ல. அவள் ஒரு பாரசீக ரோஜா.

ரோஜா மலரில் இருந்து அத்தர் எடுப்பதை  நூர்ஜஹான் கண்டுபிடித்தார்.  துப்பாக்கி ஏந்தி ஒரே நேரத்தில் 4 புலிகளைச் சுட்டார் . இப்படி அவளுடைய வீர தீர செயல்கள் பற்றி பெரிய பட்டியலே இருக்கிறது . ஒரு முறை அரண்மனையிலிருந்து இவர் விட்ட அம்பு, ஆற்றங்கரை வண்ணானைக் கொல்லவே , வண்ணாத்தி ஓவென்று கதறிக்கொண்டு அரண்மனைக்கு வந்தாள் . நூர்ஜஹான், சாதாரணக் குற்றவாளி போல ராஜ சபைக்கு இழுத்து வரப்பட்டாள் . பின்னர் என்ன? மஹாராணி ஆயிற்றே , மன்னிப்பு, நஷ்ட ஈடு என்று கதை முடிந்தது. முஸ்லீம் மன்னர்கள், மனு நீதிச் சோழர்கள் அல்லவே.

அத்தர் என்ற அராபிய சொல்லுக்கு மணக்கும் எண்ணெய் என்றே பொருள். ரோஜா மற்றும் அது போல வாசனை உடைய பெலார்கோனியம் Pelargonium ‘Attar of Roses’ தாவர பூக்களிலிருந்து இது செய்யப்படுகிறது  ஆயினும் ரோஜாவும், பெலார்கோனியமும் வெவ்வேறு குடும்ப தாவரங்கள். ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயையும் அத்தர் என்பர்.

வெளிர் மஞ்சள் நிறம் உடைய அத்தர் ரோஸா டமசேன , ரோஸா கல்லிகா முதலிய ரோஸெசி குடும்ப மலர்களிலிருந்து எடுக்கப்படுகிறது Rosa damascena and R. gallica and other species of the rose family Rosaceae

இதை பெர்ப்யூம் perfume  என்னும் வாசனைப் பூச்சுகளிலும், நறுமணம் தேவைப்படும் வெவ்வேறு பொருள்களிலும் பயன்படுத்துகிறார்கள் .

xxxxx

ரோஜா குல்கந்து உடலுக்கு நல்லது

ரோஜா இதழ்கள் கொண்டு செய்யப்படும் குல்கந்திற்கு வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் சம நிலையை உண்டாக்கும் . இது செரிமானம் நடக்க மிகவும் உதவுகிறது . ரோஜா குல்கந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் வெகுவாக குறைகிறது., இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

குல்கந்து என்பது ரோஜா இதழ்களினால் தயாரிக்கப்படும் ஒரு சுவை மிகுந்த ஆயுர்வேத மருந்து .

இது பல வகையான நோய்களுக்கு சிறந்த மருந்து . அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் முதலிய நோய்களுக்கும், ஆண்மை பெருகவும்  சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

ரோஜா குல்கந்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

சிவந்த நிறத்தில் உள்ள ரோஜா  இதழ்களை நன்கு கழுவி சுத்தம் செய்து ஈரம் போன பிறகு நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.

சேகரித்த இதழின் எடையை போல மூன்று மடங்கு கற்கண்டை எடுத்துக்கொண்டு, இரண்டையும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக இடிக்கவும்.

இடித்ததும் ஜாம் போன்ற தன்மையைப் பெரும். இந்த ஜாம் அளவிற்கு 3 மடங்கு சுத்தமான தேனைச் சேர்த்து நன்றாக கிளறவும். இத்துடன் வெள்ளரிவிதை, கசகசா சேர்க்கலாம்.

கடைகளிலும் ரோஜா குல்கந்தை விலைக்கு வாங்கலாம்.

xxxx

பன்னீர் உற்பத்தி Rose water

ரோஸ் வாட்டர் என்னும் பன்னீரை உணவுப்  பண்டங்களிலும்  சேர்த்து வாசனை சேர்க்கிறார்கள் .

ரோஸ்  ஆயில் செய்யும் பொழுது பன்னீரும் கிடைத்துவிடும். ரோஜா மலர் இதழ்களைக் கொதிக்கவைத்தது அதன் ஆவியைப் பிடித்து குளிரவைத்து பன்னீர் எடுக்கிறார்கள் . பன்னீருக்குப் பெயர்பெற்ற நாடு ஈரான். உலகின் பெரும்பகுதி பன்னீர் அங்குதான் உற்பத்தி ஆகிறது . இதற்காக ரோஜா மலர் அறுவடையின்போது பெரிய விழா நடக்கிறது.

–SUBHAM—

TAGS- பன்னீர், ரோஸ் ஆயில், குல்கந்து, நூர் ஜஹான், gulkand, rose water, Iran

மலையாள பழனி கோவில்- 54 (Post No.12,905)

picture of Thodupuza Sri Krishnan Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,905

Date uploaded in London – –   11 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 54

கோவில் எண்கள் –101,102, 103, 104

இடுக்கி மாவட்ட கோவில்கள்

101. உரவப்பாறா கோயில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில்

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா அருகில் ஓல மட்டம்

என்னும் இடத்தில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது . இதை

மலையாள பழனி   என்று அழைப்பார்கள். இங்கு வனவாச காலத்தில் பாண்டவர்கள் தங்கி இருந்ததாகவும் அப்போது பீமன் உருவாக்கிய நீர் நிலையே உறவுப்பாறா என்றும் கதைகள் உள்ளன. மூன்று பெரிய பாறைகள் பீமன் பயன்படுத்திய அடுப்பு என்றும் , தண்ணீர் கிடைக்காததால் அவன் ஒரு பாறையை உராய்ந்து தண்ணீரை உண்டாக்கினான் என்றும் சொல்லுவர் .

பால சுப்ரமண்ய வடிவத்தில் முருகன் அருள்பாலிக்கிறார்.

மகர மாதத்தில் ஆண்டு விழா நடக்கும். வைத்தீஸ்வரன் கோவில் போல உப்பு, மிளகு பிரசாதம் கிடைக்கும்.

XXXXX

102. மூணாறு முருகன் கார்த்திகை விழா


மூணாறு Munnar என்னும் இடம் தமிழ்நாட்டு எல்லையை ஒட்டி உள்ளது. இங்குள்ள முருகன் கோவில் கார்த்திகை விழாவால் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது.

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை  விழா  நாளில் கோவில் முழுதும் விளக்குகளை ஏற்றுவார்கள் . ஜெகஜ்ஜோதியாக காட்சிதரும்  அதற்கு முதல் நாளன்று பழங்குடி இன மக்கள் ஒன்று கூடி , அவர்கள் கடைப்பிடிக்கும் சம்பிரதாய சடங்குகளைச் செய்வார்கள்.

விழாக்காலத்தில் தூக்கம் என்னும் காவடிச் சடங்கு நடக்கும். விரதம் இருக்கும் ஒரு முருக பக்தர் மிக உயரத்திலிருந்து தொங்குவார் . அவர் இருக்கும் மேடை ஒரு வண்டி மீது இருக்கும். அதை கோவிலைச் சுற்றி வலமாக இழுத்து வருவார்கள்;p முருக பக்தர்கள் கோஷம் எழுப்பி இறைவனை வணங்குவது எல்லோரையும் பக்திப் பரவசத்தில் மூழ்கடித்துவிடும் .

XXXXX

103.கிருஷ்ணன் கோவில், தொடுபுழா

இடுக்கி மாவட்டத்தில் தொடு புழா என்னும் ஊரில் கிருஷ்ண பகவான், கையில் வெண்ணெய் வைத்திருக்கும் நவநீத கிருஷ்ணனாக தரிசனம் தருகிறார். மூவாற்றுப்புழாவின் உபநதியான தொடு புழா நதிக்கரையில் கோவில் அமைந்துள்ளது . ஒரு பிராமண பக்தர் இந்தக் கோவிலை மீனம் மாத சுவாதி நட்சத்திரத்தில் ஸ்தாபித்தார் ஆண்டுதோறும் அந்த மாதத்தில் பத்து நாள் விழா நடக்கும்.

முதல் நாளன்று பிரபல வித்வான்களின் இன்னிசை நிகழ்ச்சியும் 4,5,6 ஆவது நாள் உற்சவத்தில் சாக்கியர் கூத்தும், 5,5 ஆவது நாட்களில் கதகளி நடனமும் ஏற்பாடு செய்யப்படும்.

7,8,9 ஆவது நாட்கள் முக்கிய நாட்கள் ; அப்போது அலங்கரிக்கப்பட்ட 5 யானைகளின் பவனி மேளதாளத்துடன் வலம் வரும். உற்சவ பலி என்ற புனித விழா, ஒன்பதாம் நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வணங்க நடக்கிறது .

‘நிலாபதுதரா’ அல்லது புனித மேடை கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ளது. திருவிழாவின் போது இறைவனின் சிலையானது கருவறையில் இருந்து வெளியே எடுத்துவரப்பட்ட இந்த மேடைக்கு கொண்டுவரப்பட்டு முழுமையாக அலங்கரிக்கப்பட்டு மீண்டும் கருவறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

XXXXX

104.காரிகோடு பகவதி கோவில்

தொடுபுழா அருகில் காரிகோடு பகவதி கோவில் இருக்கிறது ; இங்கு பத்ரகாளி வடிவத்தில் தேவியை வணங்குகிறார்கள் . சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோவில் . இங்கு சிலைக் கண்ணாடி மூலம் தேவியை வழிபடுகின்றனர் .

சிவன் மற்றும் பிள்ளையார் ஆகியோர் பிற பரிவார தெய்வங்களாக உள்ளனர். ஆண்டுதோறும்  திருவிழா, மலையாள மாதமான ‘கும்பம்’ அஸ்வதி மற்றும் பரணி நாட்களில் நடக்கிறது.

வடக்கம்கூர் மன்னர் தனது பிரார்த்தனையால் கொடுங்கல்லூர்  பகவதியை இங்கு அழைத்து வந்தார் என்று பக்தர்கள் கூறுகிறார்கள் .

–சுபம் —

TAGS- காரிகோடு பகவதி, தொடுபுழா கிருஷ்ணன் ,கோவில், உரவப்பாறா , சுப்பிரமணிய சுவாமி

விவேகானந்த அதிசயம்! – 1 (Post No.12,904)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,904

Date uploaded in London –  –   11 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஜனவரி 12 விவேகானந்தர் ஜெயந்தி தினம்! 

அதிசயம் அநேகம் கொண்ட சுவாமிஜியின் வாழ்வில் சில சம்பவங்கள்!

விவேகானந்த அதிசயம்! – 1 

ச.நாகராஜன்

 விவேகானந்த அதிசயம்! 

ஸ்வாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த போது ஒரு முறை மிஸஸ் பாக்லே என்பவரின் வீட்டில் தங்கி இருந்தார்.

அந்த வீட்டில் வந்த விருந்தினர்களுள் ஒருவர் சுவாமிஜியை மிஸஸ் பாக்லேயின் கணவருடைய படிப்பறையில் வைத்துப் பூட்டி விட்டு, சாவியைத் தனது கையில் வைத்துக் கொண்டார். அது ஒரு பெரிய வீடு. அந்த வீட்டின் மறுபகுதியில் உள்ள விசாலமான அறை ஒன்றில் அனைவரும் கூடினர். சுவாமிஜி திடீரென்று அங்கே தோன்றினார்.

சாவியைத் தன் கையில் வைத்திருந்தவர் திகைத்து மலைத்தார்.

வேக வேகமாக ஓடிப் போய் தான் பூட்டிய அறையைத் திறந்தார்.

அங்கே முன்பு சுவாமிஜி எப்படி அமர்ந்திருந்தாரோ அதே போல அமர்ந்திருந்தார்.

அவரது இந்த அதீத ஆற்றலை அவர் எப்போதுமே காட்டியதில்லை.

ஓரிரு சமயங்களில் மட்டுமே காட்டி இருக்கிறார்.

கடவுளிடம் நகைச்சுவையாகப் பேசியவர்!

நியூயார்க்கிலிருந்து சுமார் 90 மைல் தூரத்தில் உள்ள ரிஜ்லிமேனர் என்ற வீட்டில் ஒரு முறை சுவாமிஜி தங்கி இருந்தார். அங்கே அவருடன் மிஸ் மெக்லவுட், அவரது சகோதரி பெற்றி, பெற்றியின் பதினாறு வயதான மகன் ஹாலிஸ்டர், பதினெட்டு வயதான அவனது தமக்கை ஆல்பெர்ட்டா ஆகியோர் தங்கி இருந்தனர்.

ஒரு நாள் சுவாமிஜி தன் அறைக்குள் இருந்த போது பெரிதாகச் சிரிப்புச் சத்தம் கேட்டது. இடையிடையே யாருடனோ பேசுவது போலவும் இருந்தது.

சிறிது நேரத்திற்குப் பின் கதவைத் திறந்து தன் அறையிலிருந்து வெளியே வந்த சுவாமிஜியிடம் ஹாலிஸ்டர், “சுவாமிஜி, நீங்கள் யாருடன் பேசிக் கொண்டிருந்தீர்கள்” என்று வியப்புடன் கேட்டான்.

ஏனெனில் அறையில் யாருமே இல்லை.

சுவாமிஜி பதிலாக, “யாருடனும் இல்லையே” என்றார்.

“இல்லையே, சிரிப்புச் சத்தம் கேட்டதே?” என்று சந்தேகத்துடன் மீண்டும் கேட்டான் ஹாலிஸ்டர்.

சின்ன இடைவெளிக்குப் பிறகு சுவாமிஜி கூறினார்:

“ஓ! அதுவா? இந்த கடவுள் இருக்கிறார் பார், அவர் மிகவும் வேடிக்கையானவர்!” என்றார்.

கடவுளுடன் நகைச்சுவையாக சுவாமிஜி பேசி சிரித்துக் கொண்டிருந்தார் என்பதை அவர் வாயாலேயே தெரிந்து கொண்ட ஹாலிஸ்டர் பிரமித்து நின்றான்.

இந்த விஷயம் அனைவருக்கும் பரவியது.

இது போல தனது ஆற்றலையும் தெய்வீக சக்தியையும் அவர் காட்டிய தருணங்கள் மிகச் சிலவே!

சுவாமிஜியின் நினைவாற்றல்

சுவாமிஜியின் நினைவாற்றல் அனைவரையும் பிரமிக்க வைக்கும் ஒன்று. ஒரு முறை பள்ளி ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்க நரேந்திரன் (சுவாமி விவேகானந்தரின் இளமைப் பருவத்துப் பெயர்) ‘தூங்கிக் கொண்டிருப்பதைக்’ கண்டு பொறுக்காத அவர் அவனைக் கடிந்து கொண்டார்.

அவர் தன்னைத் திட்டி முடிக்கும் வரை பொறுமையாக இருந்த நரேன், ஆசிரியர் கூறிய அனைத்தையும் ஒரு வார்த்தை விடாமல் திருப்பிக் கூறினார். இதைக் கேட்ட ஆசிரியர் பிரமித்துப் போனார்.

இந்த அபாரமான தனது நினைவாற்றல் சக்தியை அவர் எப்போதாவது தான் வெளிப்படுத்துவார்.

ஒரு முறை ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் சில நாட்களைக் கழித்த சுவாமிஜி கீல் நகரம் சென்றார். அங்கு

கீல் பல்கலைக் கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய பால் ட்யூஸனை (பிறப்பு 7-1-1845 மறைவு 6-7-1919) அவர் சந்தித்தார். அவர் இந்தியவியலில் பெரும் அறிஞரும் கூட.  பால் டியூஸன் இந்தியாவிற்குத் தான் வந்திருந்த போது தான் பெற்ற அனுபவங்களை சுவாமிஜியிடம் தெரிவித்து மகிழ்ந்தார். நல்ல நட்புறவு மலர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்து அளவளாவினர்.

 அவரது வீட்டில் சுவாமிஜி சென்று தங்கினார். அப்போது ஒரு நாள் சுவாமிஜி தனது அறையில் ஒரு கவிதை நூலை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்ற பால் டியூஸன் ஏதோ பேச முற்பட்டார். ஆனால் சுவாமிஜி மறுமொழி ஒன்றும் கூறவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் இந்தச் சம்பவம் அவர் மனதை உறுத்தியது. சில நாட்கள் சென்ற பிறகு தனது மன ஆதங்கத்தைத் தெரிவித்தார். ஆனால் சுவாமிஜி உடனே புன்னகையுடன் தான் அன்று அந்தக் கவிதை நூலில் மிகவும் ஆழ்ந்திருந்ததாகவும் மற்ற எதையும் கவனிக்கவில்லை என்றும் கூறினார். இதை நம்ப மறுத்தாற் போல இருந்த பால் டியூஸனிடன அந்தக் கவிதை நூல் முழுவதையும் அப்படியே ஒப்புவித்தார் சுவாமிஜி. இதைக் கேட்டு பிரமித்துப் போன பால் டியூஸன், சுவாமிஜி எப்படிப்பட்ட பெரும் மகான் என்பதை உணர்ந்து கொண்டார். 

இறை அனுபவத்தை உடனே தர வல்லவர்

இறை அனுபவத்தை சிலருக்கு உடனே தந்தவர் சுவாமிஜி.

இதைப் பெற்ற பாக்கியவான்களில் ஒருவர் ஜெய்பூரில் படைத்தளபதியாக இருந்த சர்தார் ஹரிசிங்.

ஜெய்பூரில் சுவாமிஜி தங்கி இருந்த போது அவரால் கவரப்பட்டார் இந்தப் படைத் தளபதி. அவர் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார் சுவாமிஜி.

 ஹரிசிங்கிற்கு வேதாந்தம் என்றால் பிடிக்கும். ஆனால் அவருக்கு உருவ வழிபாடு பிடிக்காது. உருவ வழிபாடு பற்றி சுவாமிஜி அவருக்கு விளக்கிக் கூறினார். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்தார். ஒரு நாள் இருவரும் மாலை வேளையில் சாலையில் நடந்து சென்று  கொண்டிருந்தனர். அப்போது எதிரே ஒரு பஜனை ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. பஜனை ஊர்வலத்தினர் கண்ணபிரானின் திருவுருவத்தைத் தாங்கியவாறே பஜனைப் பாடல்களைப் பாடி வந்து கொண்டிருந்தனர். சுவாமிஜி ஹரிசிங்கைத் தொட்டு, “அதோ பாருங்கள். உயிருடனும் உணர்வுடனும் இருக்கும் கண்ணனைப் பாருங்கள்” என்றார்.

  அந்த ஸ்பரிசத்தால் உடனே அங்கு கண்ணன் உயிருடன் இருப்பதைக்  கண்ட ஹரிசிங் திகைத்து நின்று விட்டார். அவர் கண்களிலிருந்து நீர் வழிந்தது. சுய நினைவு வந்தவுடன் அவர், மணிக்கணக்காக நீங்கள் விளக்கிய பேருண்மையை விளங்கிக் கொள்ளாத என்னை ஒரு சின்னத் தொடுதல் மூலமாக விளங்கிக் கொள்ள வைத்து விட்டீர்கள் என்று கூறி அவரை அடி பணிந்து வணங்கினார்.

இப்படி அவரது ஸ்பரிசத்தால் மாறியவர்கள் பலர் உண்டு.

** தொடரும்