ராம நாம மஹிமை – 7 (Post No.12,975)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,975

Date uploaded in London – — 1  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

2024 ஜனவரி 22. தெய்வீகத் திருவிழா நன்கு தெய்வீகமாக நடந்து முடிந்துள்ளது.  ராம நாம மஹிமை பற்றிய சிறப்புக் கட்டுரைத் தொடரில் இது ஏழாவது கட்டுரை! 

ராம நாம மஹிமை – 7

ச.நாகராஜன்

தர்மம் சத்தியத்திலேயே நிலைநிறுத்தப்படுகிறது

சத்யமேகபதம் ப்ரஹ்ம சத்யே தர்ம: ப்ரதிஷ்டித: |

சத்யம் ஏகாக்ஷரமாகிய ஓம் என்ற ஒரே பதத்தால் தான் குறிக்கப்படுகிறது. தர்மம் சத்தியத்திலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அயோத்யா காண்டம் 14 – 7

*

ராமர் ஒருபோதும் தெளிவற்றுப் பேசமாட்டார்

ராமோ த்விநார்பிபாஷதே |

ராமர் ஒருபோதும் தெளிவற்று முன்பு ஒரு உரை, பின்பு அதற்கு மாறாய் வேறொரு உரை என்று பேசமாட்டார்.

அயோத்யா காண்டம் 18 – 30

*

தர்மத்திலேயே சத்தியம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது

தர்மோ ஹி பரமோ லோகே தர்மே சத்யம் ப்ரதிஷ்டிதம் |

உலகத்தில் தர்மமே உயர்ந்தது. உலகம் சத்தியத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. (நிலைநிறுத்தப்பட்டுள்ளது)

அயோத்யா காண்டம் 21 – 40

*

வீர்யம் இழந்தவனே விதிக்கு வசப்படுவான்

விக்லவோ வீர்யஹீனோ ய: ச தைவமனுவர்ததே | வீராஸ்ஸம்பாவிதாத்மானோ ந தைவம் பர்யுபாஸதே ||

வீரியத்தை இழந்த ஒருவனே விதிக்கு வசப்படுவான். ஏற்ற பிறவிக்குணங்களை உடைய வீரர்கள் விதிக்கு வசப்படமாட்டார்கள்.

அகஸ்மாத்தாய் ஒரு கஷ்டம் ஒருவனுக்கு சம்பவிக்குமாயின் அது நிவாரணமாய்ச் செய்ய வேண்டியவற்றை நிச்சயிக்க திறமையற்று சிந்தை கலங்கியவனாய் அந்த கஷ்டத்தை விலக்குவதற்கு வேண்டியதாகிய சக்தி இல்லாதவனாயிருக்கிறவன் எவனொருவனோ, அவன், அகஸ்மாத்தாய் நேர்ந்த கஷ்டத்தை அனுபவிக்கின்றான்; ஏற்ற பிறவிக் குணங்களையுடைய வீரர்கள் அகஸ்மாத்தாய் நேர்ந்த ஓர் கஷ்டத்திற்கு ஆட்படமாட்டார்கள்.

இங்கு வீர்ர்கள் என்ற சொல் வருகிறது.

வீரர்கள் யார்?

ஒரு காரியத்தை மேற்கொண்ட போது, காரியங்களை வீணாக்காத வண்ணம் முடிக்கும் குணமாகிய “பராக்ரமம்” என்பதையும், சரியாய் ஓர் தொழிலை நிச்சயிக்கும் குணமாகிய “விக்ரமம்’ அல்லது ‘மனோபலம்’ என்பதையும் எதையும் எப்போதும் தரும விதி வழுவாது செய்யும் குணமாகிய ‘தர்மசீலத்வம்’ என்பதையும் எவர்கள் கொண்டிருக்கிறார்களோ அவர்களே வீரர்கள் ஆவர்.

அயோத்யா காண்டம் 23 – 16

**

கணவனை விட்டுப் பிரிதல் சுமங்கலிக்கு கொடிய பாதகம்!

பர்து: கில பரித்யாகோ ந்ருசம்ஸ: கேவலம் ஸ்த்ரியா:

ஒரு பெண்ணுக்கு (சுமங்கலிக்கு) கணவனைப் பிரிதல் என்பது பாரம்பரியமாக முற்றிலும் விலக்கத்தக்கதான கொடிய பாதகம்.

அயோத்யா காண்டம் 24 – 12

**

கணவனே சுமங்கலிக்கு தெய்வம்

ஜீவந்த்யாஹி ஸ்த்ரியா பர்தா தைவதம் ப்ரபுரேவ ச |

உயிரோடிருக்கும் ஒரு சுமங்கலிக்கு  அவளது கணவனே பிரபு. ஏன் அவனே தெய்வம்.

அயோத்யா காண்டம் 24 – 21

**

கணவனுக்கு பணிவிட செய்பவள் ஸ்வர்க்கம் செல்கிறாள்!

பர்து: சுஷ்ருஷயா நாரீ லபதே ஸ்வர்கமுத்தமம் |

கணவனின் மனதிற்கு இசைந்தபடி ஏவல் செய்வதால் ஒரு சுமங்கலி உத்தமமான ஸ்வர்க்கத்தை அடைகிறாள்.

அயோத்யா காண்டம் 24 – 26

**

 வேதம் விதித்த தர்மம்

சுஷ்ருயாமேவ குர்வந்தி பர்து: ப்ரியஹிதே ரதா|

ஏஷ தர்ம: புரா த்ருஷ்டோ லோகே வேதே ஸ்ருத: ஸ்ம்ருத: ||

கணவனுக்கு மனம் கோணாமல் ஹிதம் விளைவிப்பதில் ஊக்கமுடையவளாய் சுஷ்ருஷை (பணிவிடை) செய்வதையே ஒருத்தி செய்து வர வேண்டும். இந்த தர்மம் உலகின் அனாதியான அனுஷ்டானம். வேதத்தில் பிரசித்தியாக உள்ளது. ஸ்மிருதியிலும் விதிக்கப்பட்டுள்ளது.

அயோத்யா காண்டம் 24 – 25

****

Leave a comment

Leave a comment