Date uploaded in London – – 6 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
ரிக் வேதத்தில் பறவை
ரிக் வேதம்தான் உலகிலேயே பழமையான நூல். கி.மு.2000 முதல் கி.மு 6000 வரை வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு காலத்தைக் குறித்துள்ளனர் ; மாக்ஸ்முல்லரோ இது கி.மு 1500 அல்லது அதற்கு முந்தையது; இதன் காலத்தை யாருமே கணிக்கமுடியாது என்று சொல்லிவிட்டார் ; அதில் கழுகு, பருந்து, ஸ்யேன, சுபர்ண, மஹா சுபர்ண என்ற பலபெயர்களில் பறவை வருகிறது 3 விஷயங்களை அதனுடன் தொடர்பு படுத்துகின்றனர்.
அவை ,
1.சூரியன்
2.ஆன்மா
3.சோமம் என்னும் அற்புத மூலிகையைக் கொண்டுவரும் பறவை .
கழுகு பற்றிய ஆராய்ச்சி ஆரிய -திராவிட வாதம் பேசும் அயோக்கியர் களுக்கு செமை அடி கொடுக்கிறது ; சோம மூலிகை பற்றி ‘அது, இது’ என்று உளறிக்கொட்டிய வெளிநாட்டினர் அனைவரும் கழுகு தான் சோம மூலிகையைக் கொண்டுவருகிறது என்று சொல்லும் நூற்றுக்கணக்கான மந்திரங்களுக்கு விளக்கமே சொல்ல முடியவில்லை; அது மட்டுமல்ல சோம மூலிகையோ – கழுகு-சோமம் தொடர்போ உலகில் வேறு எங்கும் இல்லை; ஆகவே இந்துக்கள், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் குடியேறவில்லை என்பதை கழுகு காட்டிவிட்டது!
முன்னரே எழுதிய விஷயங்கள் கீழே உள்ளன ; ஆக புதிய விஷயங்கள் இரண்டை முதலில் காண்போம் :
ரிக்வேதத்தில் பறவை – ஆன்மா விஷயம்
1-163-6
குதிரையை பறவைக்கு ஒப்பிட்டு அதன் வேகத்தைப் புகழும் மந்திரம் இது .நான் தூரத்தில் இருக்கும் உன் ஆன்மாவை பறவை போல
என் மனத்தால் காண்கிறேன்; நீ பூமியிலிருந்து வானின் வழியாக சூரியனிடம் செல்கிறாய் புழுதியால் பாதிக்கப்படாமல், தடைபடாமல் உயரத்தில் செல்லும் உன்னுடைய தலையைக் காண்கிறேன் .
இந்த மந்திரத்தில் ஆன்மா = பறவை = உயரத்தில் பறப்பது = சூரியனை நோக்கிச் செல்லுவது ஆகிய கருத்துக்கள் உள்ளன ..
Thyself from far I recognized in spirit,–a Bird that from below flew through the heaven.
I saw thy head still soaring, striving upward by paths unsoiled by dust, pleasant to travel. Rig Veda 1-163-6
எகிப்தில் கருடன் = பா
எகிப்தில் ‘பா’ என்ற பெயருடைய பறவை இதே கருத்துடன் வணங்கப்படுகிறது.
இதை படித்தால் கருட புராணத்தை ஏன் இறந்தோர் வீடுகளில் 13 நாட்களுக்குள் படிக்கிறார்கள் என்பது விளங்கும். கருட புராணத்தின் பூர்வ பாகத்தில் ஏராளமான பொது, நீதி மற்றும் அறிவியல் விஷயங்கள் உள்ளன; இரண்டாவது பகுதியில் இறந்த பின்னர் செய்ய வேண்டிய சடங்குகள் எம லோகம், நரகம் முதலிய விஷயங்கள் உள்ளன. ஆயினும் அதற்கு கருட புராணம் என்று பெயர்வைத்ததற்கு கருடன்= ஆன்மா தொடர்பே காரணம் என்பது என் கருத்து
கருடன் பறவை அமிர்த கலசத்துடன் நடைபோடும் படத்தை வெளியிட்டுள்ள்ளேன்.
மேலும் கருடன் அமிர்தம் கொண்டுவந்த கதையின் வித்து ரிக் வேதத்திலேயே உள்ளது. அது மட்டுமல்ல கருடன் = இந்திரன் என்ற பாடலும் ரிக் வேதத்திலேயே உள்ளது. இதை மகாபாரதம் , சிலப்பதிகாரம், புறநானூற்றில் வரும் சிபிச் சக்கரவர்த்தி கதையிலும் காண்கிறோம் அதில் கழுகு வாடிவில் இந்திரன் வருவதாக வருகிறது ; இவைகளை எகிப்திய பா = ஆன்மா = பேரவையுடன் ஓ ப்பிடுவோம்
Ba
ஆன்மாவுடன் க , பா, அக் ஆகிய மூன்று தெய்வங்களும் பழங்கால எகிப்தில் தொடர்பு படுத்தப்படுகின்றன. கி.மு. 1500 ஆண்டு முதல் எகித்தில் இந்து மத செல்வாக்கு இருப்பதை அங்கு கிடைத்த தசரதன் கடிதங்கள் (அமர்நா லெட்டர்ஸ்) , மிட்டன்னி மன்னர்களின் புதல்விகளுடன் திருமண உறவு ஆகியவை நிரூபிக்கின்றன . துருக்கி – இராக் பகுதியில் கி.மு 1600ம் ஆண்டில் நிலவிய மிட்டன்னி நாகரீகம் இந்துக்கள் நாகரீகம் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை.
பா என்பதை முதலில் கொக்கு போன்ற பறவை வடிவத்தில் எழுதினார்கள். பிறகு இப்போது நாம் இந்துக் கோவில் கருட வாகனத்தில் காணும் மனித முகம் — பறவை உடல் கொண்ட கருடன்போலவே வரைந்தனர். .
மேலும் பிரமிடுகளுக்குள் இறந்த மன்னனர்களின் உடல் மீது அது வட்டமிடுவது போல படமும் வரைந்தார்கள் . அதாவது அது மன்னரின் ஆவி. பறவை வடிவத்தில் ஆன்மா இருப்பது ரிக் வேதம், குறள், கல்லாடர் பாடலை நமக்கு நினைவுபடுத்தும்.
பா என்பது பெயர் சொல்லப்படாத கடவுள்கள், சக்திகள் ஆகிய வற்றையும் குறிக்கின்றன என்பது எகிப்திய ஆராய்ச்சியாளர்களின் கருத்து . அவை சூரியனை வரவேற்பதையும் இரவில் நதியைக் கடந்து மறு உலகம் செல்லும் படகுக்கு வழிகாட்டுவதையும் எகிப்திய மரணப் புஸ்தகம் விளக்குகிறது
The ba could also represent anonymous gods or powers. They are shown greeting the sun or traveling with it in its barque. In some illustrations of the Book of the Dead, ba birds are shown towing the barque of the sun during its nightly journey through the underworld
xxxxx
முன்னர் எழுதிய விஷயங்கள்
கட்டுரையின் முதல் பகுதியில் தாய்க் கழுகுகள் அதனுடைய குஞ்சுகளுக்குப் பறக்கக் கற்றுக்கொடுப்பது எப்படி என்பதை 2200 ஆண்டுகளுக்கு முன்னரே பதஞ்சலி முனிவர் மஹாபாஷ்ய நூலில் செப்பியதைக் கண்டோம். கழுகைக் கொண்டு மற்ற பிராணிகளை வேட்டையாடுவதை மங்கோலிய இன மக்கள் இன்றும் செய்து வருவதையும் கண்டோம். மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இதைக் காணலாம் . இதையும் பதஞ்சலி முன்னரே சொல்லிவிட்டார்!
எகிப்தில் இறந்த மன்னன், கழுகு வடிவில் வான மண்டலத்துக்குச் செல்லுவதாக எகிப்திய பிரமிடு இலக்கியம் சொல்லும். ‘க’ என்பது மனிதனின் ஆத்மா என்றும் சொல்லும். இந்தியாவிலும் மன்னர் பறவை வடிவத்தில் மேலுலகம் செல்லுவதாக சம்ஸ்கிருத ஸ்லோகம் உள்ளது. ஆக ‘க’ என்பது கடவுள், ‘க’ என்பது ஆன்மா; க’’ என்பது படைப்புக் கடவுளான பிரஜாபதி/பி ரம்மா. ‘க’ என்பது பறவை வடிவில் காட்டப்படும்.
ரோமானிய மன்னர்
ரோமானிய மன்னர்களின் சடலத்தைத் தகனம் செய்யும்போது சிதைத்தீக்கு மேலே ஒரு கழுகைப் பறக்கவிடுவர். மன்னரின் ஆவி சொர்க்கத்துக்கு/ வானுலகத்துக்குச் செல்லுகிறது என்பது இதன் பொருள். இது இந்துக்களின் நம்பிக்கை. மனித உடலில் உள்ள ஆன்மா கூட்டைவிட்டுச் செல்லும் பறவை போல மேலே பறந்துவிடும் என்பது இந்துமத நூல்களில் காணப்படுகிறது.
xxxx
திருக்குறளில், அகநானூற்றில்
தமிழ் வேதமாகிய திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் இதே கருத்தைக் காண்க:-
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு (338)
xxxxx
அழாஅம் உறைதலும் உரியம் – பராரை
அலங்கல் அம் சினைக் குடம்பைப் புல்லெனப்
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு (கல்லாடனார், அகம்.113)
xxxx
கீதை 2-22 இதே கருத்தை வேறு உவமையுடன் (நைந்த உடை) சொல்லும்.
1.ஹோரஸ் HORUS (சூரிய என்பதன் திரிபுச் சொல் H=S as in Hindu= Sindhu) என்ற இறைவனின் வடிவம்தாம் மன்னன் என்று சொல்லும் எகிப்திய கல்வெட்டுகளும் காகிதங்களும் அந்த ஹோரஸை ஒரு பருந்தாகவே FALCON காட்டியுள்ளன.
2.கி.மு.3000 முதல் வழிபடப்படும் ஹோரஸ் என்னும் சூரிய தெய்வத்தை இந்துக்கள் கருட வாஹனத்தைச் சித்தரிப்பதுபோல, பருந்து முகத்துடனும் , மனித உடலுடனுமே வரைவர்.
xxxxx
Garuda in Sumeria with Amrit Pot
https://tamilandvedas.com › tag
29 Aug 2012 — ‘க’ என்பது மனிதனின் ஆத்மா என்றும் சொல்லும். இந்தியாவிலும் மனர் பறவை வடிவத்தில் மேலுலகம் செல்லுவதாக சம்ஸ்கிருத ஸ்லோகம் …
https://tamilandvedas.com › tag
2 Mar 2017 — Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com … மனித உடலில் உள்ள ஆன்மா கூட்டைவிட்டுச் செல்லும் பறவை …
https://tamilandvedas.com › tag
Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com … மனித உடலில் உள்ள ஆன்மா கூட்டைவிட்டுச் செல்லும் பறவை …
வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய …
https://tamilandvedas.com › வ…
2 Mar 2017 — மனித உடலில் உள்ள ஆன்மா கூட்டைவிட்டுச் செல்லும் பறவை போல மேலே பறதுவிடும் …
https://tamilandvedas.com › tag
2 Mar 2017 — Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com … மனித உடலில் உள்ள ஆன்மா கூட்டைவிட்டுச் செல்லும் பறவை …
https://tamilandvedas.com › tag
இந்தியாவிலும் மனர் பறவை … ஆக ‘க’ என்பது கடவுள், ‘க’ என்பது ஆன்மா; க” என்பது படைப்புக் கடவுளான பிரஜாபதி/பிரம்மா.
–subham—
Tags- ஆன்மா, பறவைக்கூடு, கருட புராணம், , கூட்டைவிட்டுச் செல்லும் பறவை, எகிப்து , பா பறவை