

Post No. 9759
Date uploaded in London – –21 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
ரோமானிய பழங் கவிஞர் ஹோரஸ்
மேலை உலகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பழங் கவிஞர்களில் (Latin Language Poets) சிறப்பிடம் பெறுபவர் ஹோரஸ் HORACE . இத்தாலி நாட்டின் தென் பகுதியில் உள்ள வெனுசியாவில் (VENUSIA) அவர் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு அடிமை (Slave). பொருள் கொடுத்து அடிமைத் தளை யிலிருந்து விடுபட்டார். ‘தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல்’ என்பதைக் கருத்திற்கொண்டு மகனுடைய கல்விக்காக ரோம் நகருக்குச் சென்றார். அங்கே ஹோரஸ் கல்வி கற்ற பின்னர் அந்தக் காலத்தில் புகழ் மிகு கிரேக்க அகாடமியில் கற்பதற்காக ஏதென்ஸ் ATHENS நகரத்துப் போனார்.
பிறந்த தேதி – டிசம்பர் 8, கி.மு.65
இறந்த தேதி- நவம்பர் 27, கி.மு 8
வாழ்ந்த ஆண்டுகள் – 56
படைப்புகள் – LATIN கவிதைத் தொகுப்புகள்
கி.மு ஆண்டுகள்
35- சடைர்ஸ் – முதல் புஸ்தகம் SATIRES BOOK I
30 – சடைர்ஸ் – இரண்டாம் புஸ்தகம் SATIRES BOOK II
30- எபோட்ஸ் EPODES
23 – ஓட்ஸ் (1,2,3 தொகுப்புகள்) ODES- BOOK I, II, III
20 – எபிஸ்டில்ஸ் /கடிதங்கள் – முதல் புஸ்தகம் EPISTLES BOOK I
14- எபிஸ்டில்ஸ் /கடிதங்கள் – இரண்டாம் புஸ்தகம் EPISTLES BOOK II
14- ஓட்ஸ் (நாலாவது தொகுப்பு) ODES BOOK IV
8- ஆர்ட்ஸ் பொயட்டிகா / கவிதைக் கலை ARTS POETICA / ART OF POETRY
கி.மு 44ல் ஜூலியஸ் சீஸர் படுகொலை நடந்த நாளில் ஹோரஸ் , அகாடமியில் படித்துக் கொண்டு இருந்தார். ரோமானிய சாம்ராஜ்யம் அதிபயங்கர குழப்பத்தில் வீழ்ந்தது. ஸீஸர் படுகொலையில் ஈடுபட்டவர் ப்ரூட்டஸ் (Brutus) . அவர் அமைத்த படையில் ஹோரஸ் சேர்ந்தார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பரூட்டஸை அகஸ்டஸ் சீசர் மற்றும் மார்க் ஆன்டனி தோற்கடித்தனர்.
ஹோரசுக்கு பெருத்த ஏமாற்றம்; சொல்லொணா வருத்தம். அவரது தந்தையும் இறந்த நிலையில் புதிய ஆட்சியாளர்கள் ஹோரசின் சொத்துக்களை அபகரித்தனர்.. ஒரு சின்ன வேலையில் சேர்ந்த ஹோரஸ் பணம் வேண்டும் என்பதற்காக, கிடைத்த நேரத்தில் கவிதைகளை எழுதத் தொடங்கினார். அவருடைய கவிதைகளின் அழகைக் கண்டு வியந்த அக்காலத்தின் மிகப்பெரிய கவிஞர் வர்ஜில் (Virgil) , ஹோரஸை மெசினஸ் MAECENAS என்ற பணக்கார வள்ளலிடம் அறிமுகப்படுத்தினார் அவர் கம்பனை சடையப்ப வள்ளல் ஆதரித்தது போல ஹோரஸை ஆதரித்தார்.
முப்பதே வயதில் ஹோரஸ் , சடைர்ஸ் SATIRES என்ற அங்கதச் செய்யுளை இயற்றினார். ஐந்தே ஆண்டுகளில் அத்தொகுப்பின் இரண்டாபவது தொ குதியை வெளியிட்டார் . அத்தோடு எபோட்ஸ்(Epodes) என்ற கவிதைத் தொகுப்பும் வெளியானது ;வள்ளல் மெசினஸ் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இத்தாலியிலுள்ள அவரது பண்ணை ஒன்றை ஹோரசுக்கு அளித்தார். இது ரோம் நகரிலிருந்து தொலைவில் இருந்ததால் ஹோரசசுக்கு நிம்மதி கிடைக்கும் என்று வள்ளல் நினைத்தார். அ ந்த அமைதியான சூழ்நிலையில் ஹோரசும் அருமையான இசைக் கவிதைகளை (ஓட்ஸ்) இயற்றினார் ODES / ஓட்ஸ் என்னும் பாணியில் 88 கவிதைகளின் தொகுப்பு அது
ODES/ ஓட்ஸ் என்பன ஏதேனும் ஒரு பொருளையோ பிராணி, பறவை ஆகியவற்றையோ நோக்கிப் பாடும் “கூவி அழைக்கும் மகிழ்ச்சிப் பாட்டு” ஆகும்.
வர்ஜில் இறந்த பின்னர் அவருக்கு அடுத்த புகழ் பெற்ற லத்தின் மொழிப் (Latin Poet) புலவர் இவர்தான்.
–subham–





tags- ரோமானிய, கவிஞர் , ஹோரஸ், Horace