முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்– 17 (Post No.13,086)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,086

Date uploaded in London – –   12 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 161  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

PART 17

xxxxx

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—16

xxxxx

அரை= grind

162 தலையில் நீரேற்றத்துக்கு

கருஞ் செம்பை இலையை இடித்து சாறு பிழிந்துவிட்டு அந்தத் திப் பிகையை உச்சியில் வைத்துக் கட்டி காலையில் அவிழ்த்து விடவும்.

xxxx

163.தலை பாரத்திற்கு

கருஞ் செம்பைப் பூ வை நல்லெண்ணெயிலிட்டுக்குக் காய்ச்சி  முழுகி வந்தால் தலை பாரம் தலைவலி  ஒற்றைத் தலை வலி   சீதளம் இவை தீரும்.

xxxx

164. கொருக்கினால் கண்ட வீக்கத்திற்கு

கருஞ் செம்பை இலையை வதக்கி பிழிந்துவிட்டு அந்தத் திப்பியை ஆண்குறியின் மேல் வைத்துக்கட்டினால் கொருக்கினால் கண்ட வீக்கம் வற்றிப்போகும்.

xxxx

165.வாதக் கடுப்புக்கு மேல் பூச்சு

கள்ளிக் கொழுந்தை வதக்கி சாறு பிழிந்து  அந்தச் சாற்றில் பூநீர் சீரக வகைக்கு  ஒரு சிரங்கை போட்டு  ஊறவைத்து மறுநாள் அந்த ஜலத்தினால்  க…..கை அறைத்துப் பத்துப் போடவும் ; வாதக் கடுப்பு நிவர்த்தியாகும் .

xxxx

166.பித்த தயிலம்

கரிப்பான் சாறு நெல்லிக்காய் சாறு வகைக்கு அரைப்படி , பசும்பால்  ஒரு படி ,அதி மதுரம் ஒரு பலம், அரைத்துப் போட்டு காய்ச்சி மெழுகு பதத்தில் இறக்கி முழுகி வந்தால் சகல பித்தமும் தீரும்; மயக்கம் தீரும்.

xxxx 

167.காது மந்தத்திற்கு

கள்ளி இலையை வாட்டிப்பிழிந்த சாறு, வெள்ளுள்ளிச் சாறு , நல்லெண்ணெய், பசும்பால் சமநிடை கலந்து கொஞ்சம் முருங்கை வேரும் வசம்பும் நறுக்கிப்போட்டுக் காய்ச்சி காதில் இருவேளையும் பத்து நாள் விட்டுவரத் தீரும்.

xxxx

168.கரப்பான் வாயுவுக்கு

கடுக்காய் சமூலத்தை பாலில் உட்கொண்டுவந்தால் கரப்பான் , குட்டம், கி…..தி வங்கு , சில்லறை விஷம் இவை நீங்கும் .

xxxx

169.பிளவைகட்கு

கடுக்காய் சுக்கு கரிய போளம் நாவிக்கிழங்கு அபின் கொடி வேலி வேர் குக்கன் வேர்  வாளம்  இவைகளை எருக்கம்பாலில் அரைத்து அல்லது எருக்கன் பழுப்புச் சாற்றாலறைத்து  பிளவு கட்டி பரு அறையாப்பு இதுகளுக்குத் தடவ உடையும் .

xxxx

169.கபம் கிருமிக்கு

கருவாகை சமூலத்தை பாலில் அரைத்து இருபோதும்  உபயோகித்து வந்தால் ரிணம் சுரம் கபம் கிருமி இவைகள் தீரும் .

xxxx

170.காயசித்தி

கருநெல்லி மூலத்தை பாலில் அரைத்து கலக்கி இருபோதும் உண்டு வந்தால் ஜன்னி வாத சிலுமிஷம் தயக்கம் மயக்கம்  தேகக்கடுப்பு இவை தீரும் . இடைவிடாமல் நாள்பட உண்டு வந்தால் காய சித்தியாம் .

xxxxx

tags- மூலிகை அதிசயம் , பகுதி 17, முனிசாமி முதலியார்

Leave a comment

Leave a comment