Post No. 13.085
Date uploaded in London – — 12 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஹிந்தி திரைப்பட மெட்டில் மலர்ந்த சூப்பர் சிறுவர் பாடல்கள்!
சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே!
ச. நாகராஜன்
ஹிந்தி திரைப்பட மெட்டில் மலர்ந்த பாடல்களில் குறிப்பிடத் தகுந்த இரண்டு சிறுவர் பாடல்கள் அனைவர் மனதையும் மகிழ்வித்த
பாடல்கள்!
படங்கள் : ஹிந்தியில் தீதார், தமிழில் நீங்காத நினைவு
அடுத்து ஹிந்தியில் கைதி நம்பர் 911 தமிழில் கைதி கண்ணாயிரம்
முதலில் தீதார் மற்றும் நீங்காத நினைவு படங்களைப் பார்ப்பொம்.
பச்பன் கே தின் பூலானா தேனா – படம் தீதார் (Bachpan Ke Din Bhoolana Dena – Deedar)
1951-ம் ஆண்டு வெளிவந்த தீதார் ஹிந்தி திரைப்படத்தில் வந்த பாடல் பச்பன் கே தின் பூலானா தேனா. நௌஷாத்தின் இசை அமைப்பில் சிகரம் ஏறிய பாடல்களில் இதுவும் ஒன்று. நௌஷாத் (பிறப்பு 25-12-1919 மறைவு 5-5-2006) மிகச் சிறந்த ஹிந்தி திரையுலக இசை அமைப்பாளர்களில் ஒருவர்.
பாடலைப் பாடியவர்கள் இருவர். லதா மங்கேஷ்கரும் சம்ஷத் பேகமும் இதைப் பாடியுள்ளனர்.
பாடலை எழுதியவர் உருதுக் கவிஞரான ஷகீல் பதாயுனி. (பிறப்பு 3-8-1916 மறைவு 20-4-1970)
தீதார் என்றால் பார்வை என்று பொருள்
சோகமான படத்தில் இரு முறை இந்தப் பாடல் வருகிறது. சிறுவயதில் சேர்ந்து பழகிய இருவர் பின்னால் பிரிந்த கதை இது. உள்ளத்தை உருக்கிய படம் ஹிட் ஆனது.
ஆனால் பல ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் மனோஜ்குமார் இயக்குநர் ராஜ் கோஸ்லாவை இதைச் சற்றி மாற்றி அமைக்க முடியுமா என்று கேட்டார். அதன் விளைவாக தோ பதன் 1966-ல் உருவானது. அதுவும் வெற்றிப் படமாக ஆனது.
தீதார் படத்தில் வரும் பாடல் இது தான் :
lata:
bachpan ke din bhula na dena
o..
bachpan ke din bhula na dena
shamshad:
aaj hanse kal rula na dena – 2
both:
o.. bachpan ke din bhula na dena
shamshad:
lambe hain jeevan ke raste – 2
aao chale ham gaate hanste
gaate, hanste
aaa aaaaa
lata:
door des ek mahal banaye
pyar ka jis mein deep jalaye
deep jalaye
both:
deep jalakar bujha na dena
aaj hanse kal rula na dena
o.. bachpan ke din bhula na dena
lata:
rut badale ya jeevan beete
dil ke taraane hon na puraane
shamshad:
nainon mein ban kar sapan suhaane
aayenge ek din yahi zamaane
yahi zamaane
both:
yaad hamaari mita na dena
aaj hanse kal rula na dena
o.. bachapan ke din bhula na dena
லம்பே ஹை ஜீவன் கி ராஸ்தா – வாழ்க்கைப் பாதை நீண்ட நெடிய ஒன்று.
ஆவோ சலே ஹம் காதே ஹன்ஸ்தே – வா, நாம் பாடிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் போவோம்!
தூர் தேஷ் ஏக் மஹல் பனாயே – வெகு தூரத்தில் உள்ள தேசத்தில் ஒரு மாளிகையை அமைப்போம்!
பச்பன் கி தின் புலா ந தேனா – இளமைப் பருவ தினங்களை மறந்து விடாதே
அற்புதமான இளமைக் காலக் கனவுகளின் வரிகள் இவை. அற்புத மெட்டில் ஒலிக்கிறது.
சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
இந்தப் பாடலின் மெட்டு 1963-ம் ஆண்டு வெளியான நீங்காத நினைவு என்ற தமிழ் படத்தில் அமைக்கப்பட்டது.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்.
பாடலை எழுதியவர் வாலி.
பி.சுசீலாவும் எல்.ஆர். ஈஸ்வரியும் இந்தப் பாடலைப் பாடினர். 3.10 நிமிடப் பாடல் இது.
பாடல் இதோ:
பெண் : ஓ, சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
ஓ,ஓ சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
சிரிக்க வைத்தே என்னை வருந்த விடாதே
சிரிக்க வைத்தே என்னை வருந்த விடாதே
இருவரும் : ஓ, சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
சிரிக்க வைத்தே என்னை வருந்த விடாதே
ஆண் :வண்ணப் புறா போல் மண்ணில் பிறந்தோம்
மண்ணில் பிறந்தோம்
பெண்: மண்ணில் பறந்தே விண்ணில் பறந்தோம்
ஆண் : , தூரம் தூரமாய் பயணம் என்றாலும் துணிவுடன்
நாமே தொடர்ந்து செல்வோமே
பெண் : தொடர்ந்து செல்வோமே
ஆண் : சேர்ந்து வராமல் இருந்து விடாதே
இருவரும் :சிரிக்க வைத்தே என்னை வருந்த விடாதே
ஓ
பெண் :புதுவிதமான உலகத்தில் நாமே
பொன்மயமான வீடமைப்போமே
புதுவிதமான உலகத்தில் நாமே
பொன்மயமான வீடமைப்போமே
அஹ்ஹஹ்ஹா
பெண் : வீட்டினில் இன்ப விளக்கு வைப்போமே
ஆண் : காற்று வராமல் காத்திருப்போமே
காத்திருப்போமே
ஆண் : பருவங்கள் மாறும் மறந்து விடாதே
இருவரும் : சிரிக்க வைத்தே என்னை வருந்த விடாதே
அருமையான மெட்டும், அற்புதமான பாடல் வரிகளும், உருக்கமான நிலைக்களனும், குதிரை மீது சவாரி செய்து உற்சாகமாகப் பாடும் சிறுவனும், சிறுமியும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றனர்.
பாடலை என்றும் கேட்கலாம். இருக்கவே இருக்கிறது யூ டியூப்
அடுத்து இன்னொரு சிறுவர் பாடலைப் பார்ப்போமா?
படம் : கைதி கண்ணாயிரம்!
***