QUIZ வில்வம் பத்து QUIZ (Post No.13,092)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,092

Date uploaded in London – –   14 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

வில்வம் பத்து

Quiz Serial Number- 119

1.எந்த நாட்டில் வில்வம் பெயரில் ஒரு வம்சம் ஆட்சி செய்தது?

xxxx

2.வில்வத்தில் உள்ள மூன்று இலைகள் இதைக் குறிக்கின்றன ?

xxxx

3.வில்வத்தின் பெயரில் உள்ள முக்கியதுதி எது? அதன் சாராம்சம் என்ன?

xxxx

4.வில்வ இலையைப் பற்றி வேதத்தில் ஏதேனும் இருக்கிறதா?

xxxx

5.வில்வத்தின் பெருமை பேசும் புராணங்கள் எவை?

xxxx

6.வில்வத்தின் மருத்துவப் பயன்கள் என்ன ?

xxxx

7.வில்வத்தை தல மரம் அல்லது முக்கிய மரமாக உடைய கோவில்கள்  எவை ?

xxxx

8.பெங்களூரில் வில்வ மரமுள்ள கோவில்கள் எவை ?

xxxx

9.பதிமூன்று இலைகள் கொண்ட வில்வத்தின் பெயர் என்ன ? வில்வ இலைக்குத் தமிழில் என்ன பெயர்கள் உள்ளன ?

xxxxx

10.வில்வம்- சிவராத்திரி பெருமை பேசும் கதை என்ன ?

xxxx

விடைகள்

1.உலகிலேயே மிகப் பெரிய முஸ்லீம் நாடான இந்தோனேஷியாவில் ஏராளமான இந்து மத அதிசயங்கள் உள்ளன. 

இந்தோனேஷியாவில் வில்வ மரங்கள், ருத்ராக்ஷ மரங்கள், கற்பூர மரங்கள் சாம்பிராணி மரங்கள் ஆகியன உண்டு.வில்வ மரத்தின் பெயரில் அங்கே ஒரு ராஜ வம்சம் ஆட்சி செய்தது . அந்த வம்சத்தின் பெயர் . மஜாபஹித் ;. மஜாபஹித் என்றால் வில்வ மரம் என்று பொருள்..

ஜெர்மானிய அறிஞர் பெர்தோல்ட் லோபர் (German Orientalist Bethold Laufer  ) என்பவர் — மஜாபஹித் என்பது கசப்பான மஜ  (வில்வ)  மரம் என்று பொருள்படும் என்றார்.அதன் மற்ற பெயர் வில்வ என்பதும் அவர்களுக்குத் தெரியும் இதன் தாவர இயல் பெயர் Aegle marmelos (another name Wilwa tikta).

மேலும் மஜபஹித் இந்திய ஆண்டான `சக வருஷம்` என்பதையே பயன்படுத்தினர். 1293 முதல் 200 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். முதல் மன்னரின் பெயர் ஜயவர்த்தன. அவனுடைய மஹாராணிகளின் பெயர்கள்: த்ரிபுவனேஸ்வரி, நரேந்திரதுஹித, ப்ரக்ஞாபரமித, காயத்ரி ராஜபத்னி.

xxxx

2.வில்வ இலையானது மூன்று இலைகளைக் கொண்டது ; இது சிவபெருமானின் சின்னங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது சிவனின் திரிசூல வடிவில் இது இருக்கிறது. சத்வ, ரஜஸ், தமோ குணங்களை வெல்லும் நோக்கத்தையும் நினைவில் வைக்க உதவுகிறது . அ , உ, ம என்ற மூன்று எழுத்துக்களால் உருவான ஓம் என்னும் மந்திரத்தின் உருவத்தைத் தாங்கி நிற்கிறது ; பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற த்ரிமூர்த்திகளை நினைவுபடுத்தி அவர்களின் சிருஷ்டி,  பாதுகாப்பு, அழிவு (சிருஷ்டி ஸ்திதி லயம் ) தொழில்களையும் குறிக்கிறது ; சுருங்கச் சொன்னால் இந்து என்ற மூன்று எழுத்தின் கீழுள்ள சனாதன தர்மத்தின் சாராம்சம் இது

xxxx

வில்வாஷ்டகம்

3.வில்வத்தின் பெயரில் உள்ள முக்கிய துதி  வில்வாஷ்டகம். வ=ப இரண்டும் இடம் மாறும் என்பது மொழியியல் விதி ; சம்ஸ்க்ருதம், தமிழ், அவெஸ்தன் மொழிகளில் இதைக் காணலாம்.ஆகையால் இதை பில்வம் என்றே ஸம்ஸ்க்ருதத்தில் சொல்லுவார்கள் .

ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர் அருளிச்செய்த  வில்வாஷ்டகம்
……………………………………………………………………………………

மூன்று தளம் மூன்று குணம் மூன்று விழி மூவாயுதம்
மூலமெனக் கோலம் தரும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

முப்பிறவி துயர் நீக்கும் முப்பிரிவாய் விளங்கிடுமே
புனிதமெலாம் அள்ளித் தரும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

கோடி கோடி கல்யாணம் செய்து வைக்கும் இனிய பலன்
குறைகளின்றி தந்திடுமே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

காசி சேஷ்த்தரம் வசிப்பதனால் கால பைரவ தர்சனத்தால்
வரும் பலனை தந்தருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

பூச்சிகளால் வீணாகா அதிசயமாம் வில்வதளம்
மங்களமே தினம் அருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

திங்கள் எனும் இந்துவாரம் விரதமுடன் பூஜை செய்ய
ஏற்ற தளம் வில்வதளம்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

வாஜபேயம் சோமயாகம் வளர்க்கின்ற யாகபலன்
அத்தனையும் தந்தருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

கயைபிரயாகை யாத்திரையை செய்வதனால் வரும் பலனை
தந்திடுமே வில்வதளம்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

சாளக்கிராமம் வணங்கும் பலன் சான்றோரை வணங்கும் பலன்
தந்தருளும் எந்நாளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

கோடி யானை தான பலன், அஸ்வமேத யாக பலன்
ஆயிரமாய் தந்திடுமே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

காண்பதுவும் புண்ணியமே தொடுவதுவும் புண்ணியமே
கனிவருளும் நெஞ்சினிலே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

பாடசாலை ஆலயங்கள் பல ஆயிரம் அமைப்பதனால்
வருகின்ற பலன் அருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

அன்னதானம் ஆயிரமாய் செய்கின்ற ஜென்ம பலன்
அளித்திடுமோர் அர்ச்சனையே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

வில்வாஷ்டகம் தன்னை சிவனருகில் உரைப்போர்க்கு
செல்வமெலாம் கூடி வரும்

சம்ஸ்க்ருத மொழியில் உள்ள மூல ஸ்துதி
சிவ பில்வாஷ்டகம்/வில்வாஷ்டகம்!

திரிதலம் திரிகுணாகரம்திரிநேத்திரம் ச திரியாயுதம்
திரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!

திரிசா கைப் வில்வ பத்ரைச் ச அர்ச்சித்ரைக் கோமளஸுபை
தவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம்!

கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய
காஞ்சனம் ஸைலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம்!

காசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம்
ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம்!

இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஸ்வரா
நித்தம் ஹௌஷ்யாமி தேவே ஏக வில்வம் சிவார்ப்பணம்!

ராமலிங்க பிரதிஷ்டா ச வைவாஹிக க்ருதம் ததா
தடாகனிச ஸந்தானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!

அகண்ட வில்வ பத்ரம் ச ஆயுதம் சிவபூஜனம்
க்ருதம் நாம ஸஹஸ்ரேண ஏக வில்வம் சிவார்ப்பணம்!

உமயா ஸஹதேவேச நந்தி வாஹனமேவச
பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!

ஸாளக்கிரமேஸூ விப்ராணாம் தடாகம் தச கூபயோ
யக்ஞகோடி ஸஹ’ஸ்ரஸ்ச ஏக வில்வம் சிவார்ப்பணம்!

தந்திகோடி ஸஹ’ஸ்ரேஸூ அஸ்வமேத சதக்ரதௌ
கோடிகன்யா மஹாதானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!

ஸ்ஹஸ்ர வேத பாடேஸூ ப்ரஹ்ம ஸ்தாபன முச்யதே
அனேக வ்ரத கோடினாம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!

அன்னதான ஸஹஸ்ரேஸூ ஸ்ஹ”ஸ்ரோப நயனம் ததா
அனேக ஜன்ம பாபானி ஏக வில்வம் சிவார்ப்பணம்!

வில்வ ஸ்தோத்ர மிதம் புண்யம் ய படேத் சிவ ஸன்னிதௌ
சிவலோகம் அவாப்னோதி சிவனே சஹ மோததே!

Popular Bilva Stotra- Bilvashtakam

त्रिदलं त्रिगुणाकारं त्रिनेत्रं च त्रियायुधम्
त्रिजन्म पापसंहारं एकबिल्वं शिवार्पणम्

अखण्ड बिल्व पत्रेण पूजिते नन्दिकेश्र्वरे
शुद्ध्यन्ति सर्वपापेभ्यो एक बिल्वं शिवार्पणम्

शालिग्राम शिलामेकां विप्राणां जातु चार्पयेत्
सोमयज्ञ महापुण्यं एक बिल्वं शिवार्पणम्

दन्तिकोटि सहस्राणि वाजपेय शतानि च
कोटि कन्या महादानं एक बिल्वं शिवार्पणम्

लक्ष्म्या स्तनुत उत्पन्नं महादेवस्य च प्रियम्
बिल्ववृक्षं प्रयच्छामि एक बिल्वं शिवार्पणम्

दर्शनं बिल्ववृक्षस्य स्पर्शनं पापनाशनम्
अघोरपापसंहारं एक बिल्वं शिवार्पणम्

काशीक्षेत्र निवासं च कालभैरव दर्शनम्
प्रयागमाधवं दृष्ट्वा एक बिल्वं शिवार्पणम्

मूलतो ब्रह्मरूपाय मध्यतो विष्णुरूपिणे
अग्रतः शिवरूपाय एक बिल्वं शिवार्पणम्

बिल्वस्तॊत्रमिदं पुण्यं यः पठॆश्शिव सन्निधौ
शिवलॊकमवाप्नॊति ऎकबिल्वं शिवार्पणं

Transliteration and Translation of Bilva Ashtakam

Ashtakam means Eight Slokas; normally given with Palastuti (Benefits)

tridalam triguNaakaaram trinetram cha trayaayudham I

trijanmaa paapasanhaaram eka Bilva shivaarpaNam II 1 II

trishaakhair Bilva patraisha hyaschidrai komalai shubhai I

shivapoojaam karishyaami eka Bilva shivaarpaNam II 2 II

akhanda bilvapatreNa poojite nandikeshware I

shudhyantii sarva paapebhyo eka bilva shivaarpaNam II 3 II

shaaligram shilaama ekaam vipraaNaam jaatu arpayet I

somayadnya mahaapuNyam eka bilva shivaarpaNam II 4 II

dantikotisahasraNi ashwamedha shataanicha I

kotikanyaa mahaadaanam eka bilva shivaarpaNam II 5 II

laxmyaa stnam utpanam mahadevasya cha priyam I

bilva vruksham prayachchhaami eka bilva shivaarpaNam II 6 II

darshanam bilva vrukshasya sparshanam paapanaashanam I

aghorapaapa sanhaaram eka bilva shivaarpaNam II 7 II

moolato brahma roopaaya madhyato Vishnu roopiNe I

agrataha shiva roopaaya eka bilva shivaarpaNam II 8 II

bilvashtakam idam puNyam yah paThet shiva sanidhou I

sarva papa vinirmuktaaha shivalokam avaapnuyaat II 9 II

II eti bilvashtakam sampoorNam II

xxxx

4.வேத கால பிராமண நூல்களிலும் அதர்வ வேதத்திலும் Bilva (बिल्व) வில்வம் பற்றிய குறிப்புகளைக் காணமுடிகிறது அதன் பழங்கள் மதிப்புமிக்கவை என்பதை அவை சொல்கின்றன. யஜுர் வேதத்தைச் சேர்ந்த தைத்ரீய சம்ஹிதை,  யாகம் செய்த இடங்களில் வில்வ மரத்தாலான கம்பங்களை நிறுவினார் என்று சொல்கிறது . வில்வ மரத்தினாலான தாயத்தின் மஹிமையைப் புகழும் துதி,  ஸாங்க்யாயன ஆரண்யகத்தில் காணப்படுகிறது ; இதுவே பிற்காலத்தில் வில்வ அஷ்டகம் போன்ற துதிகள் உருவாக வித்திட்டது.

xxxx

5. வில்வத்தின் பெருமையை கந்த புராணம் பவிஷ்ய புராணம் , சிவ புராணம் , சைவ ஆகம நூல்களில் காணலாம். சம்ஸ்க்ருதத்தில் ஆதிசங்கரர் இயற்றிய துதிகள்,  தமிழில் தேவாரம் முதலிய தெய்வீகப் பாடல்களிலும் காணலாம்.

xxxx

வில்வம் மருத்துவ பயன்கள்

6.வில்வ பத்திரம் (இலை) , சிவ பெருமானுக்கு உரியது. அதனால் பூஜை செய்வது மிக மிக விசேஷமானது.  இதற்கு மருத்துவ குணங்களும் உண்டு. இருபதுக்கும் மேலான பாக்டீரியாக்களைக் கொன்றுவிடும் சக்தி இம் மரத்துக்கு இருப்பது அண்மைக் கால ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. நேபாளத்தில் வசிக்கும் நீவார் இன மக்கள் கன்னிப் பெண்களை வில்வ பழத்துக்குக் கல்யாணம் செய்துவைக்கும் சம்பிரதாயம் இன்றும் உளது.

வில்வ மரத்தின் பழம், இலை , பட்டை, வேர் ஆகிய ஒவ்வொன்றும் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் என்று மருத்துவ நூல்கள் பகர்கின்றன.

வில்வம் மருத்துவ பயன்கள் (வீரகேசரி பத்திரிகைத் தகவல்; நன்றி)

வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் ஒரு சிறந்த மருத்தாகும். வில்வ பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

சிறுநீர் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும்.

தாய்மார்களுக்கு தாய்ப்பாலை பெருக்கும்.

மாதவிடாய் சம்பந்தமான பிரச்சினைகளை குணமாக்கும்.

சிறுநீரக கற்களைக் கரைக்கும். இதை ஊறுகாய் போல போட்டுச் சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

முடி உதிர்வைக் கட்டுப்படுத்த வில்வம் மிக சிறந்த மருந்தாகச் செயல்படும். இதற்கு வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து தலைக்குத் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி உதிர்தல் நீங்கும்.

வில்வ காயை எடுத்து அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து கொண்டு அதில் பால் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும். முகம் பொலிவு பெறும்.

மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

கண்பார்வை தெளிவுபெற உதவும். வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும்.

xxxx

7.வில்வம் ஸ்தல மரம் உள்ள கோவில்கள்

திருஅரங்கத்தில் மஹாலக்ஷ்மியின் சந்நிதிக்கு அருகில் விளங்குவது வில்வம்!..

திருஐயாறுதஞ்சை (ஸ்ரீபிரகதீஸ்வரர்)இராமேஸ்வரம்திருவெண்காடுதிருவைகாவூர் –திருவிசைநல்லூர் நல்லூர் வில்வவனேஸ்வரர் கோவில்இன்னும் பல சிவ ஸ்தலங்களின் தலமரம் – வில்வம்.பெரும்பான்மையான திருக்கோயில்களில் முதலிடம் பெற்று விளங்குவது வில்வம்!.

திருவையாறுதிருவெறும்பியூர்திருமயேந்திரப்பள்ளி திருத்தென்குடித்திட்டை திருக்கலிக்காமூர் ,  திருமூக்கீச்சரம்திருச்சத்திமுற்றம் , திருக்குரக்குக்காதிருவியலூர் , திருக்கருக்குடிதிருவிளமர் திருக்குருகாவூர் வெள்ளடை , திருக்கழிப்பாலை ,  திருக்குரங்கணில்முட்டம்,  திருவேட்டக்குடி ,திருநன்னிலம் (திருநன்னிலத்துப் பெருங்கோயில்)  திருகோகர்ணம்(கோகர்ணா),  திருக்கருவிலிக்கொட்டிட்டை,  திருப்பள்ளியின் முக்கூடல் ,திருவிடைவாய்திருக்கோடி(கோடிக்கரை)திருக்கொள்ளிக்காடு திருஇராமேச்சரம்திருவைகாவூர்திருஇலம்பையங்கோட்டூர்திருஆனைக்கா,திருஆப்பனூர்,திருப்பரங்குன்றம்,திருவெஞ்சமாக்கூடல்திருக்கோழம்பம்திருத்தென்குரங்காடுதுறை,திருநனிபள்ளி,திருநெல்வெண்ணெய் , திருத்தருமபுரம் ,திருநள்ளாறுதிருக்கோட்டாறு திருஅறையணிநல்லூர்,திருமீயச்சூர் இளங்கோயில்திருக்கடவூர் வீரட்டம் , திருக்கடவூர் மயானம் திருக்கருவூர் ஆனிலை(கரூர்) திருக்கானப்பேர்(காளையார் கோயில்) , ,திருவேதிகுடி,திருகற்குடிதிருநெடுங்களம்திருக்கோணமலை மேலைத்திருக்காட்டுப்பள்ளிதிருக்கண்டியூர்,சக்கரப்பள்ளிதிருநல்லூர்திருச்செம்பொன்பொள்ளி , திருப்பறியலூர் திருவலஞ்சுழிதிருநீலக்குடிதிருத்தெளிச்சேரிதிருமீயச்சூர்திருச்சிறுகுடிதிருஅரிசிற்கரைப்புத்தூர்திருக்கொண்டீச்சரம்இடும்பாவனம்திருவெண்டுறை,திருக்கொள்ளம்பூதூர்,  திருஏடகம்திருஆடானை,திருமுருகன்பூண்டிதிருக்கோவலூர் வீரட்டம்,இடையாறு,திருவல்லம்திருமாற்பேறுதிருஇடைச்சுரம்திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் ,திருக்குடந்தைக் காரோணம்திருக்கானூர்திருவடுகூர்திருப்பூந்துருத்திதிருப்பாற்றுறைதிருக்கூடலையாற்றூர்,   திருப்பழனம் திருநெய்த்தானம் திருத்தெங்கூர்திருவிற்கோலம்(கூவம்) ,திருப்பெரும்புலியூர் ,திருஅழுந்தூர் ,திருவக்கரைதிருவெண்காடு , திருப்பழையாறை வடதளிதிருக்குடமூக்கு (கும்பகோணம்)முதலிய நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூசனை மூலிகையான இஃது ஒரு கற்ப மூலிகையாகும்அஃதாவதுஇன்ன பிணிக்கு மட்டுமே மருந்துதென்று அமையாது எல்லாப் பிணிகளையும் நீக்கும் தன்மையுடையது.

xxxx

8. பெங்களூரில் உல்சூர் சோமேஸ்வரர் சிவன் கோவில், பசவங்குடி நந்தி கோவில், ஜோகு பாலய பிரதான சாலை ஆகிய இடங்களில் வில்வ மரம் இருக்கிறது

xxxx

9.பதிமூன்று இலைகள் கொண்ட வில்வத்தின் பெயர் மஹாவில்வம்.

ஆங்கிலத்தில் இதை வுட் ஆப்பிள் Wood Apple என்றும் தாவரவியலில் ( Bel or Bael or Bilva Tree) “Aegle Marmelos  என்றும் அழைப்பார்கள் .  இதற்கு தேவாரம் முதலிய தெய்வீகத்து திகளில் கூவிளம், கூவிளை என்று பெயர்கள் உள்ளன

xxxx

10.சிவராத்திரி தோன்றிய கதை நமக்கு முக்கியமான ஒரு செய்தியைத் தருகிறது. ஒருவன் அறிந்தோ அறியாமலோ சிவலிங்கத்துக்குப் பூஜை செய்தாலும் அவனுக்கு முக்தி கிடைக்கும் என்பதே அந்த செய்தி. சிவ ராத்திரி கதை மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் பீஷ்ம பிதாமஹர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தபோது கூறப்படுகிறது.

சித்ரபானு என்ற மன்னன் உபவாசம் இருந்தபோது அஷ்டவக்ரர் அங்கே வருகிறார். மன்னன் உபவாசம் இருப்பதன் காரணத்தை வினவியபோது அம் மன்னன் தனக்கு பூர்வ ஜன்மத்தில் என்ன நடந்தது என்பதை விவரமாகக் கூறுகிறான். முன் ஜன்மத்தில் தான் ஒரு வேடன் என்றும் காட்டில் வேட்டையாடிய போது நேரம் ஆகிவிட்டதால் இரவுப் பொழுதை ஒரு மரத்தின் மீது கழித்ததாகவும் அதன் கீழே வந்து தங்கிய மானைக் கொன்று வீட்டுக்குக் கொண்டுபோக வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இலையாகப் பறித்து மானுக்குப் போட்டதாகவும் கூறுகிறான்.

காலையில் மானுடன் வீட்டுக்குச் சென்றபோது யாரோ ஒருவர் உணவு கேட்டு வந்ததால் அதைக் கொடுத்துவிட்டதாகவும் சிறிது காலத்துக்குப் பின் இறந்துவிட்டபோது சிவ தூதர்கள் இருவர் வந்து ராஜ உபசாரம் செய்து அழைத்துக் கொண்டு போனபோதுதான் முழு விஷயமும் தெரிய வந்ததாகவும் மன்னன் கூறுகிறான். அவன் இலைகளைப் பறித்துப் போட்ட மரம் சிவனுக்கு மிகவும் உகந்த வில்வ மரம் என்றும் மானுக்குப் போட்ட வில்வ இலைகள் அருகில் இருந்த சிவலிங்கம் மீதும் விழுந்ததால் எல்லா புண்யமும் வந்து சேர்ந்ததாகவும் மன்னன் கூறுகிறான்.

இந்தக் கதை நமக்குப் புகட்டுவது என்ன?

1.      சிவனுக்குப் பூஜை செய்கிறோம் என்று தெரியாமல் வில்வத்தைப் போட்டாலும் கூட முழு புண்ணியமும் கிட்டும்..

2.      வேடனாக இருந்து செய்த பாபங்கள் கூட மன்னிக்கப் படும்.

3.      அறியாமல் செய்த புஜையானாலும் அடுத்த ஜன்மத்தில் மன்னர் பதவி கிட்டும்

–subham—

Tags- சிவராத்திரி கதை , வில்வம், தல விருட்சம், மருத்துவ பயன்கள், வில்வாஷ்டகம் , பில்வாஷ்டகம்

Leave a comment

Leave a comment