QUIZ சந்தனம் பத்து QUIZ (Post No.13,096)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,096

Date uploaded in London – –   15 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Quiz Serial Number- 120

QUIZ சந்தனம் பத்து QUIZ

1.முழங் கையால் சந்தனம் அரைத்த நாயனார் யார் ?

xxxx

2.அவர் என் அப்படிச் செய்தார் ?

xxxx

3.சந்தனம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்த தமிழ்ச் சொல்லும் ஆங்கிலச் சொல்லும் எவை ?

xxxx

4.சந்தன மரம் எங்கே அதிகம் விளைகிறது ?

xxxx

5.சந்தன மரத்திலிருந்து தொங்கும் பாம்பு பற்றிப் பாடிய கவிஞர்கள் யார் ?

xxxx

6.இப்பொழுது நாள்தோறும் சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்வோர் யார்?

xxxx

7.இறைவனுக்கான பூஜைகளில் சந்தனத்தின் பங்கு என்ன?

xxxx

8.சந்தனத்தின் பெருமையை அவ்வையாரும் அதிவீரராம பாண்டியனும் எங்கே உவமையாகப் பயன்படுத்துகிறார்கள்?

xxxx

9.சந்தன மரத் தேன்கூடு பற்றிப்  பாடிய சங்கப்  புலவர் யார் ?

xxxx

10.சந்தனத்தின் உபயோகங்கள் என்ன?

xxxx

விடைகள்

1.மூர்த்தி நாயனார்

xxxx

2.மதுரையைப் பாண்டிய மன்னன் ஆண்டு கொண்டிருக்கையில் மூர்த்தியார் என்ற வணிகர், ஆலவாய்ச் சிவபிரானுக்குச் சந்தனக் காப்பு செய்து வந்தார். கர்நாடக வேந்தன் ஒருவன் படையெடுத்து வந்து பாண்டியனை வீழ்த்தி மதுரையைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். அவன் சைவ சமயத்துக்கு எதிரி; சமண மதத்தைச் சேர்ந்தவன் மதுரைக்குச் சந்தனம் வந்து சேர்கிற வழியை அடைத்து மூர்த்தியாரின் திருப்பணிக்கு இடையூறு செய்தான். மூர்த்தியார் மனந்தளர்ந்து விடாமல் தமது முன்கையையே சந்தனம் தேய்க்கும் வட்டப்பாறையில் தேய்த்துத் தமது நிணங்கலந்த குருதியையே (செஞ்சந்தனமாக) படைத்தார். அப்போது திடீரென்று வேந்தன் இறந்தான்., அமைச்சர்கள் உரிய அரசனைத் தேர்வு செய்வதற்காகப் பட்டத்து யானையைக் கண்ணைக்கட்டி அனுப்பினர். அந்த யானை மூர்த்தியாரின் முன்னர் வந்து பணிந்து அவரைச் சுமந்து சென்று அரசராக்கியது. இது பெரியபுராணம் (மும்மையால் உலகாண்டசருக்கம், பா1-48) கூறும் கதை.

xxxx

3.சாந்தம், சாந்து என்ற சொல்லை சங்க இலக்கியப் புலவர்கள் கையாண்டனர் அதற்கும் முன்னதாக சம்ஸ்க்ருத பாரசீக, லத்தீன் மொழிகளில் இதன் வேர்ச் சொல் இருக்கிறது ; ஆங்கிலத்தில் சாண்டல் என்றன.

The nomenclature and the taxonomy of the genus are derived from this species’ historical and widespread use. Etymologically it is ultimately derived from Sanskrit चन्दन Chandana (čandana), meaning “wood for burning incense” and related to candrah, “shining, glowing” and the Latin candere, to shine or glow. It arrived in English via Late Greek, Medieval Latin and Old French in the 14th or 15th century.[1] The sandalwood is indigenous to the tropical belt of peninsular India, the Malay Archipelago and northern Australia[2][3] The main distribution is in the drier tropical regions of India and the Indonesian islands of Timor and Sumba

xxxx

4.கர்நாடக மாநிலத்தில் சந்தன மரக்காடுகள் உள்ளன. இதை குடகு , கூர்க் என்று அழைப்பார்கள். கர்நாடக மாநிலத்தை ஒட்டிய தமி நாடு, கேரளப்பகுதிகளிலும் இம்மரங்களைக் காணலாம்.

xxxx

5. காளிதாசன்,  ரகுவம்ச காவியத்தில் இது பற்றிப் பல ஸ்லோகங்கள் இயற்றியுள்ளான் . சங்கப்  புலவர்களில் சிலர் இதைக் குறிப்பிட்டுள்ளார்கள் . இதோ ஒரு பாடல்

அருளிலர்வாழி-தோழி!-மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெஞ் சுடர் கரந்த கமஞ் சூல் வானம்,
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி,
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து,
களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை,
எருவை நறும் பூ நீடிய
பெரு வரைச் சிறு நெறி வருதலானே–நற்றிணை 261; சேந்தன் பூதனார் பாடல்

xxxx

6.மலையாளி இந்துக்கள் தினமும் காலையில் சந்தனத்தை விபூதி போலப்பட்டையாக அணிவர் ; இளம்பெண்கள் அதைப்  பொட்டாக அணிவார்கள்.

xxxx

7.இந்துக்கள் எல்லா பூஜைகளிலும் சந்தனத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள்; வீடுகளில் படங்களுக்கு சந்தனப் பொட்டு அணிவித்து தானும் இட்டுக்கொள்ளுவார்கள் ; கல்யாணங்களில் வரவேற்பிலும் சம்பந்தி மரியாதையிலும் சந்தனத்தைப் பரிமாறிக்கொள்ளுவார்கள் ; இந்துக்களின் முறையான பூஜைகளில் ஷோடச உபசாரம் என்னும் 16 வகை உபசாரங்கள் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும். அந்த 16 உபசாரங்களில் கந்தம் / நறுமணப் பொருள் சூட்டுதல் என்பதில் சந்தனத்தைப் பயன்படுத்துவர்; அதாவது இறைவனுக்கு அளிப்பார்கள் .

xxxx

8.சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்துங்

கந்தங் குறைபடா தாதலால்-தந்தந்

தனஞ்சிறிய ராயினுந் தார்வேந்தர் கேட்டால்

மனஞ்சிறிய ராவரோ மற்று–  மூதுரை 28

xxx

அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது

சுடினும் செம்பொன் தன்ஒளி கெடாது

அரைக்கினும் சந்தனம் தன்மணம் அறாது

புகைக்கினும் கார்அகில் பொல்லாங்கு கமழாது

கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது—  வெற்றிவேற்கை,

அதிவீரராம பாண்டியன் இயற்றியது

xxxx

9.நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;

என்றும் என் தோள் பிரிபு அறியலரே’

தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,

புரைய மன்ற, புரையோர் கேண்மை;

நீர் இன்று அமையா உலகம் போலத்

தம் இன்று அமையா நம் நயந்தருளி,

நறு நுதல் பசத்தல் அஞ்சிச்

சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!– நற்றிணை 1; எழுதியவர்: கபிலர்.

பொருள்:– என் காதலர் சொன்ன சொல் காப்பவர்; எப்போதும் இனிமையானவர்; என்றும் என் தோள்களைப் பிரியாதவர்;குளிர்தாமரையின் தாதுக்களை ஊதிஉயர்ந்த மலையிலிருக்கிற சந்தன மரத்தில் வண்டு சேர்த்த தித்தித்தத் தேன் போல உயர்ந்தது அவர் காதல்;

xxxx

10.உடலில் பூசினால் குளிர்ச்சி தரும்; வேர்க்குரு, பரு முதலியன் வராது; நல்ல மணத்தை அளிக்கும்; சிலவகை மருந்துகளில் சந்தனம் சேர்க்கப்படும்; ஊதுபத்தி, சோப்பு, முகப் பவுடர், மரத்தாலான கலைப் பொருட்கள் , பொம்மைகள் , இறைவனின் திரு உருவங்கள் செய்வதற்கும் பயன்படும்.

xxxx

Bonus Questions

சந்தனம் பற்றிய சில தமிழ்ப் பழமொழிகளை சொல்ல முடியுமா ?

xxxx

1.சந் தனக்கட்டை தேய்ந்து கந்தம் குறைபடுமா ?

2.சந்தனக்குறடு  தேய்ந்தாலும்  மணம்  குறையாது

3.சந்தனம் அரைக்கின்றவன் குடுமி அலைகிறாற்போல

4.சந்தன விருட்சமிருக்கிற காட்டிலே சருப்பம் இருக்கிறது போல

5.சந்தனம் தெளித்த கையாலே சாணி தெளித்தது போல

xxxx

சந்தனம் என்ற சொல் வரக்கூடிய திரைப்படப் பாடல்களை சொல்ல முடியுமா ?

xxxx

சாந்து பொட்டு தளதளங்க சந்தன பொட்டு கமகமக்க–

மதுரை கோபுரம் தெரிந்திட செய்த மருது பாண்டியர் பாருங்கடி !( சிவகங்கைச் சீமை)

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!- பாடல் எந்தப் படத்தில் வருகிறது – (கந்தரலங்காரம்).

xxxx

குங்கும சந்தன லேபித லிங்கம் – எந்தத் துதியில் வருகிறது?

xxxx

பிரம்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்

………………………………….

குங்கும சந்தன லேபித லிங்கம்

பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்

ஸஞ்சித பாப விநாசன லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்- லிங்காஷ்டகம்

சந்தனம்

பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்

ஸஞ்சித பாப விநாசன லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்- லிங்காஷ்டகம்

xxxxx

Tags—சந்தனம், பழமொழிகள், உபயோகங்கள், தொங்கும் பாம்பு, சந்தன மரம், காளிதாசன், சங்கப் புலவர்கள், QUIZ சந்தனம் பத்து

Leave a comment

Leave a comment