Three Robbers and Three Gunas Story; My Research Notes on VC -36 (Post No.13,529)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,529

Date uploaded in London – 9 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

Adi Sankara in his Viveka Chudamani (VC) explains in detail the Sattva, Rajas Tamo Gunas (Slokas 110 to 112). It is a summary of Bhagavad Gita’s 14th Chapter Guna Traya Vibhaga Yoga. Lord Krishna speaks about the three Gunas in men

Gunas are translated as modes and they are three, goodness/satva, passion/rajas and dullness/tamas. All of us are born with them.

One commentator gives good examples for the three Gunas from Ramayana:


Ravana – Rajo Guna

Kumbakaarna- Tamo Guna

Vibhishana- Sattva Guna.

All are bothers!

Sri Ramakrishna Paramahmasa (RKP) gives another story to explain it. Sankara just listed them like Bhagavad Gita.

Here is the story of R K P:

A merchant with some valuables travelling alone had to pass through a forest to his home in the city. He was waylaid by three robbers who took away all his possessions.

Then the first robber said, “Let us kill him! ”. The second robber argued, “Why incur the sin of killing him? Let us tie him up firmly to a tree”. The second robber’s advice was followed and they went away leaving him to his fate. After sometime the third robber returned, unbound him and took him to the edge of the forest along a road leading to the city which could be seen at a distance.

The merchant thanked the robber profusely for his kindness and earnestly requested him to accompany him so that he could suitably reward him on reaching home.

However the third robber said, “I cannot come with you to the city as I will be recognized as a robber by the police”.  

Sri Ramakrishna himself offers the explanation for the story.

The world is the forest. The three robbers are three gunas–Sattva ,Rajas, Tamas .

Jiva or the individual soul is the traveller; Self- knowledge is his treasure. Tamas wants to destroy him, while Rajas intercedes and binds him with the fetters of the world, but Sattva protects him from the  action of Rajas and Tamas.

By taking refuge in Sattva the jiva becomes free from lust, anger and delusion

But even the Sattva quality cannot go into the region of the Absolute. That is why the third robber said

Behold, there is your home . Then he disappeared .

So one has to go beyond Gunas and try to reach the God who is beyond Gunas.

Bhagavad Gita says

Lord Krishna states in Verse 14.9 of the Bhagavad Gita:

सत्वं सुखे सञ्जयति रज: कर्मणि भारत |
ज्ञानमावृत्य तु तम: प्रमादे सञ्जयत्युत ||

Sattva binds one to material happiness; rajas conditions the soul toward actions; and tamas clouds wisdom and binds one to delusion.

Thus, it is utterly important to rise beyond the three gunas to be near to God. Lord Krishna further states in Bhagavad Gita Verse 14.19:

नान्यं गुणेभ्य: कर्तारं यदा द्रष्टानुपश्यति |
गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति || 

“When wise persons see that in all works there are no agents of action other than the three guṇas, and they know me to be transcendental to these guṇas, they attain my divine nature.”

 xxx

Three Types of Men- Stupid, Bookish, Sage

In another sloka, Sankara says

देहोऽहमित्येव जडस्य बुद्धिः
देहे च जीवे विदुषस्त्वहंधीः ।
विवेकविज्ञानवतो महात्मनो
ब्रह्माहमित्येव मतिः सदात्मनि ॥ १६0 ॥

deho’hamityeva jaḍasya buddhiḥ
dehe ca jīve viduṣastvahaṃdhīḥ |

vivekavijñānavato mahātmano
brahmāhamityeva matiḥ sadātmani || V C 160 ||

160. The stupid man thinks he is the body, the book-learned man identifies himself with the mixture of body and soul, while the sage possessed of realisation due to discrimination looks upon the eternal Ātman as his Self, and thinks, “I am Brahman”. 

Notes:

[Three classes of people are distinguished in this Sloka, of whom the Advaitist is of course given the highest place.

Mixture of body and soul—The average man thinks he is both body and soul acting in unison.]

xxxx

Seven branched Palmyra in Kallal, Tamil Nadu.

Tamil Classification of Men

Poets on Three  Trees

Tamil poetess Avvaiyar and Bhartruhari in his Neetisataka praise the sacrifice of the coconut tree. They say ‘Look at that tree and its message. It sucks water from the ground, stand in scorching sun to give human beings sweet water’

Another poet in Neethi neri venba classified the entire humanity into three kinds.

First type of men is higher in the ladder. They are like palmyra trees. Even if you don’t water it, palmyra gives you fruits. Men with fine qualities don’t expect anything from you and yet they help you. (Sattva Guna)

Next below in the ladder are middle class type. The coconut trees need periodical watering. Some people will help you only when you praise them sky high. Or they expect something from you as reciprocation. (Rajo Guna)

The lowest type of people is like the betelnut tree or banana/ plantain trees. They need continuous watering and then only they give you, their yields. Lowest people always expect something from you and then only come forward to help you.(Tamo Guna)

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தரும் கொல்லென வேண்டா – நின்று

தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்

–வாக்குண்டாம்

Xxxx

மனிதர்கள் மூன்று வகை

உத்தமர்தாம் ஈயுமிடத்தோங்கு பனை போல்வரே

மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே  – முத்தலரும்

ஆம் கமுகு போல்வராம் அதமர் அவர்களே

தேங்கதலியும் போல்வார் தேர்ந்து

–நீதிநெறிவெண்பா

–subham—

Tags- Sattva, Rajo, Tamo Gunas, Three Robbers, Three trees, Three types of men, My Research Notes on VC -36, Ramakrishna Paramahamsa, Parable

பாலம்பேட் சிவன் கோவில்- Part 22 (Post No.13,528)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,528

Date uploaded in London – 9 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

பாலம்பேட் சிவன் கோவில் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 22

(படங்கள் விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டன.)

பாலம்பேட் சிவன் கோவில்  எங்கே இருக்கிறது ?

தெலுங்கானா மாநிலத்தில் முலுகு மாவட்டத்தில் பாலம்பேட் கிராமத்திலுள்ள சிவன் கோவிலைராமப்பா  கோவில் என்றும் ருத்ரேஸ்வரா கோவில் என்றும் அழைக்கிறார்கள் .Ramappa Temple, also known as the Rudreshwara temple, வாரங்கல் நகரிலிருந்து சுமார் 70. கி.மீ.; ஹைதராபாத்திலிருந்து 210 கி.மீ

சிறப்புகள் என்ன ?

இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை யுடைய கோவில்; காகதீய வம் சத்தினர் ஆண்டபோது இதைக் கட்டினார்கள்.

கோவிலில் உள்ள மூர்த்தியின் பெயர் ராமலிகேஸ்வரர்.

கணபதி தேவா (1199- 1262) என்ற மன்னனின்  படைத்த தளப தி ராஸர்லா ருத்ர ரெட்டி என்பவர், ராமப்பா ஏரிக்கரையில் எழுப்பியதால் ருத்ரேஸ்வர கோவில் எனப்படுகிறது  ராமப்பா என்பவர்  தலைமைச் சிற்பி.

இந்த வளாகத்தில் மூன்று கோவில்கள் இருப்பது சிறப்பு அம்சமாகும்  மார்க்கோ போலோ என்ற இத்தாலிய யாத்ரீகன் இதைப்  புகழ்ந்து எழுதியுள்ளான்.

சிற்பியின் பெயர் தாங்கிய கோவில் என்ற சிறப்பும் இதற்கு உண்டு

இதிலுள்ள கலை அம்ஸங்கள்  காரணமாக இதை யுனெஸ்கோ பண்பாட்டுத் தலங்களில் ஒன்றாக அறிவித்துள்ளனர் .

கோவிலின் அமைப்பு

சிவப்பு நிறக்கற்காளாலும் கருங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது முக்கிய சந்நிதிக்கு இரு புறங்களிலும் இரண்டு சிறிய கோவில்கள் இருக்கின்றன.

காண்போரைக் கவரும் கலையம்சங்கள் நிறைந்த கோவில். செங்கற்களால்  கோவில் விமானத்தை எழுப்பியுள்ளனர். இது பிரமிட் போல நிற்கிறது; இந்தவகைச் செங்கற்கள் தண்ணீரில் மிதக்கவல்லவை. அதில் துளைகள் அதிகம் அதைக் கொண்டு கோபுரம் எழுப்பியது ஒரு அதிசயம்.

சுவர்கள் தோறும் தூண்கள் தோறும், கூரைகள் தோறும் சிற்பங்களைக் காணலாம்  சிற்பி ராமப்பா , இந்தக் கோவிலை எழுப்புவதற்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டது ; அதைப்  பார்க்கும்போது கோவிலை நிறுவ அவர் எடுத்துக்கொண்ட பெருமுயற்சி புரியும்..

ஆறு அடி உயர நட்சத்திர வடிவ மேடையில்  சந்நிதி அமைந்துள்ளது ; கர்ப்ப  கிரகம் , அந்தராள , அர்த்த மண்டப, ரங்க மண்டப, நந்தி மண்பட , சாசன மண்டபங்களைக் கொண்டது.

இந்தக் கோவிலில்  உள்ள நாட்டிய பாணிகளைக் கொண்டு புதிய போஸ்களையும் உருவாக்கினர் ; அவை பழைய நாட்டிய புஸ்தகங்களில் கண்ட அபிநயனயங்கள்.

நந்தியின் அழகு நந்தியின் அழகு குறிப்பிடத்தக்கது. ஏராளமான ஆபரணங்களுடன் நந்தி நிமிர்ந்து நிற்கிறது. இன்னுமொரு குறிப்பிடத்தக்க  விஷயம் 800 ஆண்டுகளுக்குப் பின்னரும் கோவிலின் கருங்கல் தூண்கள் நேற்று பாலிஷ் போட்ட மாதிரி பளபளப்பதாகும்.  ஒரே மண்டபத்தில் 32 தூண்களைக் காணலாம்.மண்டபத்தின் மேல் கூரையில் மூலைகளை  இணைக்கும் பிராக்கெட்டுகளை BRACKETS அனைவரையம் கவரும்  வண்ணம் அமைத்துள்ளார் சிற்பி ராமப்பா ; இதை வேறு எங்கும் காண முடியாது. அவைகளில் 12 அழகிகளை வெவ்வேறு போஸ்-களில்  பார்த்து ரசிக்கலாம். கல்லிலே கவி பாடி இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது ..

ஒரு நாகினி உருவம் மிகவும் அழகாக இருந்ததால் ஹைதராபாத் நிஜாம் அதிகாரி அதை அகற்றி தன் வீட்டிற்கு அலங்கார பொருளாக நிறுவினார் மக்களின் எதிர்ப்புக்குப் பின்னர் அது கோவிலுக்கு மீண்டும் வந்தது. இதே போல கோவில் நகைகளையும் நிஜாம் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். புகார்கள் வலுக்கவே நிஜாம் அதைத் திருப்பித் தந்தார். அவைகளில் எத்தனை உண்மையானவை எத்தனை இமிடேஷன் என்பதை சிவபெருமான் மட்டுமே அறிவார்.

இதே போல மதுரை மீனாட்சி அம்மனின் நீலக்கல் நகைகளை மதுரை வெள்ளைக்கார அதிகாரிகள் விக்டோரியா மகாராணிக்கு அனுப்பி, இமிடேஷன் நகைகளை  மீனாட்சி கோவிலில் வைத்துள்ளனர் . இது பற்றி முன்னரே எழுதியுள்ளேன்.

பிரதான கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கம்  அழகான யோனி பீடத்தில் நிற்கிறது. இரு புறமும் நிற்கும் துணைக் கோவில்களில் சிவ தாண்டவ உருவம் குறிப்பிட்டது தக்கது.

மஹாசிவராத்திரி உற்சவத்தின் போது மூன்று நாட்களுக்குப் பல்லாயிரம் பக்தர்கள் வருகிறார்கள். அப்போது ஏராளமான கடைகளும் வந்து விடும்.

மண்டபங்களில் உள்ள மதனிகா, நாயிகா, நாகினி பெண்களின் உருவ ங்கள்  தற்கால ‘பேஷன்’களைத் தோற்கடித்துவிடும். ‘ஹை ஹீல்ஸ்’ அணிந்த பெண்கள் எம்ப்ராயடரி பூ வேலைப்பாடுகளுள்ள உடைகளை அணிந்து நிற்கின்றனர்.

Black polished pillars in the mandapa still retain the lustre even after eight centuries of harsh interaction of nature and humans. The sculptures of voluptuous nayikas Nagini and Madanika are just a perfect demonstration of feminine aesthetics in stone. Sculptures of woman with high-heels, wearing cloth with lace embroidery will certainly envy our modern fashion icons.

கோவிலில் உள்ள ரங்க மண்டபம் என்பது நாட்டியங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம். ஆகையால் அங்கே வித விதமான நடன அழகிகள் செதுக்கப்பட்டுள்ளன நடன  கணபதி, , காதல் அன்பைக் காட்டும் கணவன் மனைவி உருவம், ரதி- மன்மதன் சிலை கிருஷ்ண லீலைகள் , இந்து மதத்தின் நான்கு குறிக்கோளை விளக்குகின்றன. அதாவது கோவில் என்பது தர்மஅர்த்தகாமமோக்ஷத்தை விளக்கும் இடங்கள்.

சாசன மண்டபத்தில் கோவில் பற்றிய சாசனம்/ கல்வெட்டு — 13ம் நூறாண்டு சம்ஸ்க்ருத கல்வெட்டு –இருக்கிறது .

Sanskrit inscription in the Mandapa.

–SUBHAM–

பாலம்பேட் சிவன் கோவில் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 22

மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 3 (Post No.13,527)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,527

Date uploaded in London – 9 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 3

முதலில் ராமகிருஷ்ணரின் (மாஸ்டர்) நாடகக் கொட்டகை தொடர்பினை வெறுத்த ராமசந்திர தத்தாவும்  மாஸ்டரின்/ குரு நாதரின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஆழந்த பொருள் உள்ளதது என்பதை உணரத்  தொடங்கினார். வழிதவறிப்போன ஆத்மாக்களைக் கரையேற்றும் சக்தி அவருக்கு இருக்கிறது என்பதை புரிந்துகொண்டார். குரு நாதர் சமாதிக்குப் பின்னர், 1890 முதல் அவர் தியேட்டர்களில் குருநாதரின் சேவை குறித்து உரையாற்றத் தொடங்கினார் அவரே கட்டுரை எழுதி, அதில் நாடகங்கள் நல்ல கொள்கைகளைப் பரப்பும் ஒரு கருவி; அவைகள் மூலம் சமுதாயத்தைச் சீர்திருத்தலாம் என்று எழுதினார். கிரிஷ் சந்திர கோஷின் சைதன்ய லீலா, புத்த சரித , பிரபாஸ் யக்ஞ ஆகிய நாடகங்களை எடுத்துக்காட்டாக அளித்தார் .இத்தகைய நாடகங்கள் மக்களைத் தட்டி எழுப்பி உயர்த்திவிடும் என்றும் எழுதினார்.

வேசிப் பெண்களை நடிகர்களாக ஏற்பது ஏன் என்றும் நியாயப்படுத்தினார் ஆண்களை பெண் வேடத்தில் நடிக்கவைத்தால் அது இயற்கையாக இராது; குடும்பப் பெண்கள், நடிக்க  வரவும் மறுக்கிறார்கள்  ஆகையால் நடிக்க வரும் விபச்சாரிகளை வெறுக்காதீர்கள் என்கிறார். மேலும் அத்தனை பெரும் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் அல்ல;  வாழ்க்கையை நடத்துவதற்கான பொருளை வேண்டி,  பணக்காரர்களின் வைப்பாட்டிகளாக மட்டுமே உள்ளனர் என்றார்.

இப்படியெல்லாம் அவர் நியாயப்படுத்தியபோதும் , வேசிகள் நடிக்கும் நாடகங்கள் இளைஞர்களைக் கெடுத்துவிடும் என்ற குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

களத்தில் குதித்தார் சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் எதையும் விட்டுக்கொடுக்காத பிடிவாதக்காரராக வாழக்கையைத் துவக்கினார். ஆனால் குரு நாதரைச் (ரா.கி) சந்தித்த பின்னர் அவரது  வாழ்க்கை அடியோடு மாறியது

1896ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி பிரான்சிஸ் லெக்கார்ட் என்பவருக்கு அவர் எழுதிய கடிதத்தில் சொல்கிறார் :

எனக்கு 20 வயதாக இருக்கும்போது நான் கருணையற்ற, அனுதாபமில்லாத , வெறியனாக இருந்தேன் (On 6 July 1896 he wrote to Francis Leggett about his transformation: ‘) கல்கத்தாவில்  நாடகக் கொட்டகை இருக்கும் பிளாட்பாரத்தில் நடக்காமல் எதிர் பிளாட்பாரத்தில்தான் நடந்தேன் 33 வயதானபோது விபச்சாரி வீட்டில் கூட அவர்களைக் குறைகூறாமல் வசிக்கும் பக்குவத்தை அடைந்தேன் இது நான் அடிமட்டத்துக்குப்  போய்விட்டேன் என்பததைக் காட்டுகிறதா ? அல்லது இறைவனின் அன்புமயமான உலகத்தில் காலடி எடுத்துவைத்துவிட்டேன் என்பததைக் காட்டுகிறதா ?

xxxx

Vivekananda wrote to Swami Ramakrishnananda from Switzerland on 23 August 1896:

சுவிட்சர்லாந்திலிருந்து 1896ஆம் ஆண்டு ஆகஸ்ட்-23ம் தேதி சுவாமி ராமகிருஷ்ணாநந்தாவுக்கு, சுவாமி விவேகானந்தர்  ஒரு கடிதம் எழுதினார்:

” இன்று எனக்கு ராம்தயாள் பாபுவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது . தட்சிணேஸ்வரத்தில் நடந்த ராமகிருஷ்ணர் நினைவு தினக்கூட்டத்துக்குப் பல பொதுமகள்கள்/ வேசிகள் வருவதை அறிந்தேன்; எனக்குப் போகவே பிடிக்கவில்லை. மேலும் அவர் எழுதினார்; இனிமேல் ஆண்களுக்கு ஒரு நாளையும் பெண்களுக்கு வேறு ஒரு நாளையும் ஒதுக்க வேண்டும் என்று

இது பற்றிய என் கருத்து இதோ :

1.தட்சிணேஸ்வரம் போன்ற புனித இடங்களுக்கு வேசிகள் வரக்கூடாது என்றால் அவர்கள் வேறு எங்குதான் போவார்கள்? கடவுள் அவதாரம் எடுப்பது புண்ணிய ஆத்மாக்களுக்காக  அல்ல. பாவாத்மாக்களை கரை ஏற்றத்தான் அவதாரங்கள் வருகின்றன .

2.நரகத்தின் வாசல்களான் ஜாதி, மதம், குலம், கோத்திரம் ஆண் , பெண் முதலிய லோகாயத இடங்களில் மட்டும் நிற்கட்டும்.; அப்படிப்பட்ட வேறுபாடுகள் புண்ய  தலங்களில்  இருந்தால் அவைகளுக்கும் நரகத்துக்கும் என்ன வேறு[பாடு உளது ?

3. நாம் இருக்கும் இடம் ஜகன்மாதாவின் பிரம்மாண்ட நிலப்பரப்பு.  பாவிகளுக்கும் மஹான்களுக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அங்கே சம உரிமை உண்டு  அந்த ஒரு நாளிலாவது எல்லோரும் வேறுபாடுகளை மறந்து ஒன்று கூடி இறைவனின் திவ்ய கீதத்தை இசைக்கட்டும் அவர்களின் பாவங்கள் அடித்துச் செல்லப்படட்டும் அதுவே மிகப்பெரிய பலன்.

4.புனிதத் தலத்தில் ஒரு நாளைக்குக்கூட கெடுதிகளைத் தடுக்க முடியாவிட்டால் அது நமது குறையே அன்றி தீயோருடையது அன்று.  .பிரமாண்டமான ஆன்மீகப் பேரலைகளை எழுப்புவோம். அது அனைவரையும் ஆன்மீக வெள்ளத்தில் அடித்துச் செல்லட்டும்.

5.ஒரு புனித இடத்திலும் அவன் ஏழை , இவன் பணக்காரன் இவள் வேசி, அவன் கீழ்ஜாதி , இது பட்டிக்காடுகள்  என்று நினைப்பார்களானால் அத்தைகய கனவான்கள் (Gentlemen) அந்த இடத்திற்கு வராமலிருப்பதே நல்லது; ஜாதியையும் ஆணா பெண்ணா என்று பார்ப்பவர்களையும் கடவுள் விரும்புவாரா?  நூற்றுக்கணக்கான வேசிகள் நமது கூட்டங்களுக்கு வந்து குருநாதரின் சிலையின் கீழ் தலைகளை வைத்துப் புனிதம் அடைய நான் ஆண்டவனைப் பிரார் த்திப்பேன்.  ஒரு கனவான் வரவில்லை என்றாலும் கவலை இல்லை; குடிகாரர்களும் திருடர்களும் வேசிகளும் வரட்டும்; கடவுளின் வாசல்கள் அவர்களுக்காக திறந்தே இருக்கும்  ஊசியின் காது வழியாக ஒட்டகமே  கூடச் சென்றுவிடும்; ஆனால் ஒரு பணக்காரரான கடவுளின் சாம்ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பது கடினமே. உங்கள் மனத்தில் இனிமேல் எந்த கொடூரமான எண்ணத்துக்கும் இடம் கொடுத்து விடாதீர்கள்.

XXXXX

விவேகானந்தாவுக்கு  சகோதரி நிவேதிதா எதிர்ப்பு

இப்படிப்பட்ட வேசி எதிர்ப்பு, சகிப்பற்ற தன்மை  வங்காளத்தில் மட்டும் இருந்ததாக நினைத்துவிடக்கூடாது . மேலை நாடுகளிலும் உண்டு

1900ம் ஆண்டில் விவேகானந்தர் பாரிஸ் நகருக்கு வந்தார். புகழ்பெற்ற ஆபரா பாடகர் opera singer Emma Calvé singing Carmen; எம்மா கால்வே பாடும் கார்மென் ஐட்டத்ததைக் கேட்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவருக்கு அமெரிக்காவிலேயே மேடம் கால்வேயைத் தெரியும். அவர் சுவாமிஜியின் பல சொற்பொழிவுகளைக் கேட்டவர் .

இதுபற்றி தி டெடிகேடட் பத்திரிக்கையில் லீசல் ரேமண்ட் எழுதுகிறார்  Lizelle Reymond tells it in The Dedicated:

கால்வேக்கும் சுவாமிஜிக்கும் நடந்த உரையாடல்

சுவாமிஜி – நான் உங்கள் புகழ்பெற்ற பாட்டைக் கேட்கவேண்டும்

கால்வே — அது என்ன !!!

சுவாமிஜி – அதுதான் கால் மென் !

கால்வே – வெட்கம் கன்னத்தில் பிதுங்க சொன்னார் – மன்னிக்க வேண்டும் சுவாமிஜி; இதை நான் செய்வது மேடைக்காக. (உள்ள பூர்வமாக அல்ல)

இப்படி உரை யாடல் நிகழும்போது அருகிலிருந்த நிவேதிதா குறுக்கிட்டார்

இப்படி ஆபராவுக்கு போக வேண்டும் என்று சொன்னவுடன் நிவேதிதா குதித்து எழுந்தார்;

ஐய்யயோ , அங்கெல்லாம் சுவாமிஜி போகக்கூடாது. எல்லோரும் உங்களைத் திட்டித் தீர்த்துவிடுவார்கள்

ஆச்சர்யக்குறி முகத்தில் உதிக்க சுவாமிஜி சிஸ்ட்டர் நிவேதிதாவை ஒரு பார்வை பார்த்தார் ; பதில் சொல்லாமல் புன்சிரிப்பை மட்டும் உதிர்த்தார்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் லெக்கார்ட் என்பவருடன் ஆப்பரா கச்சேரிக்குப் போனதோடு நில்லாமல் , இடை  வேளையில் நடிகையின் உடை மாற்ற அறைக்கும் சென்றார்; அவளுக்கு வெட்கம் தாங்கவில்லை. கார்மென் என்பவள் கெட்ட பெண் அல்ல. அவள் உண்மையே சொல்கிறாள் .ஆத்மாவின் வெளிப்பாடு; எல்லோருக்கும் அவளுக்காக பிரார்த்தனை செய்த பின்னரும் அவள் சொல்கிறாள்- ஜகன்மாதாவே என் பிரார்த்தனையைக் கேளாதே ; நான் என் ஆசையுடன் இறப்பேனாகுக என்று. அவள் உயர் வம்ஸ பெண்மணி என்று சுவாமிஜி விளக்கினார்

( இதை எழுதும்போது மஹாத்மா காந்தி நிர்வாணமாக  கன்னிப்பெண்கள் இடையே பல இரவுகளில் படுத்து பிரம்மச்சர்ய சோதனை செய்ததும் அதை நேருஜி கிண்டல் செய்ததும் நினைவுக்கு வருகிறது; ஆயினும் காந்திஜியின் அரசியலைச் சாடியவர்களும் கூட, அவரது ஒழுக்கத்தைப்பற்றிக் குறை கூறியதே இல்லை.)

ஆன்மீகத்தின் உச்ச நிலையை எய்தியவர்களுக்கு அழகிகளும் கிழவிகளும் ஒன்றே.

“ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு

அச்சமும் உண்டோடா?—மனமே!

தேன் மடை இங்கு திறந்தது கண்டு

தேக்கித் திரிவமடா!”– பாரதியார்

TO BE CONTINUED…………………………..

TAGS –மூன்று விபசாரிகள் , புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 3

உடல் குறைகளைக் கடந்து வெற்றி பெற்ற ஹெலன் கெல்லர்! – 2 (Post No.13,526)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.526

Date uploaded in London – 9 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஜூலை 10, 2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

உடல் குறைகளைக் கடந்து வெற்றி பெற்ற

ஹெலன் கெல்லர்! – 2

ச. நாகராஜன்

உயரிய விருதும் மறைவும்

அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்ஸன் 1964, செப்டம்பர் 14ஆம் தேதியன்று அவருக்கு ‘ப்ரெஸிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்; (Presidential Medal of Freedom)  என்ற அமெரிக்காவின் உயரிய சிவிலியன் ஹானர் விருதை அளித்தார்.

ஹெலனின் குடும்பம்

ஹார்வர்ட் பயிற்றுவிப்பாளரான ஜான் மேஸி என்பவரை 1905-ம் ஆண்டு ஹெலன் மணந்தார்.

1936-ல் வருந்தத்தக்க ஒரு சம்பவமாக அவருக்கு கல்வி கற்பித்த ஆசிரியையான அன்னி சல்லிவன்  மறைந்தார்.

ஹெலன் தனது ஆசிரியையான ஆன்னி சல்லிவனைச் சந்தித்ததைப் பற்றி உளமார தனது சரிதையில் குறிப்பிடுகிறார் இப்படி: “எனது வாழ்க்கையில் மிகக் குறிப்பிடத்தகுந்த ஒரு நாள் நான் எனது ஆசிரியையான ஆன்னி மேன்ஸ்ஃபீல்ட் சல்லிவன் என்னிடம் வந்த நாள் தான். “ 

ஆன்னி சல்லிவனின் பரிவும் ஹெலனின் விடாமுயற்சியுமே அவரது வெற்றிக்குக் காரணம்.

ஹெலன் கெல்லரைப் பற்றிய படங்கள்

ஹெலனைப் பற்றி ‘டெலிவரன்ஸ்’ என்ற ஒரு படம் அவரது வாழ்கை வரலாற்றைச் சித்தரித்து 1919-ல் எடுக்கப்பட்டது.1959-ல் அவரைப் பற்றி ‘தி மிராகிள் வொர்கர்’ என்ற நாடகம் அரங்கேறியது. 1960-ல் இது புலிட்ஸர் விருதைப் பெற்றது. இதுவே அன்னி சல்லிவனை மையமாகக் கொண்ட திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

மறைவு

1968-ம் ஆண்டு ஜூன் முதல் தேதி தனது 87-ம் வயதில் கனெக்டிகட்டில் ஈஸ்டனில் அவர் மறைந்தார். வாஷிங்டனில் உள்ள செயின்ட் ஜோஸப் சப்பலில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

“உலகில் சில மனிதர்களே இறக்காமல் இருக்கப் பிறக்கிறார்கள். அவர்களுள் ஹெலன்கெல்லரும் ஒருவர்” என்று அமெரிக்க செனேடர் லிஸ்டர் ஹில் அவரைப் போற்றிப் புகழாரம் சூட்டினார்.

கண்பார்வையற்றோரின் சாதனைகள்

ஹிந்து மகான்களில் சூர்தாஸ் கண்பார்வை இல்லாமலிருந்தும் கிருஷ்ண தரிசனத்தைப் பெற்ற வரலாற்றை நமது அறநூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள பூதூரில் பிறந்த அந்தகக்கவி வீரராகவ முதலியார் பிறவியிலேயே கண்ணொளியை இழந்தவர். அற்புதமான தமிழ்ப் பாடல்களை இயற்றிய இவர் இலங்கை சென்று பரராஜசேகர மன்னனைப் பாடி ஒரு யானை, பொற்பந்தம், ஒரு ஊர் ஆகியவற்றைப் பரிசிலாகப் பெற்று வந்தார். பிறர் மனதில் இருப்பதை அறிந்து அதற்குத் தக பாடல் பாடும் திறமையான கண்ட சுத்தியில் இவர் வல்லவர். இலங்கை மன்னன் நினைத்த சந்தேகத்திற்கு இவர் தக்க விடையைப் பாடலில் அளித்து அவரை பிரமிக்க வைத்தார்.

கண் பார்வையற்றோருக்காக ப்ரெய்லி எழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர் கண்பார்வையற்ற லூயிஸ் ப்ரெய்லி (பிறப்பு 4-1-1809 மறைவு 6-1-1852)

பிரபல ஆங்கில கவிஞரான ‘பாரடைஸ் லாஸ்டைப்’ படைத்த ஜான் மில்டன் கண் பார்வையற்றவரே. 1667-ல் இவர் படைத்த இந்த நூல் உலகப் புகழைப் பெற்றது.

1907-ம் ஆண்டு அமெரிக்காவில் ஓக்லஹாமாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு செனேட்டரான தாமஸ் கோர் கண் பார்வையை இழந்தவர் தான்.

ஆண்ட்ரியா பொசெல்லி, நார்மன் ஜெஃப்ரி, கேஸி ஹாரிஸ், ரே சார்லஸ் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற பாடகர்கள் கண்பார்வையற்றவர்களே.

மவுண்ட் எவரெஸ்டின் மீது 25-5-2001இல் ஏறிய முதல் கண்பார்வையற்ற வீரர் என்ற புகழைப் பெற்றவர் எரிக் வெய்ஹென்மேயர்

உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞரான பீத்தோவனுக்கும், விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிஸனுக்கும் காது  கேட்காது.

உலகெங்கும் இது போன்ற உதாரணங்களைப் பரக்கக் காணலாம்.

கண்பார்வையற்றிருந்தாலும், காது கேட்காமலிருந்தாலும் சாதனைகள் புரிந்த பலரால் ஹெலன் உத்வேகம் ஊட்டப்பட்டார்.

அதே போல அவராலும் ஏராளமானோர் உத்வேகமூட்டப்பட்டனர்.

பொன்மொழிகள்

ஹெலன் கெல்லரது பொன்மொழிகளில் சில:

எனது வாழ்க்கை மிக சந்தோஷகரமான ஒரு வாழ்க்கை. ஏனெனில் எனக்கு அற்புதமான நண்பர்கள் இருந்தனர். செய்யவேண்டிய நல்ல விஷயங்கள் ஏராளம் இருந்தன. எனது குறைகளைப் பற்றி நான் நினைப்பதே இல்லை. அந்தக் குறைகள் என்னை ஒரு போதும் வருத்தமுறச் செய்ததும் இல்லை. ஒருவேளை ஒரு ஏக்கம் சில சமயம் இருந்திருக்கலாம், ஆனால் அது கூட மலர்க்கூட்டத்தின் இடையே புகுந்து செல்லும் தென்றலைப் போலத்தான் என்று சொல்லலாம். காற்று கடந்து செல்கிறது. மலர்கள் திருப்தியுடன் இருக்கின்றன.

உலகில் மிக பிரமாதமான அழகிய விஷயங்களைப் பார்க்கவோ தொடவோ முடியாது. அவற்றை இதயத்தால் அனுபவித்து உணர மட்டுமே முடியும்.

உங்கள் முகத்தை பிரகாசத்தின் பக்கம் திருப்புங்கள், நிழலை நீங்கள் பார்க்க முடியாது.  

சாதனைக்கு வழி தைரியம் என்ற தன்னம்பிக்கை தான்.

தன்னம்பிக்கையும் மன உறுதியும் இன்றி எந்த ஒன்றையும் செய்ய முடியாது.

ஜூன் 27 : ஹெலன் கெல்லர் தினம்

எவ்வளவு மோசமான சூழ்நிலையில் ஒருவர் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி வெற்றி காண முடியும் என்பதை மனித சரித்திரத்திற்கு உணர்த்தியவருள் முக்கியமான இடத்தைப் பெறுபவர் ஹெலன் கெல்லர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27 ஹெலன் கெல்லர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அபாரமான சாதனை புரிந்த ஹெலன் கெல்லரை நினைவு கூரும் நாள் மட்டுமல்ல இது; துரதிர்ஷ்டவசமாக உடல் ஊனம் கொண்டோரை அவமதிக்காமல், ஒதுக்காமல் அவர்களை சமுதாயத்துடன் இணைக்க நம்மால் ஆன உதவியைச் செய்ய உறுதி பூண வேண்டிய நாளும் கூட இது தான்!

**

Sankara and the Most Famous Sangam Tamil Poet; Research Notes on- VC 35 (Post No.13,525)


 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,525

Date uploaded in London – 8 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

All the Dravidian illiterates around the world repeat one line like a parrot, without understanding the following  philosophical poem in full.. It is as follows

The oft quoted Sangam Tamil verse from Purananuru (192) goes like this:

“Every town our home town; everyman a kinsman.

Good and evil do not come

From others

Pain and relief of pain

Come of themselves

Dying is nothing new.

We do not rejoice

That life is sweet

Nor in anger

Call it bitter

Our lives, however dear,

Follow their own course,

Rafts drifting

In the rapids of a great river

Sounding and dashing over the rocks

After a downpour

From skies slashed by lightning’s

We know this

From the vision

Of men who see

So,

We are not amazed by the great

And we do not scorn the little”

-Kaniyan punkundran (Pura Nanuru, verse 192)

*****

Original poem in Tamil is as follows

யாதும் ஊரேயாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;

சாதலும் புதுவதன்றேவாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமேமுனிவின்

இன்னாது என்றலும் இலமே; ’மின்னொடு

வானம் தண் துளி தலைஇஆனாது

கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று

நீர் வழிப்படூஉம்’ புணை போல் ஆர் உயிர்

முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின்மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

—-புறம்.192, கனியன் பூங்குன்றன் (பொருண்மொழிக் காஞ்சித் துறை)

****

Drifting Wood

Sankara said the same in Viveka Chudamani (VC)

स्त्रोतसा नीयते दारु यथा निम्नोन्नतस्थलम् ।
दैवेन नीयते देहो यथाकालोपभुक्तिषु ॥ ५५0 ॥

strotasā nīyate dāru yathā nimnonnatasthalam |
daivena nīyate deho yathākālopabhuktiṣu || 550 ||

550. As a piece of wood is drifted on to a high or low ground by the current, so is his body carried on by the momentum of past actions to the varied experience of their fruits, as these present themselves in due course.

****

 Fallen Leaf

यत्र क्वापि विशीर्णं सत्पर्णमिव तरोर्वपुः पततात् ।
ब्रह्मीभूतस्य यतेः प्रागेव तच्चिदग्निना दग्धम् ॥ ५५६ ॥

yatra kvāpi viśīrṇaṃ satparṇamiva tarorvapuḥ patatāt |
brahmībhūtasya yateḥ prāgeva taccidagninā dagdham || 556 ||

556. Let the body of the Sannyasin who has realised his identity with Brahman, wither and fall anywhere like the leaf of a tree, (it is of little consequence to him, for) it has already been burnt by the fire of knowledge.

कुल्यायामथ नद्यां वा शिवक्षेत्रेऽपि चत्वरे ।
पर्णं पतति चेत्तेन तरोः किं नु शुभाशुभम् ॥ ५५९ ॥

kulyāyāmatha nadyāṃ vā śivakṣetre’pi catvare |
parṇaṃ patati cettena taroḥ kiṃ nu śubhāśubham || 559 ||

559. If a leaf falls in a small stream, or a river, or a place consecrated by Shiva, or in a crossing of roads, of what good or evil effect is that to the tree?

****

Soul is Immortal

अविनाशी वा अरेऽयमात्मेति श्रुतिरात्मनः ।
प्रब्रवीत्यविनाशित्वं विनश्यत्सु विकारिषु ॥ ५६२ ॥

avināśī vā are’yamātmeti śrutirātmanaḥ |
prabravītyavināśitvaṃ vinaśyatsu vikāriṣu || 562 ||

562. The Śruti passage, “Verily is this Ātman immortal, my dear”, mentions the immortality of the Ātman in the midst of things perishable and subject to modification.

Notes:

[Sruti—Brihadáranyaka IV. v. 14; “Verily is

this Atman immortal, my dear, indestructible by Its very nature”]

****

Broken Pot- Space merging with Space

घटे नष्टे यथा व्योम व्योमैव भवति स्फुटम् ।
तथैवोपाधिविलये ब्रह्मैव ब्रह्मवित्स्वयम् ॥ ५६५ ॥

ghaṭe naṣṭe yathā vyoma vyomaiva bhavati sphuṭam |
tathaivopādhivilaye brahmaiva brahmavitsvayam || 565 ||

565. As, when a jar is broken, the space enclosed by it becomes palpably the limitless space, so when the apparent limitations are destroyed, the knower of Brahman verily becomes Brahman Itself.

****

Milk Mixes with Milk

क्षीरं क्षीरे यथा क्षिप्तं तैलं तैले जलं जले ।
संयुक्तमेकतां याति तथात्मन्यात्मविन्मुनिः ॥ ५६६ ॥

kṣīraṃ kṣīre yathā kṣiptaṃ tailaṃ taile jalaṃ jale |
saṃyuktamekatāṃ yāti tathātmanyātmavinmuniḥ || 566 ||

566. As milk poured into milk, oil into oil, and water into water, becomes united and one with it, so the sage who has realised the Ātman becomes one in the Ātman.

****

HE BECOMES SIVA

लक्ष्यालक्ष्यगतिं त्यक्त्वा यस्तिष्ठेत्केवलात्मना ।
शिव एव स्वयं साक्षादयं ब्रह्मविदुत्तमः ॥ ५५३ ॥

lakṣyālakṣyagatiṃ tyaktvā yastiṣṭhetkevalātmanā |
śiva eva svayaṃ sākṣādayaṃ brahmaviduttamaḥ || 553 ||

553. He who, giving up all such considerations as – this is a fit object of meditation and this is not – lives as the absolute Ātman, is verily Śiva himself, and he is the best among Knowers of Brahman. 

****

Infinite Bliss

सदात्मनि ब्रह्मणि तिष्ठतो मुनेः
पूर्णाद्वयानन्दमयात्मना सदा ।
न देशकालाद्युचितप्रतीक्षा
त्वङ्मांसविट्पिण्डविसर्जनाय ॥ ५५७ ॥

sadātmani brahmaṇi tiṣṭhato muneḥ
pūrṇādvayānandamayātmanā sadā |
na deśakālādyucitapratīkṣā
tvaṅmāṃsaviṭpiṇḍavisarjanāya || 557 ||

557. The sage who always lives in the Reality – Brahman – as Infinite Bliss, the One without a second, does not depend upon the customary considerations of place, time, etc., for giving up this mass of skin, flesh and filth.

****

Following comparisons will prove my point.

1.Every town our home town; Everyman a kinsman.

யாதும் ஊரேயாவரும் கேளிர்;

‘Earth is my mother; I am her son’, says Veda.

‘God is one; we are his children

World is a happy lake – says the Veda’ (Bharathyar song)

ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்

உலகின்பக் கேணிஎன்றே

நன்று பல்வேதம் வரைந்தகை பாரத

 நாயகிதன் திருக்கை- பாரதியார்

****

2.Dying is nothing new.

We do not rejoice

That life is sweet

Nor in anger

Call it bitter

சாதலும் புதுவதன்றேவாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமேமுனிவின்

இன்னாது என்றலும் இலமே; ’மின்னொடு

Bhagavad Gita says (2-27)

जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च |
तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि ||2- 27||

jātasya hi dhruvo mityur dhruva janma mitasya cha
tasm
ād aparihārye ’rthe na tva śhochitum arhasi

For to the one that is born death is certain and certain is birth for the one that has died. Therefore for what is unavoidable, you should not grieve.-Bhagavad Gita 2-27

****

Buddha said the same with a story

Gautama the Buddha consoled the mother who lost her only son while yet a child by asking her to go into the town and bring him  little mustard seeds from any house where no man has yet died. She went and found that there was no family where death had not entered. She discovered that it is the law of all things that they will pass away.

The Buddhist nun Patacara is represented as consoling many bereaved mothers in the following words:

“Weep not, for such is here the life of man

Unasked he came, unbidden went he hence

Lo! Ask thyself again whence came thy son

To bide on earth this little breathing space

By one way come and by another gone…..

So hither and so hence— why should ye weep?”

— Psalms of Sisters (E.T. by Mrs Rhys Davids (1909) quoted by Dr S Radhakrishnan in his Bhagavad Gita commentary.

Garuda Purana says,

Sukhasya dukkhasya na kopi data

Paro dadatiti kubhuddir esa

Swayam krtam svena phalena yujyate

Sarira he nistara yat tvatya krtam

“No one gives joy or sorrow. That others give this is an erroneous conception. our own deeds bring to us their fruits. Body of mine, repay what you have done.”

Compare it with Tamil Lines

3.Good and evil do not come

From others

Pain and relief of pain

Come of themselves

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;

*****

4.Rafts drifting

In the rapids of a great river

Sounding and dashing over the rocks

After a downpour

From skies slashed by lightning’s

We know this

From the vision

Of men who see

மின்னொடு

வானம் தண் துளி தலைஇஆனாது

கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று

நீர் வழிப்படூஉம்’ புணை போல் ஆர் உயிர்

முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம்

Adi Shankara in his Viveka Cudamani (verse 550) says,

As a piece of wood is borne by the current to a high or low ground, so is his body carried on by the momentum of past actions to the varied experience of their fruits, as these present themselves in due course.

****

5.We are not amazed by the great

And we do not Scorn the little

ஆகலின்மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

Lord Krishna in Bhagavad Gita says,

विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि |
शुनि चैव श्वपाके  पण्डितासमदर्शिन|| 18||

vidyā-vinaya-sampanne brāhmaṇe gavi hastini
śhuni chaiva śhva-pāke cha paṇḍitāḥ sama-darśhinaḥ

Sages see with an equal eye, a learned and humble Brahmin, a cow, an elephant or even a dog or an outcaste.(5-18)

xxx

Sri Ramakrishna Paramahamsa also  deals with it by giving many similes. I will give them separately.

—subham—

Tags- Puranauru, Adi Sankara, Viveka Chudamani, Poem 192, Kanian Punkundran, Bhagavd Gita, Hindu Philosophy, Sankara ,Most Famous,  Sangam Tamil Poet , Research Notes on VC 35

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –27 (Post.13,524)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,524

Date uploaded in London – 8 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

இந்தக் கட்டுரை வரிசையில் முன்னொரு கட்டுரையில் இந்துக்களுக்குத் தெரிந்த பெரிய சிறிய எண்களைக் கண்டோம். உலகமும் மனித இனமும் கி.மு.4000ல்- உருவானது என்று மாக்ஸ்முல்லர் கும்பலும் கால்டு வெல் கும்பலும் நம்பி வந்த காலத்தில் இந்துக் குழந்தைகள் இறைவனை சஹஸ்ரகோடி யுகத்தாரினே  நமஹ என்று தினமும் துதி பாடின.; சூர்யகோடி ஸமப்ரபா என்று பிள்ளையாரைப் புகழ்ந்தன

சஹஸ்ரகோடி= 10,000 மில்லியன் x 4,32,000 ஆண்டுகள்.

கடோபநிஷத்திலும்  எல்லா சம்ஸ்க்ருத தமிழ்ப் பாடல்களிலும் வரும் கீழ்கண்ட மேற்கோளை நாம்  அறிவோம்:

அணோரணீ யான் மஹதோ மஹீயான்

அதர்மஸ்ய ஐந்தோர் நிஹித குஹாயாம்

தம் அக்ரது பஸ்யதி வித சோகோ

தாது பிரசதான் மஹிமானாம் ஆத்மநஹ

இறைவன் அணுவுக்கும் சிறியவன் பெரிய பொருளுக்கும் மேல் பெரியவன் .

1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மாணிக்க வாசக சுவாமிகளும் கோடிக்கணக்கில் நட்சத்திர மண்டலங்கள் இருப்பதை பாடியுள்ளார் . அதை நமது காலத்தில் பாரதியாரும் எளிய தமிழில் நமக்குப் பாடித்தந்தார்

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பரும் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன– திருவாசகம்

கோமதி மகிமை

நக்க பிரானருளால் — இங்கு

   நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்;

தொக்கன அண்டங்கள் — வளர்

   தொகைபல கோடிபல் கோடிகளாம்!

இக்கணக் கெவரறிவார்புவி

   எத்தனை யுளதென்ப தியார றிவார்?

நக்க பிரானறிவான்; — மற்று

    நானறி யேன்பிற நர றியார்;

தொக்க பேரண்டங்கள் — கொண்ட

     தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற

தக்கபல் சாத்திரங்கள்; — ஒளி

    தருகின்ற வானமொர் கடல்போலாம்;

அக்கட லதனுக்கே — எங்கும்

     அக்கரை இக்கரை யொன்றில்லையாம்

இக்கட லதனகத்தே — அங்கங்


     கிடையிடை தோன்றும்புன் குமிழிகள்போல்

தொக்கன உலகங்கள்; — திசைத்

     தூவெளி யதனிடை விரைந்தோடும்;

மிக்கதொர் வியப்புடைத்தாம் — இந்த

    வியன்பெரு வையத்தின் காட்சி கண்டீர்;

மெய்க்கலை முனிவர்களே! — இதன்

மெய்ப்பொருள் பரசிவன் சக்தி, — கண்டீர்.

எல்லையுண்டோ இலையோ – இங்கு

   யாவர் கண்டார்திசை வெளியினுக்கே?

சொல்லுமோர் வரம்பிட்டால் – அதை

பாரதியார் இயற்றிய முடிவு பெறாத பாடல்

XXXX

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

 XXXX

இறைவனையும் மாணிக்கவாசகர்

 “முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியதாய்” என்று போற்றினார் .

xxxx

விஷ்ணு ச ஹஸ்ரநாமத்தில் (வி.ச ) அணு வரும் இடம்

அணுஹு — நாம எண் 835- –

மிகவும் சூட்சுமமாய் இருப்பவர் .

ஏஷோ ணு ராத்மா சேதஸா வேதி தவ்யஹ – முண்டகோபநிஷத் 3-1-9

மிகச் சிறியதான இருதய ஆகாசத்தில் அடங்கியவர் .

XXXX

இதற்கு அடுத்தநாமம் ப்ருஹத் – 836-

அதற்கு உரை எழுதிய சங்கரர் அணோரணீயான் — கடோபநிஷத் 2-20 வாக்கியங்களையே மேற்கோள் காட்டுகிறார்.

கீதையிலும் (11-20) வானுக்கும் மண்ணுக்கும் இடையிலுள்ள இந்தப் பெருவெளி எல்லாம்  ஒருவனாகிய உன்னாலேயே  நிறைந்திருக்கிறது – என்ற வரிகள் உள்ளன.

XXXX

சூக்ஷ்ம ஹ — நாம எண் 457-

மிகவும் சூட்சுமமாக இருப்பவர் -நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே  என்று திருவாசத்தில் மாணிக்கவாசக சுவாமிகளும் பாடுகிறார்

ஸர்வ கதம் ஸ ஸூக்ஷ்மம் – முண்டகோபநிஷத் 1-1-6.

இன்னும் ஒரு உரையில் வரும் விளக்கம்,

தியானத்தினால் மட்டும்  புலப்படக்கூடிய நுண்ணிய ஸ்வரூபம் உடையவர்

காண்பதற்கரியதும் அனைத்திலும் ஊடுருவி  உள்ளுறையும் மறைபொருளும் புத்தி குகையில் நிலை பெற்றதும் உடல்தோறும் வியாபித்து நிற்பதும்பழமையான பொருளும் ஆகிய அந்த திவ்ய தேஜோ மயத்தை அத்தியாத்ம யோகத்தால் உணர்ந்து  தீரனானவன் இன்ப துன்பக் கிளர்ச்சிகளை விட்டவன் ஆகின்றான் – கடோபநிஷத் – 2-12

அறிவியல் பாடத்தில் அணு மற்றும் அணுகுண்டு பற்றிப் படித்த மக்களுக்கு இங்கே ஒரு சந்தேகம் வரும். இப்போது நாம் படிக்கும் அணு என்ற சொல்லுக்குள்ள பொருள் அப்போது இருந்ததா ? அதை அறிந்துதான் அந்தச் சொல்லினை அவர்கள் பயன்படுத்தினார்களா ? ‘ஆமாம்’ என்று சொல்லலாம்

எட்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் அணு வைப் பிளப்பது பற்றிப்பாடுகிறார்.

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர்கள் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் .


“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே”

-திருமந்திரம்`

XXXX

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்

கணு அற நின்ற கலப்பது உணரார்

இணை இலி ஈசன் அவன் எங்கும் ஆகித்

தணிவு அற நின்றான் சராசரம் தானே.

இவ்வளவுக்கும் திருமூலர் அணுசக்தி பற்றி நூல் எழுதாமல்,  போகிற போக்கில் இறைவனின் பெருமை கூறுமிடத்து,  இதைச் சொல்கிறார் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

திருமூலரும் மாணிக்கவாசகரும் சொல்லும் விஷயங்கள் அனைத்தையும்  அவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உபநிஷத் கால ரிஷிகள் சொன்னார்கள் என்பதை சம்ஸ்க்ருதம் அறிந்தோர் மட்டுமே அறிவார்கள்.

இதை எப்படி உறுதிப்படுத்தலாம் ?

அவர்கள் சகட்டு மேனிக்குப் பயன்படுஸ்த்தும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் மூலம் உறுதிப்படுத்தலாம்.

XXXX

ஒளவையார்

55.அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

  குறுகத் தறித்த குறள். திருவள்ளுவமாலை

XXXX

இடைக்காடர்

54.கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

   குறுகத் தறுத்த குறள்.- திருவள்ளுவ மாலை

ஒரு கடுகில் 2,62,144 அணு!

ஒரு பழந்தமிழ்ப் பாட்டு அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது.

அணு = ஒரு தேர்த்துகள்
தேர்த்துகள் =ஒரு பஞ்சிழை
8
பஞ்சிழை = ஒரு மயிர்
மயிர் = ஒரு மணல்
மணல் = ஒரு கடுகு
கடுகு = ஒரு நெல்,
நெல் = ஒரு விரல்
12 
விரல் = ஒரு சாண்
சாண் = ஒரு முழம்
முழம் = ஒரு கோல்
500 
கோல் = ஒரு கூப்பீடு
4
கூப்பீடு = ஒரு காதம்

அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி
மணற்கடுகு நெல் விரலென்றேற-வணுத்தொடங்க
யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி
லச்சாணிரண்டு முழமாம்.”
– 
செந்தமிழ் தொகுதி 12 P127

XXXX

அப்ரமேயஹ – நாம எண் 46-

பிரமாணங்களுக்கு  எட்டாதவர் .

யன் மனசா ந மனுதே கேனோபநிஷத் 15

நம்முடைய அறிவால் அளக்க முடியாதவர்

என் கருத்து

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை பொருத்தமானது. உப்பு பொம்மை ஒன்று கடலில் ஆழத்தை அளக்க வேண்டும் என்று குதித்தது ; அடுத்த சில அடிகள் போவதற்குள் கரைந்து போனது .

விவேகானந்தர்  சொன்ன தவளை கதையும் பொருத்தமானது;

கடல் தவளை  ஒன்று ஒரு நாள் கிணற்றுக்குள் குதித்தது ; கிணற்றுத்தவளைக்கு எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் கடலின் அளவு புரியவில்லை

XXXX

த்வஷ்டா  நாம எண் 52—

உலகத்தை அழிக்கும் காலத்தில் எல்லாவற்றையும் சுருங்கவைப்பவர்; Big Crunch theory  என்னும் விஞ்ஞானக் கொள்கையை நினைவுபடுத்துகிறது .

சம்ஹார காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர் .

தனூ கரணத்தவாத் த்வஷ்டாத்வக்ஷதேஸ் தனூ கரணத்தவார் த்தே

xxxx

மஹாத்யுதிஹி – நாம எண் 176-

மிக்க ஒளி பொருந்தியவர் ;

ஜ்யோதிஷாமபி தஜ் ஜ்யோதிஸ் தமஸஹ பரமுச்யதே- பகவத் கீதை 13-17.

பிருஹத் ஆரண்யக உபநிஷத் 4-5-9சொல்வதாவது,

ஸ்வயம் ஜோதிஹி  = தாமாகவே ஒளிவிடுபவர்

ஜ்யோதிஷாம் ஜ்யோ திஹி = ஒளிகளுக்கெல்லாம் ஒளியானவர்

—- subham—-

Tags- விஷ்ணு ஸஹஸ்ர நா மம் Aஅணு, திருமூலர், ,  பகுதி 26 அணோரணீ யான் மஹதோ மஹீயான்

மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 2 (Post No.13,523)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,523

Date uploaded in London – 8 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 2

ராமகிருஷ்ண பரமஹம்சர் ( மாஸ்டர் அல்லது ரா.கி.) , நாடகக் கொட்டகைகக்கு சென்றுவந்ததை தற்காலத்தில்  எவரும் குறை கூறமாட்டார்கள்;  ஆனால் அப்போதைய வங்காளத்தில் , அவர் 1886-ல் இறந்த பின்னரும்  குறைகூறி வந்தனர்.

ரா.கி. இந்த விஷயத்தில் போதுமான எதிர்ப்பை, அருவருப்பைக் காட்டாதது சரியல்ல என்று பிரம்ம சமாஜத்தினர் குற்றம் சாட்டியதற்கு சுவாமி விவேகானந்தர் பதில் கொடுத்தார் :-

புத்தரும் ஏசுவும்

“இந்த விஷயத்தில் ராமகிருஷ்ணர் மட்டும் தனித்து நிற்கவில்லை. மதங்களை ஸ்தாபித்த பலரும் இதே குற்றச்சாட்டுக்கு இலக்கு ஆனார்கள் அம்பாபாலி என்னும் வேசி, புத்த பெருமானின் பரம கருணைக்கு ஆட்பட்டார். அதே போல ஒரு பொது மகள், ஏசு கிறிஸ்துவின் கருணைக்கு ஆளானார்.

இன்னொரு குற்றச்சாட்டு, ரா.கி அவர்களை வெறுக்கவில்லை என்பதாகும்; கடவுள் காப்பாற்றட்டும்! இப்படிப் பேசுவோரை! குடிகாரனின் நிழல் படும் இடத்தில் கூட நடக்கக்கூடாது என்று அவர்கள் சொல்கிறார்களா ? உலகத்திலுள்ள எல்லா பாவிகளையும் குடிகாரர்கள், திருடர்கள், விபச்சாரிகள் ஆகியோரையும்  மஹாபுருஷர்கள் வெறுத்து எத்தி உதைய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? உள்ளத்தில் உள்ளதைச் சொல்லாமல் மறைத்துப் பேச வேண்டும் என்றுதான் விரும்புகிறார்களா?

அவதார புருஷர்கள், அவர்களுடைய அபார சக்தி மூலம் பாவிகளையும் புனிதர்களாக ஆக்கிவிடுகிறார்கள்.

ஒருநாள் ஏசுகிறிஸ்து, வழிபாட்டுத் தல ததுக்குச் சென்றார் அவர் உபதேசம் செய்கையில் யூதர்களும் பரீசிக்களும் ஒரு விபச்சாரியை அழைத்து வந்து இவர் பிற ஆடவருடன் கூடும் வேசி என்று அறிமுகப்படுத்தினார்கள் நம்முடைய மோசஸ் சொல்லியிருக்கிறார் இத்தகைய வேசிகளைக் கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும் என்று.

ஏசு பெருமானே!  இப்போது நீர் என்ன செய்யப்போகிறீர்? ஏசு மவுனம் சாதித்தார். வேசியை இழுத்து வந்தவர்கள் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டு உபதேசத்துக்கு இடையூறு செய்தனர்.. ஏசு சொன்னார்?

உங்களில் பாவமே செய்யடியாத முதல் ஆள், அந்த வேசியின் மீது முதல் பாறையினை தூக்கி எறியுங்கள். இதைக் கேட்டவுடன் ஒவ்வொருவராக நைசாக நழுவ ஆரம்பித்தனர். ஏசு மட்டுமே அறையில் இருந்தார் அந்தப்பெண்ணிடம் ஏசு கேட்டார் . எங்கே அவர்கள்? உன்னைக் கண்டிக்க எவருமே இல்லையா?

வேசி சொன்னாள் : இல்லை ஐயா!

ஏசு சொன்னார் – நல்லது; உன்னை நான் கண்டிக்க வில்லை. ஆனால் இனிமேல் தவறு செய்யாதே !

வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது ; அன்பினால்தான் அதை வெல்ல முடியும்

விவேகானந்தர் தனது பதிலில் மேலும் சொல்கிறார் :

புத்தரும் விபசாரியும்

புத்தர் வாழ்நாள் முடியப்போகும் காலத்தில் ராஜ கிருகத்திலிருந்து குஷிநகருக்குச் சென்று தங்கினார். அங்கு பிரபல வேசி மகளுக்குச் சொந்தமான மாந்தோட்டத்தில் தங்கினார் அந்த விபச்சாரியின் பெயர் அம்பா பாலி அல்லது ஆம்ர பாலி ; தமிழ் அதன் பொருள் மாந்தோட்டக்காரி .இதைக்கேட்ட அந்த விபசாரி புத்தரைத் தரிசிக்கச் சென்றாள் . எவராக இருந்தாலும் பூஜை செய்யும் காலத்தில், ஆடம்பர வேஷம் போடமாட்டார்கள். அவளும் சாதாரண குடும்பப் பெண்மணி உடையில் சென்று புத்தரை வணங்கினாள் ; அப்படியும் அவள் பேரழகியாக ஜொலித்தாள்.

புத்தர் மனதில் என்ன அலைகள் ஓடின: இந்தப் பெண் உலக வழக்கில் மாட்டிக்கொண்டு திக்குமுக்காடுகிறாள்; ஊரிலுள்ள பணக்காரர்களும், நாட்டின் அரசனும் இவளை மொய்த்து அனுபவிக்கிறார்கள் ; மிக இளம் வயது; அவளுடைய மனம் அமைகியாக இருக்கிறது ஏராளமான சொத்து சுகம் இருந்தபோதிலும் உறுதியான மனமும் சிந்திக்கும் அறிவும் உள்ளது ஒரு குருவின் விவேகம் இருக்கிறது ;புனிதமான எல்லாவற்றிலும் ஆர்வம் காணப்படுகிறது.உண்மையை அறியும் எல்லா தகுதிகளும் இவளிடத்தில் இருக்கிறது.

புத்தர் உத்தேசத்தைக் கேட்கக் கேட்க அந்த வேசிமகளின் முகம் ஒளிவீசத் துவங்கி பிரகாசித்தது.

இறுதியில் புத்தரிடம் அவள் பணிவுடன் சொன்னாள் :

தேவரீர்! நாளைக்கு என் வீட்டில் விருந்து உண்ண , நீங்கள் உங்கள் சீடர்கள் புடை சூழ  எழுந்தருள வேண்டும்.

புத்தரும் மவுன மொழியில் இசைவுதெரிவித்தார்.

இதை அறிந்த பணக்கார மக்கள், எங்கள் வீட்டுக்கு சாப்பிட வாருங்கள் என்று அழைத்தார்கள் புத்தர் சொன்னார் : நாளைக்கு நான் விபசாரி ஆம்ரபாலி வீட்டுக்கு சாப்பிடப்போக இசைவு கொடுத்துவிட்டேன்.  எல்லா பணக்காரர்களும் முனுமுனுத்தனர் . என்று. ஒரு பாவி மகள் நம்மைத் தோற்கடித்து விட்டாளே! 

அடுத்த நாள் காலையில் புத்தர், தனது சீடர்களுடன் அம்பாப்பாலி (மாமர தோட்ட அழகி) வீட்டுக்குச் சென்றார். அழகியும் விபசாரியுமான அம்பா , என்னுடைய பெரிய மாளிகையையும், மாந்தோட்டத்தையும் உங்கள் அமைப்புக்கு நான் தானம் செய்கிறேன் என்றாள் ; புத்தரும் அப்படியே ஆகுக என்று சொல்லி ஏற்றார். அவளுடைய வாழ்க்கை அந்த நொடியிலேயே தலைகீழாக மாறியது; பாவி மகள் புனிதவதி ஆனாள் ; புத்த மதத்தை ஏற்று துறவி ஆனாள் .

ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் – சர்ச் என்பது புனிதர்களின் மியூஸியம் அல்ல  அது பாவிகளின் மருத்துவ மனை.

A church is not a museum for saints. It is a hospital for sinners.’

அன்பும் கருணையும் மன்னிக்கும் சுபாவமும் புனிதர்களிடம் இருக்கிறது; அதை சாதாரண, நாகரிக  மனிதன் தவறாக எடைபோட்டு விடுகிறான்

ராமகிருஷ்ண பரமஹம்சர், நாடகக் கொட்டகைக்குச் சென்று வேசிகள் நடித்த நாடகத்தைப் பார்த்தபோது நடிகர் நடிகை மீது கருணை மழை பொழிந்தார் . கலையினையும் நடிப்பினையும் அவர் புகழ்ந்தார் . அவரது நெருங்கிய நண்பர்கள்,  குருநாதர் செய்வது சரியே என்றனர்.

அடுத்த பகுதியில் ரா.கி. சந்த்தித்த விபசாரி/ நடிகையைக் காண்போம்.

தொடரும் ………………………….

Tags- மூன்று விபசாரிகள் , புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் -2, அம்பாபாலி,

உடல் குறைகளைக் கடந்து வெற்றி பெற்ற ஹெலன் கெல்லர்! – 1 (Post No.13,522)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.522

Date uploaded in London – 8 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜூலை10,, 2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

உடல் குறைகளைக் கடந்து வெற்றி பெற்ற

ஹெலன் கெல்லர்! – 1

ச. நாகராஜன்

உடல் குறையெல்லாம் இருந்தாலும் உலகம் புகழும் அளவு வெற்றி பெற்றதோடு அனைவருக்கும் எடுத்துக்காட்டான ஒரு வாழ்வை வாழ்ந்து காட்டலாம் என்று வாழ்ந்து காட்டிய பெண்மணி யார் தெரியுமா? ஹெலன் கெல்லர் என்ற அபூர்வமான பெண்மணி தான் அவர்.

பிறப்பும் இளமையும்

அமெரிக்காவில் அலபாமாவில் உள்ள ஒரு சிறு நகரான டுஸ்கும்பியாவில் 1880-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி பிறந்தார் ஹெலன் கெல்லர். பிறந்த 19வது மாதத்தில் குழந்தையாக இருந்த போது அவர் கண் பார்வையை இழந்தார். காதால் கேட்கும் செவிப்புலன் சக்தியையும் இழந்தார். அவரால் பேசவும் முடியவில்லை.  புலன்களில் இயக்கம் பற்றிய சிக்கல் ஏராளமாக அவரிடம் இருந்தது.

ஹெலனுடைய தாயார் தன் குழந்தைக்கு உதவி செய்வதற்கான தகுந்த நபரைத் தேட ஆரம்பித்தார். காது கேட்காத குழந்தைகளுக்காக உதவி புரிந்து வந்த அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்லை அவர் நாடினார். பெல் அவரை மசாசூசெட்ஸில் இருந்த பெர்கின்ஸ் ‘ஸ்கூல் ஃபார் தி ப்ளைண்ட்’ என்ற கண்பார்வையற்றோருக்கான பள்ளியை நாடுமாறு ஆலோசனை கூறினார்.

ஹெலனின் தாயார் அந்தப் பள்ளியை நாடினார். பள்ளி ஹெலனுக்கு உதவி புரிய ஆன்னி சல்லிவன் (Annie Sulliven)  என்ற ஒரு இளம் ஆசிரியையை அனுப்பியது. அவரே அந்தப் பள்ளியில் மாணவியாக இருந்தவர் தான். அவரும் பார்வை இழந்த ஒருவர் தான்.

அவர் ஒரு மாதம் ஹெலனுடன் பழகி வந்து, பின்னர் பல பொருள்களின் பெயரைக் கற்றுத் தர ஆரம்பித்தார். பல பொருள்களை ஒவ்வொன்றாக ஹெலன் கையில் வைப்பார். அந்தப் பொருளின் பெயரைத் தன் விரல்களினால் கூறுவார். விரல்கள் மூலம் அந்தப் பொருளின் பெயருக்கான எழுத்தை உணர வைப்பார்.

ஆனால் ஹெலனுக்கோ அவர் என்ன செய்கிறார் என்பதே முதலில் புரியவில்லை. அவரோ குருடு, செவிடு! தனது விரல்களில் ஏதோ ஒரு அசைவு ஏற்படுவதையும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அந்த அசைவு நகர்வதையும் மட்டும் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு நாள் ஹெலனின் கையில் ஆன்னி ஒரு கோப்பையைக் கொடுத்தார். விரல்களில் அசைவு ஏற்பட்டது. அவை CUP என்பதற்கான அசைவுகள்! அடுத்து  அந்தக் கோப்பையில் நீரை ஊற்றினார். இப்போது W A T E R என்பதற்கான எழுத்துக்களுக்கான அசைவுகள் ஏற்பட்டன.

ஹெலனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. முதலில் CUPக்கும் WATERக்கும் வித்தியாசம் தெரியாமல் மாற்றி மாற்றிச் சொன்னார். அவருக்குக் கோபம் கோபமாக வந்தது. 

ஆன்னி விடவில்லை. அவரை பம்ப் ஹவுஸுக்குக் கூட்டிக் கொண்டு சென்றார். அங்கு அவர் நீரை பம்ப் செய்ய கோப்பையை ஹெலன் பிடிக்குமாறு செய்தார். இன்னொரு கையால் WATER என்பதற்கான ஸ்பெல்லிங்கை விரல் அசைவுகள் செய்து காட்டினார். ஹெலன் அசைவற்று நின்றார். அவரது முழுக் கவனமும் அந்த அசைவுகளின் மீது இருந்தது. இப்போது அவருக்குச் சற்று புரிய ஆரம்பித்தது. 

நீர் அவர் கையில் பாய ஆரம்பித்த போது இனம் தெரியாத உணர்வு அவருக்குள் ஏற்பட்டது. அது சாவிலிருந்து மீண்டும் உயிர் பிழைத்தது போல அவருக்கு இருந்தது. (It was as if I had come back to life after being dead – Helen Keller).

இப்படித்தான் ஆரம்பித்தது அவரது படிப்பு!

ஆன்னி தன் பணியில் தன்னை முழுதுமாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு அபூர்வமான ஆசிரியை! அவரால் தான் ஹெலன் கெல்லர் பேச முடிந்தது, எழுதப் படிக்க முடிந்தது. ஏன், பாடவும் கூட முடிந்தது!

பல வருடங்கள் அவரிடம் படித்த பின்னர் ஹெலன் பெர்கின்ஸ் பள்ளிக்குச் சென்றார். ஆங்கிலத்தைத் தவிர ப்ரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, கிரேக்கம். லத்தீன், ப்ரெய்லி ஆகிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.

கடுமையாக உழைத்த பின்னர் 1900ஆம் ஆண்டில் ரெட்க்ளிஃப் கல்லூரிக்குச் செல்ல அவர் தயாரானார். 1904ஆம் ஆண்டில் அவர் பட்டதாரியானார். செவிடாகவும் கண்பார்வையற்றவராகவும் இருந்து பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் அவர் தான்!

1902ஆம் ஆண்டு அந்தக் கல்லூரியில் படிக்கும் போதே அவர், ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப்” (The Story of my life) என்ற தனது சுய சரிதையை எழுதினார். ஜான் ஆல்பர் மேசி (John Albert Macy) என்பவர் அவருக்கு உதவினார். தனது வாழ்நாளில் அவர் 14 புத்தகங்களையும் 475க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதினார்; உரைகளை நிகழ்த்தினார்.

1939-ம் ஆண்டு தொடங்கி 1959-ம் ஆண்டு முடிய ஐந்து கண்டங்களில் உள்ள 39 நாடுகளுக்கு பயணம் செய்து அனைவருக்கும் அவர் உத்வேகம் ஊட்டினார். உலகப் பெண்மணி ஆனார்.

சமுதாயத்தில் உடல் ஊனமுற்றோருக்காக அவர் குரல் கொடுத்தார். அத்துடன் பெண்களின் உரிமைகளுக்காகவும் அவர் பாடுபடலானார். குறிப்பாக அவர்களது ஓட்டுரிமைக்காக அவர் போராடினார். 1920-ல் அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியனை நிறுவிய ஸ்தாபகர்களில் அவரும் ஒருவராக இருந்தார், ஒவ்வொரு மனிதரின் தனி மனித உரிமையை வலியுறுத்தும் சங்கமாக இது அமைந்தது.

இரண்டாம் உலகப்போரில் காயமடைந்த ராணுவ வீரர்கள் இருந்த மருத்துவமனைகளுக்குச் சென்று அவர்களுக்கு ஹெலன் ஆறுதல் கூறினார்.

அமெரிக்காவில் உள்ள கண் பார்வையற்றோருக்காக ஒரு நிறுவனம் தனியாக அமைந்தது. அதற்கென 20 லட்சம் டாலர் நிதியை அவர் திரட்டி உதவினார்.

 to be continued……………………………………………………….

Tamil Saint Tirumular is not a Siddha! He salutes Adi Sankara!! (Post No.13,521)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,521

Date uploaded in London – 7 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

My Research Notes on VC- Part 34

2998. பலவுடன் சென்றஅப் பார்முழு தீசன்

செலவறி வாரில்லை சேயன் அணியன்

அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி

பலவில தாய்நிற்கும் பான்மைவல் லானே.–Tirumular

(English Translation is at the end)

Tirumular’s indebtedness to Sankara is revealed in the above stanza)

According to Tamil tradition, there are 18 siddhas and Tirumular is one of them. But he is a misfit in the list. He followed Adi Sankara and repeated all the important points from Viveka Chudamani, which is a guide for Advaita followers.

Sankara was the greatest philosopher India has ever produced, and he was the greatest advocate of Advaita/ Monism. Scholars place him between First Century BCE and Eighth Century CE. It is because of two amazingly similar saints Aadi Sankara and Abhi Nava Sankara (Again A New Sankara is the meaning).

(Pronunciation guide:

Tiru moolar, Viveka choodaamani; Aadi Sankara; Siddha- who attained miraculous powers to do Eight Incredible Tasks)

Tirumular repeats Tat tvam asi, Aham Brahmaasmi in several poems. And at the end mentioned Adi Sanara’s name .

My view is that he was a compiler like Veda Vyasa. He has mentioned all Mantra and Tantras, in addition to Pasu Pati, Paasam of Saiva Siddhanta. He is an iconoclast like some siddhas. Tirumular mentioned Omkaaram/Pranava mantra in more than 300 stanzas. He praised Gayatri Mantra.

He used Adi Sankara’s famous similes to illustrate Maayaa (illusion, spiritual ignorance, nescience)

Following are the Sankara’s similes used by Tirumular:

Rope- Snake

Pot- Same clay used to make different shaped vessels

Pot – When broken the sky(space) in it merges with the sky.

Pots- Reflections of hundreds of Suns in them is only illusion

Dream- Sleep

Clouds- Sky

Mirror – Dirt

Six Religions- Six Sects in Hinduism

Aum or Om, Tat Vam Asi, Aham Brahmaasmi (Mahaa Vaakyaas from the great Upanishads are used by Tirumular like Sankara.

Sword of Wisdom, Knot of Ignorance, Snapping the Cycle of Birth and Death, Crossing the ocean of Birth and Death are found in both.

The word Sankara itself is used by Tirumular in many places.

Tirumular explained Many Types of Chakras to be worshipped which we find in Sankara’s Saundarya Lahari

Upanishad’s description of Brahman/God as one who is Near and Far, Smaller than Atom, Bigger than the Biggest are used by both.

Tirumular praise Vedas, Agamas and Brahmins. He praised temple worship unlike iconoclastic siddhas.

Both Sankara and Tirumular entered another one’s body, which is one of the Eight Types Incredible Powers. Even NASA scientists could not understand or achieve those powers until this day. Only few in India did that. The reason being,  for the saints it is only a child’s play. They went beyond it and drowned themselves the sea of Bliss.

When we compare other 17 Siddhas in the list, they look like mosquitoes in front of mighty Tirumular. Saiva Siddhanta followers deliberately twisted many of his stanzas/pomes to fit him into their frame. Those who compare the English translations of those pieces and those who write only simple meaning conveyed in them, expose the Saiva Siddhanta commentators.

To clear anyone’s doubt he praised Adi Sankara in the last chapter. It is actually a ‘Thank You Sankar Ji’ stanza!

xxxx

Here are the supporting proofs for my conclusion:

(in the previous articles compared rope/snake, clay/pot etc)

2998. பலவுடன் சென்றஅப் பார்முழு தீசன்

செலவறி வாரில்லை சேயன் அணியன்

அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி

பலவில தாய்நிற்கும் பான்மைவல் லானே.

xxxx

Aham Brahmasmi ( Iam God/Brahman)

மலமில்லை மாசில்லை மானாபி மானம்

குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை

நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே

பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே. 

The Realized Souls Have No Possessions

Mala none; impurity none; pride and prejudice none;

Family none, excellences none; affluence none;

For them who in wisdom

Plant themselves in Nandi

-Firm in His love.

(VC has the Gunas of realized souls in Slokas 538-546)

xxxx

ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்

கழிந்தேன் கடவுளும் நானும்ஒன்றானேன்

அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்

செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே. 2

2958: Become God

Ended the birth; sundered the bonds;

God and I one became; ((Aham Brahma Asmi))

No more for me the way of rebirth;

I have met Siva the Auspicious.

xxxx

Tat Tvam Asi ( You are That)

தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே

அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு

அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து

உந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே. 

Tvam-Tat-Asi Becomes Tat-Tvam-Asi

Attain the State of Tvam-Tat-Asi

Through coursing breath (in Yogic Way)

Consider it as the Tenth State of (Turiya) experience;

Endless is that Experience;

Alter that expression so

That Siva (Tat) stands first

(That is Tat-Tvam-Asi, or Tatvamasi)

 வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து

உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை

மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து

அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே. 4

2491 As Tatvamasi, Practise Yoga

Thus altering the expression

Into Tatvamasi with Siva (Tat) first

Fix your thought on bliss of Svarupa;

And gently hold to your heart

The Pranava mantra (that is “Aum”);

When Jiva thus practises Yoga

He realizes Truth

And stands, in Grace accepted.

xxxx

Suns Reflection in Pots of Water.

घटं जलं तद्गतमर्कबिम्बं
विहाय सर्वं विनिरीक्ष्यतेऽर्कः ।
तटस्थ एतत्त्रितयावभासकः
स्वयंप्रकाशो विदुषा यथा तथा ॥ २१९ ॥

ghaṭaṃ jalaṃ tadgatamarkabimbaṃ
vihāya sarvaṃ vinirīkṣyate’rkaḥ |
taṭastha etattritayāvabhāsakaḥ
svayaṃprakāśo viduṣā yathā tathā || 219 ||

219. Just as the wise man leaves aside the jar, the water and the reflection of the sun in it, and sees the self-luminous sun which illumines these three and is independent of them; 

Notes:

[Independent &c—these being merely its reflections, which serve to suggest the real sun.]

And Tirumular says ,

கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்

அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்

விடம் கொண்ட கண்டனும் மேவிய காயத்து

அடங்கிட நின்றதும் அப் பரிசு ஆமே.1965

2002 Sivaditya is Immanent and Transcendent

In pot to pot the sun appears,

Well may you the pots close,

Yet in them you contain him not;

So, too, when Lord that poison swallowed

This body enters,

There can you contain Him not

He pervades all.

xxxx

3043: He is One and Many

The Lord is with creation all

None know His coming and going,

He is distant, He is near; (Upanishads repeat it)

He is constant, He is Sankara,

He is the Adi/ Primal Being;

Multiple He is, One He is,

He Our Primal Lord.

xxxxx

At least two scholars agree with me.

The Saiva Siddhanta Church is of the original Saiva Siddhanta expounded by Saint Tirumular, associated with South India. Of the six sub-sects, it is the oldest and closest to the Advaita found in the Upanishads and Agamas.- Dr B Natarajan who translated Tirumanthiram into English

The Vedanta Tirumular knew was the direct teachings of the Upanishads. If there is one thing the Upanishads are categorical in declaring it is Advaita, “Tat Tvam Asi-Thou art That,” “Aham Bramasmi-I am Brahman.” And when Saint Tirumular says that Siddhanta is based on Vedanta he is using Vedanta to refer to this Advaita, which according to him must be the basis of Siddhanta. This is perhaps one of the most important essentials of Tirumular’s Siddhanta to be brought forward into the Siddhanta of today, for it did, in fact, stray from the Rishi’s postulations.

That is why we occasionally use the term “Advaita Saiva Siddhanta.” It conveys our belief in the Siddhanta which has as its ultimate objective the Vedanta. It sets us apart from the Dvaita Saiva Siddhanta school of interpretation begun by Meykanda Devar which sees God and the soul as eternally separate, never completely unified. It is not unusual to find two schools, similar in most ways, yet differing on matters of theology. In fact, this has been true throughout history. It has its source in the approach to God.

On the one hand you have the rishi, the yogi, the sage or siddhar who is immersed in his sadhana, deep into yoga which brings forth direct experience. His conclusions will always tend toward Advaita, toward a fully non-dual perception. It isn’t even a belief. It is the philosophical aftermath of experience. Most Sat Gurus and those who follow the monastic path will hold firmly to the precepts of Advaita Saiva Siddhanta.—Satguru Sivaya Subramuniyaswami; translated Tirumanthiram into English.

—subham—

Tags- Tirumular, not a siddha, Advaita, mentioned, Adi Sankara, similes ,

மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்-Part 1 (Post.13,520)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,520

Date uploaded in London – 7 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்-Part1

 வங்காளி நாடகத்திற்குப் புனிதத்தையும் புத்துயிரையும் ஊட்டியவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் . அவர் கல்கத்தாவில் பல நாடகங்களுக்குச் சென்றதை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வங்காளிப் பத்திரிகைகள் கண்டித்தன; குறைகூறின. பரமஹம்சரின் நெருங்கிய பக்த்ர்களும் விலகிச் சென்றனர் . இது பற்றி ஒரு அருமையான கட்டுரையை அமெரிக்காவிலுள்ள ராமகிருஷ்ண மிஷனின் சுவாமிகள் Swami Chetanananda Minister-in-Charge of the Vedanta Society of St. Louis. 2008ம்- ஆண்டில் பிரபுத்த பாரத பத்திரிக்கைக்கு எழுதிய ஆங்கில கட்டுரையின் சுருக்கத்த்தை தமிழில் தருகிறேன் .

ஞானிகளின் ஞானத் தீ பாவாத்மாக்களின் பாவங்களை சுட்டுப்  பொசுக்கிவிடும் ; அந்தப் பாவிகள்  புடமிட்ட பொன் போல பிரகாசித்து வெளியே வந்துவிடுவார்கள் ஞானமே உருவானவர்கள், பாரதி போல கருணை உள்ளம் படைத்தவர்கள் ஆகையால் பண்டிதாஹா சமதரசினாஹ என்ற கிருஷ்ண பரமாத்மாவின் வாக்கிற்கிணங்க அவர்கள் எல்லார்க்கும் பொதுவானவர்கள்

வள்ளலார் பாடுகிறார்…..

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே

என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. –திரு அருட்பா

xxxxx

பகவத்  கீதை 5 -18

विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि।

शुनि चैव श्वपाके च पण्डिताः समदर्शिनः॥१८॥

வித்³யாவிநயஸம்பந்நே ப்³ராஹ்மணே க³வி ஹஸ்திநி|

ஸு²நி சைவ ஸ்²வபாகே ச பண்டி³தா: ஸமத³ர்ஸி²ந: ||5-18||

கல்வியும் பணிவுமுள்ள பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலையனிடத்தும், பண்டிதர்கள் / அறிஞர்கள்  சமமான  பார்வையுடையோர்.ஆவர் — பகவத்  கீதை 5 -18

xxxxx

பாரதி பாடுகிறார்…..

பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!

பகைவனுக் கருள்வாய்!

௧)

புகை நடுவினில் தீயிருப்பதைப்

பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே!

பூமியிற் கண்டோ மே.

பகை நடுவினில் அன்புரு வானநம்

பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!

பரமன் வாழ்கின்றான். (பகைவ)

௨)

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்

செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே!

குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்

கொடி வளராதோ?-நன்னெஞ்சே! (பகைவ)

௩)

உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்

உள்ளம் நிறைவாமோ,-நன்னெஞ்சே!

தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்

சேர்த்தபின் தேனோமோ?நன்னெஞ்சே! (பகைவ)

௪)

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது

வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!

தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற

சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே! (பகைவ)

௫)

போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்

போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!

நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு

நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே! (பகைவ)

௬)

தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு

சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!

அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்

அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே! (பகைவ)

xxxx

இனி  சுவாமிகளின் கட்டுரையைக் காண்போம்

Sri Ramakrishna: Patron Saint of the Bengali Stage

By Swami Chetanananda

Swami Chetanananda is the Minister-in-Charge of the Vedanta Society of St. Louis. He has written, edited, and translated many important books on Ramakrishna, Vivekananda, and Vedanta. This article was first published in the April, 2008 issue of Prabuddha Bharata.

வங்காளி மொழியில் நாடகங்களை இயற்றியும் மேடை ஏற்றியும் புகழ்பெற்றவர் கிரிஷ் சந்திர கோஷ் Girishchandra Ghosh, அவர்  ஸ்ரீ ராமகிருஷ்ண (ரா.கி.ப) பரமஹம்சரின் சீடர் அவரைப்  பல நாடகங்களுக்கு அழைத்த்துச் சென்றதன் மூலம் வங்காளி நாடகத்தின் புரவலராக patron (ரா.கி.ப) வைக் கருதினார்கள்.அவருடைய உபதேசங்களை கிரிஷ் சந்திரர் கல்கத்தாவின் சிவப்பு விளக்கு (வேசிகள் பேட்டை) பகுதிகளில் பரப்பினார்.

பிரபல ஆன்மீக எழுத்தாளர் Christopher Isherwood  கிறிஸ்தோபர் இஷர்வுட் இதுபற்றிச் சொல்கிறார் :

அந்தக் காலத்தில் வங்காளி நாடகங்களில் நடித்த பெண்களை வேசிகள் என்று கருதினார்கள் இங்கிலாந்திலும் அப்படித்தான்; 19 ஆம் நூற்றா ண்டுவரை இந்தக் கருத்து நிலவியது

கிரிஷ் பற்றியும் அவர் சொல்கிறார்,

கிரிஷ் ராமகிருஷ்ணர் தொடர்பினால் இன்று கல்கத்தா நாடகத் திரையரங்குகளில்   திரைக்குப் பின்னர் ரா.கி. படம் தொங்குகிறது . அவரை வணங்கிவிட்டே நடிகர் நடிகையர் மேடைக்கு வருகிறார்கள் . இந்த வினோதம் இப்போது நடக்கிறது. இப்படியாக வங்காளி நாடகத்தின் தந்தை ஆகிவிட்டார் ரா.கி.

இப்போது யாராவது சினிமா, நாடகம் ஆபரா பார்க்கச் சென்றால் அது அவமானத்துடன் பார்க்கப்படும் விஷயம் அல்ல. அவைகளுக்குப் போகாதவர்களை மக்கள் ஏசுவார்கள்; அவன் சரியான பட்டிக்காட்டான், பத்தாம் பசலி, பழைய பஞ்சாங்கம் , நாகரீகம் இல்லாதவன் என்று ஏசுவார்கள் ஆனால் ரா.கி. வாழ்ந்த  காலத்தில் பழைய சம்பிரதாயங்களில் ஊறித் திளைத்த வங்காளிகளும் , முற்போக்கு பிரம்ம சமாஜத்தினரும் நாடகக் கொட்டகைகள் என்பவை விபச்சாரிகள், குடிகாரர்கள் , கூத்தாடிகள், சூதாடிகளின் கூடாரம் என்று கருதி அந்தப் பக்கமே போகாமல் இருந்தனர். அவைகளை பாவங்களின் உற்பத்தித் தொழிற்சாலை என்றும் எண்ணினர் அப்படிப்பட்ட ஒரு இடத்திற்கு– கல்கத்தா ஸ்டார் தியேட்டருக்கு– ஞான ஒளி வீசும், அவதார புருஷரான  ராமகிருஷ்ணர் 1884ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி சென்றது கல்கத்தா முழுதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. கிரிஷின் அழைப்பின்பேரில் அவருடைய நாடகத்தைக் காணவே ரா.கி.சென்றார் நாடகத்தின் பெயர் சைதன்யர் லீலை . கல்வி கற்ற மற்றும் பழமை விரும்பிகள் அதை மன்னிக்க முடியாத குற்றம் என்று கருதினர்.

பிரம்மா சமாஜத்தினர் முதல் போர்க்கொடியைத் தூக்கினார்கள் .ஹேமேந்திரதாஸ் குப்தா எழுதினார்- கேசவ சந்திர சென் 1884 ஜனவரி 8 ஆம் தே தி இறந்த பின்னர், பிரம்ம சமாஜத்தினர்ரா.கி.இடம் செல்வதை நிறுத்திவிட்டனர். விஜய கிருஷ்ண கோ சுவாமி   ரா.கி.க்கு நெருக்கம் .ஆனால் சிவநாத சாத்திரி  அங்கே போவதை நிறுத்திவிட்டார் .நீங்கள் ஏன் நிறுத்திவிட்டீர்கள் என்று கேட்டதற்கு, “நான் எப்படி அவரிடம் போக முடியும்?  இப்போது அவர் கேடுகெட்ட நாடகக் கூத்தாடிகளுடன் சேர்ந்துவிட்டார் ; நான் இனிமேல் தட்சிணேஸ்வருக்குப் போகமாட்டேன்” .என்றார் சாஸ்திரி.

xxxxx

ஒரு நாள் ராமகிருஷ்ணர், இந்துமத கொடையாளி அஸ்வினி தத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தார்

அவர் கேட்டார்

உங்களுக்கு  கிரிஷ் கோஷைத் தெரியுமா?

ரா.கி.- எந்த கிரிஷ் கோஷ்?  தியேட்டர் தொழில்  கிரிஷா?

ஆமாம்; அவரைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன் அவர் புகழை அறிவேன். நல்ல மனிதர்

எல்லோரும் சொல்கிறார்கள்; அவர் ஒரு குடிகாரராம்.

ராகி – குடிக்கட்டும், – குடிக்கட்டும், எத்தனை நாள் குடிப்பார்?

வைஷ்ணவரான ராமச்சந்திர தத்தாவும் ரா.கி. நாடகம் பார்க்கச் சென்றதை விரும்பவில்லை

கிரிஷ் இது பற்றி எழுதினார் – “மாஸ்டர் (ராமகிருஷ்ணர்) எங்கு சென்றாலும் ராமச்சந்திரா அவருடன் போவார். ஆனால் மாஸ்டர் நாடகம் பார்க்க வந்தபோது அவரைக் காணவில்லை . அவருக்கு உணவு அனுப்பியபோது அதையும் பாவ பூமியிலிருந்து வந்த உணவு என்று சொல்லி மறுத்துவிட்டார்”.

xxxx

மஹேந்திரநாத குப்தா (M ) எழுதிய காஸ்பெல் ஆப் ராமகிருஷ்ணா GOSPEL OF SRI RAMAKRISHNA வில் இது பற்றி எழுதுகிறார் –

சைதன்ய லீலை என்ற நாடகத்துக்குப் போக ரா.கி. ஆயத்தமானார். அவரை வண்டியில் அழைத்துச் செல்ல மஹேந்திர முகர்ஜியை ஏற்பாடு செய்தார்கள்  எங்கே உட்கார்ந்து பார்ப்பது என்று விவாதித்தார்கள்; ஒரு ரூபாய் காலரி சீட்டில் உட்கார்ந்தால்தான் நன்றாகப் பார்க்க முடியும் என்றனர்  உடனே ராம் சொன்னார்- அவருக்கு ஒரு விசேஷ இ டம் ஏற்பாடு செய்கிறேன்  உடனே மாஸ்டர் (ரா.கி) சிரித்தார்.அருகிலிருந்த வேறு சிலர் அடடா!  அங்கே விபச்சாரிகள் அல்லவா நடிக்கிறார்கள்  அவர்கள் நிம்மி, நித்தி ?? வேஷம் போ டுவார்கள்

மாஸ்டர் அவர்கள் எல்லோரையும் நோக்கிச் சொன்னார் :-

அவர்கள் எல்லோரையும் ஆனந்தமயனான தேவி சொரூபமாகவே நான் காண்பேன்

அவர்களில் ஒருவர் சைதன்யராகவே நடிக்கலாமே ! பொம்மையில் பழம் செய்தாலும் அதைப் பார்க்கும்போது நிஜமான பழம் ஞாபகத்திற்கு வராதா?

தொடரும் ——–Tags- மூன்று விபசாரி, புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்-Part1