மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 2 (Post No.13,523)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,523

Date uploaded in London – 8 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 2

ராமகிருஷ்ண பரமஹம்சர் ( மாஸ்டர் அல்லது ரா.கி.) , நாடகக் கொட்டகைகக்கு சென்றுவந்ததை தற்காலத்தில்  எவரும் குறை கூறமாட்டார்கள்;  ஆனால் அப்போதைய வங்காளத்தில் , அவர் 1886-ல் இறந்த பின்னரும்  குறைகூறி வந்தனர்.

ரா.கி. இந்த விஷயத்தில் போதுமான எதிர்ப்பை, அருவருப்பைக் காட்டாதது சரியல்ல என்று பிரம்ம சமாஜத்தினர் குற்றம் சாட்டியதற்கு சுவாமி விவேகானந்தர் பதில் கொடுத்தார் :-

புத்தரும் ஏசுவும்

“இந்த விஷயத்தில் ராமகிருஷ்ணர் மட்டும் தனித்து நிற்கவில்லை. மதங்களை ஸ்தாபித்த பலரும் இதே குற்றச்சாட்டுக்கு இலக்கு ஆனார்கள் அம்பாபாலி என்னும் வேசி, புத்த பெருமானின் பரம கருணைக்கு ஆட்பட்டார். அதே போல ஒரு பொது மகள், ஏசு கிறிஸ்துவின் கருணைக்கு ஆளானார்.

இன்னொரு குற்றச்சாட்டு, ரா.கி அவர்களை வெறுக்கவில்லை என்பதாகும்; கடவுள் காப்பாற்றட்டும்! இப்படிப் பேசுவோரை! குடிகாரனின் நிழல் படும் இடத்தில் கூட நடக்கக்கூடாது என்று அவர்கள் சொல்கிறார்களா ? உலகத்திலுள்ள எல்லா பாவிகளையும் குடிகாரர்கள், திருடர்கள், விபச்சாரிகள் ஆகியோரையும்  மஹாபுருஷர்கள் வெறுத்து எத்தி உதைய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? உள்ளத்தில் உள்ளதைச் சொல்லாமல் மறைத்துப் பேச வேண்டும் என்றுதான் விரும்புகிறார்களா?

அவதார புருஷர்கள், அவர்களுடைய அபார சக்தி மூலம் பாவிகளையும் புனிதர்களாக ஆக்கிவிடுகிறார்கள்.

ஒருநாள் ஏசுகிறிஸ்து, வழிபாட்டுத் தல ததுக்குச் சென்றார் அவர் உபதேசம் செய்கையில் யூதர்களும் பரீசிக்களும் ஒரு விபச்சாரியை அழைத்து வந்து இவர் பிற ஆடவருடன் கூடும் வேசி என்று அறிமுகப்படுத்தினார்கள் நம்முடைய மோசஸ் சொல்லியிருக்கிறார் இத்தகைய வேசிகளைக் கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும் என்று.

ஏசு பெருமானே!  இப்போது நீர் என்ன செய்யப்போகிறீர்? ஏசு மவுனம் சாதித்தார். வேசியை இழுத்து வந்தவர்கள் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டு உபதேசத்துக்கு இடையூறு செய்தனர்.. ஏசு சொன்னார்?

உங்களில் பாவமே செய்யடியாத முதல் ஆள், அந்த வேசியின் மீது முதல் பாறையினை தூக்கி எறியுங்கள். இதைக் கேட்டவுடன் ஒவ்வொருவராக நைசாக நழுவ ஆரம்பித்தனர். ஏசு மட்டுமே அறையில் இருந்தார் அந்தப்பெண்ணிடம் ஏசு கேட்டார் . எங்கே அவர்கள்? உன்னைக் கண்டிக்க எவருமே இல்லையா?

வேசி சொன்னாள் : இல்லை ஐயா!

ஏசு சொன்னார் – நல்லது; உன்னை நான் கண்டிக்க வில்லை. ஆனால் இனிமேல் தவறு செய்யாதே !

வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது ; அன்பினால்தான் அதை வெல்ல முடியும்

விவேகானந்தர் தனது பதிலில் மேலும் சொல்கிறார் :

புத்தரும் விபசாரியும்

புத்தர் வாழ்நாள் முடியப்போகும் காலத்தில் ராஜ கிருகத்திலிருந்து குஷிநகருக்குச் சென்று தங்கினார். அங்கு பிரபல வேசி மகளுக்குச் சொந்தமான மாந்தோட்டத்தில் தங்கினார் அந்த விபச்சாரியின் பெயர் அம்பா பாலி அல்லது ஆம்ர பாலி ; தமிழ் அதன் பொருள் மாந்தோட்டக்காரி .இதைக்கேட்ட அந்த விபசாரி புத்தரைத் தரிசிக்கச் சென்றாள் . எவராக இருந்தாலும் பூஜை செய்யும் காலத்தில், ஆடம்பர வேஷம் போடமாட்டார்கள். அவளும் சாதாரண குடும்பப் பெண்மணி உடையில் சென்று புத்தரை வணங்கினாள் ; அப்படியும் அவள் பேரழகியாக ஜொலித்தாள்.

புத்தர் மனதில் என்ன அலைகள் ஓடின: இந்தப் பெண் உலக வழக்கில் மாட்டிக்கொண்டு திக்குமுக்காடுகிறாள்; ஊரிலுள்ள பணக்காரர்களும், நாட்டின் அரசனும் இவளை மொய்த்து அனுபவிக்கிறார்கள் ; மிக இளம் வயது; அவளுடைய மனம் அமைகியாக இருக்கிறது ஏராளமான சொத்து சுகம் இருந்தபோதிலும் உறுதியான மனமும் சிந்திக்கும் அறிவும் உள்ளது ஒரு குருவின் விவேகம் இருக்கிறது ;புனிதமான எல்லாவற்றிலும் ஆர்வம் காணப்படுகிறது.உண்மையை அறியும் எல்லா தகுதிகளும் இவளிடத்தில் இருக்கிறது.

புத்தர் உத்தேசத்தைக் கேட்கக் கேட்க அந்த வேசிமகளின் முகம் ஒளிவீசத் துவங்கி பிரகாசித்தது.

இறுதியில் புத்தரிடம் அவள் பணிவுடன் சொன்னாள் :

தேவரீர்! நாளைக்கு என் வீட்டில் விருந்து உண்ண , நீங்கள் உங்கள் சீடர்கள் புடை சூழ  எழுந்தருள வேண்டும்.

புத்தரும் மவுன மொழியில் இசைவுதெரிவித்தார்.

இதை அறிந்த பணக்கார மக்கள், எங்கள் வீட்டுக்கு சாப்பிட வாருங்கள் என்று அழைத்தார்கள் புத்தர் சொன்னார் : நாளைக்கு நான் விபசாரி ஆம்ரபாலி வீட்டுக்கு சாப்பிடப்போக இசைவு கொடுத்துவிட்டேன்.  எல்லா பணக்காரர்களும் முனுமுனுத்தனர் . என்று. ஒரு பாவி மகள் நம்மைத் தோற்கடித்து விட்டாளே! 

அடுத்த நாள் காலையில் புத்தர், தனது சீடர்களுடன் அம்பாப்பாலி (மாமர தோட்ட அழகி) வீட்டுக்குச் சென்றார். அழகியும் விபசாரியுமான அம்பா , என்னுடைய பெரிய மாளிகையையும், மாந்தோட்டத்தையும் உங்கள் அமைப்புக்கு நான் தானம் செய்கிறேன் என்றாள் ; புத்தரும் அப்படியே ஆகுக என்று சொல்லி ஏற்றார். அவளுடைய வாழ்க்கை அந்த நொடியிலேயே தலைகீழாக மாறியது; பாவி மகள் புனிதவதி ஆனாள் ; புத்த மதத்தை ஏற்று துறவி ஆனாள் .

ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் – சர்ச் என்பது புனிதர்களின் மியூஸியம் அல்ல  அது பாவிகளின் மருத்துவ மனை.

A church is not a museum for saints. It is a hospital for sinners.’

அன்பும் கருணையும் மன்னிக்கும் சுபாவமும் புனிதர்களிடம் இருக்கிறது; அதை சாதாரண, நாகரிக  மனிதன் தவறாக எடைபோட்டு விடுகிறான்

ராமகிருஷ்ண பரமஹம்சர், நாடகக் கொட்டகைக்குச் சென்று வேசிகள் நடித்த நாடகத்தைப் பார்த்தபோது நடிகர் நடிகை மீது கருணை மழை பொழிந்தார் . கலையினையும் நடிப்பினையும் அவர் புகழ்ந்தார் . அவரது நெருங்கிய நண்பர்கள்,  குருநாதர் செய்வது சரியே என்றனர்.

அடுத்த பகுதியில் ரா.கி. சந்த்தித்த விபசாரி/ நடிகையைக் காண்போம்.

தொடரும் ………………………….

Tags- மூன்று விபசாரிகள் , புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் -2, அம்பாபாலி,

Leave a comment

Leave a comment