முன்னோர்கள் பூமிக்கு இறங்கி வந்த இரண்டு அதிசய சம்பவங்கள் (Post.13,736)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,736

Date uploaded in London – 2 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மஹாளய அமாவாசையின் மஹிமை பற்றியும், பிராமணர்கள் 96 தர்ப்பணங்களை ஆண்டுதோறும் செய்ய வேண்டும் என்றும் நான் எழுதிய கட்டுரையை படித்துவிட்டு லண்டனைச் சேர்ந்த எனது இனிய நண்பரும் நமது பிளாக்கின் ஆர்வமிக்க வாசகருமான ஸ்ரீ வெங்கடேஸ்வரன் சர்மா கீழ்கண்ட இரண்டு அதிசய சம்பவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

“வார இறுதி நாட்களில் இரண்டு புகழ்பெற்ற உபன்யாசகர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன் அவர்களில் ஒருவர் தென் இந்தியா முழுதும் கீர்த்தி பெற்ற சுந்தர ராம வாஜ்பாயி. இன்னும் ஒருவர் கண்ணா மணி  தீட்சிதர்.

இரண்டாமவர் சேங்காலிபுர அனந்த ராம  தீட்சிதரின்  வழிவந்தவர் ; இருவரின் உரைகளும் சிரார்த்தம் பற்றிய நிறைய செய்திகளைத் தெரிவித்தன. வேத சாஸ்திர தர்ம பரிபாலன சபை இந்த உபன்யாசங்களை ஏற்பாடு செய்திருந்தது.

முதல் அதிசய சம்பவம்

கண்ணா மணி தீட்சிதர் சொன்ன விஷயம் : நான் ஒரு குடும்பத்திற்கு திதி /சிரார்த்தத்தை நடத்திவைக்கச் சென்று இருந்தேன் அந்தக் குடும்ப நபர் அவரது தாயாரின் சிரார்த்தத்தைச் செய்தார். பிராமண போஜன நிகழ்ச்சி வந்தது; அதில் உட்கார்ந்த பிராமணர் வழக்கமான சாப்பாட்டோடு 13 பூரிகளைச் சாப்பிட்டார். அது மட்டுமல்லாமல் ‘மேலும் போடுங்கள்’ என்று சொன்னவுடன் குடும்பத்தினர் தவியாய்த் தவித்தனர் . ஏனெனில் மிச்சம் ஒரு சில பூரிகளே இருந்தன. ஒருவாறாக போஜனம் முடிந்தது . அப்போதுதான் இதன் பின்னுள்ள விஷயம் புரிந்தது. அந்தக் குடும்பத்தில் இறந்து போன தாயாருக்கு பூரி என்றால் மிகவும் இஷ்டமாம். சாப்பிட்ட பிராமணரும், தான் இது போல எங்கும் சாப்பிட்டதில்லை. யாரோ ஒருவர் என் மீது பிரவேசித்து மேலும் மேலும் சாப்பிட்டததாகவே நான் உணர்ந்தேன் என்றும் சொன்னார்.

இதைக் கேட்டவுடன் எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. மெய் சிலிர்த்தது “.

****

இரண்டாவது அதிசய சம்பவம்

சேங்காலிபுரம் வம்சத்தில் வந்த ஸ்ரீ சுந்தர ராம தீட்சிதர் சொன்ன விஷயம்:

“இது ஞானானந்த கிரி சுவாமிகள் தபோவனத்தில் நடந்தது . சுவாமிகளின் பக்தர் ஒருவர் வீட்டில் சிரார்த்தம் செய்யவேண்டிய நாள் வந்தது. ஆனால் அதற்கான பிராமணர் யாரும் கிடைக்கவில்லை . இதனால் முதல் நாளே சென்று ‘யாருமே கிடைக்கவில்லையே சுவாமிஜி, ஒரே கவலையாக இருக்கிறது’ என்று முறையிட்டனர் ; சுவாமிஜியோ ஒரு கவலையும் வேண்டாம்; நாளைக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று சொல்லிவிட்டார். மறுநாள் காலை வரை எந்த பிராமணரும் உறுதியாகச் சொல்லாததால் கணவனும் மனைவியும் மீண்டும் அங்கே போய், சுவாமிகளை நமஸ்கரித்து கவலையைத் தெரிவித்தனர். வீட்டுக்குப் போங்கள்; எல்லாம் முறையாக நடக்கும் என்று சொல்லி அனுப்பிவிட்டார். கவலையுடன் திரும்பிய தம்பதிகள், வீட்டு வராண்டாவில் யாரோ ஒரு பிராமணர் உட்கார்ந்து இருப்பதைக் கண்டு நீங்கள் யார்? என்று விசாரித்தனர்.

சிரார்த்தத்துக்கு வரவேண்டிய பிராமணர் வரமுடியாததால் தன்னை அனுப்பியதாக அவர் பதில் கொடுத்தார். நெற்றியில் நல்ல பெரிய நாமம்; முகத்தில் புதுப் பொலிவு; சிரார்த்தமும் முறையாக நடந்தது .

அன்று மாலையே சுவாமிகளுக்கு நன்றி தெரிவிக்க இருவரும் ஆச்ரமத்துக்குச் சென்றனர். அவரும் புன்சிரிப்புடன் என்ன ? சிரார்த்தம் எல்லாம் நல்லபடியாக நடந்ததா? என்று கேட்டார். தம்பதிகளோ வியப்புடன் நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். சுவாமிகளும் நான்தான் நாரா யணனைக் கேட்டுக்கொண்டேன்; வந்தவர் வேறு யாருமில்லை; சாட்சாத் நாராயணனேதான் என்றார்”.

****

எனது கருத்து

ராமாயணத்திலும் இறந்துபோன தசரதனை ராமர் சந்தித்த நிகழச்சிகளைக் காண்கிறோம். மதுரை ஆதீனகர்த்தராக இருந்து மறைந்த யாழ்ப்பாண அறிஞர் இதுபோல பல சம்பவங்களை அவருடைய புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.

சிரார்த்தம் என்ற சொல் சிரத்தா= நம்பிக்கை என்ற சொல்லின் அடியாகப் பிறந்ததே  இதை நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் என்பதே தாத்பர்யம்.

மனு ஸ்ம்ருதி நூலும், சிரார்த்தம் குறித்து  மிகவும் கடுமையாகப் பேசுகிறது. அனறைய தினம் கடைப்பிடிக்க வேண்டிய  மடி, ஆசாரம் ஆகியன பற்றி அவர் எச்சரிக்கிறார். இந்த சம்வங்களும் மனுவின் எச்சரிக்கயும் நமக்குச் சொல்லும் விஷயம் அன்றைய தினம்  இறந்து  போன முன்னோர்கள் உண்மையாகவே அந்த வீட்டில் பிரவேசிக்கிறார்கள் என்பதே.

இந்தக் கட்டுரையை எழுதும் இந்நாள்  மஹாளய மாவாசை நாள் 2-10-2024 . எல்லா  ஜாதியினரும் முன்னோர்களுக்கு நீர்க்கடன்  செலுத்த கடல், ஆறு, குளம், ஏரிகளுக்கு லட்சக் கணக்கில் செல்கிறார்கள்; கிறிஸ்தவர்கள் கூட இறந்த முன்னோர்களின் கல்லறைக்கு ஆண்டுக்கு ஒரு முறை சென்று பூக்களையும் படைப்புகளையும் அளிக்கின்றனர்

வெளியே  செல்ல முடியாதவர்கள், இறந்துபோன உறவினர்கள் படத்தில் பூக்களை வைத்து அஞ்சலி செய்யலாம். சடங்குகளை விட அவர்களை நன்றியுடன் நினைப்பது மிகவும் அவசியம்.

READ MY OLD ARTICLES 

தென்புலத்தாருக்கு 96 கும்பிடு!

 ஆராய்ச்சிக் கட்டுரையாளர்- லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்- 1371: தேதி 26 அக்டோபர் 2014

தந்யம் யசஸ்யம் ஆயுஷ்யம் ஸ்வர்க்யம் சத்ரு விநாசனம்
குல சந்தாரகம் சேதி ச்ராத்தமாஹூர் மநீஷிண:
-மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

“ இறந்தோரை உத்தேசித்துச் செய்யப்படும் தர்ப்பணமானது செல்வம், புகழ், ஆயுள், ஸ்வர்கம் முதலிய நன்மைகளை அளிக்கும். எதிரிகளை ஒழிக்கும், தன் குலம் தழைத்தோங்கச் செய்யும்” —மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

CONTINUE………………………………

மஹாளய அமாவாசை: ஜப்பானில் மூதாதையர் …

Tamil and Vedashttps://tamilandvedas.com › ம…

·Translate this page

27 Apr 2023 — Pictures are taken from various sources for spreading knowledge. this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.

வியட்நாமில் இந்துப் பண்டிகை மஹாளய …

Tamil and Vedashttps://tamilandvedas.com › வி…

·Translate this page

13 Oct 2019 — வியட்நாமில் இந்துப் பண்டிகை மஹாளய அமாவாசை! (Post No.7090). Research Article written by London …

Mahalaya Amavasai and Ancestors Worship (Post No.11943)

Tamil and Vedashttps://tamilandvedas.com › 2023/04/27 › mahalaya-am…

27 Apr 2023 — 8 Dec 2021 — Anumati- Divine Grace, personified as a Goddess representing the God’s favourable acceptance of worship and oblations. Though …

Missing: மஹாளய ‎| Show results with: மஹாளய

திதி

Tamil and Vedashttps://tamilandvedas.com › tag

·Translate this page

28 Dec 2017 — மஹாளய அமாவாசை – அமாவாசை. இப்படி திதிகளை வைத்தே பல முக்கிய தினங்களை நாம் …

–சுபம்—

 மஹாளய அமாவாசை, சிரார்த்தம், திதி, அதிசய சம்பவம், , முன்னோர்கள், பூமி , வருகை, திதி

Leave a comment

Leave a comment