
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.751
Date uploaded in London – —6 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (10)
ராமாயணத்தில் வரங்கள் (10) பிரம்மா பகீரதனுக்கு வரம் கொடுத்தது!
ச. நாகராஜன்
பாலகாண்டத்தின் நாற்பத்திரண்டாவது ஸர்க்கமாக அமைவது ‘கங்காவதரணத்தில் பகீரதப் பிரயத்தனம்” என்ற ஸர்க்கம்.
மஹரிஷி விஸ்வாமித்திரர் ஶ்ரீ ராமருக்கு கங்கையை பூமியில் வரவழைக்க பகீரதன் செய்த கடும் தவத்தைப் பற்றிய வரலாற்றைக் கூறினார்.
முன்னொரு காலத்தில் ஸகரனுடைய புத்திரர்கள் அறுபதினாயிரம் பேரும் சாம்பலாகச் செய்யப்பட்டதால் மிகவும் வருத்தம் கொண்டார்.
அவரது புத்திரன் அம்சுமான் தனது புத்திரன் திலீபனுக்கு முடி சூட்டினார்.
திலிபன் தனது புத்திரன் பகீரதனை அரசனாக்கினார். ஆனால் பகீரதனுக்கு புத்திர பாக்கியம் ஏற்படவில்லை.
கங்கையை பூமியில் இறக்கினாலே ஸகரனது புத்திரர்களின் சாம்பலை அதில் நனைக்க முடியும்,
ஆகவே பகீரதன் கடும் தவத்தை மேற்கொண்டார்.
கோகர்ணம் என்ற தாழ்வரையில் ஆயிரம் வருடங்கள் பகீரதன் புரிந்த கடும் தவத்தினால் மகிழ்ந்த பிரம்ம தேவர் பகீரதனிடம் வந்து கூறினார்:
பகீரத மஹாதேஜ: ப்ரீதஸ்தேஹம் ஜனேஸ்வர|
தபஸா ச சுதப்தேன வரம் வரய சுவ்ரத ||
மஹாதேஜ: – மஹா தேஜஸ்வியே
ஜனேஸ்வர – மன்னவனே
பகீரத – பகீரதா
தே – உன்னுடைய
சுதப்தேன – நன்றாகப் புரியப்பட்ட
தபஸா ச – தவத்தினால்
அஹம் – நான்
ப்ரீத: – பிரீதி அடைந்தேன்
சுவ்ரத: – நல்ல விரதம் உடையவனே
வரம் – வரத்தை
வரய – வேண்டிக் கொள்
தமுவாச மஹாதேஜா: சர்வலோகபிதாமஹம் |
பகீரதோ மஹாபாகா: க்ருதாஞ்சலிருபஸ்தித: ||
மஹாதேஜா: – மஹா தேஜஸ்வியான
மஹாபாகா: – மகா பராக்கிரம் உடைய
பகீரத: – பகீரதன்
க்ருதாஞ்சலி – அஞ்சலி செய்தவனாய்
உபஸ்தித: – அருகில் நெருங்கினவனாய்
சர்வலோக பிதாமஹம் – உலகத்தை எல்லாம் உண்டாக்கிய கடவுளான
தம் – அவரைப் பார்த்து
உவாச – பின்வருமாறு கூறினார்
யதி மே பகவன் ப்ரீதோ யத்யஸ்தி தபஸ: பலம் |
ஸகரஸ்யாத்மஜா: சர்வே பத்த: ச;லிலமாப்துயு: ||
பகவான் – பகவானே
மே – என்னுடைய
தபஸ: – தவத்திற்கு
ப்ரீத: யதி – சந்தோஷம் அடைந்தவரானால்
பலம் – பலனானது
அஸ்தி யதி – உண்டாகிறதென்றால்
ஸகரஸ்ய – ஸகரருடைய
ஆத்மஜா: – குமாரர்கள்
சர்வே – எல்லோரும்
மத்த: – என்னிடமிருந்து
சலிலம் – தர்ப்பண ஜலத்தை
ஆப்துயு: – அடைய வேண்டும்’
கங்காயா: சலிலகிலன்னே பஸ்மன்யேஷாம் மஹாத்மனாம் |
ஸ்வர்க கச்சேயுரத்யுரத்யத்யந்தம் சர்வே மே ப்ரபிதாமஹா: ||
மஹாத்மனாம் – மஹாத்மாக்களான
ஏஷாம் – இவர்களுடைய
பஸ்மனி – சாம்பல்
கங்காயா – கங்கையினுடைய
சலிலகிலன்னே – ஜலத்தால் நனைக்கப்பட்டளவில்
மே – என்னுடைய
ப்ரபிதாம்ஹா: – முப்பாட்டன்மார்கள்
சர்வே – எல்லோரும்
அத்யந்தம் – அழிவற்ற
ஸ்வர்க – ஸ்வர்க்க லோகத்திற்கு
கச்சேயு: – செல்ல வேண்டும்
தேயா ச சந்ததிர்தேவ நாவசீதேத் குலே ச ந: |\
இக்ஷ்வாகூனாம் குலே தேவ ஏஷ மேஸ்து வர: பர: |\
தேவ – தேவரே
இக்ஷ்வாகூனாம் – இக்ஷ்வாகுக்களுடைய
குலே – குலத்தில்
மே ச – எனக்கும்
சந்ததி – சந்ததி
தேயா – கொடுக்க வேண்டியது.
ந: – எங்களுடைய
குலம் ச – குலமும்
அவசீதேத் ந: – சந்ததி அற்றதாக ஆகாமல் இருக்கக் கடவது
ஏஷ: – இது
பர: வர: – சிறந்த வரமாக
அஸ்து – ஆகட்டும்
– பாலகாண்டம், நாற்பத்திரண்டாவது ஸர்க்கம், ஸ்லோகங்கள் 16 முதல் 20 முடிய
பகீரதன் பிரம்மாவை நோக்கி இப்படி வேண்ட அவர் வரத்தை அருளினார்.
தபோதன மஹாபாக பகீரத மஹாரத |
ஏவம் பவது பத்ரம் தே இக்ஷ்வாகுகுலவர்தன |\
மஹாபாக – மஹா பாக்கியவானே
தபோதன – தபோதன
மஹாரத – மஹாரதனே
பகீரத – பகீரத!
இக்ஷ்வாகு குலவர்தன – இக்ஷ்வாகு குலத்தை விருத்தி செய்ய விரும்பியவனே
ஏவம் – இப்படியே
பவது – ஆகட்டும்
தே – உனக்கு
பத்ரம் – சகல பாக்கியமும் உண்டு
– பாலகாண்டம், நாற்பத்திரண்டாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 22
ஹிமவானுடைய மூத்த குமாரியான கங்கையைத் தாங்க சங்கரர் மட்டுமே வல்லவர்.
இவ்வாறு பிரம்மதேவர் கூறி அருளினார்.
இப்படியாக அருமையான பகீரதனின் தவத்தால் கங்கை கீழிறங்க பிரம்மதேவர் வரத்தை அருளியதை விஸ்வாமித்திரர் ராமருக்குக் கூறி முடிக்கிறார்.
**