WRITTEN BY S NAGARAJAN
Post No. 13 758
Date uploaded in London – —8 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (12)
ராமாயணத்தில் வரங்கள் (12) திதியின் கோரிக்கைக்கு இந்திரன் சமமதித்துக் கூறியது!
ச. நாகராஜன்
பாலகாண்டத்தின் நாற்பத்தேழாவது ஸர்க்கமாக அமைவது ‘விசாலா நகரத்தின் வரலாற்றைச் சொல்வது” என்ற ஸர்க்கம்.
திதியின் கர்ப்பம் ஏழு துண்டுகளாக ஆனவுடன் மனம் நொந்து போய் அவள் இந்திரனை நோக்கி மனத்துணிவுடையவளாக பின்வருமாறு சொன்னாள்:
மமாபராதாகர்போத்யம் சப்ததா விபலிக்ருத: |
நாபராதோஸ்தி தேவேஷ தவாத்ர பலசூதன |\
பலசூதன – பலன் என்ற அசுரனைக் கொன்ற
தேவேஷ – தேவராஜனே
அயம் – இந்த
கர்ப: – கர்ப்பம்
மம – என்னுடைய
அபராதாத் – குற்றத்தாலேயே
சப்ததா – ஏழு துண்டங்களாய்
விபலீக்ருத: – பயனற்று விட்டது
அத்ர – இந்த விஷயத்தில்
தவ – உன்னிடம்
அபராத: – குற்றமொன்றும்
ந அஸ்தி – இல்லை
ப்ரியம் த்வத்க்ருதமிச்சாமி மம கர்பவிபர்யயே |
மருதாம் சப்த சப்தானாம் ஸ்தானபாலா பவன்னித்வமே ||
மம – என்னுடைய
கர்பவிபர்யயே – கர்ப்பத்திற்கு உண்டான இந்தக் கெடுதியிலுமே
ப்ரியம் – ஒரு நன்மை
த்வத்க்ருதம் – உன்னால் செய்யப்படுவதை
இச்சாமி – வேண்டுகிறேன்
இமே – இவைகள் (இந்தக் கர்ப்பத் துண்டுகள்)
சப்த – எழுவர்களும்
சப்தானாம் – ஏழு
மருதாம் – மருத்துக்களுடைய
ஸ்தானபாலா – பதவிபரிபாலக தேவதைகளாய்
பவந்து – ஆகட்டும்
வாதஸ்கந்தா இமே சப்த சரந்து திவி புத்ரகா: |
மாருதா இதி விக்யாதா திவ்யரூபா மமாத்மஜா: ||
மம – என்
ஆத்மஜா – சரீரத்திலிருந்து உண்டான
இமே – இந்த
புத்ரகா: – பிள்ளைகள்
வாதஸ்கந்தா: – வாயுக்களுக்கு அதிஷ்டானங்களாய்
சப்த – ஏழு (ஸப்த)
மாருதா: – மருத்துக்கள்
இதி – என்று
விக்யாதா: – பிரசித்தி அடைந்தவர்களாய்
திவ்யரூபா: – தேவதாரூபிகளாய்
திவி – தேவலோகத்தில்
சரந்து – சஞ்சரிக்கட்டும்
பாலகாண்டம், 47-ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 2,3,4
இவ்வாறாக திதி இந்திரனிடம் கூறினாள்.
உடனே இந்திரன் பின்வருமாறு கூறினான்:
சர்வமேதத்யதோக்தம் தே பவிஷ்யதி ந சம்சய: |
விசரிஷ்யந்தி பத்ரம் தே தேவபூதாஸ்தவாத்மஜா: |\
– பாலகாண்டம், 47-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 8
–
தே – தேவரீருக்கு
பத்ரம் – சுபமே
ஏதத் சர்வம் – இதெல்லாம்
தே – உம்மால்
யதா உக்தம் – சொல்லப்பட்டபடியே
பவிஷ்யதி – நடக்கும்
சம்சய: – சந்தேகம்
ந – இல்லை
ஆத்மஜா: – பிள்ளைகள்
தேவபூதா: – தேவதாரூபிகளாய்
விசரிஷ்யந்தி – சஞ்சரிப்பார்கள்
இப்படியாக இந்திரன் திதியின் கோரிக்கையை நிறைவேற்ற உறுதி அளித்தான். இது வரம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட, வரம் அளித்தது போல இருப்பதைக் காண முடிகிறது.
இவ்வாறாக மருத்துக்களின் சரித்திரத்தை விஸ்வாமித்திர் மஹரிஷி ஶ்ரீ ராமருக்கு எடுத்துரைத்தார்.
**