
Post No. 14,036
Date uploaded in Sydney, Australia – 31 DECEMBER 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவெம்பாவை- திருப்பாவை ஒப்பீடு ; திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் 10
1
தமிழில் நமக்குக் கிடைத்த பாவை நூல்கள் இரண்டு ; அவை திருவெம்பாவையும் திருப்பாவையும் ஆகும்.
****
2
மாணிக்கவாசகர் இயற்றியது திருவெம்பாவை;இருபது பாடல்கள் உடையது
ஆண்டாள் இயற்றியது திருப்பாவை; முப்பது பாடல்கள் உடையது.
*****
3
மாணிக்கவாசகர் காலம் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் காலத்தால் முந்தியவர் மாணிக்க வாசகர் என்று நிரூபித்துள்ளேன் ; ஆகையால் ஆண்டாளுக்கு முந்தியவர் மாணிக்க வாசகர்
****
4
திருவெம்பாவையிலும் திருப்பாவையிலும் ஒரே மாதிரியான சொற்கள் வருவதைப் பார்த்தவுடன் ஒருவரைப் பார்த்து ஒருவர் காப்பி copy அடித்தார்களோ என்று எண்ணுவோம். அது சரியல்ல; பாவை என்பது ஒரு வகைப் பாடல் (genre) ; பரணி என்பது போல ; ஆகையால் ஒரே அமைப்பு இருக்கும் .
இரண்டு பாவைகளும் மணலில் பாவை உருவத்தைச் செய்து காத்தியாயனீ தேவியை வழிபடும் நோன்பினைக் குறிப்பிடுகின்றன .
****
5
இரண்டின் நோக்கமும் ஒன்றே ; கண்ணனைப் போல அல்லது சிவனடியாரைப்போல கணவன் அமைய வேண்டும் ; நாடு செழிக்க நல்ல மழை பெய்ய வேண்டும் இந்த இரண்டு நோக்க்கங்களையும் பாடல்களில் காணலாம் .
****
6
மேலும் இரண்டும், மார்கழி மாதத்தில் பாடப்பட்டவை திருப்பாவையில் 3 இடங்களில் மார்கழி வருகிறது ; திருவெம்பாவையில் ஓரிடத்தில் வருகிறது .
***
7
இரண்டும் பெளர்ணமி திதியை ஒட்டி நடந்தவை
மிருக சீர்ஷ நட்சத்திரம் அல்லது திருவாதிரை பெளர்ணமி திதியை ஒட்டி நடந்தவை .
***

8
திருப்பாவையில் முப்பதாவது பாசுரத்தில் நாந்திச் செய்யுள் என்னும் பலச் சுருதியைக் காண்கிறோம் . திருவெம்பாவையில் அது இல்லை; ஏனெனில் திருவாசகம் என்னும் பெரிய நூலில் திருவெம்பாவை ஒரு சிறிய பகுதியே.
****
9
மழை பெய்ய பிரார்த்தனை
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்குபெருஞ் செந்நெ லூடுகய லுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!-3
****
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-4
**
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்–திருவெம்பாவை 16
இதை ஆழி மழைக் கண்ணா! பாசுரத்துடன் ஒப்பிடுக
*****
10
ஆண்டாளின் நோக்கம் சிற்றஞ் சிறு காலே பாடலிலும் மாணிக்கவாசகரின் நோக்கம்/ குறிக்கோள் 19 ஆவது திருவெம்பாவையிலும் வருகின்றன
சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று-ஏலோர் எம்பாவாய். (29)
****
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 19
*****

11
போற்றி போற்றி
இரண்டு பாவைகளிலும் போற்றி போற்றி என்று துதி பாடுவதையும் காண்கிறோம் :
அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி !
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி !
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி !
கன்று குணிலாவெறிந்தாய் கழல் போற்றி !
குன்று குடையாவெடுத்தாய் குணம் போற்றி !
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி !
என்றென்றும் சேவகமே யேத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்!- திருப்பாவை
****
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். திருவெம்பாவை 20
******
12
குடைந்து நீர் விளையாடுதல்
திருப்பாவையில் ஏழு பாடல்களிலும் 1,2, 3, 4, 13, 20, 26 திருவெம்பாவையில் ஆறு பாடல்களிலும்12, 13, 14, 15, 17, 18 நீராடல் வருகின்றது . மார்கழிக் குளிரில் ‘ஜில்’ என்ற தண்ணீர் பட்டவுடன் இருள் அகன்று ஒளி வருவது போல அறியாமை அகன்று ஆத்ம எழுச்சி ஏற்படும். காரணம்? பிரம்ம முஹூர்த்த நேரத்தில் இறைவன் பெயரைச் சொல்லி நீராடுவதால் அந்த மாதம் முழுதும் ஆன்மீக நாட்டத்தை எழுப்பும்.
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று
புள்ளும்சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்.13
**
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்
**
………………………….
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்
இன்றும் கேரளத்தில் பெண்கள் இப்படி நீராட செல்வதைக் காணலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் என்ன செய்தனர் என்பதைக அவர்கள் திருவாதிரை கொண்டாடுவதை காட்டுகின்றன.
****
13
நிறைய சொற்களில் ஒற்றுமையையும் காணலாம்; கிளியே , நேரிழையீர் என்று பெண்களை அழைப்பது மற்றும் வாய்ப்பேச்சில் காட்டியத்தைச் செயலில் செய்யவில்லையே என்று கிண்டல் செய்வது / ஏசுவது , சிவ பெருமானையும் கண்ண பரமாத்வையும் பல சொற்களால் வருணிப்பது , பறவைகள் எழுப்பும் ஒலியை வருணிப்பது — இப்படி நிறைய ஒப்பிடலாம்
****
14
நகைகள் பற்றி ஆண்டாள் பாடல்களில் காண்பதைப் போல
திருவெம்பாவையிலும் நகைகள் பற்றி மாணிக்கவாசகர் பா டியுள்ளார்
*****
15
இரண்டு நூல்களிலுள்ள பாடல்களும் பாவாய் என்று முடிகின்றன
*****
16
திருப்பாவையில் கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா பாடலில் முழங்கையில் நெய் ஒழுக /வழிய சர்க்கரைப் பொங்கல் அல்லது அக்கார அடிசில் உண்பது போல திருவாதிரையில் களியும் அதற்குத் துணையாக கூட்டும் உண்ணப்படுகின்றன.
இன்றும் தமிழ் நாட்டில் பிராமணர் வீடுகளில் திருவாதிரைக் களியும் கூட்டானும் சமைக்கப்படுகின்றன. கடை முழுக்கு என்னும் தை நீராடல் காவிரிக்கரையில் மிகவும் பிரசித்தம். வைகை நதியில் நீராடிய காலத்தில் பாண்டிய நாட்டிலும் இது நடந்ததை பரிபாடல் என்னும் சங்க நூல் வருணிக்கிறது
*****
சிவனடியார்களும், பரம பாகவத அடியார்களும் ஒரே நோக்கத்துடன் அனுஷ்டித்த காத்யாயனி பாவை நோன்பு, இரண்டாயிரம் வருட தமிழ்ப் பெண்கள் வரலாற்றினைப்/ பண்பாட்டினை நமக்கு வெள்ளிடை மலை என உணர்த்துகின்றன/ காட்டுகின்றன என்றால் மிகையாகாது.
XXXX
திருவெம்பாவை பற்றிய எனது பழைய கட்டுரைகள்
தாய்லாந்தில் வேஷ்டி கட்டும் தமிழ் பிராஹ்மணர்கள்! (Post No.5003)Date: 12 May 2018
பாரதி பாட்டில் மாணிக்கவாசகர்! (Post No.3441) Date: 12December 2016
பாரதி, திருவெம்பாவை பாடிய சுவையான சம்பவம் (Post No.7333), 12 DECEMBER 2019
பத்தாம் நம்பர்! மாணிக்க வாசகருக்குப் பிடித்த எண் 10! ஏன்? (Post No. 3457)
மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல் ! (Post No.10,486) 25 December 2021
மாணிக்கவாசகரின் காலம் என்ன? மிகப் பெரிய சைவப் புதிர்!! Post No 880 Date: 2-3- 2014
மாணிக்கவாசகரின் காலம்—2
Post No. 882 Date: 3-3- 2014
மாணிக்கவாசகரின் உண்மைப் பெயர் என்ன? (Post …
Tamil and Vedas
https://tamilandvedas.com › மா…
23 Dec 2016 — மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்றில் எல்லாம் ஒரே மர்மம்தான். அவர் வாழ்ந்த காலம் ..
திருவாசகத்தில் ரிக் வேதம்! (Post No.9829) 8 JULY 2021
மாணிக்கவாசகரின் 28 பொன்மொழிகள் (Post No.4660)
Date: 25 JANUARY 2018
கண்கள் இருந்தும் காணாதார்- திருவாசகக் கதை! (Post No.3484)
Date: 26December 2016
நச்சு மாமரம் ஆயினும் கொலார்- மாணிக்கவாசகர் (Post No. 3470) Date: 21 December 2016
நமசிவாய படகில் போகலாம்– மாணிக்கவாசகர் (Post No. 3473)
Date: 22December 2016
திருவாசகம் பற்றிய அரிய தகவல்கள்-1 (Post No. …
Tamil and Vedas
https://tamilandvedas.com › திர…
14 July 2023 — திருவாசகத்தில் 658 பாடல்கள் இருக்கின்றன. இந்த அதிசய நம்பரை மாணிக்கவாசகரே முதல் …
திருவாசகம் பற்றி அரிய தகவல்கள் – பகுதி—2 …
Tamil and Vedas
https://tamilandvedas.com › திர…
15 July 2023 — அவர்களுடன் தில்லையாடி வள்ளியம்மை என்ற 13 வயதுப் பெண்ணும் சிறையில் …
QUIZ மாணிக்கவாசகர் பத்து QUIZ (Post No.12253)
Tamil and Vedas
https://tamilandvedas.com › quiz-…
Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. QUIZ மாணிக்கவாசகர் பத்து QUIZ (Post No.12,253). WRITTEN BY LONDON …
—subham—
Tags- திருவெம்பாவை- திருப்பாவை ஒப்பீடு ; திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் 10