Post No. 14,278
Date uploaded in Sydney, Australia – 7 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(புரந்தரதாசர் பற்றிய 8–வது கட்டுரை இது)
முதலில் புரந்தரதாசர் சவுக்கடி வாங்கிய கதையைக் கேளுங்கள்
புரந்தரதாசருக்கு சவுக்கடி!
Date: 5 March,2016: Post No. 2600
கர்நாடக சங்கீதத்தின் பிதாமஹர் புரந்தரதாசருக்கு பூர்வ ஜன்ம கர்ம வினை பாக்கியிருந்தது. அதைத் தீர்க்க, அவருக்கு கடவுள் ஒரு தண்டனை கொடுத்தார்.
பண்டரீபுரத்தில் கோவில் கொண்டுள்ள விட்டலராயன் மீது அபார பக்தி பூண்டவர் நமது புரந்தரர். அதே ஊரில் கோவிலில் ஆடல், பாடலுக்காக நியமிக்கப்பட்ட தேவதாசிக்கும் ஸ்ரீ விட்டல் மீது அலாதி பக்தி. அது மட்டுமல்ல. புரந்தரரின் பாடல்கள், க்ருதிகள் மீதும் பேரன்பு, பெருங்காதல் கொண்டவர்.
ஒரு நாள் இரவு, கடவுளே புரந்தரதாசர் வேடம் கொண்டு , அந்த தேவதாசி வீட்டுக்குப் போய் ஆடலையும் பாடலையும் ரசிக்க வந்ததாகக் கூறினார். அந்தப் பெண்மணிக்குப் பேரானந்தம். ‘பழம் நழுவில் பாலில் விழுந்ததே’ என்று எண்ணி வியந்தார். ஆடினார், பாடினார், மெய்மறந்து போனார். புராந்தரர் வடிவத்தில் வந்த விட்டல், போவதற்கு முன் ஒரு கங்கணத்தை (காப்பு) பரிசுப் பொருளாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
மறு நாள் பண்டரீபுர விட்டல் சிலையின் மீது இருந்த கங்கணத்தைக் காணவில்லை. அது தேவதாசியிடம் இருப்பதும் தெரியவந்தது. செய்தி மெதுவாகப் பரவியது. புரந்தரர்தான் இரவில், தேவதாசி வீட்டுக்குப் போய் அதை அவரிடம் கொடுத்தார் என்று எல்லோரும் சொல்லவே புரந்தரர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். அவர் எவ்வளவோ மறுப்புச் சொல்லியும் தேவதாசியின் வாக்குமூலத்தைக் கொண்டு அவருக்கு சவுக்கடி வழங்கப்பட்டது. அவரை கோவில் வாசலிலுள்ள கம்பத்தில் கட்டி வைத்து சவுக்கடி கொடுத்தனர். திடீரென்று கோவிலின் கர்ப்பக்கிரஹத்திலிருந்து ஒரு அசரீரி கேட்டது. இறைவன், தானே புரந்தரதாசர் வடிவத்தில் சென்று ஆடலையும் பாடலையும் ரசித்ததாகவும் இந்த அவப்பெயரை புரந்தரர் மீது ஏற்றி அவரை சவுக்கடி பெற வைத்ததற்கு அவர் பூர்வ ஜன்ம வினையே காரணமென்றும் சொல்லியது. பாக்கியிருந்த கர்ம வினையைத் தீர்த்த புரந்தரதாசர்,
இன்று வரை நம் நினைவில் நீங்கா இடம் பெற்று நம்மையும் புனிதப்படுத்தி வருகிறார். அது மட்டுமல்ல. அவரை எந்தக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தார்களோ, அந்தக் கம்பத்துக்கு தாசர் கம்பம் என்று பெயரிட்டு இன்று வரை பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். புரந்தரர் கட்டப்பட்ட கல்லும் புனிதம் பெறும்!!
வாழ்க புரந்தரர் நாமம்!
Source: Facets of Indian Culture by R Srinivasan, B V Bhavan Publication 1990); தமிழாக்கம்: லண்டன் சுவாமிநாதன்
******
கருணாகரன் என்று உன்னை சொல்வது எதற்காக?
புரந்தரதாசர் ராம நாமத்தையும் ஹரி நாமத்தையும் புகழ்ந்து பாடினாலும் நீ ஏன் எனக்கு உடனே உதவி செய்யக்கூடாது ? கஜேந்திரன் போன்ற யானைக்குக்கூட உடனே ஓடி வந்து உதவி செய்தாயே என்று கேள்வி கேட்கிறார்
நீ கருணை உள்ளவனா ? உன்னை நம்ப முடியவில்லையே என்கிறார் ; உடனே மோட்சமடைய விரும்பும் பரிதவிப்பை இது காட்டுகிறது .
இதோ அவரது சவால் விடும் கீர்த்தனை :
கருணாகர நீனெம்புவது யாதகோ
பரவச வில்ல எனகே
பரி பரியலி நர ஜெம்னவனித்து
திருகி திருகி மன கரகிசுவத கண்டு (கருணாகர)
கருணாகரன் என்று உன்னை சொல்வது எதற்காக?
(நீ கருணாகரன் என்ற) நம்பிக்கையில்லை எனக்கு
மறுபடி மறுபடி எனக்கு மானிட ஜென்மத்தைத் தந்து
திரும்பத் திரும்ப என் மனம் கஷ்டப்படுவதைக் காணும் உன்னை (கருணாகர)
கரி த்ருவ பலி பாஞ்சாலி அஹல்யெயா
பொரெதெவா நீனந்தே
அரிது விசாரிசி நோடல தெல்லவு
பரி பரி கந்தேகளெந்தே (கருணாகர)
யானை (கஜேந்திரன்), துருவன், பலி மகாராஜா, பாஞ்சாலி, அகல்யை
(ஆகிய எல்லாரையும்) காப்பாற்றியவன் நீயே என்கிறார்கள்
தானாகவும், கேட்டு தெரிந்துகொண்ட இது (மேற்கண்ட) எல்லாமும்
மறுபடி மறுபடி (கற்பனைக்) கதைகளாகவே தோன்றுகிறதே? (கருணாகர)
கருணாகர நீனாதரே ஈகலே
கரபிடிதென்னனு ஹரி காயோ
சரசிஜாக்ஷனே அரச நீனாதரே
துரிதகளென்னனு பீடிபதுண்டே? (கருணாகர)
நீ கருணையுள்ளனவன் என்றால் இப்போதே
என் கைகளைப் பிடித்து என்னை காப்பாயாக ஹரியே
தாமரைக் கண்ணனே, நீ (அனைவருக்கும்) அரசன் என்றால்
கஷ்டங்கள் என்னை பீடிப்பது ஏன்? (கருணாகர)
மரண காலதல்லி அஜாமிள கொலிதே
கருடத்வஜனெம்ப நாமதிந்தா
வரபிருதுகளு உளிய பேகாதரே
த்வரிததி காயோ, புரந்தர விட்டலா (கருணாகர)
மரணத் தருவாயில் (இருந்த) அஜாமிளனுக்கு கருணை காட்டினாய்
கருடத்வஜன் (வாகனம்) என்ற பெயரால் அழைக்கப்படுபவனே
(உனக்கு இருக்கும்) நல்ல பெயர்கள் நிலைத்திருக்க வேண்டுமானால்
உடனடியாக என்னைக் காப்பாற்றுவாய், புரந்தர விட்டலனே (கருணாகர)
*****
எப்போதும் ஹரியை நினை!
ஹரி ஸ்மரணே மாடோ நிரந்தர
பரகதிகே இது நிர்தார நோடோ (ஹரி)
எப்போதும் ஹரியை நினைத்துக் கொண்டே இரு
மோட்சத்திற்கு இதுதான் கண்டிப்பான வழி பாரு (ஹரி)
துரித கஜக்கே கண்டீரவ எனிசித
சரணாகத ரக்ஷக பாவன நீ (ஹரி)
கஷ்டத்தில் இருந்து பிளிறிய கஜேந்திரனுக்கு விரைவாக
சரணாகதி கொடுத்து ரட்சித்தவனை நீ (ஹரி)
ஸ்மரணேகைத ப்ரஹ்லாதன ரக்ஷிஸித
துருள ஹிரண்யகன கரவ சீளித
தருணி த்ரௌபதி மொரெயிடதாக்ஷண
பரதிந்தாக்ஷயவிட்ட மஹாத்மன (ஹரி)
எப்போதும் அவனை நினைத்துக் கொண்டேயிருந்த பிரகலாதனை ரட்சித்து
ஹிரண்யகசிபுவின் கையை முறித்து
(காப்பாற்று என்று) த்ரௌபதி முறையிட்ட அதே நொடியில்
முடிவில்லாத ஆடையை வழங்கிட்ட மகாத்மாவான (ஹரி)
அந்து அஜாமிள கந்தன கரெயலு
பந்து சலஹி ஆனந்தவ தோரித
ஸ்ரீஷ புரந்தர விட்டல ராயன
சிருஷ்டிகொடேயன முக்தி பஜிஸி நீ (ஹரி)
அன்று அஜாமிளன் தனது மகனை கூப்பிட்டபோது
உடனே வந்து அவனுக்கு ஆனந்தத்தை காட்டிய
ஸ்ரீபதியான புரந்தர விட்டலனிடம்;
பிறப்பை தருபவனிடம், முக்தியை வேண்டி பாடல்களைப் பாடி நீ (ஹரி)
Song and tamil translation taken from dasar-songs.com; Thanks.
—-SUBHAM——
Tags- புரந்தரதாசர் ,சவுக்கடி , கதை, புரந்தரதாசர் கேள்வி, நீ கருணை உள்ளவனா ?