நல்ல ஆரோக்கியம் என்றால் என்ன? (Post No.14,294)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,294

Date uploaded in London– –21 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஹெல்த்கேர் மார்ச் 2025 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

நல்ல ஆரோக்கியம் என்றால் என்ன?

ச. நாகராஜன்

நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பது மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருடைய ஆசையாகவும் இருக்கிறது.

ஆனால் நல்ல ஆரோக்கியம் என்றால் என்ன என்பதை முதலில் நன்கு அறிந்து கொள்ள வேண்டுமல்லவா?

2017ம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா ஆரோக்கியத்திற்காக செலவழித்தது 306,160,477,903,740 ரூபாய்கள் ஆகும்.

ஆனாலும் கூட அங்கு ஆயுள் எல்லை மற்ற நாடுகளை விடக் குறைவாகவே இருந்தது; இருக்கிறது!

ஆரோக்கியம் என்றால் என்ன?

ஆரோக்கியம் என்றால் என்ன என்பதை வொர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் (World Health Organisation WHO) இப்படி விவரிக்கிறது.

Health is a state of complete physical, mental, and social well-being and not merely the absence of disease or infirmity

“நல்ல ஆரோக்கியம் என்பது வியாதிகள் இல்லாத நிலை மட்டுமல்ல. அது உடல் ஆரோக்கியம்மன ஆரோக்கியம்சமூகத்தில் நலமுடன் வாழ்வது என்பது அனைத்தையும் முழுவதுமாகக் கொண்ட நிலையாகும்.”

அது மேலும் கூறுகிறது இப்படி:

A resource for everyday life, not the objective of living. Health is a positive concept emphasizing social and personal resources, as well as physical capacities.”

அன்றாட வாழ்க்கைக்கான ஆதாரமே நல்ல ஆரோக்கியம் தான். வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டும் இல்லை அது.

சமுக மற்றும் தனிப்பட்ட நபருக்கான ஆதாரங்கள் மற்றும் உடல்தகுதியின் திறன்களையும் வலியுறுத்தும் ஒரு ஆக்கபூர்வமான கொள்கை அது.

இப்படி உலக சுகாதார நிறுவனம் தெளிவாகக் கூறுகிறது.

உடல் ஆரோக்கியம்

உடலில் எந்த வியாதியும் இல்லாமல் அனைத்து இயக்கங்களையும் செய்யும் உடல் வலிமையையே உடல் ஆரோக்கியம் குறிக்கிறது.

வேலை செய்யும் இடத்தில் விபத்துக்கள் ஏற்படாத பாதுகாப்புகள்.

தாம்பத்ய உறவில் எச்சரிக்கையுடன் இருப்பது.

நல்ல உணவுத்திட்டத்தை மேற்கொள்வது.

நல்ல உடல் சுகாதாரத்தைப் பேணிக் காப்பது.

மது, சிகரட், போதைப் பொருள்களைத் தவிர்ப்பது.

தடுப்பூசிகளைத் தேவைக்குத் தகப் போட்டுக் கொள்வது.

மேற்கண்டவை நல்ல உடல் ஆரோக்கியம் பெற மேற்கொள்ளவேண்டிய செயல்களாகும்.

மன ஆரோக்கியம்

உணர்வு பூர்வமாகவும், சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும்

(emotional, social and psycological well-being) உள்ள நல்ல ஆரோக்கியமான நிலையே மன ஆரோக்கியம் ஆகும்.

கவலை, மனத்தளர்ச்சி, மனச்சோர்வு இல்லாத நிலை மட்டுமல்ல. மன ஆரோக்கியம் என்பது.

வாழ்க்கையை நன்கு அனுபவித்தல்.

கஷ்டமான அனுபவத்தையும் துன்பங்களையும் எதிர்கொண்டு ஏற்று வென்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புதல்.

குடும்பம், நிதி நிலைமை இவற்றில் ஒரு சமச்சீர்த்தன்மையை உருவாக்கி நடந்து கொள்ளல்.

எப்போதும் பாதுகாப்பாகவும் அனைத்து விதத்திலும் பத்திரமாகவும் இருத்தல்.

தன்னால் முடிந்த அளவு திறன்களைப் பயன்படுத்தி மென்மேலும் உயருதல்.

இது தான் நல்ல மன ஆரோக்கியத்தின் அடையாளங்கள்.

மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் ஒன்றுகொன்று நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சரி நல்ல ஆரோக்கியத்தை எப்படிப் பெறுவது?

மரபணு சார்ந்த விஷயங்கள்

மனிதன் பிறக்கும் போது பல மரபணுக்களால் உருவாக்கப்படுகிறான். இதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

சூழ்நிலை சார்ந்த விஷயங்கள்

நல்ல சுற்றுப்புறச் சூழலானாது நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.

காற்று மாசு, நீர் மாசு, மோசமான இடத்தில் வாழ்வது, உஷ்ணநிலை அதிகமாக இருக்கும் இடத்தில் வாழ்வது போன்றவை வியாதிகளையும் மன அமைதியின்மையையும் தரும்.

ஆகவே இவற்றில் வாழ நேர்ந்தால் உடனடியாக தக்க மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

எங்கே நீங்கள் வாழ்கிறீர்கள்?

சுற்றுப்புறச் சூழல் எப்படி உள்ளது?

மரபணு எப்படி உள்ளது?

தனக்குத் தரப்பட்ட கல்வியின் தரம் என்ன?

வேலை வாய்ப்பும் உரிய சம்பளமும் எவ்வளவு?

இவற்றைச் சிந்தித்து தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

சமூக பொருளாதார சூழ்நிலை

உடல் தகுதியிலான சூழ்நிலை

தனிமனிதனின் குணாதிசயம் மற்றும் நடத்தை

இவை நல்ல முறையில் மேம்பட மேம்பட உடல் ஆரோக்கியமும்  மன ஆரோக்கியமும் மேம்படும்.

ஓரிடத்தில் ஓய்வான நிலையில் உட்கார்ந்து ,மேலே உள்ள விஷயங்களை நன்கு சிந்திது ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஒவ்வொருவருடைய வாழ்வும் சிறக்கும் என்பதில் ஐயமில்லை.

நூறு ஆண்டுகள் வாழ்வோமாக!

நோய் நொடியில்லாமல் வாழ்வோமாக!!

***

Leave a comment

Leave a comment