பரிக்கல் நரசிம்மர் கோவில்- மீண்டும் விஜயம் ! (Post.14,306)

Written by London Swaminathan

Post No. 14,306

Date uploaded in London –  24 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கும்பகோணம் ஸ்ரீவத்சம் முதியோர் இல்லத்திலிருந்து சென்னைக்குத் திரும்புகையில் பரிக்கல் நரசிம்ம சுவாமி கோவிலுக்கு 17-3-2025 அன்று மீண்டும் சென்றேன். மூலவரின் திவ்ய தரிசனம் கிடைத்தது .

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அருகில் உள்ள பரிக்கல் கிராமத்தில் புகழ்பெற்ற  ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில்  இருக்கிறது . 22-2-2023 அன்று கும்பகோண வட்டார கோவில்கள் தரிசனத்தை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்புகையில் பரிக்கல்லுக்குச் சென்றோம். ஆனால் சிறிது ஏமாற்றம். நான்கு  ஆண்டுகளாக நடைபெறும் திருப்பணி வேலைகள் காரணமாக மூலவரை தரிசிக்கமுடியாதபடி பக்கத்துக் கொட்டகையிலுள்ள உற்சவரைத் தரிசித்தோம் , சென்ற ஆண்டு கும்பாபிஷேகம் நடந்ததால் இப்போது மூலவரின் திவ்ய தரிசனம் கிடைத்தது .

சுவாதி நட்சத்திர நாட்களில் நரசிம்மருக்கு விஷேச அபிஷேக ஆராதனைகளை நடைபெறும்; நாங்கள் சென்ற தினம் சுவாதி நட்சத்திர தினம் என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது  இந்தக் கோவிலின் சிறப்பு சாந்த முகம் உடைய நரசிம்மர் ஆகும் .

நரசிம்மர் மஹிமை

இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுப் பழமை உடையது. மத்வ பீடத்தைச் சேர்ந்த வியாசராஜ சுவாமிகள் 738 இடங்களில் ஆஞ்சனேயர் கோவில்  அமைக்க எண்ணி இந்தக் கிராமத்தையும் தேர்ந்தெடுத்தார் . ஆனால் பல தடைகள் ஏற்பட்டன. பின்னர், வசந்த ராஜா என்பவர் கோவில் கட்ட முற்பட்டபோதும் தடைகள் ஏற்பட்டதாம். அதற்குப்பின்னர் கனகவல்லி சமேத லட்சுமி நரசிம்ம மூர்த்தி ஸ்தாபிக்கப்பட்டது. தாயாரை அணைத்தவண்ணம்  பெருமாள் இருப்பதால், நரசிம்மனின் உக்கிரம் தணிந்து , அருள் சுரக்கும் கோவில் இது .

இங்கு வருவோருக்குப் பதவி உயர்வு கிடைக்கும், திருமணத் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் மன நோயால் பாதிக்கப்பட்டோரின் நோயும் நீங்கும்.

இங்கு மூலவருடன் ஆஞ்சனேயரும் உள்ளார்.  இங்கு உள்ள ஒரு ஆஞ்சாசனேயர் முன்னாள்  நெல் தானியத்தைக் கொட்டி அதில் தங்கள் கோரிக்கைகளை எழுதும் நம்பைக்கையும் உளது .

அப்பரிசிகள் கிராமத்தின் ஊரின் பெயர் பற்றிய எனது கருத்து இதோ:

கிராம மக்கள் திரித்த ஊர்ப்பெயர் !

PRAHLADA, DEMON’S SON = PARAKALA= PARIKKAL

இரு முறை கோவில் கட்டுவதில் தடை  ஏற்பட்டதற்கு பரகால என்ற அசுரனே காரணம்  என்றும் அதனால் அவன் வேண்டிக்கொள்ள, ஊர்ப்பெயரை பெருமாள் பரகால என்றிருக்க அனுமத்தித்ததாகவும்  தவறாக கதை கட்டப்பட்டிருக்கிறது. உண்மையில் நரசிம்மர் அழித்தது ஹிரண்ய கசிபு என்ற அசுரனை. அவர் அப்படிச் செய்ததற்கு காரணம். நாராயணன் பெயரை சொல்லிக்கொண்டிருந்த பிரஹ்லாதனைக் காப்பாற்றுவதற்காக என்பது எல்லோரும் அறிந்த கதை .

பிரஹலாதன் பெயர் மருவி பரகால  என்றும் பரிக்கல் என்றும் மருவியது என்பதே பொருத்தம்!!

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று நரசிம்மரை  நமக்குக் காட்டிய பிரஹலாதன் பெயரை கிராம மக்கள் தெளிவாக எழுதி ஒட்டவேண்டும் . பரகால அரக்கன் அல்ல; பக்தன்; அதாவது பிரகலாதன்!

கோவிலுக்கு வெளியே பூ, துளசிமாலை விற்கப்படுகின்றன. நாங்கள் துளசி மாலை வாங்க்கிச் சென்றோம். பார்ப்பதற்கு  இகவும் லட்சணமான மூர்த்தி என்பதால் அனைவரும் தரிசிக்க வேண்டிய தலம் இது . கோவில் மிகச் சிறியது . கல்வெட்டுகளும் இருப்பதாக கேள்விப்பாட்டேன். ஆயினும் நாங்கள் அவற்றைக் காண முடியவில்லை .

temple door carvings at Parikkal Narasimhar temple

–SUBHAM—

TAGS- பிரகலாதன், கனகவல்லி, லட்சுமி நரசிம்ம, பரிக்கல், பெருமாள், கோவில், மூர்த்தி, Parikkal, temple, images

Leave a comment

Leave a comment