எழுச்சிமிக்க மதுரை இந்து மகாநாட்டில் பக்தர்கள் எடுத்த ஆறு முடிவுகள்

இந்து விரோதிகளுக்கும், தேச விரோதிகளுக்கும் ஓட்டு போடக்கூடாது : முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில்  6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.

2) பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்.

3) குன்றம் குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்.

4) தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்.

5) தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து, இந்து விரோதிகளுக்கும், தேச விரோதிகளுக்கும் ஓட்டு போடக்கூடாது.

6) சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்.

முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாட்டில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தும் : காடேஸ்வரா சுப்பிரமணியம் திட்டவட்டம்!

முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் ஆன்மிக புரட்சி ஏற்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில்  பேசியவர்,

முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் ஆன்மிக புரட்சி ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தவர், மாநாட்டிற்கு விளம்பரம் தேடித் தந்த சேகர்பாபு, திருமா, வைகோவிற்கு நன்றி கூறினார்.

பல்வேறு இடங்களில் மாநாட்டிற்கு வந்தவர்களை காவல்துறை தடுத்தனர் என்றும் முருகனின் ஆசியால் இந்த மாநாடு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

முருக பக்தர்கள் மாநாட்டில் கடல் அலையெனப் பக்தர்கள் திரண்டுள்ளனர் என்றும் அனைத்து கட்சியினரையும் சந்தித்து மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தோம் என காடேஸ்வரா சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் கொடுக்க நேரம் கேட்டும் நேரம் ஒதுக்கவில்லை என்று குறிப்பிட்டவர், முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாட்டில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தும் என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் திட்டவட்டமாக கூறினார்.

நாங்கள் நடத்தும் மாநாட்டிற்கு கணக்குக் காட்ட தயார் என்றும் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பணம் எந்த தொழிலதிபர்களிடமிருந்து பெற்றது? என்றும்  அதில் எவ்வளவு ஊழல் நடந்தது என வெளியிட அமைச்சர் சேகர்பாபு தயாரா? என காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.

*****

இந்துக்கள் வாழ்வியலுக்கு பிரச்சினை வந்தால் சூரசம்ஹாரம் நடக்கும் :  அண்ணாமலை எச்சரிக்கை

தொடர்ந்து இந்துக்கள் வாழ்வியலுக்குப் பிரச்சினை வந்தால் சூரசம்ஹாரம் நடக்கும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முருக பக்தர்கள் மாநாட்டில்  பேசியவர்,

வெறும் இரண்டு விழுக்காடு இருக்கும் ஒரு நாடு போர் நடத்துகிறது என்றும் இந்தியாவில் ஆபரேஷன் நடத்தினால் சிலருக்குப் பிடிக்கவில்லை என அண்ணாமலை குறிப்பிட்டார். நாம் ஒற்றுமையை இருந்தால் சிலருக்குப் பிரச்சனை என்றும்  தொடர்ந்து நமது வாழ்வியலுக்குப் பிரச்சினை வருகிறது. என்றும்  என்னுடைய வாழ்வியல் முறைக்கும் பிரச்சினை வந்தால் நான் திருப்பி அடிப்பேன் என உறுதிபட கூறினார்.

இந்து மக்களிடம் எப்போதும் ஒற்றுமை வராது என்று அரசியல்வாதிகள் அரசியல் நடத்துகிறார்கள் என்றும் இவற்றை அனைத்தையும் மாற்றத் தான் இந்த மாநாடு என அண்ணாமலை  கூறினார்.

இந்த மாநாடு ஒரு எச்சரிக்கை மணி என்றும் இந்துக்கள் ஒற்றுமை இருக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார். ஆளும் ஆட்சியர்கள் முருகன் பக்தர்களை எந்த வீட்டில் வைத்துப் பார்க்க விரும்புகிறார்கள் என்றும் தொடர்ந்து இந்துக்கள் வாழ்வியலுக்குப் பிரச்சினை வந்தால் சூரசம்ஹாரம் நடக்கும் என  அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார்.

*****

முருக பக்தர்கள் மாநாடு : பவன் கல்யாணுக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள் மாலை அணிவித்து ஆசீர்வாதம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் மாலை அணிவித்து ஆசீர்வாதம் வழங்கினர்.

மதுரையில் இந்து முன்னணி சார்பில் சிறப்பாக நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்றார்.

பச்சை வேட்டி மற்றும் தோளில் பச்சைத் துண்டு அணிந்து, பாரம்பரிய தமிழ் அடையாளங்களோடு வருகை தந்த பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருக்கு மாலை அணிவித்து ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆசீர்வாதம் வழங்கினர். பின்னர், மண்டியிட்டு கீழே அமர்ந்து ஆதீனங்களைப் பவன் கல்யாண் வணங்கினார்.

*****

மதுரை அம்மா திடலில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

இந்து முன்னணி சார்பில் மதுரை அம்மா திடலில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

முருக பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விதமாக மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் அறுபடை வீடுகளின் மாதிரிகளில் வழிபாடு நடத்தினர்.  மாநாட்டின் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் குவிந்த முருக பக்தர்கள் அரோகரா முழக்கத்தால் மாநாட்டுத் திடல் அதிர்ந்தது. பக்தர்களின் கூட்டத்தால் சித்திரைத் திருவிழாவை மிஞ்சிய மக்கள் வெள்ளமாக மாநாட்டுத் திடல் காட்சியளித்தது.

மாநாட்டில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி, பாஜக மூத்த தலைவர்கள், ஆதீனங்கள், மடாதிபதிகளும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாநாட்டின் முதல் கலை நிகழ்ச்சியாகப் பம்பை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநாட்டில் சிறுவன் சூரிய நாராயணன் தனது காந்தர்வ குரலால் முருகன் பாடலை பாடியதைப் பக்தர்கள் அனைவரும் மெய்மறந்து ரசித்தனர்.

தொடர்ந்து மாநாட்டு மேடையில், சிரவ ஆதின கர்த்தா ராமானந்த குமரகுருபர சுவாமிகள் உரையாற்றினார். அவருக்குத் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விசாகத்தன்று பூஜை செய்யப்பட்ட வேல் வழங்கப்பட்டது.

பின்னர் சிவன், பார்வதி வேடமிட்டு கலைஞர்கள் நடனமாடியதைப் பக்தர்கள் அனைவரும் கண்டு ரசித்தனர். மேலும் மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளும் களைக கட்டின.

*****

இந்து மதத்தை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை அவமதிக்காதீர்கள்: பவன் கல்யான்

ஒரு இந்து, இந்துவாக திகழ்ந்தால் மதவாதியாக கருதப்படுகிறார். இந்து மதத்தை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை அவமதிக்காதீர்கள். முருகர் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வெவ்வேறு பெயர்களில் திகழ்கிறார்.  நிறத்தில் பேதம் இல்லை, அகத்தின் வழியே பார்க்கிறோம் கடவுள், கலாசாரம், பண்பாட்டை கேலி செய்தனர். சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்தது மதுரையில்தான். இப்படை தோற்கின் எப்படை வெல்லும், வெற்றியின் படிக்கட்டு அன்பு நாச சக்திகளை கிள்ளி எறிய வேண்டும். இந்துக்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் பேச்சு சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர். பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் இஷ்டத்துக்கு பேசுகின்றனர் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார்

ஹிந்து மதத்தின் நலன் பாதிக்கப்படும் போதெல்லாம், அதனைக் காக்க, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது முன்னின்று போராடிய ஹிந்து முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் இணையற்ற உயிர்த்தியாகங்களை நினைவு கூறும் வாய்ப்பு கிடைத்தது பெருமை.

தமிழ்நாட்டில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள் உள்ளன. அவை நம் கோவில்களை மையமாகக் கொண்டதால் மட்டுமே காலத்தால் அழியாது நிற்கின்றன, அப்படிப்பட்ட நம் கோவில்களை, இன்று நடைபெறும் சுரண்டலில் இருந்து பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இன்றைய முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, முருகப் பெருமானின் அருள் பெறும் பாக்கியம் கிடைத்தது பெருமகிழ்ச்சி. ஆன்மீக பூமியான தமிழகத்தில், சனாதன தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இன்று கூடிய லட்சக்கணக்கான பொதுமக்களுக்கும், மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

*****

முருகன் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

மதுரை, முருகன் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

*****

கி.மீ தூரம் நடந்து செல்லும் மக்கள்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் அம்மா திடலுக்கு முன்னர் உள்ள சாலை முழுதும் மக்கள் வெள்ளத்தால் குவிந்துள்ளது. பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு மக்கள் நடந்து செல்கிறார்கள். மாநாட்டு திடலை சுற்றி அமைக்கப்பட்ட 20 க்கும் மேற்பட்ட வாகன நிறுத்தங்கள் நிரம்பின. 

இந்த மாநாட்டில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனைத் தரிசிப்பதற்காக முருக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்துள்ளனர்.

*****

மதுரை முருகர் மாநாட்டிற்கு காவல்துறை ஒத்துழைப்பு இல்லை – எல்.முருகன் 

மதுரை முருகர் மாநாட்டிற்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது கட்சி சார்ந்த மாநாடு அல்ல என்றும், அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி பங்கேற்கும் ஆன்மீக மாநாடு என்றும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

*****

மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி

மதுரை: ”மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என இயக்குனர் அமீருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை கஸ்துாரி பதிலடி தந்தார். அவர் கூறியதாவது: கும்பாபிஷேகம், முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதில் அரசியல் இல்லை. தி.மு.க., நடத்திய முருக பக்தர்கள் மாநாடும் சிறப்பாக நடந்தது. ஆனால் மக்களின் பேரெழுச்சியுடன் மதுரை மாநாடு நடக்கிறது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இங்கு அரசியல் கட்சித் தலைவராக வரவில்லை. முருக பக்தராக வரவுள்ளது பெருமை. அதை தி.மு.க., ஆதரிக்க வேண்டும். சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்வதுதான் ‘அக்மார்க்’ மதவாதம். முருகனை போற்றுவோம் என்று சொல்வது ஆன்மிகம். முருக பக்தர்கள் மாநாட்டில் மத நல்லிணக்கத்தை பார்க்கப்போகிறீர்கள். முருக பக்தர்கள் என்று சொல்லி மதவாதம் செய்வதாக இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.மாற்று மதத்தினர் தேவையில்லாத சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அமீரின் மூதாதையர்கள் தமிழர்கள் தானே. அவர்களை அமீர் தமிழனாக நினைக்கவில்லையா எனத் தெரியவில்லை. மதுரையம் பதியில் மாற்று மதத்தினர் இதற்கு அரணாக நிற்க வேண்டும். சுல்தான் கூட கோயிலுக்கு நற்பணி செய்ததாகதான் வரலாறில் உள்ளது.

–subham—

Tags–மதுரை, முருகன் மகாநாடு, இந்து முன்னனி, ஆறு தீர்மானங்கள், கண்காட்சி, அறுபடை வீடுகள், 5 லட்சம் பேர் ,

Leave a comment

Leave a comment