சூரிய எப்படி ஹீலியோஸ் என்று மாறியது ? SUN DISC IN BRITISH CITY BATH (Post.14,872)

Sun God Denmark

Sun god in British city Bath

Written by London Swaminathan

Post No. 14,872

Date uploaded in London –  15 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

New Sculpture of SUN in BATH city hall.

ஹிட்டைட்ஸ் HITTITES  இனத்தினர் சிரியாவிலும் துருக்கியிலும் சூரியனை சூரியோஸ் என்ற பெயரில் வணங்கியதை 3800 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கல்வெட்டு காட்டுகிறது. சூரிய என்ற பெயரை இன்றும் சிரியா தாங்கி வருகிறது துரக என்ற குதிரையின் பெயரை இன்றும் துருக்கி பயன்படுத்திவருகிறது

கிரேக்க நாட்டில் ஹீலியோஸ் என்ற பெயரில் சூரியனை வணங்கினர் . கிரேக்க மொழியில் ச – வர்க்க எழுத்துக்கள் இல்லாததால் நம்மை சிந்து நதி நாகரீகத்தினர் என்பதற்குப் பதிலாக ஹிந்து என்று அழைத்தனர்  அதே போல சூ என்பது ஹீ என்று மாறி ஹீலியோஸ் என்ற பெயரில் கிரேக்கர்கள் வணங்கினர் அவர்களிடமிருந்து ரோமானியர்களுக்குப் பரவி, பிரிட்டனிலும் ரோமானிய சின்னங்கள் உள்ள பாத்/  BATH முதலிய நகரங்களில் சூரியன் சிற்பங்கள் உள்ளன . பிரிட்டனில் பாத் நகரில் மிகப்பெரிய சூரியன் சிற்பத்தை  பாத் நகர அசெம்பிளி ஹாலில் வைத்துள்ளனர் இது இந்த 2025 ஆண்டு, நாடு முழுதும் காட்சிக்கு எடுத்துச் செல்லப்படும்.

என்னை பி பி சி காரர்கள் இந்தியாவிலிருந்து  1987-ஆம் ஆண்டு லண்டனுக்கு அழைத்து வந்த பின்னர், பாத் நகரில் பிரிட்டிஷ் தேர்தல் பிரசாரத்தைப் பார்த்து கட்டுரை எழுத அனுப்பினர் அப்போது நான் ரோமன் பாத் ROMAN BATH எனப்படும்  குளியல் தொட்டி மற்றும்  அங்குள்ள சூரியன் சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தேன் . இந்தக் குளியல் வெப்ப நீர் ஊற்று காரணமாக இந்த நகருக்கே இன்று வரை பாத் என்றே பெயர்!

***

ர என்ற எழுத்து ல  என்று மாறுவது சம்ஸ்கிருதம் மூலம் உலகம் முழுதும் பரவியது . சாஸ்க்ருத மொழியில் இது ஒரு சூத்திரமாகவே இருக்கிறது. தமிழ் மொழியில் நாம் இன்றும் இதை பயன்படுத்துகிறோம் .

பல் +பொடி=  பற்பொடி

கல் +கண்டு = கற்கண்டு

இது போல நூற்றுக்கணக்கில் தமிழில் உள்ளன. இதையே கிரேக்கர்களும் சூரிய என்பதில் ரி என்பதை லி என்று உச்சகரித்தனர் .

SU=H E

RI= L I

YA= Y A

ஆக இந்துக்கள் பரப்பிய சூரிய வழிபாடு ஐரோப்பா மட்டுமின்றி தென் அமெரிக்க மாயன், இன்கா நாகரீகத்திலும் பின்பற்றப்பட்டது ;அந்த நாகரிக சின்னங்களில் ஸ்பானிய கிறிஸ்தவர்கள் அழித்தது போக எஞ்சியுள்ள சிற்பங்களிலும் தங்க விக்ரகங்களிலும் இன்றும் சூரியனைக் காணலாம் . அவை மியூசியங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளன . பெரும்பாலான தங்கச் சின்னங்களை கிறிஸ்தவ பாதிரிகள் உருக்கி ஸ்பானிய மன்னருக்கு கொடுத்துவிட்டனர் .

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை சூரியனை இந்துக்கள் வழிபட்டதால் ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஆறு சமயங்களில் செளரம் என்ற சூரிய வழிபாட்டினையும் சேர்த்தார் ; இன்று எல்லோரும் சூரிய நமஸ்காரத்தில் சூரியனின் பெயர்களை சொல்லி நமஸ்காரம் செய்கின்றனர்; காயத்ரீ என்ற பெயரில் சூரியனையும் நாள்தோறும் வழிபடுகின்றனர் .

பாரதியாரும் காயத்ரீ மந்திரத்தைச் சூரிய வழிபாடு என்று காட்டுகிறார் . அந்த மந்திரத்தைச்

செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்

எங்கள் அறிவினைத் தூண்டி நடந்துக  —

என்று எளிய தமிழில் செப்பினார்.

****

According to information on Tamil and Vedas, the Hittite word “Suriyos” is related to the Sanskrit word “Surya,” meaning Sun God. The Hittites, who ruled parts of modern Syria and Turkey, are believed to have worshipped the Sun God. The very name “Syria” is said to derive from the Sanskrit word “Surya”. The website also suggests that the Hittites, who spoke an old form of Sanskrit, worshipped Surya and other Hindu deities like the Twelve Adityas, Goddess Nayanatara, and Varuna.

SUN DISC IN BRITISH CITY BATH

A giant model of the Sun has been installed at the Bath Assembly Rooms in Somerset.

Created by Bristol artist Luke Jerram, the sculpture is named Helios after the god who represents the Sun in Greek mythology.

The 7-metre (22ft) sculpture follows Jerram’s series of astronomical artworks, Museum of the Moon, Gaia and Mars.

It will be on display until the 23rd of February before touring around the UK’s National Trust sites.

–SUBHAM—

TAGS- SURIYOS, HITTITES, HELIOS, GREEK, BATH, SUN DISC,  ON TOUR, ஹிட்டைட்ஸ், சூரியோஸ், ஹீலியோஸ், கிரேக்க, பாத் /BATH

Leave a comment

Leave a comment