TALLEST GANESH IN THE WORLD IN THAILAND; HINDUS INVENTED SHOWER!


TALLEST GANESH IN THE WORLD IS IN THAILAND- 39 METRES HIGH. JANAM TV NEWS.

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

உலகிலேயே மிக உயரமான விநாயர்ச் சிலை இந்தியாவில் அல்லாமல் தாய்லாந்தில் இருப்பது ஆச்சரியமான உண்மை. தாய்லாந்தின் செழிப்பை உணர்த்தும் விதமாகச் சாச்சோங்சாவ் மாகாணம் க்லோங் குவான் மாவட்டத்தில் உள்ள கணேஷ் சர்வதேச பூங்காவில் கம்பீரமாக நிறுவப்பட்டுள்ளது விநாயகர்ச் சிலை…. 39 மீட்டர் உயரம், கிட்டத்தட்ட 12 மாடி அளவுக்கு உயரமான இந்தச் சிலை, 40 ஆயிரம் சதுர மீட்டர்ப் பூங்காவில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது.

2009-2012ம் ஆண்டில் தாய்லாந்தின் சிற்ப கலைஞர்ப் பிடக் சலூம் லாவ் என்பவர், ஆனைமுகனை வடிவமைத்திருக்கிறார்… 100 டன் எடையில், 854 வெண்கல அடுக்குகளைக் கொண்டுள்ள கணபதி சிலை 4 கைகள் உடன் காட்சி தருகிறது. ப்ரப் பிகனேட், ப்ரப் பிகனேஷுயன் எனத் தாய் மொழியில் அழைக்கப்படும் நம் விநாயகனை முன்னேற்றத்தின் குறியீடாகப் பார்க்கிறது தாய்லாந்து.அதனால்தான் அவரது கைகளில் ஆயுதங்களைத் தவிர்த்து, செழிப்பின் அடையாளமாகப் பலாப்பழத்தையும், இனிப்பு மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாகக் கரும்பையும், வாழ்வாதாரம் மற்றும் ஊட்டசத்தின் அடையாளமாக வாழைப்பழத்தையும், தெய்வீகம் மற்றும் ஞானத்தை உணர்த்தும் விதமாக மாம்பழத்தையும் தாய்லாந்து விநாயகர்க் கையில் தாங்கி நிற்கும்படி வடிவமைத்திருக்கிறது.இதுதவிர ஞானத்தைப் பிரதிபலிக்கும் தாமரைக் கிரீடம், தேசத்தையும், உலகையும் பாதுகாக்க வல்லவர் என்பதைக் குறிக்கும் வகையில் ஓம் சின்னமும் கிரீடத்தில் உள்ளது.

***

GANESH SYMBOLISM FROM FACEBOOK

****

HINDUS INVENTED BATHROOM SHOWER THOSANDS OF YEARS BEFORE THE WEST. THIS IS FOLLOWED IN MANY TEMPLES FOR AGES.

—SUBHAM–

TAGS- TALLEST, GANESH, THAILAND, SHOWER, HINDU INVENTION, SYMBOLISM.

Leave a comment

Leave a comment