Post No. 15,053
Date uploaded in London – 4 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Yesterday we saw Skanda/ Murugan in English; here is the Tamil version.
please see the Murugan pictures posted yesterday.
Part- Three
முருகன் பற்றி முப்பது விஷயங்கள் !
1.முருகன் யார் ?
கணபதிக்கு அண்ணன் ; சிவன்- உமா தேவியின் மகன்.
***
2.அவனுக்கு எத்தனை முகங்கள்? ஏன் ?
அவனுக்கு ஆறு முகங்கள். ஏனெனில் அவனை ஆறு கிருத்திகைப் பெண்கள் வளர்த்தார்கள் .
***
3.முருகனுக்கு கார்த்திகேயன், காங்கேயன், சரவண பவன் என்ற பெயர்கள் ஏன் வந்தன ?
அவனைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும் அவன் சரவண பொய்கையில் தோன்றியதால் சரவண பவ என்றும் சிவனின் ஆறு தீப் பொறிகளை கங்கை தாங்கி வந்து, அவன் பிறக்க வழி செய்ததால் காங்கேயன் என்று பெயர்.
***
4.சுப்ரமணியன் என்ற பெயர் எப்படி வந்தது ?
பிரம்மனுக்கு நிகரானவன்
***
5.சுவாமிநாதன் என்ற பெயர் எப்படி கிடைத்தது?
தகப்பனுக்கே ஓம்காரத்தின் தத்துவத்தை விளக்கினான்; பிரம்மாவுக்கு ஓம் பற்றித் தெரியாததால் குட்டு வைத்தான்
***
6.முருகனின் வாகனம் எது? கொடி எது? ஆயுதம் என்ன?
மயில் வாகனம், சேவற் கொடியோன், வேலாயுதன்
***
7.முருகனுக்கு எத்தனை மனைவிகள் ?
வடக்கில் இந்திரனின் மகளான தெய்வயானையையும் தெற்கில் குற மக்கள் வள்ளியையும் மணந்தான்
***
8.முருகன் கொன்ற அரக்கர்கள் யார் ?
வடக்கில் தாரகாசுரனையும் தெற்கில் சூரபதமனையும் அழித்தான். ***
9.சங்கத் தமிழில் முருகன் பற்றி எங்கு அதிகப் பாடல்கள் உள்ளன?
நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையிலும் பல புலவர்கள் பாடிய பரிபாடலிலும் உள்ளன
***
10.முருகனைப் புகழ்ந்து 1300 பாடல்களைப் பாடியவர் யார்?
அருணகிரிநாதர் பாடிய 1300++ பாடல்களில் முருகனின் புகழ் உள்ளது.
***
11. முருகனுக்குரிய பண்டிகைகள் என்ன ?
வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூசம்
***
12.முருகனை எந்த நாட்டு மக்கள் பெருமளவில் வணங்குகிறார்கள் ?
இந்தியாவில் தமிழ்நாடு, வெளியே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் தீவு, சீஷெல்ஸ் தீவு, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் பாரம்பரயமாக முருக வழிபாடு உள்ளது இப்போது உலகம் முழுதும் தமிழர்கள் இருப்பதால் ஏராளமான நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.
***
13.முருகனுக்குப் பிடித்த பிரசாதம் எது?
பஞ்சாமிர்தம்
***
14.பழனியில் ஆண்டி கோலத்தில் இருப்பது ஏன்?
மாம்பழத்தைப் பிரித்துக்கொடுக்கும் போட்டியில் அண்ணன்கணபதி வென்ற முறையை ஆட்சேபித்து கோபித்துக் கொண்டு கோவணத்தை அணிந்து தண்டத்தை ஆயுதகமாக எடுத்துக்கொண்டு பழனி மலைக்குச் சென்றார்; அங்கே தண்டாயுத பாணியாக நிற்கிறார் .
***
15.அறுபடை வீடுகள் யாவை?
திருப்பரங்குன்றம், திருத்தணி திருச்செந்தூர், சுவாமி மலை, பழனி, பழமுதிர்ச்சோலை
***
16.சூர சம்ஹாரம் எங்கு பெரிய விழாவாக நடக்கிறது ?
திருச் செந்தூரில்
***
17.தைப்பூச விழா எங்கு பிரசித்தம்?
மலேஷியாவில் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூசம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது .****
18.இலங்கையில் புகழ்பெற்ற முருகன் கோவில்கள் எவை?
நல்லூர் கந்தசாமி கோவில் கதிர்காம முருகன் கோவில்.
***
19.முருகன் என்றால் என்ன?
அழகன்
***
20.முருகன் பற்றி அருணகிரிநாதர் தவிர வேறு யார் பாடினார்கள் ?
தமிழில் அவ்வையார் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணம் சம்ஸ்க்ருதத்தில் ஸ்காந்தம் மற்றும் காளிதாசன் பாடிய குமார சம்பவம்
***
21.கெளமாரம் என்றால் என்ன?
ஆதிசங்கரர் வகுத்த அறுமதங்களில் முருகனை- குமாரனை- வழிபாடும் பிரிவு கெளமாரம்.
***
22.கார்த்திகைக்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு ?
முன்னொரு காலத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த போது சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாக நமது புராணங்கள் விளக்குகின்றன. ஆறு தலைகளும் பன்னிரு கைகளும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் முருகன் தமிழர் தம் தனிப்பெரும் கடவுள்! கார்த்திகை மாதர் அறுவர் முருகனை வளர்த்ததாகப் புராணம் கூறுகிறது. அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என்பவை ஆறு நட்சத்திரங்கள். இந்த ஆறு பேருமே முருகனை சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்தபோது எடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்தனர்.
xxxx
23.வானத்தில் கார்த்திகை நட்சத்திரம் எங்கே உளது ?
வானத்தில் ஒரையன் ORION (திருவாதிரை, மிருக சீர்ஷம்) நட்சத்திரக் கூட்டத்துக்கு அருகில் உற்று நோக்கினால் ஒரு நட்சத்திரக் கொத்து PLEIADES பிரகாசிக்கும். இதை பைனாக்குலரில் பார்த்தால் ஏழு நட்சத்திரங்கள் தெரியும்; முருகனும் அவரை வளர்த்த ஆறு பெண்களும் என்று நாம் சொல்லலாம். ஒரையன் நட்சத்திரக் கூட்டம் செவ்வக வடிவில் இருப்பதால் யாரும் எளிதில் கண்டுபிடிக்கலாம். நாலு மூலைகளில் நான்கு விண்மீன்கள் இருக்கும். (கார்த்திகை = பிளையடஸ் PLEIADES )
xxxx
24.சங்க இலக்கிய காலத்துக்கு முன்னதாக வந்த நூல் என்று கருதப்படும் தொல்காப்பியத்தில் கார்த்திகை விழா பற்றிய குறிப்பு இருக்கிறதா?
தொல்காப்பியத்தில் கார்த்திகை விழா
வேலி நோக்கிய விளக்கு நிலையும்–
தொல்.பொருள்.புறத்திணை இயல்-35
வேலி நோக்கிய விளக்கு நிலையும்– என்ற சூத்திர வரிகளுக்குப் பொருள் கூறுகையில் “கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு” என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.
xxxx
25.சங்க இலக்கியத்தில் எந்த நூலில் கார்த்திகைத் திருநாள் விழாவைப் போற்றுகிறார்கள் ?
அகநானூறு நற்றிணை , மலைபடுகடாம் , பரிபாடல் ஆகிய சங்க நூல்கள் இவ்விழாவினாக்க குறிப்பிடுகின்றன.
தொழில் விஷயமாக வெளியூர் என்ற கணவன், கார்த்திகை விழாவுக்கு வரட்டும் என்று மனைவி சொல்லும் பாடல் அகநானூற்றில் (141) இருக்கிறது.
குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருநடுநாள்
அறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி (அகம்.141)
இதே போல அகம்.185, 11, நற்றிணை 202 ஆகிய பாடல்களிலும் கார்த்திகை விழா சிறப்பிக்கப் படுகிறது.
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்
கையற வந்த பொழுது – நற்றிணை 58
அகலிரு விசும்பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை – மலைபடுகடாம் – 10
xxxx
26.தொல்காப்பியத்தில் முருகன் பெயர் என்ன ?
சேயோன் ; சிவப்பு நிறம் உடையோன் அல்லது சிவனின் சேய்= குழந்தை .
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
(குறிஞ்சிக் கடவுள்)
***
27.முருகன் பெண்ணின் வயிற்றில் பிறக்காமல் தீப்பொறி உருவில் பிறந்ததால் அக்கினி பூ ஹு என்றும் அழைப்பார்கள்.
28.கர்நாடக மாநிலத்தில் குக்கே சுப்ரமணியர் கோவிலில் எண்ணற்ற நாகர் சிலைகளுடன் முருகன் கோவில் உள்ளது தமிழ் நாட்டில் குன்று தோராடும் குமாரனாக பல குன்றுகளில் குடிகொண்டுள்ளான். அங்கெல்லாம் பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு சென்று வழிபடுகிறார்கள்.
***
Sydney Murugan Temple, Australia.
30.முருகன் எங்கெங்கு இருப்பான் என்று நக்கீரர் பாடுகிறார் ?
முருகன் இருப்பிடங்கள்
சிறு தினை மலரொடு விரைஇ, மறி அறுத்து,
வாரணக் கொடியொடு வயிற் பட நிறீஇ,
ஊர்ஊர் கொண்ட சீர் கெழு விழவினும், 220
ஆர்வலர் ஏத்த மே வரு நிலையினும்,
வேலன் தைஇய வெறி அயர் களனும்,
காடும் காவும், கவின் பெறு துருத்தியும்,
யாறும் குளனும், வேறு பல் வைப்பும்,
சதுக்கமும் சந்தியும், புதுப் பூங் கடம்பும்,
மன்றமும் பொதியிலும், கந்துடை நிலையினும்
–From Tirumurgaatruppadai
—Subham—
TAGS- part three, Hinduism through 500 Pictures in Tamil and English – படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-3 , முருகன், முப்பது விஷயங்கள்