Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மஹாகவி பாரதியார் : சில கருத்துக்கள்!
ச. நாகராஜன்
காலத்தை வென்ற மகாகவிகளுள் மகாகவி பாரதியாரும் ஒருவர்.
அவரது கவிதை நயம் பற்றிப் பல நூல்கள் வெளி வந்து விட்டன.
ஆனால் அவரைப் பற்றிய முழுத் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட வேண்டும்.
காலவரிசைப் படுத்தப்பட்ட மகாகவியின் படைப்புகள் – கவிதைகள், கட்டுரைகள், கதைகள், அவர் நடத்திய இதழ்களில் அவர் எழுதிய செய்திகள் ஆகியவை முறையாகத் தொகுக்கப்பட வேண்டும்.
இந்த முயற்சியை மேற்கொண்டவர்கள் பலர்.
அவர்களாலும் முழுமையாக அனைத்து படைப்புகளும் தொகுக்கப்படவில்லை.
தற்போதைய தமிழக அரசு இதை நிச்சயம் செய்யாது. ஏனெனில் இதனால் ஓட்டு அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை.
ஆகவே பாரதி சிந்தனையாளர்கள் இணைய வேண்டும்.
சமீபத்தில் வெளியான ஒரு புத்தகத்தில் பாரதியார் ராமரைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை என்ற குறிப்பைக் கண்டு சிரித்தேன். அவர் பாரதியாரைச் சரியாகவும் படிக்கவில்லை; மற்றவர்களுக்கு உண்மையையும் எடுத்துச் சொல்லவில்லை.
ஆகவே சரியாக பாரதியைப் படித்தவர்கள், புரிந்து கொண்டவர்கள் மட்டுமே இணைந்த குழு ஒன்று உருவாகுமா?
வருடவாரியாக அவரது படைப்புகள் உரிய ஆவணங்களைச் சரி பார்த்த பின் அதிகாரபூர்வமான தொகுப்பு வெளி வருமா?
பல பாரதி ஆர்வலர்கள் வெளி நாடுகளில் உள்ள நூலகங்களுக்கும் சென்று ஆவணங்களைச் சரி பார்த்து புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த வகையில் ஏராளமான பாரதி நூல்களின் தொகுப்புகள்
சேகரிக்கப்பட்டபோதிலும் அது போதுமானதாக இல்லை.
திரு ரா.அ.பத்மநாபனில் ஆரம்பித்து இன்று வரை பலரும் எழுதியுள்ள நூல்களை ஆய்வு செய்து பல தலைப்புகளில் நூல்களை வெளியிடலாம்.
பாரதியாரும் குடும்பமும்
பாரதியாரும் நண்பர்களும்
பாரதியாரின் முற்பகுதி வாழ்க்கை (எட்டயபுரம், காசி)
பாரதியாரின் புதுவை வாழ்க்கை
பாரதியாரின் சென்னை வாழ்க்கை
பாரதியாரும் பல்வேறு தலைவர்களும் (மகாத்மா காந்தி, திலகர் உள்ளிட்டோர்)
பாரதியாரும் அரவிந்தரும்
பாரதியாரின் கவிதைகள்
பாரதியாரின் கட்டுரைகள்
பாரதியாரின் கதைகள்
பாரதியாரின் நாடகங்கள்
பாரதியாரின் பத்திரிகைகள்
பாரதியாரின் பத்திரிகை மொழி பெயர்ப்புகள்
பாரதியாரின் இசை ஞானம்
பாரதியாரின் தமிழ் வளர்ச்சி பற்றிய முயற்சி
பாரதியாரின் பல்வேறு மொழிகளில் மொழிப் புலமை
பாரதியாரும் பாரதக் கவிஞர்களும்
பாரதியாரும் உலகக் கவிஞர்களும்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
மகாகவி பாரதியார் தோற்றம் 11 டிசம்பர் 1882
மறைவு 11 செப்டம்பர் 1921.
ஆண்டுகள் நூறுக்கும் மேலாக ஓடி விட்டன.
நல்ல குழு ஒன்று அமைந்து எதிர்கால சந்ததியினருக்கு அதிகாரபூர்வமான படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டால் அதுவே அவருக்கு நாம் செலுத்தும் மகத்தான அஞ்சலியாக அமையும்.
We come across these words of Birth and Death as ocean and crossing it to attain liberation, in the Bhagavad Gita for the first time which is over 5000 years old.
Then Kalidasa used this as a simile in the Raghuvamsa which is from the Sunga Vamsa period , first century BCE. Later Tiru Valluvar used this word in his Tirukkural; Valluvar not only used this, but also copied more things from the Gita. Then we hear it in Tiruupugaz of Arunagirinatha and composition of Saint Tyagaraja. There may be many more saints and poets who have used these words.
Samsarasagara in Hinduism symbolizes the endless cycle of birth and rebirth within the illusionary realm, portrayed as an expansive sea, representing the ongoing journey of the soul through various existences.
These whose thoughts are set on me , I straightaway deliver from the ocean of death bound existence, O Patha – 12-7
Another translation
O son of Prthaa, for them who have their minds absorbed in Me , I become, without delay, the Deliverer from the sea of the world which is fraught with death.
On meeting SampAti, the elder brother of slain jaTAyu, Hanuma gained the news of Seetha’s whereabouts, whereby he crossed the ocean, just as one having no attachment for worldly objects crosses the ocean of this worldly existence. [12-60]
***
Tiru Valluvar says in Tirukkural
The sea of births they alone swim
Who clench His feet and cleave to Him– Kural 10
Another translation
They swim the sea of births, the ‘Monarch’s’ foot who gain;
None others reach the shore of being’s mighty main.
(None can swim the great sea of births but those who are united to the feet of God.)
***
From Arunagirinathar’s Tiruupugaz
……… Meaning ……… by Sri Gopalasundaram from kaumaram.com
nilaiyAdha samudhdhiramAna samusAra thuRaikkaNin mUzhgi: I was drowned in the ocean of family life; an ocean whose vastness and depth can never be measured.
nijamAna dhenap pala pEsi: I used to make a lot of false statements which sounded like truth.
adhanUdE nedu nALum uzhaippuLa dhAgi: In the meantime, I put in long hours of physical labour for many days.
periyOrgaL idaik karavAgi: I used to hide myself from the company of respectable elders.
ninaivAl nin adith thozhil pENi thudhiyAmal: I never used to think of serving You or seeking Your feet.
thalaiyAna udaR piNi URi: Many major diseases attacked my body.
bava nOyin alaip palavEgi: (As I said about the ocean of family life), several waves of illnesses called the disease of birth swayed me!
chalamAna payiththiyam Agi thadumARi: I became an angry mad man and lost my balance.
thaviyAmal: I do not want to suffer like that any more.
piRappaiyu nAdi adhu vErai aRuththu: I want to contemplate on the origin of birth and to destroy its root cause, namely, desire.
unai Odhi thalameedhil pizhaiththidavE nin aruL thArAy: I want to sing Your glory and survive in this world by Your grace.
kaliyANa supuththiran Aga: You are always the great bridegroom
kuRamAdhu thanakku vinOdha: to VaLLi, the damsel of the KuravAs, in whose company You revel!
kavin Aru buyaththil ulAvi viLaiyAdi: You embrace her lovely shoulders and play with her romantically!
kaLi kUrum unaith thuNai thEdum adiyEnai: I seek the Your closeness as You rejoice in the company of VaLLi!
sukappada vEvai kadan Agum idhuk ganamAgu murugOnE: You have to make me experience happiness. It is not only Your duty but would also add to Your dignity, Oh MurugA!
palakAlum unaith thozhuvOrgaL maRavAmal thiruppugazh kURi: Those devotees of Yours, who sing Your glory without fail several times a day,
padimeedhu thudhith thudan vAzha aruLvELE: are blessed by You to live in Your company forever worshipping You!
sivalOkam enappari vERu padhiyAna thiruththaNi mEvu: People love to deem this place, ThiruththaNigai, to be the land of SivA in this world;
bavarOga vayidhdhiya nAtha perumALE.: and You have Your abode here, standing as the Curer of the disease of birth, Oh Great One!
***
Tyagaraja Kriti
raghu nāyaka, nī pāda yuga
rājīvamula nē viḍa-jāla śrī
O best among Raghus! Your pair of
lotus-feet, I cannot let go of.
Anupallavi
agha jālamula pāra tōli nannu
ādarimpa nīvē gati kādā śrī
To drive afar my accumulated sins
And care for me, aren’t you the only refuge?
Charanam
bhavasāgaramu dāṭalēkanē
palu gāsibaḍi nī marugu jēriti
avanijādhipa, śritarakṣaka,
ānandakara, śrī tyāgarājanuta
Unable to cross the worldly ocean,
After much pain, your shelter did I reach,
Husband of Earth’s daughter, Protector of those approaching you!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சம்சார சாகரம்/ பிறவிப் பெருங்கடல் என்று ஏன் பெயர்வந்தது ?
SAMSAARA
சம்சார சாகரம் என்ற சொற்களை முதலில் பயன்படுத்தியவர் கிருஷ்ண பரமாத்மா. பகவத் கீதையில் 12-7 அவர் இதை 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார். பின்னர் காளிதாசன் ரகு வம்ச 12-60 காவியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார். அதற்குப்பின்னர் வள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் பிறவிப் பெருங்கடல் என்று அதைத் தமிழாக்கி நமக்குச் சொன்னார் வள்ளுவர் பகவத் கீதையை மனப்பாடம் செய்து அப்படியே சொன்னதை பல குறள்களில் காண்கிறோம் தானம் தவம் என்று வார்த்தைகளை வரிசை பிசகாமல் கீதையிலிருந்து நமக்குத் தருகிறார் வள்ளுவர் .
குடும்ப வாழ்வினை சம்சார சாகரம்- பிறவிப் பெருங்கடல் என்று இந்துக்கள் ஏன் சொன்னார்கள்?
1. இகலோக வாழ்வும் எப்போதும் அலை வீசும் இடம்- அதாவது துன்பமும் இன்பமும் மாறி மாறி வரும்
2. கடல் போலவே குடும்ப வாழ்வு – ஆழம் தெரியாதது ; கங்கு கரை காண முடியாதது .
3. கடல் போல பயங்கர சுறாமீன்கள் நிறைந்தது
4.எளிதில் கடக்க முடியாதது; ஞானப்படகு (பகவத் கீதை 4-36) வேண்டும் அல்லது நீந்தத் தெரிய வேண்டும்; இது குறுகிய கடல் பகுதியில் மட்டுமே சாத்தியம்!
5. ஐந்தாவது, அலை ஓய்ந்து எப்படி சமுத்திர ஸ்நானம் செய்ய முடியாதோ அதுபோலத்தான் குடும்ப வாழ்வும்! அதை உணர்ந்து பக்தி மார்க்கத்தில்- நாம சங்கீர்த்தனத்தில்- ஈடுபட வேண்டும். அது கடல் போல இரைச்சலாகத்தான் இருக்கும் ; பரவாயில்லை
6. கடைசியாக கடலின் அழகினை அதற்கு வெளியே இருந்து ரசிப்பது போல ரசிக்கவும் செய்யலாம்; எப்போது?
சம்சாரக் கடலிலிருந்து வெளியே வந்தபோது!
7. விவேக சூடாமணியில், கடலினை ஆனந்த சாகரத்துக்கும் , கருணைக் கடலுக்கும் ஆதி சங்கரர் ஒப்பிடுகிறார் சந்நியாசியின் ஆசைகளாலாகிய நதிகள், கடலிலே ஐக்கியமாகிவிடும் கடலில் லிழுந்த ஆலங்கட்டி மழைபோல அது தனது தனித்தன்மையை இழந்து விடும் என்கிறார்
2) The course or circuit of worldly life, secular life, mundane existence, the world;
உலக வாழ்வு न स तत् पदमाप्नोति संसारं चाधिगन्छति (na sa tat padamāpnoti saṃsāraṃ cādhiganchati) Kath. 3.7; असासः संसारः (asāsaḥ saṃsāraḥ) Uttararāmacarita 1; Mālatīmādhava (Bombay) 5.3; संसारधन्वभुवि किं सारमामृशसि शंसाधुना शुभमते (saṃsāradhanvabhuvi kiṃ sāramāmṛśasi śaṃsādhunā śubhamate) Aśvad.22; or परिवर्तिनि संसारे मृतः को वा न जायते (parivartini saṃsāre mṛtaḥ ko vā na jāyate) Pañcatantra (Bombay) 1.27.
3) Transmigration, metempsychosis, succession of births. பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருதல்
4) Worldly illusion. நிச்சயமற்ற வாழ்வு
Samsarasagara in Hinduism symbolizes the endless cycle of birth and rebirth within the illusionary realm, portrayed as an expansive sea, representing the ongoing journey of the soul through various existences.
***
பகவத் கீதை என்ன சொல்கிறது?
तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् ।
भवामि नचिरात्पार्थ मय्यावेशितचेतसाम् ॥ १२-७॥
teṣāmahaṃ samuddhartā mṛtyusaṃsārasāgarāt
bhavāmi nacirātpārtha mayyāveśitacetasām 12-7
என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரண சம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன்.பகவத் கீதை 12-7
***
ரகுவம்ச காவியத்தில், காளிதாசன் என்ன சொல்கிறான் ?
ப்ரவ்ர்த்தா உபலப்தாயாம் தஸ்யாஹா சம்பாதி தர்சநாத்
மாருதி: சாகரம் தீர்ண: சம்சாரமிவ நிர்மம:
சம்பாதியைக் கண்டவுடன், சீதாதேவி பற்றிய செய்தியைக் கேட்டவுடன் அநுமன் , உலகப் பற்றில்லாத ஒருவன் சம்சாரக் கடலினை எவ்வாறு தாண்டுவானோ அப்படித் தாண்டினான்
On meeting sampAti, the elder brother of slain jaTAyu, Hanuma gained the news of Seetha’s whereabouts, whereby he crossed the ocean, just as one having no attachment for worldly objects crosses the ocean of this worldly existence. [12-60]
****
வள்ளுவர் செப்புவது என்ன?
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் -குறள் 10
இறைவனுடைய திருவடிகளை நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
***
அருணகிரிநாதர் உரைப்பது என்ன?
திருத்தணிகை திருப்புகழ்
நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி
நிசமான தெனப்பல பேசி …… யதனூடே
நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி
நினைவால்நி னடித்தொழில் பேணி …… துதியாமல்
தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி
சலமான பயித்திய மாகி …… தடுமாறித்
தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி
தலைமீதில் பிழைத்திட வேநி …… னருள்தாராய்
கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத
கவினாரு புயத்திலு லாவி …… விளையாடிக்
களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை
கடனாகு மிதுக்கன மாகு …… முருகோனே
பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்துடன் வாழ …… அருள்வேளே
பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு
பவரோக வயித்திய நாத …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
நிலையாத சமுத்திரமான … அகலம், ஆழம் இவ்வளவு என்று
காணமுடியாத பெரும் சமுத்திரம் போன்ற
சமுசார துறைக்கணின் மூழ்கி … சம்சாரம் ஆகிய நீர்த்துறையிலே
மூழ்கி,
நிசமானதெனப் பல பேசி … மெய் போன்ற பல பொய்களைப் பேசி,
அதனூடே நெடுநாளும் உழைப்புளதாகி … அந்த சம்சாரக்
கடலிலே, நீண்ட காலமாக உழைப்புள்ளவன் ஆகி,
பெரியோர்களிடைக் கரவாகி … பெரியோர்களின் கூட்டத்தில்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
10-12-2025 அஞ்சலி
அமரர் திரு சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி!
ச. நாகராஜன்
திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் 29-3-1944 அன்று பிறந்தார்.
10-12-2023 அன்று மறைந்தார்.
அவரது நினைவு நாளையொட்டி அவரைப் பற்றி இங்கு நினைவுகூரலாம்.
எளிமை, இனிமை, ஆன்மீக சேவை
திரு சீனிவாசன் அவர்களுடன் பழகியோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்கள் அனைவரும் கூறுவது அவரது எளிமை, இனிமை, ஆன்மீக சேவை என்பதைத் தான்.
படாடோபமான, ஆடம்பரமான வாழ்க்கையை விரும்பாமல் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர்.
விளம்பரத்தை விரும்பாவதர்.
அவரைச் சந்தித்த நூற்றுக்கணக்கானோரும் ஒருவர் இன்னொருவரிடம் கூறிய வாய்மொழி வார்த்தையாலேயே அவர் பால் ஈர்க்கப்பட்டனர்.
டெக்ஸ்டைல் பொறியாளராக மதுரை கோட்ஸில் பல வருட காலம் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் அவர்.
அதே சமயம் தினமும் கணபதி ஹோமத்தை காலையில் செய்து குருநாதர் ஆய்க்குடி ஸ்வாமிஜி கிருஷ்ணா அவர்களின் அருளையும், மஹாகணபதி அருளையும் பரிபூரணமாகப் பெற்றவர் அவர்.
இந்த தெய்வீக ஆற்றலால் ஒருவரைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றிய அனைத்தும் அவருக்குத் தெரிந்தது; வருங்காலமும் புரிந்தது.
ஆகவே தினமும் மதுரையிலும் சரி, பின்னால் அவர் சென்னையி குடியேறி வாழ்ந்தபோதும் சரி பலரும் அவர் வீட்டில் கூட்டமாகக் கூடி தங்கள் பிரச்சினைகளைக் கூறி தீர்வைக் கண்டு மகிழ்ந்தனர்.
வருவோருக்கு அவரது இல்லத்தினரின் உபசரிப்பும் காப்பியும் கிடைக்குமே தவிர அவர்களிடம் ஒரு பைசா கூட அவர் வாங்கியதில்லை.
ஆகவே இன்னும் அதிகமதிகக் கூட்டம் கூடலாயிற்று.
பன்முகப் பரிமாணம் கொண்ட அவர் திரு என்.சி. ஶ்ரீதரனுடன் இணைந்து பல்லாண்டு காலம் பல்வேறு நிறுவனங்கள், கல்லூரிகள், தனியார் சங்கங்கள் ஆகியவற்றிற்கு அழைப்பின் பேரில் சென்று உணர்வூக்கம் என்னும் மோடிவேஷன் உரைகளை ஆற்றினார்.
இதில் பயிற்சி பெற்றோரின் எண்ணிக்கை சுலபமாக ஒரு லட்சத்தைத் தாண்டும் எனலாம்.
ஜோதிடம், வாஸ்து ஆகிய துறைகளில் நிபுணர் என்பதால் அவரைத் தங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் செல்ல வருவோர் ஏராளம்.
அரசியல்வாதிகள், தலைவர்கள், திரைபப்ட நடிகர்கள், நடிகையர், கலைஞர்கள், பல்துறை நிபுணர்கள், சாமானியர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரை நாடிப் பயன் பெற்றனர்.
துபாய், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அவரைப் பார்க்க ஏராளமானோர் குழுமியது குறிப்பிடத் தகுந்தது.
அவரது ஹாஸ்ய உணர்ச்சி அனைவரும் போற்றும் ஒன்று.
ஜோக் அடிப்பதில் வல்லவர். தினமும் சுமார் ஐம்பது ஆண்டுகளில் அவர் சேகரித்த ஜோக் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளிலிருந்து எடுத்த கட்டிங்ஸ் பல பீரோக்களில் அடுக்கி வைக்கப்பட்டன. இதை கட்டிங் அண்ட் ஒட்டிங் (CUTTING AND PASTING) என்று கேலியாகச் சொல்வது வழக்கம்.
லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் பல முறை அவர் பங்கேற்றுள்ளார். அவரது புத்தகங்கள் http://www.Pustaka.co.in பதிப்பகம் மூலம் பிரசுரமாகியுள்ளன.
Srinivasan with his wife Rajalakshmi with Daffodils.
அனைவரது நட்சத்திரங்களையும் கேட்டு அவர்கள் நலனுக்காக விநாயக சதுர்த்தி அன்று அவர் பெரும் கணபதி ஹோமம் செய்வது வழக்கம்.
அவரைப் பற்றி நிறையக் கூறிக் கொண்டே போகலாம்.
இன்று அவரது நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்கி அஞ்சலி செய்வோமாக!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கஸ்மாலம்- பகவத் கீதையில் அர்ஜுனனைத் திட்டும்போது, கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பயன்படுத்திய சொல்; சென்னை ஆட்டோக்காரர்களின் வாயில் சர்வ சாதாரணமாகப் புழங்கும் ஸம்ஸ்கிருதச் சொல்; பொருள் :கஸ்மலம் = அழுக்கான, தூய்மையற்ற,பலவீனமான
Date: 29 December 2018: Post No. 5852
****
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கஸ்மாலம் வசவு பற்றி எழுதினேன் ; நேற்றிரவு அருணகிரிநாதரின் திருப் புகழைப் படித்த பொழுது அவர்தான் சென்னைக்காரர்களுக்கு இந்த வசை மொழியைச் சொல்லிக் கொடுத்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது .
கண்ண பரமாத்மா 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இதை ஸம்ஸ்க்ருதத்தில்தான் சொன்னார். மதராஸ்/ சென்னை காய்கறி வியாபாரிகள், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் , பிச்சைக்காரர்கள் வாயில் புழங்க யாரோ ஒருவர் தமிழில் சொல்லியிருக்க வேண்டும் இதோ அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலில் வரும் சொற்கள்:
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம்
கனவாலங் கூர்விழி மாதர்கள்
மனசாலஞ் சால்பழி காரிகள்
கனபோகம் போருக மாமிணை …… முலைமீதே
கசிவாருங் கீறுகி ளாலுறு
வசைகாணுங் காளிம வீணிகள்
களிகூரும் பேயமு தூணிடு …… கசுமாலர்
மனவேலங் கீலக லாவிகள்
மயமாயங் கீதவி நோதிகள்
மருளாருங் காதலர் மேல்விழு …… மகளீர்வில்
மதிமாடம் வானிகழ் வார்மிசை
மகிழ்கூரும் பாழ்மன மாமுன
மலர்பேணுந் தாளுன வேயரு …… ளருளாயோ
தனதானந் தானன தானன
எனவேதங் கூறுசொல் மீறளி
ததைசேர்தண் பூமண மாலிகை …… யணிமார்பா
தகரேறங் காரச மேவிய
குகவீரம் பாகும ராமிகு
தகைசாலன் பாரடி யார்மகிழ் …… பெருவாழ்வே
தினமாமன் பாபுன மேவிய
தனிமானின் தோளுட னாடிய
தினைமாவின் பாவுயர் தேவர்கள் …… தலைவாமா
திகழ்வேடங் காளியொ டாடிய
ஜெகதீசங் கேசந டேசுரர்
திருவாலங் காடினில் வீறிய …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
கன ஆலம் கூர் விழி மாதர்கள் மன சாலம் சால் பழிகாரிகள் …
பெருத்த, கொடிய விஷம் மிக்குள்ள கண்களை உடைய விலைமாதர்கள்,
மனத்தில் வஞ்சனையுடன் பசப்பி நடிப்பு வண்ணம் மிகுந்த பழிகாரிகள்.
கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே கசிவு
ஆரும் கீறுகி(ள்)ளால் உறு வசை காணும் காளிம வீணிகள் …
மிகுந்த போக சுகத்தைத் தரக் கூடியதும், தாமரை மொட்டுக்கு
ஒப்பதானதுமான மார்பின் மீதே அன்பு மிகுதிக்கு அடையாளமாக
கீறல்களாலும் கிள்ளுதலின் குறிகளாலும் பழிப்புக்கு இடம் தரும்
களிம்பைத் தடவும் வீணிகள்.
களி கூறும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் மனம் ஏல் அம்
பகவத் கீதை 2.2 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதருமை அர்ஜுனனே, உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன? வாழ்வின் மதிப்பை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்வதில்லை, அவமானத்தை கொடுக்கின்றன.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
part 40
item 246
Akanānūru verse 26 by Pāndiyan Kānapēreyil Thantha Ukkira Peruvazhuthi is the king who compiled Aka naanuuru . That means he was one of the last kings of Sangam Age. He has a Sanskrit name UGRA which is found in Tiru Vilaiyaadal Puranam as well. He is a contemporary of Rajasuyam Yaga performer ; also contemporary of Avvaiyar who was also present in the Rajasuyam Yaga. This king’s name helps us to calculate the periods of other kings.
247
Verse 26 has the usual stuff of Tamil men visiting prostitutes and the wives getting angry and then reaching a compromise through their children.
Pandyan king used one notable simile in the poem:
I softened like fine soil
which had been rained on heavily and ploughed
many times.
***
248
Akanānūru verse 27 by Mathurai Kanakkāyanār compares the pearls from Korkai with the teeth of a heroine/ woman in the poem. Whenever Pandyas are or their country are mentioned, poets always add pearls from the Pandya country. And there is some colour contrast in the poem too. Woman’s lips are coral red, teeth are like shining white pearls, her eyes with kohl have black lining, the elephants of Pandya king have white tusk and her eyes are like blue lily flowers.
…. your smile with bright teeth
in your coral-coloured mouth,
resembling pearls from the wide
shores of Korkai town that is
protected well by brave battling
Pandiyans who got white-tusked
elephants from the northern
Vēnkadam Hills.
How will they let him go? Your
kohl-lined eyes, that have ruined
the beauty of blue waterlily flowers
வெண்கோட்டு யானை – elephant with white tusks, அறத்தின் காக்கும் கொற்கை – Korkai city that they protect with justice, அம் பெருந்துறை முத்தின் அன்ன – like the pearls from its wide shores teeth ,இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – red mouth with bright teeth, coral-like red mouth with bright teeth, the beauty of (eyes) blue waterlily flowers
***
249
Akanānūru verse 28 composed by Pandiyan king Arivudainampi shows that Pandya kings were also good poets. Among the kings mentioned in the Sangam age , Pandya kings composed more poems than Chera and Choza kings. One must remember Pandyas were the kings who patronised the Tamil language in Madurai Academy. More poets have Madurai as prefix than any other town.
***
250
Akanānūru 29 composed by Vellādiyanār has two notable similes
Eyes like cut tiny mango eyes that bring happiness when seen, ……….beautiful like the two pieces of a ……….fragrant tiny mango cut with a knife,
***
251
Elephant- Mirage- Boat on ground without water
……..where an elephant that became thin, not knowing where to find water to drink, runs to a mirage only to find no water and lies down with sorrow, looking like a boat on land without water
……………….
***
252
Akanānūru 30 by Mudangik Kidantha Neduncheralāthan has some interesting lines that are appreciated by Tamil scholars
Will your pride be ruined if you come to the fragrant seashore grove where punnai tree buds look like unwashed pearls and ask us about our beauty and then leave?
பெருமை என்பது கெடுமோ, ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண் நறுங்கானல் வந்து, நும்
வண்ணம் எவனோ என்றனிர் செலினே?
***
253
Mystery about name!முடங்கிக் கிடந்த
Neduncheralāthan is one of the most famous Chera kings. We don’t know why he was given an epithet Mudangi Kidantha! It is a strange epithet. In other places he was praised as one who had conquered lands up to Himalaya.
The meaning of Mudangi Kidantha முடங்கிக் கிடந்த is “lie with knees drawn up and arms close to the body”. Did he compose this at the ripe old age? Or was he afflicted with rheumatism? No one has explained it properly as far as I know. Maybe it is a different Neduncheralathan.
To be continued………………………………..
Tags- Ancient Tamil Encyclopaedia ,Part 40, One Thousand Interesting Facts, item 253, Neduncheralathan, Pearl, Korkai, Ugra, Sanskrit word
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
3-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
சித்தர்களின் அஷ்டமா சித்திகள்! நிஜமாகவே சாத்தியமா? பிரெஞ்சுக்காரர் நேரில் கண்ட அற்புதம்!
ச. நாகராஜன்
ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் மஹரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானம் உலகெங்கும் ஒரு பெரிய பேசு பொருளானது.
அவரது தியான முறை மூலம் தரையிலிருந்து எழும்பி மேலே சென்றதாகப் பலரும் கூறினர். ஆனால் இதற்கான வலுவான ஆதாரங்கள் தாம் இல்லை.
ஆனால் பாரத தேசத்தின் சித்தர்களுக்கோ இது ஒரு எளிய கை வந்த கலையாகும்.
இதை நேரில் பார்த்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், பேச்சாளரும், பாரிஸ்டரும் நீதிபதியுமான லூயிஸ் ஜாகொல்லியட் (LOUIS JACOLLIOT) என்பவர் அந்தச் சம்பவத்தைத் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
சாரொல்லஸ் என்ற பிரான்ஸ் நாட்டு நகரில் 1837ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதியன்று ஜாகொல்லியட் பிறந்தார். பிரெஞ்சு காலனிகளில் மாஜிஸ்ட்ரேட்டாகப் பணியாற்றினார்.
வேதம்,உபநிடதம் ஆகிய எல்லாவற்றையும் படித்த அவருக்கு யோகா மீதும் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. சம்ஸ்கிருதத்தைப் படிக்க ஆரம்பித்தார். இந்தியாவின் மீது பெரும் மதிப்பைக் கொண்ட அவருக்கு
இந்தியா வர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. 1865 முதல் 1869 முடிய அவர் இந்தியாவில் இருந்தார்.
1866ம் ஆண்டு இந்தியாவில் அவருக்கு ஒரு நூதன அனுபவம் ஏற்பட்டது.
கோவிந்தசாமி என்ற ஒரு சித்தரை அவர் சந்தித்தார். இருவரும் யோகா சம்பந்தமாக பேசுவது வழக்கமானது.
ஒரு நாள் கோவிந்தசாமி ஜாகொல்லியட் உட்கார்ந்திருந்த வாரந்தாவிற்கு வந்தார். அப்போது வாயில் கதவுக்கு அருகே வந்து நின்றார் அவர்.
கைகளை மடித்து வைத்துக் கொண்ட அவர் ஒரு நிமிடம் யோசித்தார். பின்னர் மெதுவாக அவர் மேலே எழும்பினார். ஒரு அடி தூரம் அவர் மேலே எழும்பியதை ஜாகொல்லியட்டால் சரியாக அளக்க முடிந்தது.
கோவிந்தசாமிக்குப் பின்னால் பட்டு ரிப்பன்கள் சிவப்பு, தங்க நிறம், வெள்ளை நிறத்துடன் தொங்கிக் கொண்டிருந்தன. அவர் ரிப்பன்களில் ஆறாவது ரிப்பன் அளவு உயர்ந்தார். ஆகவே சரியாக ஒரு அடி என்பதை ஜாகொல்லியட்டால் நிர்ணயிக்க முடிந்தது.
கோவிந்தசாமி மேலே எழும்ப ஆரம்பித்தவுடன் சரியாக தனது கடிகாரத்தில் மணியைப் பார்த்தார் ஜாகொல்லியட். அந்தரத்தில் பத்து நிமிடம் நின்று கொண்டிருந்தார் கோவிந்தசாமி. ஐந்து நிமிடங்கள் அவர் அசைவற்று சிலை போல இருந்தார்.
பிறகு கீழே மெதுவாக இறங்கினார் அவர்.
இதை அகல்ட் ஸயின்ஸ் இன் இந்தியா (OCCULT SCINCE IN INDIA) என்ற தனது நூலில் எழுதியுள்ளார் ஜாகொல்லியட். இவர் பிரெஞ்சு மொழியில் எழுதிய ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. உலகில் ஏராளமானோர் விரும்பிப் படிக்கும் நூல்களாக விற்பனையில் சக்கை போடு போட்டன.
ரஷியாவில் இவரது நூல்கள் பிரபலமாயின. இவரது நூல்கள் 18 தொகுதிகளாக ரஷியாவில் 1910ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டன. ஆனால் கம்யூனிஸ அரசு ரஷியாவில் அமைந்ததிலிருந்து இவை தடை செய்யப்பட்டன. 1928 முதல் 1989 முடிய இவரது நூல்கள் அங்கு கிடைக்கவில்லை.
சம்ஸ்கிருத ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட ஜாகொல்லியட் கிருஷ்ணாவுக்கும் ஏசுவுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை எடுத்துக் காட்டினார்.
‘கிறிஸ்ணா’ என்பது கிறிஸ்து என்பதாக மாறியது. ‘கிறிஸ்னா’ என்பது கிருஷ்ணர் என்ற வார்த்தையை ஒட்டிப் பிறந்த சொல் தான் என்றார் இவர். பைபிளுக்கும் இந்திய புராண இதிஹாஸங்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை இவர் விவரித்தார்.
மனு ஸ்மிருதியை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இவரது குறிப்பிடத்தகுந்த நூல்களில் முக்கியமான ஒன்று திருக்குறள். பல முக்கியமான குறள்களை இவர் மொழிபெயத்து வெளியிட்டார்.
1890ம் ஆண்டு அக்டோபர் 30ம் நாளன்று அவர் பிரான்ஸில் உள்ள செயின்ட் திபால்ட் – டெஸ்- விக்னஸ் என்ற இடத்தில் மறைந்தார்.
இந்திய யோகிகளைப் பற்றி அதிகார பூர்வமாக ஆவணப்படுத்திய மேலை நாட்டோரில் குறிப்பிடத் தகுந்தவர் ஜாகொல்லியட்!
Every few years, deep in the mountains of Himachal Pradesh, the forests receive a visitor – not a forest officer, not a government team, but a deity carried on the shoulders of the people. Nearly 100 kilometres from Shimla, in a village named Bhog in the tehsil Theog, hundreds of villagers gathered as ‘Dodru Devta’, affectionately known as ‘Dev Nanu’, begin a month-long journey.
This sacred procession is far more than a religious ritual; it is an ancient ‘Environmental Audit’ in which damaged trees, polluted waterbodies or neglected cattle are noticed not through human inspection, but a divine power. For generations, this system has quietly upheld ecological discipline long before modern conservation laws took form.
Once every three years, villagers escort the deity across forests, grazing lands and farms, retracing the boundaries of their natural resources. According to tradition, the palanquin moves smoothly only when the environment is healthy. If a tree has been cut without permission, a stream polluted or a pasture overused, the palanquin halts. This pause indicates a violation of the deity’s nature rules. The violators responsible for the damage receive a symbolic punishment—‘dand’—reinforcing the belief and rules that the maintenance of the landscape is a shared duty.
Sangam Age Tamils called the spirits as ANANGU
These practices may seem unusual and unbelievable to many who might witness from outside, but for the Himachal culture and people, this tradition is an unwritten code deeply embedded in the state. Across Himachal Pradesh, ‘devtas’ are regarded not only as spiritual guides but as custodians of land, water and forests. (TAMIL- ANANGU) For generations, communities have followed these environmental norms set by their deities. These may include simple rules like offering the first harvest to birds, protecting water sources, protecting forests and not abandoning livestock. These customs evolved long before environmental laws and remain firmly upheld today.
Eighty-six-year-old Jamana Devi, one of Bhog’s oldest residents, has witnessed this tradition for more than eight decades. For her, the belief system is not just a festival but a lifeline. “Through these visits, the ‘Devta’ reminds us that he is always with us,” she said.
She recalled one of the earliest rules the ‘Devta’ set to protect the village’s drinking water. At a time when water was scarce and people often stepped into the community wearing slippers, the ‘Devta’ issued a strict command that no one would be allowed near the well with slippers, and the prasad would be prepared only with water drawn from that well. Gradually, the condition of the well improved, reinforcing the message of collective responsibility.
Jamana Devi also remembered how, in her childhood, any family or village dispute—no matter how small or serious—was taken to the ‘Devta’ for resolution.
As the procession begins, each household must send at least one member for the month-long yatra. Participation is non-negotiable. Throughout the journey, villagers arrange food and shelter for the ‘kardars’ and everyone accompanying the ‘Devta’. Neglecting these responsibilities, they believe, could anger the deity.
‘Dodru Devta’ is placed only on land considered sacred, marked by an old tree dedicated to him. Each village hosts the deity for a night, during which the ‘gur’, or medium, shares warnings and guidance. Villagers listen intently, trusting the deity to protect them from illness, calamities and misfortune—and to safeguard their forests. Even today, no one cuts a tree for house construction without seeking the permission of ‘Devta’.
Digvijay Singh Thakur, the ‘Adhisthak’ (who ensures rules are followed) of ‘Dodru Devta’, explained that the deity is viewed as the protector of natural resources. “The fields, forests and water sources flourish because of his blessings,” he said. The Devta travels with ‘gana’ (followers) named ‘Tunda’ and ‘Rakashan’, the latter believed to ward off evil forces.
village well
Historian Dr Surat Thakur noted that this practice extends across Himachal Pradesh. “From sacred lakes in Mandi to forest groves in Kullu and serpent shrines in Sirmaur, ‘Devta’ culture has created community-led conservation systems that have survived for centuries,” he said. At a time when the Himalayas face growing threats from construction, tourism and climate change, these traditions show how faith can sustain ecological balance.
In 2013, the World Wide Fund for Nature (WWF) and the G.B. Pant Institute of Himalayan Environment and Development, Almora, studied the role of religion in preserving local ecology and culture. Their documentation recorded 514 sacred groves. These groves—commonly known as Devata Vans—are protected spaces where no activity is permitted without the deity’s consent. These untouched forest patches hold old-growth trees and rare species, safeguarded for generations through faith rather than formal enforcement.
Speaking to The Statesman, Principal Chief Conservator of Forests Sanjay Sood said, “If it were possible, I would declare all forests as ‘Dev Vans’. People are remarkably sincere about this tradition, and we have never received complaints of illegal activity from these areas.”
He added that the traditional folklore surrounding ‘devis’ and ‘devtas’ has naturally woven ecological conservation into daily community life. During customary eco-visits, the deities are believed to inspect their territories, while villagers perform simple but meaningful rituals to honour water bodies, trees and forested land.
In these villages, the guardians of nature are not distant officials or modern policies, but the very gods who walk the land with their people. Through faith, reverence, fear and tradition, communities continue to protect forests in ways that modern conservation efforts often struggle to achieve.
(This article is an outcome of the Stories of Hope Media Fellowship by IUCN India under the Himalaya for the Future initiative.)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
DA words
டமருகம்
சிவன் கையில் உள்ள உடுக்கை ; இந்த உடுக்கை ஒளியிலிருந்து சம்ஸ்க்ருத தமிழ் ஒலிகள் பிறந்ததாகக் கூறுவார்கள்.
DAMARUKA
Kettle Drum of Lord Siva ; it is believed that Mahesvara Sutras came from the sound of Siva; they are the basic letters of Sanskrit language.
***
தனு
தானவர்கள் தாய் ; தானவர்களும் தைத்யர்களும் அசுரர்கள்
DANU
Mother of Danavas (demons)
***
தசக்ரீவன்
பத்து தலை ராவணனின் பெயர் ; க்ரீவ என்றால் கழுத்து .
DAS/A GREEVA
Ten Necked (Ten headed); Ravana of Lanka.
***
சுவாமி தயானந்த சரஸ்வதி (1824–1883),
குஜராத்தில் பிறந்தார் ; பெயர் மூல சங்கரர் ; துறவறத்தை ஏற்று இந்து சமாஜத்தைத்ச் சீர்திருத்துவதற்காக ஆர்ய சமாஜத்தைத் துவங்கினார் ; வேதங்களே அடிப்படையானவை; ஆகையால் உருவ வழிபாடு தேவையில்லை என்றார் ; ஜாதி முறையை எதிர்த்தார்; சடங்குகள், யாத்திரை போன்றவை தேவை இல்லை என்றார் நாட்டின் விடுதலைக்கும் குரல் கொடுத்தார் இவரது போதனைகள் சத்யார்த்தப் பிரகாசம் என்ற நூலில் உள்ளன .
Swami Dayanand Saraswati (1824–1883)
Founder of Arya Samaj (aarya samaajam). Born as Mula Sankara in Gujarat, he mastered Vedas and became an ascetic. He is one of the reformers of the Hindu society. His teachings are Belief in One Formless God (Ishwar),Vedas are the eternal, infallible source of knowledge, denounced the caste system based on birth, untouchability, and social discrimination. He condemned meaningless rituals, animal sacrifices and pilgrimages. Dayananda’s views were published in his famous work, Satyarth Prakash (The True Exposition). He was a patriot and inspired leaders like Lala Rajpat Rai.
***
DE words
தேவரிஷி
தேவலோகத்தில் வாழும் ரிஷிகள் ; நாரதர் அவர்களில் ஒருவர். பூலோகத்தில் முழு அளவுக்கு ஞானம் பெற்ற ரிஷி முனிவர்கள் இந்த நிலைக்கு உயர்த்தப்படுகிறரர்கள்
DEVA,DEVARISHI
Seers living in the Devaloka, that is the celestial region. Those seers who attained perfection are elevated to Deva loka. Narada is one of the Deva Rishis.
***
தேவகி
கிருஷ்ண பரமாத்மாவின் தாயார்; வசுதேவரின் மனைவி; கம்சனின் உறவினர்; இவளுக்குப் பிறக்கும் குழந்தை கம்சனைக் கொல்வான் என்ற ஆரூடம் இருந்ததால் கம்சன் , அவனுக்குப் பிறந்த குழந்தைகளையெல்லாம் கொன்றான். அவளை சிறையில் அடைத்தான். கிருஷ்ணர் பிறந்தபோது பல அற்புதங்கள் நடந்தன. அவரை வாசுதேவன் பாதுகாப்பாக யசோதாவிடம் ஒப்படைத்தான் ; கிருஷ்ணனைக் கொல்ல பல அசுரர்களைக் கம்சன் ஏவினான்; அவை வெற்றிபெறவில்லை
Devaki
Lord Krishna’s mother.
Daughter of Devaka and wife of Vasudeva . she gave birth to Krishna inside a prison . Kamsa, cousin of Devaki put her in jail because there was a prediction that her child would take away his life. But when Krishna was born he was taken to another place of safety to escape from the enraged Kamsa. All the attempts of Kamsa to kill Krishna failed and at the end Krishna himself killed Kamsa.
***
தேவவிரத
பீஷ்மரின் பெயர் (காண்க- பீஷ்மர்)
Devavrata
Another name of Bhisma.
***
தேவயானி
மகாபாரதம், ஆதி பருவத்திலும் மத்ஸ்ய புராணத்திலும் உள்ள ஒரு காதல் கதை. அசுரர்களின் குருவாகிய சுக்கிராச்சாரியார் அமிர்தசஞ்சீவனி என்ற உயிர் காக்கும் வித்தையைத் தெரிந்து வைத்திருந்தார். அதன் மூலம் இறந்தவர்களை மீண்டும் உயிர் பெறச்செய்ய முடியும். தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதிக்கு இந்த வித்தை தெரியவில்லை. இதனால் தேவர்கள் ,பிரகஸ்பதியின் மகனான கச்சன் என்பவனை சுக்கிராச்சாரியரிடம் சீடனாகச் சேரும்படி அனுப்பினார்கள். கச்சன், சுக்கிராச்சாரியாரிடம் சென்றான். சுக்கிராச்சாரியருடைய மக்கள் தேவயானி கச்சன் மீது காதல் கொண்டாள். அவன் தங்கள் எதிரியான பிரகஸ்பதியின் மகன் என அறிந்து கொண்ட அசுரர்கள் கச்சனைக் கொன்று அவனது உடலை புலிகளுக்கு உணவாகக் கொடுத்து விட்டார்கள். கச்சன் வராததைக் கண்ட தேவயானி தந்தை சுக்கிராச்சாரியரிடம் சென்று முறையிட்டாள். சுக்கிராச்சாரியார் தனது மந்திர சக்தியினால் கச்சனை உயிர் பெறச் செய்தார். மீண்டும் ஒரு முறை , அசுரர்கள் அவனைக் கொன்று, அவன் உடலை எரித்து அந்த சாம்பலை ஒரு பானத்தில் கரைத்து சுக்கிராச்சாரியர் அருந்தக் கொடுத்தார்கள். . தேவயானி மீண்டும் தந்தையிடம் முறையிட்டாள். தன் சக்தியினால் கச்சன் தன் வயிற்றில் இருப்பதை சுக்கிராச்சாரியர் அறிந்து கொண்டார். சுக்கிராச்சாரியார் யோசித்தார். அவர் தனது வயிற்றுக்குள் இருக்கும் கச்சனுக்கு அமிர்தசஞ்சீவனி மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார். பின்னர் அந்த மந்திர சக்தியினால் அவனை உயிர் பெறச் செய்தார். கச்சன் அவரது உடலைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தான். கச்சன் அமிர்தசஞ்சீவனி மந்திரத்தைச் சொல்லி அவரை மீண்டும் உயிர் பெறச் செய்தான். தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தேவயானி அவனிடம் கேட்டாள். அதற்கு அவன் “நீ என் குருவின் மகள். மேலும் நான் உன் தந்தை வயிற்றிலிருந்து வந்தேன். ஆகவே நீ எனக்கு சகோதரி போன்றவள். எனவே திருமணம் செய்ய முடியாது” என்று சொன்னான். நீ கற்றுக்கொண்ட வித்தை உனக்குச் சமயத்தில் மறந்து போகும்” எனச் சாபமிட்டாள். கச்சன் அவளிடம் “நீ தேவையில்லாமல் சாபம் போட்டுவிட்டாய். உன்னை ஒரு பிராமணனும் திருமணம் செய்ய மாட்டான். நீ நினைத்த எதுவும் வாழ்வில் நடக்காது” எனப் பதில் சாபம் போட்டான். இதற்கிடையில் தேவயானியை அரசனின் மகள் ஷர்மிஷ்டா , ஒரு வாக்குவாதம் முற்றவே, கிணற்றில் தள்ளிவிட்டாள் . அவ்வழியாக வந்த மன்னன் யயாதி அவளைக் கரம் பிடித்து வெளியே எடுத்தான். இதனால் அவனையே திருமணம் செய்துகொண்டாள்.
Devayani
Daughter of the brahmin priest Sukra. He was the teacher of Asuras/demons. He was the Guru of Danavas at the court of Vrishaparva. She fell in love with her father’s pupil Kacha. It was because of her that Sukracharya was obliged to teach him, Sanjivani Mantra through which the dead could be restored to life once again. Asuras, knowing that Kacha was Deva Guru Brihaspati’s son killed him twice, but he was restored to life by Sukracharya. One time he had to come out of Guru Sukracharya’s stomach with the help of Mrta Sanjivani mantra. When Devayani told him that she wanted to marry him, he refused saying that he was like a sister for him. Both parted but cursing each other. Meanwhile, Devayani had a quarrel with Sharmishta, king’s daughter. As a result, she was pushed into a well by Sharmistha. Yayati, King of another country, passed by the well and rescued her; later she became a legal wife of Yayati
***
தீபாராதனை
இறைவனுக்குத் தீபத்தைக் காட்டும் சடங்கு. பூஜைகளின் முடிவிலும்,யாக யக்ஞங்களின் முடிவிலும் கடவுளுக்கு நெய் தீபத்தைக் கட்டி உபசரிக்கும் சடங்கு இது; முன்னர் சூடத்தைக் காட்டி வந்தனர். தற்போது நெய் தீபம் மட்டுமே காட்டப்படுகிறது. தமிழ் நாட்டுக் கோவில்களில் காலையிலும் மாலையிலும் இது மிக விரிவாக நடைபெறுகிறது. பலவகையான தீபங்களைக் காட்டுவார்கள்; அவை பல வித வடிவங்களில் வெவ்வேறு எண்ணிக்கையுள்ள திரிகளுடன் ஒளிரும். முடிவில் அந்த தீபாராதனைத் தட்டினை பக்தர்களுக்குக் காட்டி பிரசாதமும் வழங்குவர். அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை இது நடைபெறும்.
DEEPA/ARADHANA
At the end of Pujas, Yaga, Yajnas, Arti with a lamp is shown to God. This is called Deepaaraadhanaa. Deepa is lamp. In the olden days camphor was used, nowadays only Ghee Lamp is shown in temples. In South Indian temples it is an elaborate ceremony in the morning and in the evening with bells ringing loudly. The temples have different types of lamps. They are not only differently shaped but also have more wicks. At the end it is shown to assembled devotees and Prasad is distributed.
***
DH words
தர்ம சாஸ்திரங்கள்
இந்து மத சட்ட புஸ்தகங்கள் ; எவைகளைச் செய்யலாம் எப்படிச் செய்யலாம் என்ற விதிகளைக் கூறும் நூல்கள்; இவை காலத்துக்கு காலம் மாறும்; தேசத்துக்குத் தேசம் மாறும்; ஆகையால் பல ரிஷிகள் இவைகளை வெவ்வேறு கால கட்டங்களில் எழுதினார்கள் .ஸ்ம்ருதி என்று சம்ஸ்க்ருதத்தில் பெயர்; அதாவது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை மனு, யாக்ஞவல்க்யர் உள்பட சுமார் இருபது ரிஷிகள் இவைகளை எழுதியுள்ளனர். ஆசார விதிகள், சட்டங்கள்; பிராயச்சித்தம் முதலியவற்றை விளக்குகின்றன
Dharma Sastra (saastra)
Hindu Law Books; also known as Smritis. Laws change according to time and place of living. So Hindus have over twenty popular Smritis; most popular is Manu Smriti; all kings declare that they rule according to Manu’s rule. These books say the Dos and Don’t’s for Hindus; They guide Hindus regarding performing rituals. Famous Law books- Manu Smriti; Yajnavalkya Smriti.
Generally they have three parts: 1.Achara (aachaara)-Rules of conduct and practice; 2.Vyavahaara- Judicature; 3.Praayachitta- Penance, atonement (exit strategy)
–subham—
Tags- Devayani, Dharma Sastras, Deva Rishi, தேவகி , கச்ச தேவயானி கதை