சிட்னி கற்பக விநாயகர் ஆலயத்துக்கு விஜயம் (Post No.15,372)

Written by London Swaminathan

Post No. 15,372

Date uploaded in Sydney, Australia –  29 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சிட்னியில் ஹோம்புஷ் வெஸ்ட் பகுதியிலுள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்துக்கு இன்று வியாழக்கிழமை 29 -1-2026  அன்று சென்றோம். பெரிய மண்டபத்தில் முக்கிய சந்நிதியில் கணேசர் வீற்றிருக்கிறார். மாம்பழ விழா  நடைபெற்று கொண்டிருப்பதால் குருக்கள்மார்கள் அதில் மிகவும் ஈடுபாட்டிருந்தார்கள்; த்வஜ ஸ்தம்பத்துக்கு அலங்காரமும் பூஜையும் நடந்து கொண்டிருந்தது.

இந்தக்க கோவில் இலங்கைத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருப்பதால் நிறைய பேர் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்கள். கோவிலுக்குள் சுமார் ஐம்பது பேர்களும் வந்து செல்வோரின் எண்ணிக்கை சுமார் 25 பெரும் இருந்தனர் . நாயனம் மேளம் வாசிப்போர் இன்னிசையை முழங்கி மண்டபத்தை அதிர வைத்திருந்தார்கள்.

விநாயகர் சந்நிதிக்கு வலது புறம் சிவலிங்கத்துடன் மீனாட்சி சந்நிதியும் அதையடுத்து முருகன் நடராஜர் சந்நிதிகளும் இருந்தன எதிர்ப்புறத்தில் நவக் கிரக சந்நிதியும் அமைந்திருந்தது.

கோவிலில் நாலைந்து அர்ச்சகர்கள் இருந்தார்கள். கோவிலொடு மாலை நேரத்தில் மட்டும் இயங்கும் ஒரு உணவு விடுதியும் இருக்கிறது. கோவிலில்  நடக்கும்  மாம்பழத்  திருவிழா  பற்றிய  துண்டுப்  பிரசுரமும்  கிடைத்தது . ஜனவரி 23 ம் தேதி துவங்கி பிப்ரவரி மூன்றாம் தேதி வரை விழா நடப்பதையும் அன்றாடம் நடக்கும் பூஜைகளையும் விவரமாக அழகாக அச்சிட்டிருக்கிறார்கள்.

தேர்த் திருவிழா அன்று தெரு வீதிகள் வழியே தேர் வரும் என்பதையும் விளம்பரப்படுத்தி இருந்தார்கள்;  விழா நடக்கும் எல்லா நாட்களிலும் மதிய நேரத்தில் அன்னதானமும் வழங்குகிறார்கள் . இரவு பூஜை முடிந்தவுடன்  பிரசாதம் உண்டு.கோவில் நிகழ்ச்சிநிரலின் படி

23 -1-2026  கொடியேற்றம்

24 -1-2026  தைலாப்பியங்கோற்சவம்

26 -1-2026  பக்தமுத்தி பாவனோற்சவம்

27 -1-2026  வசந்தோற்சவம்

28 -1-2026  மாம்பழத் திருவிழா

29 -1-2026  வேட்டைத் திருவிழா

30 -1-2026  சப்பரத் திருவிழா

31 -1-2026  தேர்த்  திருவிழா

1 -2-2026  தீர்த்தத் திருவிழா

2 -2-2026  பூங்கவனம் / மீனாட்சி திருக்கல்யாணம்

3 -2-2026 வைரவர் மடை.

கோவிலின் முகவரி 

Temple Address

123, The Crescent , Homebush West, New South Wales 2140

Phone 02 9746 9590

http://www.vinayakar.org.au

மாம்பழத் திருவிழா  என்றால் என்ன ?

சிவ பெருமானிடம் நாரதர் கொடுத்த மாம்பழத்தை, கத்தி கொண்டு வெட்டாமல் யாருக்காவது கொடுக்கலாம் என்றவுடன், சிவ பெருமான் சொன்னார் : யார் உலகத்தை முதலில் வலம் வருகிறாரோ அவருக்கே பழம்!

இதைக் கேட்டவுடன் விநாயகர், தாய் தந்தையரே உலகம் என்பதை உணர்ந்து பார்வதியையும் பரமசிவனையும் வலம் வந்து வணங்கினார்.  முருகனோ மயில் மீது புறப்பட்டு உலகைச் சுற்றி தாமதமாக வந்தார். ஆகையால் பிள்ளையாருக்கே மாம்பழம் கிடைத்தது .

இந்த விழாவை இலங்கைத் தமிழர்கள் நடத்தும் கோவில்கள் வெகு விமரிசையாகி கொண்டாடிவருகின்றன. ஒருவருக்கு தாய்-தந்தையரே உலகம் என்பதை வலியுறுத்தும் கருத்துள்ள விழா இது . இந்த விழாவின்போது எல்லா கடவுளரும் வீதி வலம் வருவதோடு  பூஜைகளும் பிற யாக யக்ஞங்களும் நடைபெறும்.

–subham—

Tags – மாம்பழத் திருவிழா, சிட்னி, கற்பக விநாயகர் கோவில், லண்டன் சுவாமிநாதன், விஜயம்  

Leave a comment

Leave a comment