Post No. 15,393
Date uploaded in Sydney, Australia – 4 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுந்தர மூர்த்தி நாயனார் நெல் மலை பெற்ற அற்புதம்
கற்ற தமிழ்ப் புலவனுக்குமே மகிழ்வுற்று ஒரு பொற் கொடி
களிக்கவே பொரு கற்பனை நெல் பல அளித்த காரணன்
அருள்பாலா … நன்கு கற்ற தமிழ்ப் புலவனாகிய சுந்தரர் மீது
மகிழ்ச்சி பூண்டு ஒரு பொன் கொடி போன்ற அவர் மனைவி
(பரவையார்) களிப்புற, தாம் இட்ட கட்டளைப்படி வந்து குவிந்த
நெல் மலையை* அளித்த மூலப் பொருளான சிவ பெருமான்
அருளிய குழந்தையே, அந்த நெல்லை அவர் விரும்பிய வாறு சிவா பூத கணங்கள் அவர் விரும்பிய இடத்துக்கு கொண்டு சேர்த்தது.
***
ஞானப்பால் அருந்திய இருவர்
நுகர்வித்தகமாகும் என்று … இந்த ஞானப்பாலை அருந்து, இதுதான்
பேறறிவு தரும் என்று
உமை மொழியிற் பொழி பாலை யுண்டிடு … உமாதேவி சொல்லி
அருளி சுரந்து ஈந்த ஞானப் பாலினை அருந்திய
நுவல்மெய்ப்புள பாலன் … வேதங்களெல்லாம் போற்றுகின்ற
புகழையுடைய திருக்குமாரன்*
என்றிடும் இளையோனே … இவன்தான் என ஏத்தும் இளைய
குமாரனே,
உமாதேவியின் ஞானப்பாலாகிய சிவஞானத் திரு அமுதை
உண்டதால் முருகனை ஞான பண்டிதன் என்பர்.; முருகனே திரு ஞான சம்பந்தராக அவதரித்ததாக அருணகிரிநாதர் பல பாடல்களில் பாடுவதால் ஞானப்பால் அருந்திய சம்பந்தரைக் குறிப்பிடுவதாகக் கருதலாம்.
***
சிவகாமி மகன்
மங்கை மோகசிங்கார ரகு ராமரிட தங்கை … மங்கை,
வசீகரமும் அழகும் கொண்ட ரகுராமனின் (திருமாலின்) தங்கை,
சூலியங் காளியெமை யீணபுகழ் மங்களாயி …
சூலமேந்தியவள், அழகிய காளி, யாம் அனைவரையும் ஈன்ற
புகழ் நிறைந்த மங்களகரமான தாய்,
சந் தானசிவ காமியுமை யருள்பாலா … சந்தான விருட்சம்
போல் வேண்டிய வரங்களைத் தரும் சிவகாமி, அந்த உமாதேவி
அருளிய பாலனே,
****
கடல் குடித்த அகத்திய முனிவர்
புடவிக்கு அணி துகில் என வளர் … பூமிக்கு உடுக்கப்படும்
ஆடை எனப் பரந்துள்ள
அந்தக் கடல் எட்டையும் அற குடி முநி … அந்த எட்டுத்
திக்குகளிலும் உள்ள கடல்களை ஒட்டக் குடித்த அகத்திய முனிவர்,
***
செம் தமிழில் உனையே வணங்கு குரு நாதர் தென்றல்
வரை முநி நாதர் அன்று கும்பிட நல் அருளே பொழிந்த …
செந்தமிழில் (பாடல்கள் பாடி) உன்னையே வணங்கும் குரு நாதராகிய,
பொதிய மலை முனிவர் அகத்தியர் அன்று கும்பிட, நல்ல அருளை நிரம்பப் பொழிந்த,
தென் பழநி மலை மேல் உகந்த பெருமாளே. … அழகிய பழனி
மலையின் மேல் விரும்பி வீற்றிருக்கின்ற பெருமாளே.
***
மருத மரங்களின் கதை
பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற
பரம பத நண்பர் அன்பின் மருகோனே … அன்புடன் மகிழ்ந்து
வணங்கும் மருத மரங்களின் இடையே தவழ்ந்து நின்றவரும்*, பரம
பதத்தில் இருக்கும் நண்பருமான திருமாலின் அன்பு மிகுந்த மருகனே,
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க
பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே. … தாமரையின் மீது
வண்டுகள் ஒலிக்கின்ற பல சுனைகள் விளங்குகின்ற பரிசுத்தமான பழனி மலையில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே.
* குபேரன் புத்திரர்களான நளகூபரன், மணிக்ரீவன் என்ற இருவரும் மது அருந்தி, ஜலக்ரீடை செய்து, நாரதர் முன் மரம் போல் நிற்க, அவர் நீங்கள் மரமாகவே நிற்பீர் என்று சபித்தார். ஆகவே இருவரும் மருத மரங்கள் ஆயினர். யசோதையால் உரலில் கட்டப்பட்ட கண்ணன் அவ்வுரலை இழுத்துக் கொண்டு தவழ்ந்து மரங்களுக்கு இடையே செல்ல, மரங்கள் முறிந்து விழுந்து, சாபம் நீங்கினர்.
***
மனக் கவலை ஒழிய வேண்டும்
மனக்கவலை யேது மின்றி … மனத்தில் சிறிதும் சஞ்சலம் இல்லாமல்,
உனக்கடிமை யேபு ரிந்து … உனக்குத் தொண்டு செய்யும் பணியையே பூண்டு,
வகைக்கு மநு நூல் விதங்கள் தவறாதே … வகையாக அமைந்துள்ள மநு நீதி நூல் முறைகளிலிருந்து தவறாமல்,
வகைப்படி மனோரதங்கள் தொகைப்படியினால் இலங்கி …
நல்ல முறையில் மன விருப்பங்கள் எண்ணிய விதத்திலேயே அமைந்து,
மயக்கமற வேதமுங்கொள் பொருள்நாடி … சந்தேகம்
அற்றுப்போகும்படி வேதத்தின் மெய்ப்பொருளை ஆராய்ந்து உணர்ந்து,
வினைக்குரிய பாதகங்கள் துகைத்(து) … வினையைக் கொடுக்கும் பாவச்செயல்களை அறவே அகற்றி,
உவகை யால் நினைந்து … ஆனந்தத்துடன் உன்னைத் தியானித்து,
மிகுத்தபொருள் ஆகமங்கள் முறையாலே … மேலான பொருளைக் கொண்ட ஆகமங்களில் விதிக்கப்பட்ட முறையின்படி,
வெகுட்சிதனையே துரந்து … கோபம் என்பதையே முற்றிலும் விலக்கி, களிப்பினுடனே நடந்து … மகிழ்ச்சியுடன் கடமைகளைச் செய்து நடந்து,
மிகுக்கும் உனையே வணங்க … யாவர்க்கும் மேம்பட்டு விளங்கும் உன்னையே வணங்குதற்கு வரவேணும் … (வேண்டிய அருளைத் தர) நீ வரவேண்டும்.
***
உமாதேவி புகழ்
செக முழுது ஒக்கப் பயந்த சங்கரி அடியவர் சித்தத்து
உறைந்த சம்ப்ரம சிவன் ஒரு பக்கத்து உறைந்த மங்கை
சு மங்கை … உலகம் முழுதும் பெற்ற சங்கரி, அடியார்களுடைய
உள்ளத்தில் உறைகின்ற சிறப்பு வாய்ந்த சிவபெருமானுடைய
ஒரு பாகத்தில் உறைகின்ற மங்கை, நல்ல மங்கை,
நீடு திகழ்வன பச்சைப் பசங்கி அம்பண(ம்) கரதலி கச்சு
உற்று இலங்கு கொங்கையள் திரு அருள் நல் பொன்
பரந்திடும் பரை அண்டம் மீதே பகல் இரவு அற்றிட்டு
உயர்ந்த அம்பிகை … பெரிதும் விளங்கும் பச்சைப் பசேல் என்ற
நிறம் உடையவள், யாழ் ஏந்திய கரத்தினள், கச்சு அணிந்த
மார்பகங்களை உடையவள், திருவருள் என்னும் நல்ல செல்வத்தைப்
பரப்பி உலகைப் பாலிக்கும் பராசக்தி, அண்டங்களுக்கு அப்பால்
பகலும் இரவும் அற்றுப் போன உயர்ந்த இடத்தில் உள்ள அம்பிகை,
திரி புரை முற்றிட்டு இரண்டொடு ஒன்று அ(ல்)லர்
பரிவுற ஒக்கச் செய்யும் பரம்ப்ரமி அன்பு கூரும் பதிவ்ரதை
மிக்கச் சிரம் தெரிந்து அருள் பகிரதி வெற்பில் பிறந்த
பெண் தரு … திரிபுரங்களை அழித்தவள், மும்மூர்த்திகளுக்கும்
உயர்ந்தவளாய் மூவரும் அல்லரான சிவபெருமான் அன்பு
கொள்ளுபடி தவம் செய்த பர தேவதை, அன்பு மிக்க பதிவிரதை,
சிறந்த (சிவபெருமானுடைய) தலையில் விளக்கமுற்று அருளும்
கங்கா நதி உற்பத்தியாகும் (இமய) மலையில் உதித்த
பெண்ணாகிய பார்வதி தந்து அருளி குழந்தையே,
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் தம்பிரானே. …
பழனி மலை மீது விளங்கி நின்றருளும் தனிப் பெருந் தலைவனே.
* இப்பாடலில் உமா தேவியின் புகழ் கூறப்பட்டுள்ளது. மும்மூர்த்திகளுக்கும்; மேலானவள் என்பது குறிக்கத் தக்கது. மும்மூர்த்திகள் = பிரமன், திருமால், ருத்திரன். சிவபெருமான் இவர்களுக்கு அப்பாற்பட்டு பார்வதியின் பதியாகத் திகழ்கிறார்.
***
யோக சாஸ்திர விளக்கம்
மூலம் கிளர் ஓர் உருவாய் நடு … மூலாதாரத்தினின்றும் மேற்பட்டு எழுகின்ற ஓர் உருவமாக, உடலின் நடுவில்
நாலு அங்குலம் மேல் நடு வேர் இடை மூள் பிங்கலை … நான்கு
அங்குல அளவின் மேல், சுழுமுனை, இடை கலை, தோன்றும் பிங்கலை* என்னும்
நாடி ஒடு ஆடிய முதல் வேர்கள் மூணும் … நாடிகளுடன் கலந்து,
முதல் வேர்களாகிய இந்த மூன்று நாடிகளும்
பிரகாசம் அதாய் ஒரு சூலம் பெற ஓடிய வாயுவை … (ஒவ்வொரு
நாடியின் புறமும்) பிரகாசமான ஒளியைப் பரப்பி, ஒப்பற்ற சூலாயுதம் போல ஓடுகின்ற பிராண வாயுவை
மூலம் திகழ் தூண் வழியே அளவிட ஓடி … முதுகுத் தண்டிலுள்ள
சுழு முனை வழியில் கணக்காக ஓடச்செய்து, (பின்னர் அது)
பாலம் கிளர் ஆறு சிகாரம் ஒடு ஆரும் … (நெருப்பாறு, மயிர்ப்பாலம்
என்னும்) நெற்றியில் விளங்கும் ஆறாவது ஆதாரமாகிய ஆக்ஞை
நிலையில்** (சிவனைக் குறிக்கும்) சிகார அக்ஷரத்தோடு பொருந்தி நிற்கும்.
சுடர் ஆடு பராபர பாதம் பெற ஞான சதாசிவம் அதின்
மேவி … நிறைந்து (எல்லா நிலைகளிலும்) ஒளி வீசுகின்ற பரம் பொருளின் திருவடிகளைப் பெறுதற்கு ஞானமயமான சதாசிவ நிலையை அடைந்து,
பாடும் தொனி நாதமும் நூபுரம் ஆடும் கழல் ஓசையிலே …
(அவ்விடத்தில் கேட்கப்படும்) பாடல் ஒலியின் நாதத்திலும் சிலம்புகளின் கழல் ஒலியிலும்
பரிவாகும்படியே அடியனையும் அருள்வாயே … அன்பு
பொருந்தும்படியாக அடியேனுக்கு அருள் புரிவாயாக.
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:
நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் ‘பூரகம்’ என்றும், வெளிவிடும் காற்றுக்கு
‘ரேசகம்’ என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு ‘கும்பகம்’ என்று
பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட ‘ஆதாரங்கள்’ (நிலைகள்,
சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் ‘பிரம
கபால’த்தில் உள்ள ‘ஸஹஸ்ராரம்’ (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும்.
இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும்
ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் ‘மூலாதார’த்தை வந்து அடையும். இந்த
ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று ‘மண்டல’ங்களும் (அக்கினி,
ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து ‘நாடி’களும் (இடைகலை, பிங்கலை,சுழுமுனை முதலியன) உள்ளன.
‘இடைகலை’ பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.
‘பிங்கலை’ பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம். ‘சுழு முனை’ இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.
‘சுழு முனை’ ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. ‘இடைகலை’யும், ‘பிங்கலை’யும்ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.
சுவாச நடப்பை ‘ப்ராணாயாமம்’ என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆதாரம்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம்,
விசுத்தி, ஆக்ஞா, பிந்து சக்கரம், துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,
பிரமரந்திரம்)
***
இக பர செளபாக்கியம் அருள்வாயே
வசனமிக ஏற்றி … உருவேற ஏற மிகவும் ஜபம்செய்து
மறவாதே … (அந்த ஜபத்தால்) உன்னை மறவாமல் இருந்து,
மனது துயர் ஆற்றில் … என் மனம் துயரம் தரும் வழிகளில்
உழலாதே … அலைந்து திரியாதிருக்கவும்
இசைபயில் … மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்கின்ற
ஷடாட்சரம் அதாலே … ஆறெழுத்து மந்திரம் (சரவணபவ)
தரும் பயனாலே
இகபரசெள பாக்யம் … இம்மைக்கும் மறுமைக்கும் நல்வாழ்வை
அருள்வாயே … அருள் புரிவாயாகTo be continued………………………..
tags- திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்- Part 10 , மருத மரங்களின் கதை, யோக சாஸ்திரம்