

Post No. 15,401
Date uploaded in Sydney, Australia – 7 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்– Part 13
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 13
***
சுவாமிமலை திருப்புகழ் பாடல்கள்
கனவுகள் பற்றிய உண்மை
கனாவில் விளையாடுங் கதைபோலும் … கனவில் தோன்றிய
விளையாட்டு விழித்தால் மறப்பது போலும்,
இடாதுபல தேடுங் கிராதர்பொருள்போல் … கொடுக்காமல்
பலப்பல தேடும் கொடியவர் பொருள் போலும்,
***
அருணகிரிநாதரின் பணிவு
அடியேனு ரைத்த புன்சொல் அதுமீது நித்தமும் … யான்
சொல்லுகின்ற இந்தப் புல்லிய சொற்கள் மீதும் தினமும்
தணருளே தழைத்து உகந்து வரவேணும் … குளிர்ந்த உன்
திருவருளைப் பாலித்து நீ மகிழ்ச்சியுடன் வரவேண்டும்.
***

ஓம்காரத்தில் ஒடுங்க / லயிக்க அருள்புரி
காமியத் தழுந்தி … ஆசைப்படும் பொருள்களில் அழுந்தி ஈடுபட்டு
யிளையாதே … மெலிந்து போகாமல்,காலர்கைப் படிந்து … யம தூதர்களின் கைகளிற் சிக்கி
மடியாதே … இறந்து போகாமல்,
ஓமெழுத்தி லன்பு … ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு
மிகவூறி … மிகவும் ஏற்பட்டு,
ஓவியத்தி லந்தம் … யான் சித்திரம் போன்ற மோன நிலை முடிவை(அடையஅருள்வாயே … அருள்வாயாக.
***
போர்க்களக் காட்சிகள்
தசை உணவு தனின் மகிழவிடு பேய் நிரைத் திரள்கள்
பலகோடி திமிதமிட … சதைகளாகிய உணவில் மகிழ்ச்சி
கொள்ளும்படி பேயின் வரிசைக் கூட்டங்கள் பல கோடிக்கணக்கில் பேரொலி எழுப்பவும்,
நரி கொடிகள் கழுகு ஆட ரத்த வெறி வயிரவர்கள் சுழல ஒரு தனி ஆயுதத்தை விடு திமிர தினகர … நரிகள், காகங்கள், கழுகுகள் இவை கூத்தாடவும், ரத்த வெறி கொண்ட பயிரவர்கள் சுழன்று திரியவும், ஒப்பற்ற வேலாயுதத்தை விட்ட, அஞ்ஞான இருளைப் போக்கும் சூரியனே,
***
சிவனின் கால்கள் தீப்போல சிவப்பு நிறம் உடையவை
நமனை உயிர்கொளும் அழலின் இணைகழல் … யமனின்
உயிரை எடுத்த நெருப்பை ஒத்த அடியும்*,
நதிகொள் சடையினர் குருநாதா … கங்கைநதியைத் தாங்கிய
சடையும் உடைய சிவனின் குருநாதா,
(மார்க்கண்டேயனுக்காக யமனது உயிரை சிவபெருமான் காலால் உதைத்து எடுத்த காலபைரவ மூர்த்திக் கோலத்தை திருக்கடையூரில் காணலாம்.)
***
எட்டு வகைப் பறவைகளின் ஒலி எழுப்பும் விலைமாதர்கள்
மயில் காடை கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணியப் புள் வகைக் குரல் கற்று இகல் கோல விழிக் கடை இட்டு மருட்டிகள் … மயில், காடை என்னும் பறவை, குயில், அழகிய புறாவுடன், கோழி, காட்டுப் பறவைகளின் வகை வகையான குரல்களைக் கற்று அவ்வொலிகளை* வெளிப்படுத்தி, பகைமையைக் காட்டும் அழகியவிழி அம்பைச் செலுத்தி உள்ளத்தை மயக்குபவர்கள்.
………………………..
மா மரம் ஒத்து வரிக்குள் நெருக்கிய சூரனை வெட்டி
நிணக் குடலைக் கொடி வாரண மெச்ச அளித்த அயில்
குக … மாமர வடிவைக் கொண்டு கடலுக்குள் நெருக்கி நின்ற சூரனை வெட்டி அழித்து அவனுடைய மாமிசக் குடலை தனது கொடியிலுள்ள அக்கினி** மகிழும்படி கொடுத்த வேலை ஏந்திய குகனே,
கதிர் காம மா மலையில் பழநிப்பதியில் தனி மா கிரியில் தணிகைக் கிரியில் பர மா கிரியில் திரை சுற்றி வளைத்திடும் அலைவாயில் … கதிர்காமம் என்ற சிறந்த மலையிலும், பழனியிலும், தனிச்சயம் என்னும் தலத்திலும், திருத்தணி மலையிலும், திருப்பரங் குன்றம் என்னும் சிறந்த மலையிலும், அலைகள் சூழ்ந்து வளைந்துள்ள அலைவாய் என்கின்ற திருச் செந்தூரிலும்,
ஏம வெயில் பல வெற்பினில் நல்பதினாலு உலகத்தினில் உற்று உறு பத்தர்கள் ஏது நினைத்தது மெத்த அளித்து அருள் இளையோனே … இன்பம் தரும் ஒளி வீசும் பல வேறு மலைகளிலும், நல்ல பதிநான்கு உலகங்களிலும் பொருந்தி இருக்கின்ற பக்தர்கள் எது நினைத்தாலும் அவற்றை நிரம்பக் கொடுத்து அருளும் இளையவனே,
ஏரக வெற்பு எனும் அற்புத மிக்க சுவாமி மலைப் பதி
மெச்சிய சித்த … திருவேரகம் என்று சொல்லப்படும் அற்புதம் நிறைந்த சுவாமி மலை என்னும் ஊரில் விரும்பி இருக்கின்ற சித்த மூர்த்தியே,
இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் பெருமாளே. …
ராஜத குணம் நிறைந்தவளாகிய பார்வதி ஈன்றருளின பெருமாளே.
* புட் குரல்கள் = காமக் கன்னியர் கண்டத்தில் உண்டாகும் எண் வகை ஒலிகள்.
மயில், புறா, அன்னம், காடை, நாரை, குயில், கோழி, வண்டு என்பன.

முருகனின் கொடிகளின் கதைகள்
** அக்கினி பகவான் முருகவேளின் தேர்க் கொடியாக அமைந்தான். ஆதலின், சூரன் ஒழிந்தான் என்று அவன் மெச்ச, சூரனின் நிணக் குடல் நெருப்புக்கு
இரையாயிற்று எனப் பொருள்படும். சூரன் இறந்த பின்தான் அவனது உடல் மயிலாகவும், சேவலாகவும் பிரிந்து முருகன்வசம் அடைக்கலம் ஆனது. பின்பு
முருகனது கொடியில் அக்கினிக்குப் பதிலாக சேவல் வீற்றிருந்தது.
***
அரை நிமிஷம் கூட நினைக்கமுடியவில்லை ! மனம் அலை பாய்கிறது!
1
I AM AN IDIOT; I CAN’T EVEN CONCENTRATE FOR 30 SECONDS!
சரண கமலாலயத்தை … உனது தாமரை போன்ற திருவடிகளை
அரை நிமிஷ நேர மட்டில் … அரை நிமிஷ நேர அளவுக்காவது
தவமுறை தியானம் வைக்க அறியாத … தவ நிலையில் தியானத்தில் வைத்திட அறியாத
ஜட கசட மூட மட்டி … பொய்யும் குற்றமும் கொண்ட மூடனான மட்டி யான்
பவ வினையிலே சனித்த … பிறப்பதே தொழிலாகக் கொண்டு பிறந்துள்ள
தமியன் … தன்னம் தனியனான யான்
மிடியால் மயக்கம் உறுவேனோ? … வறுமையால் மயக்கத்தை அடையலாமோ?
SHOW ME MERCY; WHY IS THIS DELAY?
கருணை புரியாதிருப்ப தென குறை … கருணை காட்டாமல் இருப்பது என்ன குறையைக் கண்டு?
இவேளை செப்பு … இப்பொழுதே சொல்லி அருளவேண்டும்
கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே … கயிலாயமலை நாதராம் சிவன் பெற்ற குமரனே
2
கடக புயமீதி … வீரக் கடகம் அணிந்த புஜத்தின் மீது
ரத்ன மணியணி பொன்மாலை செச்சை … ரத்னாபரணம்,
தங்கமாலை, வெட்சிப் பூமாலை கமழு மணமார் கடப்பம் அணிவோனே … வாசனை நிறைந்த கடம்பமாலை இவைகளை அணிந்தவனே
PLEASE HELP ME! THIS IS THE TIME! DON’T DELAY!
தருணம் இதையா … தக்க சமயம் இதுதான் ஐயா
மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய … மிக்க பெருமையைத் தரும் நீடித்த சுகம்
சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு … எல்லாவித செல்வம், அதிர்ஷ்டம், நிறைந்த பெருவாழ்வு
தகைமை சிவ ஞான முத்தி பரகதியு நீகொடுத்(து) …
நன்மதிப்பு, சிவஞானம், முக்தியாம் மேலான கதி இவையாவும் நீ கொடுத்(து)
(உ)தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா … உதவி புரிய
வேண்டுகின்றேன், பளபளப்பும் கூர்மையும் உடைய வேலனே
3
அருணதள பாத பத்மம் அதுநிதமுமே துதிக்க … சிவந்த
தாமரையிதழ் போன்ற உன் பாதமதனை தினந்தோறும் நான் துதிப்பதற்கு
அரிய தமிழ் தானளித்த மயில்வீரா … அருமையான் தமிழ் ஞானத்தை தந்த மயில்வீரனே
4
PALANI HILLS – FULL OF WONDERS
அதிசயம் அனேகம் உற்ற பழனிமலை மீதுதித்த … அதிசயக் கோலங்கள் பல நிறைந்த பழனிமலை மீது விளங்கித் தோன்றும்
அழக, திருவேரகத்தின் முருகோனே. … அழகனே திருவேரகத்து (சுவாமி மலையின்) முருகப்பெருமானே.
–subham—
Tags—அருணகிரிநாதர், அரிய செய்திகள்- Part 13, சுவாமிமலை, திருப்புகழ், பாடல்கள் ,சொல் அழகு, பொருள் வளம்- Part 13, எட்டு வகைப் பறவைகளின் ஒலி, முருகன் கொடிகள், சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரம்