கிரீன்லாந்து உருகுகிறது! உலகத்துக்கு ஆபத்து ! (Post No.15,408)

Written by London Swaminathan

Post No. 15,408

Date uploaded in Sydney, Australia –  9 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கிரீன்லாந்து என்னும் மிகப்பெரிய தீவுப் பகுதி ஐரோப்பாவிலுள்ள டென்மார்க் நாட்டிற்குச் சொந்தமான பகுதி. கடந்த சில மாதங்களாக இந்தப் பெயர் செய்தியில் அடிபடுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதற்குச் சொந்தம் கொண்டாடினார் ; எப்போதும் அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் ஐரோப்பிய நாடுகளும் கூட அமெரிக்காவின் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ட்ரம்ப் பின்வாங்கியிருக்கிறார் ; குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக முடிந்திருக்கிறது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் .

கிரீன்லாந்து, ஐஸ்லாந்து என்னும் பெயரே ஏமாற்று வேலை. பசுமைவளமே இல்லாத , பனிக்கட்டி மட்டுமே நிறைந்த மிகப்பெரிய பகுதிக்குத் தவறாக கிரீன்லாந்து என்று பெயர் சூட்டினார்கள். ஐஸ் கட்டியே இல்லாத எரிமலைகள் நிறைந்த வெந்நீர் ஊற்றுகள் நிரம்பிய நாட்டுக்கு ஐஸ்லாந்து என்று பெயர் சூட்டினார்கள். மக்களை இழுப்பதற்காக இப்படி ஒரு திட்டம் .

கிரீன்லாந்தின் மீது அமெரிக்கா ஆசைப்பட்டதற்குக் காரணம் அங்கே பனிக்கட்டிக்குக் கீழே நிறைய கனிம வளம் உள்ளது . அதுமட்டுமல்ல பல பாதுகாப்பு, ராணுவ திட்டங்களுக்கு உகந்த பகுதி அது.

அண்டார்ட்டிகா என்னும் பிரம்மாண்டமான பனிக்கட்டி கண்டம் பூமியின் தென் துருவத்தில் உள்ளது. அதற்கு அடுத்த பெரிய பனிக்கட்டி பரப்பு வட துருவத்திலுள்ள கிரீன்லாந்து ஆகும்.

இந்தப் பிரதேசத்திலுள்ள பனிக்கட்டி முழுதும் உருகினால் கடல் நீர்மட்டம் உலகம் முழுதும் 24  அடி உயரும். அவ்வளவும் ஒரே நேரத்தில் உருகாது ஆயினும் அவை இப்போது உருகும் வேகம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது கடந்த 27  ஆண்டுகளாக  தொடர்ந்து பல பகுதிகள் உருகி வருகின்றன. மேலும் அங்குள்ள பனிக்கட்டி ஆறுகளும் சிறிதாகி வருகின்றன

பனிக்கட்டி பாறைகளைக் குடையும் பெரிய எந்திரங்களுடன்  பல வாரங்களுக்கு ஆராய்ச்சி செய்த குழுவில் ஒன்பது பேர் இருந்தனர் அவர்கள் ஐஸ் பாறைகளைக் குடைந்து எடுத்த சாம்பிள்களை- மாதிரிகளை– உலகின் ஏனைய பகுதியில் எடுத்த பவளப்பாறைகள், மரங்களில் உள்ள வளையங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டத்தில் பருவ நிலை வெப்பமாகி வருவது உறுதியாகியுள்ளது. வளி மண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைட் அதிகரித்துள்ளது.

இந்தத் தீவு பற்றிய சுவையான விஷயங்களையும் காண்போம் .

உலகிலேயே பெரிய தீவு இது ; இதன்பரப்பளவு
2,166,086 km2 (836,330 sq mi)

மக்கட் தொகை 56,000

(இந்தியாவின் பரப்பளவு 3,287,263 square kilometers (1,269,219 sq mi)

இது டென்மார்க்கின் சுயாதிக்கப் பகுதி இதன் தலை நகர் நூக் . The capital and largest city is Nuuk.

பேசும் மொழி – கிரீன்லாந்திக்

இதன் உண்மைப்பெயர்–  கலாலித் நுனாத்  -Kalaallit Nunaat, ‘land of the Kalaallit.

இங்கு அடிக்கடி பனிப்புயல் வீசும் ; எப்போதும் உறைநிலைக்குக் கீழ்தான் வெப்பம்; அதாவது குளிர் SUB ZERO TEMPERATURE.

இதன் அருகிலுள்ள பெரிய நாடு கனடா ; ஒரு காலத்தில் நார்வே நாட்டுக்குச் சொந்தமான இப்பகுதி பின்னர் டென்மார்க்குக்குக் மாற்றப்பட்டது இங்குள்ள மக்கள் இனுயிட் Most residents of Greenland are Inuit. என்னும் எஸ்கிமோ மக்கள் ஆவர்.

இங்கு வசிக்கும் மிருகங்கள்

சடை எருமை MUSK OX , துருவ நாய்கள், துருவக் கரடிகள், ரெயின்டியர் எனப்படும் மான்கள், கடலில் திமிங்கிலங்கள்

இங்கு அபூர்வ தாதுக்கள் எனப்படும் உலோகங்கள், மூலகங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் இதுவரை தோண்டி எடுக்கப்படவில்லை. இதுவரை சீனாவே 95 சதம் அபூர்வ தாதுக்களை சப்ளை செய்கிறது. சிவப்பு ரத்தினக் கல்லான மாணிக்கம் RUBY இங்கே அதிகம் கிடைக்கிறது. இரும்பு, செம்பு, தங்கம், பிளாட்டினம், யுரேனியம் அலுமினியம், டைட்டேனியம், நிக்கல், டங்ஸ்டன் கிடைக்கின்றன ; ஆயினும் முழு அளவில் தோண்டி எடுக்கப் படவில்லை; அமெரிக்கா, இதன் மீது கண் வைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

–SUBHAM—

TAGS- கிரீன்லாந்து உருகுகிறது, உலகத்துக்கு ஆபத்து,

Leave a comment

Leave a comment