திருப்புகழில் வாளை மீன் ! யாதவர்கள் அழிந்த கதை – Part 16 (Post.15,410)

Written by London Swaminathan

Post No. 15,410

Date uploaded in Sydney, Australia –  10 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 16

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 16

***

பாம்பு வழிபட்ட திருத்தணி கோவில்

அநுதின மனமகிழ் வுற … நாள்தோறும் மனம் மகிழ்ச்சி அடையுமாறு

அணி பணிதிகழ் … அழகியதும், வாசுகி என்ற நாகம் வழிபட்டதுமாகிய*

தணிகையில் உறைவோனே … திருத்தணிகைத் தலத்தில் வாழ்பவனே,

பகர்தரு குறமகள் … புகழ்வாய்ந்த குறப்பெண் வள்ளியும்,

தருவமை வநிதையும் … கற்பகத்தருவின் கீழே வளர்ந்த

தேவயானையும்,

இருபுடை யுறவரு பெருமாளே. … இருபுறமும் பொருந்த

வந்த பெருமாளே**.

பாற்கடல் கடைந்தபோது வாசுகி என்ற நாகம் கயிறாக உதவியது. அதனால் புண்பட்ட நோய் நீங்க, வாசுகி திருத்தணிகைக்கு வந்து முருகனைப் பூஜிக்க நோய் தணிந்த வரலாறு இங்கு கூறப்பட்டுள்ளது.

** வள்ளியும் தேவயானையும் வலமும் இடமுமாக விளங்க முருகன் திருத்தணியில் வீற்றிருக்கிறான். வள்ளி = இச்சாசக்தி, தேவயானை = ஞானசக்தி.

கஷ்டங்களை நீக்கும் திருப்புகழ்நான்கு வகைக் கவிதைகள்

இருப்பவல் திருப்புகழ் … உயிர் போகும் தொலையா வழிக்கு உற்ற துணையாய் இருக்கும் அவல் போன்ற திருப்புகழை

விருப்பொடு படிப்பவர் … ஆர்வத்தோடு படிப்பவர்களுடைய

இடுக்கினை யறுத்திடும் … சங்கடங்களை அறுத்தெறியும் என்ற

உண்மையை

எனவோதும் … எடுத்துச் சொல்கின்ற,

இசைத்தமிழ் நடத்தமிழென … இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்றும்,

துறை விருப்புடன் இலக்கண இலக்கிய … அகத்துறைப் பாக்கள்,

இலக்கணம், இலக்கியம் என்றும்,

கவிநாலும் … நால்வகைக் கவிகளையும்*

தரிப்பவ ருரைப்பவர் … உள்ளத்தில் தரிப்பவர்கள், உரைப்பவர்கள்,

நினைப்பவர் … நினைப்பவர்கள் ஆகிய உன் அடியார்களை

மிகச்சகதலத்தினில் நவிற்றுதல் அறியாதே … மிகவும் இவ்வுலகில் புகழாமல்,………………………

தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:

ஆசு – எதுகை மோனையுடன் கூடியது,

மதுரம் – இனிமை வாய்ந்தது,

சித்திரம் – கற்பனையும் அழகும் மிக்கது,

வித்தாரம் – வர்ணனை மிக்கது.

***

நோய்களை குணமாக்கும் திருப்புகழ் !

இருமலு ரோக முயலகன் வாதம் … இருமல் என்ற நோய், முயலகன் என்ற வலிப்பு நோய், வாத நோய்,

எரிகுண நாசி விடமே நீரிழிவு … எரியும் குணமுள்ள மூக்கு நோய், விஷ நோய்கள், நீரிழிவு நோய்,

விடாத தலைவலி சோகை … நீங்காத தலைவலி, ரத்த சோகை,

எழுகள மாலை யிவையோடே … கழுத்தைச் சுற்றி உண்டாகும்

மாலை போன்ற புண் இவற்றுடன்,

பெருவயி றீளை யெரிகுலை சூலை … மகோதர நோய், நுரையீரலில் கோழை நோய், நெஞ்சு எரியும் நோய், தீராத வயிற்று வலி,

பெருவலி வேறுமுளநோய்கள் … ஆகிய பெரு வலியுடன் கூடிய பிற நோய்கள்

பிறவிகள் தோறு மெனைநலி யாதபடி … ஒவ்வொரு பிறவியிலும்

என்னைப் பீடிக்காதபடி,

உன தாள்கள் அருள்வாயே … உன்னுடைய திருவடிகளைத்

தந்தருள்வாயாக.

வருமொரு கோடி யசுரர்பதாதி … உன்னை எதிர்த்துவந்த

கோடிக்கணக்கான அசுரர்களின் காலாட்படை

மடியஅ நேக இசைபாடி வருமொரு கால வயிரவ ராட …

இறந்துபடவும், அனேக வீரப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வந்த

ஓர் காலபைரவர் (சிவ பெருமான்) போர்க்களத்தில் நடனமாடவும்,

வடிசுடர் வேலை விடுவோனே … கூரிய ஒளிவீசும் வேலைச்

செலுத்தியவனே,

தருநிழல் மீதிலுறைமுகிலூர்தி … கற்பக விருட்சங்களின் நிழலில் வசிக்கும் மேக வாகனன் இந்திரன்

தருதிரு மாதின் மணவாளா … வளர்த்த அழகிய பெண்

தேவயானையின் மணவாளனே,

சலமிடை பூவின்நடுவினில் வீறு … கடலால் சூழப்பட்ட இந்தப்

புவியின் மத்தியில் சிறப்போடு விளங்கும்

தணிமலை மேவு பெருமாளே. … திருத்தணிகை மலையில்

வீற்றிருக்கும் பெருமாளே.

இந்தப் பாடல் நோய் தீர்க்கும் திருமந்திரத் திருப்புகழ். பாராயணம் செய்வதற்கு உரியது.

***

எனையடைந்த குட்டம் வினைமிகுந்த பித்தம் … எனக்கு வந்த

குஷ்டநோய், வினைக்கு ஈடாக மிகுந்துவரும் பித்த நோய்,

எரிவழங்கு வெப்பு … கொதிப்பைத் தருகிற காய்ச்சல்,

வலிபேசா இகலி நின்றலைக்கு முயலகன் … சொல்ல முடியாத

வலியோடு, மாறுபட்டுத் துயர்தந்து வருத்தும் முயலகன் என்ற

வலிப்புநோய்,

குலைப்பொடு இருமலென்று உரைக்கும் இவையோடே …

நடுக்க நோயுடன், இருமல் எனச் சொல்லப்படும் இந்த

நோய்களுடனே தவித்து,

மனைகள் பெண்டிர் மக்கள் தமைநினைந்து … வீடுகள், பெண்டிர்,

மக்கள் என்ற இவர்களை நினைந்து வருந்தி,

சுத்த மதிம யங்கி விட்டு மடியாதே … நல்லறிவு மயங்கிப்போய்

அடியேன் இறக்காதவண்ணம்,

மருவியின்றெ னக்கு மரகதம் சிறக்கு மயிலில் … நீ இன்று

என்முன் தோன்றி, மரகத ஒளிவீசும் பச்சைமயில் வாகனத்தில்

வந்து முத்தி தரவேணும் … வந்து எனக்கு பேரின்ப முக்தியை

அருள்வாயாக.

***

வாளை மீன்கள் பற்றி அருணகிரிநாதர் !

உடலி னூடு போய்மீளும் உயிரி னூடு … உடலுக்கு உள்ளும்,

உடலில் சென்று மீளுகின்ற உயிருக்குள்ளும்,

மாயாத உணர்வினூடு வானூடு முதுதீயூடு … அழியாத

உணர்ச்சியுள்ளும், ஆகாயத்துள்ளும், முற்றிய தீக்குள்ளும்,

உலவையூடு நீரூடு புவியினூடு … காற்றினுள்ளும், நீரின் உள்ளும்,

மண்ணினுள்ளும்,

வாதாடும் ஒருவரோடு மேவாத … சமயவாதம் புரிகின்ற

எவரிடத்திலும் காணக்கிடைக்காத

தனிஞானச் சுடரினூடு … ஒப்பற்ற ஞான ஒளியினுக்குள்ளும்,

நால்வேத முடியினூடும் ஊடாடு … நான்கு வேத உச்சியிலும்

UPANISHADS ஊடாடுகின்றதும்,

துரிய ஆகுல அதீத சிவரூபம் … துரிய* நிலையில் இருப்பதும்,

துன்பங்கள் கடந்த நிலையில் உள்ளதுமாகிய சிவ ரூபத்தை,

தொலைவிலாத பேராசை துரிசு அறாத வோர்பேதை …

முடிவற்ற பேராசையும் குற்றமும் நீங்காத ஓர் மூடனாகிய அடியேன்

தொடுமுபாயம் ஏதோசொல் அருள்வாயே … அடைவதற்கு உரிய

வழி எதுவோ, அந்த உபதேச மொழியைச் சொல்லி வழிகாட்டி

அருள்வாயாக.

மடல் அறாத வாரீச அடவி சாடி … இதழ்கள் நீங்காத தாமரைப்

பூவின்காட்டை அழித்து,

மாறான வரி வரால் குவால் சாய அமராடி … தனக்குப் பகையான

வரிபடர்ந்த வரால் மீன்கள் தோற்றுப்போய் பின்வாங்கும்படி போர் புரிந்து,

மதகு தாவி மீதோடி … செல்லும் வழியில் இருந்த நீர்பாயும் மதகைத் தாண்டி மேலே ஓடி,

உழவரால் அடாது ஓடி … வயலில் உழும் உழவர்கள் தன்னை

வருத்தாதபடி தப்பி ஓடி,

மடையை மோதி யாறூடு தடமாக … வழியில் உள்ள நீர்

மடைகளைத் தாக்கி, ஆற்றின் வழியிலே சென்று,

கடல்புகா மகாமீனை முடுகி … கடலில் புகுந்து, அங்குள்ள பெரிய

மீனை விரட்டித் தாக்கி,

வாளை தான்மேவு கமல வாவி மேல்வீழு … வாளை மீன் தான்

இருந்த தாமரைக்குளத்தில் வந்து வீழும்

மலர்வாவி … (இத்தனை பெருமையை உடைய) மலர்ச் சுனையில்**

கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர … தெய்வமணம்

உள்ள நீலோத்பல மலர் மலர்வது என்றும் தவறாத திருத்தணிகைக்குக் காவலனே, வீரனே,

கருணை மேருவே தேவர் பெருமாளே. … கருணையில் மேரு மலை

போன்றவனே, தேவர்களின் பெருமாளே.

* துரியை என்பது ஜாக்ரம் (விழிப்பு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்) என்ற மூன்று நிலைகளையும் கடந்த நிலையாகும்.

** திருத்தணியின் தாமரைக்குளத்தில் இருக்கும் வாளை மீனின் ஆற்றல், ‘மடல் அறாத’ முதல் ‘மலர்வாவி’ வரை உள்ள ஆறு அடிகளில், கூறப்படுகிறது.

முருகனின் தம்பியும் தூதுவரும் ஆன வீரபாகுத் தேவர் தூதுசெல்லும் வழியில் அரக்கர்களைக் கொன்று, கடல்நடுவில் உள்ள வீரமஹேந்திரம் சென்று போர் புரிந்து வெற்றியுடன் மீண்டு வந்ததையும் இது குறிப்பால் காட்டுகின்றது.

– கந்த புராணம்.

வாளை மீன் என்பது உலகம் முழுவதும் உள்ள வெப்ப கடல்களில் காணப்படும் மீன் இனம் ஆகும். இது பார்ப்பதற்கு சற்று நீளமாக இருக்கும். தென் இந்திய கடற்கரையில் இது கிடைக்கும். உதாரணமாக, கன்னியாகுமரி பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. இதன் மீது ‘செள்’ என்று சொல்லப்படுகிற செதில்கள் கிடையாது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்களில் 30% வாளை மீன் ஆகும்

SCABBARD FISH, RIBBON FISH

The silver scabbardfish, also known as the frostfish or beltfish is a benthopelagic cutlassfish of the family Trichiuridae found throughout the temperate seas of the world. It grows to over 2 metres in length.

A long, thin fierce looking deep-sea fish found as far down as1,000 metres in both cold and warm waters. There are two main species of Scabbard – black and silver – and it is sometimes known as Sabre Fish (and incorrectly as Ribbon Fish or Cutlass Fish).

***

யாதவர்கள் அழிந்த கதை

உலக்கை ராவி நடுக்கடல் விட்டவன் மருகோனே … இரும்பு உலக்கையைப் பொடிப்பொடியாக்கி நடுக்கடலில் கரைத்தவனும்* ஆகிய திருமாலின் மருகனே,

வலிக்க வேதனை குட்டி … வலி உண்டாகும்படியாக வேதப் பிரமனை சிரங்களில் குட்டினவனே,

நடித்து ஒரு செகத்தை யீனவள் பச்சைநிறத்தியை … நடனம் செய்து ஒப்பற்ற உலகத்தை ஈன்ற தாயான பச்சை நிறப் பார்வதியை

மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் குருநாதா … மணந்த

தந்தையாகிய பரப்பிரம்மப் பொருளான சிவபிரானுக்கு உபதேசித்து அருளிய குருநாதனே,

வனத்தில் வாழுமயிற்குலம் ஒத்திடு … காட்டிலே வாழும் மயிலினம் போன்ற அழகியான

குறத்தியாரைம யக்கிய ணைத்து … குறத்தியாகிய வள்ளிதேவியை மயக்கி அணைத்து,

உள மகிழ்ச்சி யோடுதிருத்தணி பற்றிய பெருமாளே. …

மனமகிழ்ச்சியுடன் திருத்தணித்தலத்தில் பற்றுடன் வீற்றிருக்கும் பெருமாளே.

யாதவர்கள் தங்களுள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணி வேஷமிட்டுதுர்வாச முனிவரை இவளுக்குப் பிறப்பது ஆணோ பெண்ணோ எனக் கேட்ககோபமடைந்த துர்வாசர் ஓர் இரும்பு உலக்கை பிறக்கும்அதுவே யாதவர் குலத்தை அழிக்கும் என்று சபித்தார். இதை அறிந்த கண்ணன்பிறந்த உலக்கையைப் பொடியாக்கி நடுக்கடலில் கரைக்கச் செய்தான். பின்னர் உலக்கைப் பொடி கரையிலே வந்து கோரைப்புல்லாக முளைக்கயாதவர் தம்முள் கலகம் மூண்டதும் அப்புல்லைப் பிடுங்கி ஒருவரை மற்றவர் குத்தி இறந்தனர். இரும்புத் துண்டு ஒன்று மீனின் வயிற்றில் வளரஅம்மீனைப் பிடித்த ஒரு வேடன் வயிற்றிலிருந்த துண்டைத் தன் அம்புநுனியில் வைத்தான். கண்ணனின் இறுதி நாளன்று தூக்கி வைத்திருந்த கண்ணனின்

பாதத்தைப் பறவையென எண்ணி வேடன் அந்த அம்பை எய்தான். யாதவகுலத்தில் கடைசியாக எஞ்சிய கண்ணனும் பரமபதம் அடைந்தான்.

பாரதியார் பாடல்

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;

பலர்புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;

பார்மீது நான்சாகா திருப்பேன், காண்பீர்!

மலிவுகண்டீரிவ்வுண்மை, பொய்கூ றேன்யான்,

மடிந்தாலும் பொய்கூறேன் மானு டர்க்கே,

நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்.

நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை   6

அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்

அப்போது சாவுமங்கே அழிந்து போகும்;

மிச்சத்தைப் பின்சொல்வேன், சினத்தை முன்னே

வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை;

—Subham—

Tags– திருத்தணி ,திருப்புகழ் , வாளை மீன் , யாதவர்கள்  கதை – Part 16 , அருணகிரிநாதர் ,அரிய செய்திகள் , சொல் அழகு, பொருள் வளம்

Leave a comment

Leave a comment