ராமாயணத்தில் வரங்கள் (36) லங்கா தேவிக்கு பிரம்மா வரம் அருளியது! (Post.15,409)

  

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,409

Date uploaded in London – 9 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (36)   

ராமாயணத்தில் வரங்கள் (36) லங்கா தேவிக்கு பிரம்மா வரம் அருளியது!

ச. நாகராஜன்

அடுத்து சுந்தரகாண்டத்தில் லங்கா தேவியை ஜெயித்தல் என்ற மூன்றாம் அத்தியாயத்தில் லங்கா தேவிக்கு பிரம்மா வரம் அருளிய செய்தியைப் பார்க்கிறோம்.

ஹனுமான் இரவில் லங்கையில் புகுதலுற்றார்.அவர் மதில் சுவரின் மேல் வேகமாக ஏறினார்.

அப்போது லங்கா நகரைக் காக்கும் நகர தேவதை உள்ளே போகும் ஹனுமானைக் கண்டாள். கோரமான தோற்றத்துடன் வாயுகுமாரரின் எதிரில் வந்து நின்றாள்.

“யார் நீ? குரங்கே! உன்னால் இங்கு வர முடியாது” என்று சொல்ல ஹனுமான் இந்த நகரைப் பார்ப்பதற்கே வந்தேன் என்று பதிலிறுத்தார்.

உடனே அந்த நிசாசரி ஹனுமானைக் கையால் அறைந்தாள்.

உடனே ஹனுமான் தனது இடது கை முஷ்டியால் அவளை குத்தினார். பெண் என்பதால் அதிக வலிமையைக் காட்டவில்லை. அவளோ அந்த ஒரு குத்திலேயே நிலை குலைந்து கீழே விழுந்தாள். நாத்தழுதழுக்க ஹனுமானிடம் தன்னைக் காத்தருள வேண்டினாள்.

பின்னர் கீழ் வருமாறு கூற ஆரம்பித்தாள்; 

அஹம் து நகரீ லங்கா ஸ்வயமேவ ப்லவங்கம |

நிர்ஜிதாஹம் த்வயா வீர் விக்ரமேண மஹாபல ||

           சுந்தரகாண்டம், மூன்றாம் அத்தியாயம், ஸ்லோக எண் 46

மஹாபல – மிக வலிமையுடைய

ப்லவங்கம – வானரரே!

அஹம் து – நானோ

ஸ்வயம் லங்கா – ஸ்வயமான லங்கா என்ற

நகரீ – நகர தேவதை;

வீர் – வீரரே!

அஹம் – நான்

த்வயா ஏவ – உம்மாலே தான்

விக்ரமேண – பராக்கிரமத்தால்

நிர்ஜிதா – ஜெயிக்கப்பட்டேன்

இதம் து தத்யம் ஸ்ருணு வை ப்ருவந்த்யா மே ஹரீஸ்வர |

ஸ்வயம் ஸ்வயம்புவா தத்தம் வரதானம் யதா மம ||

           சுந்தரகாண்டம், மூன்றாம் அத்தியாயம், ஸ்லோக எண் 47

ஹரீஸ்வர – வானரேஸ்வரரே

ஸ்வயம்புவா – பிரம்மாவால்

மம – எனக்கு

ஸ்வயம் து – தானாகவே

தத்தம் – கொடுக்கப்பட்ட

வரதானம் – வரப்பிரதானம்

யதா வை – எப்படியோ அப்படியே

தத்யம் – உண்மையான

இதம் – பின் சொல்லும் விஷயத்தை

ப்ருவந்த்யா – சொல்லுகிற

மே – என்னிடத்திலிருந்து

ஸ்ருணு – கேளும்

யதா த்வாம் வானர: கஸ்சித்விக்ரமாத்ஷ்மானயேத் |

ததா த்வயா ஹி விக்ஞேயம் ரக்ஷஸாம் பயமாகதம் ||

            சுந்தரகாண்டம், மூன்றாம் அத்தியாயம், ஸ்லோக எண் 48

த்வாம் – உன்னை

கஸ்சித் வானர: – ஒரு வானரன்

விக்ரமாத் – பராக்ரமத்தால்

யதா – எப்பொழுது

வஷம் – வசமாக

ஆனயேத் – செய்து கொள்கிறானோ

ததா – அப்பொழுதே

ரக்ஷசாம்  – ராக்ஷஸர்களுக்கு

பயம் ஆகதம் – கேடு வந்தது என்று

த்வயா விக்ஞேயம் – உன்னால் அறிந்து கொள்ளப்பட வேண்டியது

ஹி – சந்தேகமில்லை

இப்படிக் கூறிய லங்கா தேவி ஹனுமானை லங்கைக்குள் புகுந்து கொள்ள அனுமதித்தாள். ஹனுமானும் லங்கைக்குள் புகுந்தார்.

பிரம்மாவிடம் லங்கா தேவி எப்போது எதற்காக வரம் பெற்றாள் என்ற விவரம் இங்கு தரப்படவில்லை.

பிரம்மாவிடமிருந்து லங்கா தேவி வரம் பெற்ற செய்தி மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

**

Leave a comment

Leave a comment