
Post No. 15,412
Date uploaded in London – 10 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷிதச் செல்வம்!
கோடி காரியங்களை ஒதுக்கி விட்டு ஹரி பஜனை செய்க!
ச. நாகராஜன்
நல்லோர்களின் குணங்கள் கஸ்தூரி மணம் போல!
சந்த; ஸ்வத ப்ரகாஷாந்தே குணா ந பரதோ ந்ருணாம் |
ஆமாதோ நஹி கஸ்தூர்யாம் சபதேன விபாவ்யதே ||
சந்த புருஷர்கள் (நல்லோர்) தனது சொந்த குணங்களினாலேயே பிரகாசிக்கின்றனர். பிறருடைய குணங்களினால் அல்ல. கஸ்தூரியின் மணம் சொந்தமாகவே உறுதிப்படுத்தப்படும்.
கெட்டவர்களுடன் சேராதே!
யதி சத்ஸங்கவிரதோ பவிஷ்யஸி பவிஷ்யஸி |
அத: துர்ஜனசம்ஸர்கே பதிஷ்யஸி பதிஷ்யஸி ||
சத்புருஷர்களுடன் (நல்லோருடன்) ஒருவன் சேராவிட்டால், அவன் இன்னும் கூட தன்னால் வாழ்க்கையை நடத்த முடியும். ஆனால் ஒருவன் தீயோருடன் சேர்ந்தால் அவனும் தீயவனாகவே ஆகி விடுவான்.
சந்தனமரத்தைச் சுற்றிய பாம்புகளால் மரம் பாதிக்கப்படாது!
விக்ருதிம் நைவ கச்சந்தி சங்கதோஷேன சாதவ: |
ஆவேஷ்டிதம் மஹாசர்ப்பைஸ்ஸந்தனம் ந விஷாயதே ||
மற்றவர்களுடன் சேர்ந்திருந்தாலும் கூட நல்லவர்கள் கெட்டுப் போக மாட்டார்கள். சந்தன மரத்தைச் சுற்றி பாம்புகள் இருந்தாலும் கூட அது சர்ப்பவிஷத்தால் பாதிக்கப்படமாட்டாது.
கோடி காரியங்களை ஒதுக்கி விட்டு ஹரி பஜனை செய்க!
சதம் விஹாய போக்தவ்யம் சஹஸ்ரம் ஸ்த்ரானமாசரேத் |
லக்ஷம் விஹாய தாதவ்யம் கோடி த்யக்த்வா ஹரி பஜேத்
|\
நூறு செயல்களை ஒதுக்கி விட்டு ஒருவன் உண்ண வேண்டும்.
ஆயிரம் காரியங்களை விட்டு விட்டு குளிக்க வேண்டும்.
லக்ஷம் காரியங்களை விட்டு விட்டு ஒருவன் தானம் வழங்க வேண்டும்.
கோடி செயல்களை ஒதுக்கி விட்டு ஒருவன் ஹரி பஜனை செய்ய வேண்டும்.
யாசிக்க விஷ்ணுவும் வாமனனாக ஆக வேண்டி இருந்தது!
யாசனா ஹி புருஷஸ்ய மஹத்வம் நாசயத்யரிவித்ரம்ரேவ ததாஹி|
சத்ய ஏவ பகவானபி விஷ்ணுர்வாமனோ பவதி யாசிதுமிச்சன் ||
பிறரிடம் யாசிப்பதானது மனிதர்களின் பெருமையை அழித்து விடும்.
பகவானான விஷ்ணு கூட பிச்சை எடுப்பதரற்காக வாமனனாக ஆக வேண்டி இருந்தது.
பூர்வத்தோரத்தை ஆராயக் கூடாத அறுவர்!
ருஷீணாம் ச நதீனாம் ச குலானாம் ச மஹாத்மனாம் |
ப்ரபாவோ நாதிகந்தவ்ய: ஸ்த்ரீணாம் துஸ்சரிதஸ்ய ச ||
ரிஷிகள், நதிகள்,குடும்பங்கள்,மஹான்கள்,பெண்கள், தூர்த்தர்கள் ஆகியோருடைய பூர்வோத்தரத்தை ஒருவன் அறிந்து உணர ஒருவன் முயற்சிக்கக் கூடாது.
**