ராமாயணத்தில் வரங்கள் (39) காலகேயனை ராவணன் வென்றது! (Post.15,432)

Ravana scaring children in Dasara Festival. 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,432

Date uploaded in London – 17 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (39)    

ராமாயணத்தில் வரங்கள் (39) காலகேயனை ராவணன் வென்றது!

ச. நாகராஜன்

அடுத்து யுத்த காண்டத்தில் பத்து வரங்கள் பற்றிய செய்திகளைக் காண்கிறோம்.

யுத்தகாண்டத்தில் ‘ராக்ஷஸர்களது வசனம்’ என்ற ஏழாவது அத்தியாயத்தில் ராமனுடன் போர் தொடுப்பது பற்றி மந்திராலோசனை செய்ய விரும்பிய ராவணன் அனைவரையும் அழைத்து ஆலோசனை கூறுமாறு அழைக்கிறான். 

உடனே அங்கு குழுமியிருந்த அனைத்து ராக்ஷஸர்களும் ராவணனைப் புகழ்ந்து அவனுடைய வலிமையைச் சுட்டிக் காட்டுகின்றனர். அவன் பெற்ற வெற்றிகளைப் பட்டியலிட்டுச் சொல்கின்றனர்.

“போகவதி என்னும் நகருக்குச் சென்று நீங்கள் பன்னகர்களை வென்றீர்கள்.கைலாச மலையில் வசிக்கும் குபேரனை ஜெயித்து புஷ்பக விமானத்தைப் பறித்துக் கொண்டு வந்தீர்கள். உங்கள் நட்பை விரும்பிய அசுரமன்னன் மயன் தன் மகளை உங்களுக்கு மணம் முடித்து நட்பைப் பெற்றான். மது என்ற அசுர மன்னனை அடிமை ஆக்கினீர்கள். பாதாள லோகம் சென்று வாஸுகியும் தக்ஷகனும், சங்கனும் ஜடீ என்பவனும் உங்கள் அடிமையாக ஆகச் செய்தீர்கள்.” 

இவ்வாறு கூறிய அசுரர்கள் மேலும் கூறினார்கள் இப்படி: 

அக்ஷயா பலவந்தஸ்ச சூரா லப்தவரா: புன: |

த்வயா சம்வத்ஸரம் யுதத்வா சமரே தானவா விபோ ||

ஸ்வபலம் சமுபாஸ்த்ரித்ய நீதா வஷமரிந்தம் |

மாயாஸ்சாதிகதாஸ்தத்ர வஹவோ ராக்ஷஸாதிப ||  

யுத்த காண்டம் ஏழாம் அத்தியாயம் ஸ்லோக எண்கள் 10, 11

ராக்ஷஸாதிப – ராக்ஷஸ மன்னா!

அரிந்தம – சத்துரு சம்ஹார

விபோ – பிரபுவே

புன: – மேலும்

லப்தவரா – வரம் பெற்று

அக்ஷயா – அழிவற்ற

பலவந்த: – பலசாலிகளும்

சூரா: ச – சூரர்களுமான

தானவா: – அசுரர்கள்

ஸ்வபலம் – தேவரீரது பலத்தை

சமுபாஸ்த்ரித்ய -கொண்டு

சம்வத்ஸரம் – ஒரு வருட காலம்

சமரே யுத்தயா – போரிட்டு

த்வயா – தேவரீரால்

வசம் – அடிமைத்தனத்தில்

நீதா: – கொண்டுவரப்பட்டார்கள்’

தத்ர – அவ்விடத்தில்

மாயா: ச – மாயா வித்தைகளும்

பஹவ: – பல

அதிகதா: – தெரிந்து கொள்ளப்பட்டன

இவ்வாறு கூறிய அசுரர்கள் மேலும் பலபடியாக ராவணனைப் புகழ்ந்தனர்.

இங்கு அவர்கள் காலகேயனை ராவணன் வென்றதைக் குறித்துப் பேசுகின்றனர். ஒரு வருட காலம் யுத்தம் செய்து காலகேயனை ராவணன் வெற்றி பெற்றான்.

இங்கு வரம் பெற்ற செய்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது. எப்போது எதற்காக என்பன போன்ற விவரங்கள் தரப்படவில்லை. 

**

Leave a comment

Leave a comment