HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-35; இந்துமத கலைச்சொல் அகராதி-35 (Post No.15,434)

Written by London Swaminathan

Post No. 15,434

Date uploaded in Sydney, Australia –  18 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆங்கில எழுத்து I- ல் துவங்கும் சொற்கள்

Words beginning with “I ”. English  version was posted yesterday.

Here is the Tamil Version

Human sacrifice in Indus valley

இந்திரன்

உலகின் மிகப்பழைய நூலான ரிக் வேதத்தில் இந்திரன் என்னும் கடவுளே அதிகம் போற்றப்படுகிறார் ; ஆனால் இது ஒரே கடவுளைக் குறிப்பது அல்ல; தலைவன் , எல்லோரையும் வழி நடத்துவோன் என்னும் பொருளில் வருகிறது பறவைகளில் பெரியவன் ககேந்திரன்; மிருகங்களின் தலைவன் – ம்ருகேந்திரன்/சிங்கம், யானைகளின் தலைவன் கஜேந்திரன் ; மனிதர்களில் சிறந்தவன் – நரேந்திரன் ; இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திரன் (பிரசாத்).

ரிக்வேதத்தில் 250 துதிகள் இந்திரன் மீதுள்ளன; மேலும் 50  துதிகளில் வேறு தெய்வங்களுடன் இந்திரன் பெயர் வருகிறது ரிக்வேதத்தில் உள்ள மொத்த துதிகள் 1,028 ; இவைகளில் 25  சதவிகிதத்தை இந்திரன் எடுத்துக்கொள்கிறார்.

மிகவும் பலம் உடையவன், வீரன் என்ற பொருளில் வரும் இந்திரன், விருத்திரன் முதலிய முப்பது அசுரர்களைக் கொள்கிறான். இவைகளில் பல ஆட்கள் அல்ல; இயற்கை சக்திகள் ; உதாரணமாக வான வில்லை இந்திர தனுஷ் என்பார்கள்.

தேவர்களைக் காப்பதால் தேவேந்திரன் என்றும் பெயர்; திசைகளில் கிழக்கு திசையின் அதிபதி; அவனுடைய ஆயுதம் வஜ்ராயுதம்; மனைவி- இந்திராணி/ சசி; மகன்- ஜயந்தன்

புராணக்கதை

கெளதம ரிஷியின் மனைவியான அஹல்யாவை இந்திரன் மானபங்கப்படுத்தியதால் அவரது உடலில் ஆயிரம் குறிகளை ஏற்படுத்தும்படி சாபம் இடுகிறார் ரிஷி; பின்னர் இறைவனை வேண்டி அவைகளைக் கண்களாக மாற்றியதாக சம்பந்தர் முதலியோர் தேவாரப்பாடல்களில் பாடியுள்ளனர்; தமிழிலும் கண்ணாயிரம் என்றபெயர் உண்டு.

சங்க இலக்கியத்தில் இந்திரன்

தொல்காப்பியம் என்னும் பழைய நூல் இந்திரனையும் வருணனையும் தமிழர்களின் தெய்வம் என்று கூறுகிறது; வேந்தன் என்ற பெயரில் அவரைத் தமிழர்கள் குறிப்பிடுகிறார்கள்; சங்க இலக்கியத்திலும் திருக்குறளிலும் இந்திரன் என்ற கடவுள் பல இடங்களில் வருகிறார். புத்தரும் தம்மபத்தில் இந்திரனைப் போற்றுகிறார்.

***

இந்திரா விழா

மழை பெய்வதற்காக ஆண்டு தோறும் இந்திரவிழாவைக்  கொண்டாடுவார்கள்; கடைசி நாளில் இந்திரத் த்வசம்/ கொடி உள்ள கம்பத்தைச் சாய்ப்பார்கள்; இதை ராமாயணத்தில் உவமையாகப் பயன்படுத்துகிறார் வால்மீகி. இந்திர விழாவை தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மணிமேகலை நூல்களிலும் காணலாம்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்திர விழா இன்றும் தண்ணீர் விழா WATER FESTIVAL என்ற பெயர்களில் நடைபெறுகிறது; ஆசியா முழுதும் இந்திரனின் பெயர்களை இன்றுவரை மக்கள் ஆண் குழந்தைகளுக்குச் சூட்டுகிறார்கள்; மன்னர்களின் பெயர்களில் இந்திரன் அதிகம் வருகிறார். நேபாள நாட்டில் இப்போதும் இந்திரவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.

***

ஐராவதம்

இந்திரனின் யானையின் பெயர் ; தமிழ்நாட்டில் இந்தப்பெயரை ஆண்களுக்கும் சூட்டுகிறார்கள் ;ஐராவதநல்லூர் போன்ற ஊர்ப்  பெயர்களும் இருக்கின்றன. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தெருச் சந்திப்புகளிலும், பூங்காக்களிலும் தபால் தலை களிலும் நான்கு தலைகள் அல்லது நான்கு தந்தங்களுடன் ஐராவதம் உருவம் உள்ளது.

***

இல்வலன்

வாதாபியும் அவனுடைய சகோதரன் இல்வலனும் மனித மாமிசம் உண்ணும் அரக்கர்கள்; பிராமண ரிஷிகளுக்கு வாதாபியை வெட்டி சமைத்துப் போடுவார்கள் . அவர்கள் சாப்பிட்டவுடன் வாதாபி வெளியே வா என்று இல்வலன் கூவுவான். பிராமண ரிஷிகளின் வயிறு கிழிய அவன் வெளியே வருவான். அப்படிப்பட்ட வாதாபியை அகத்தியர் தன்னுடைய வயிற்றைத் தடவி வாதாபி ஜீர்ணோ பவ என்று சொல்லி அவனை ஜீரணம் செய்தார் . இல்வலனும் அழிந்தான்.

***

ஈஸ்வர

சிவனின் பெயர்; கடவுள் என்ற பொதுப் பெயரில் ஏனைய கடவுளுக்கும் பொருந்தும். சிவ பெருமானுடைய பெயர்களில் பின்னொட்டுகளாக ஈஸ்வர வரும்; உ-ம் சுந்தரேஸ்வரர், மஹேஸ்வரன், சோமேஸ்வரன், த்ரயம்பகேஸ்வரன், ராமேஸ்வரன்.

****

இஷ்டதேவதா

ஒருவர் மிகவும் விருப்பப்பட்டு வணங்கும் தெய்வம் ; சிலருக்கு பிள்ளையாரையும் சிலருக்குப் பெருமாளையும் பிடிக்கலாம். பெரும்பாலும் எல்லோரும் குடும்பத்துக்குரிய குல தெய்வத்தை இப்படி இஷ்ட தேவதையாகக் கருதுவார்கள் .

இண்டஸ் வேலி INDUS VALLEY CIVILIZATION

என்னும் சிந்து சமவெளி நாகரீகம்

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மொஹன்சதாரோ ஹரப்பா என்னும் (பாகிஸ்தான்) நகரங்களில் பெரிய நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரை வெள்ளைக்காரர்கள்   சூட்டினார்கள்; ஆனால் இப்போது இது கங்கை- யமுனை நதிக்கரை வரையிலும் குஜராத், ராஜஸ்தான் வரையிலும் 2500  இடங்களில் காணப்படுவதால் இந்தப் பெயர் பொருந்தாது; மேலும் சிந்துவுக்கு முந்திய சரஸ்வதி நதி தீர விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகள் அந்த நதியையும் இத்தோடு தொடர்பு படுத்துகிறது. மார்ட்டிமர் வீலர், மக்கே சார் ஜான் மார்ஷல் Sir John Marshall: Director-General of the Archaeological Survey of India (ASI) ,Mortimer Wheeler: Excavated Harappa and Mohenjo-daro in the 1940s, Mackay போன்ற ஆராய்ச்சியாளர்கள் அவசரப்பட்டு உளறினார்கள். இதனால் இந்த நாகரிக ஆய்வுகள் திசை மாறிப்போய் இன்று வரை எழுத்துக்களைப்    படிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஐம்பதுக்கும் மேலான ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு மொழிகளில் எழுத்துக்களைப்  படித்தும் விளக்கியும் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டார்கள் .

ஆரியர்கள் தாக்கியதால் அழிந்தது; திராவிடர்கள் பயந்து ஓடிவிட்டார்கள் என்று உளறிய வெள்ளைத் தோல் ஆராய்ச்சியாளர்கள் ஆரியர்களின் குதிரைகளையோ, இரும்பு ஆயுதங்களையோ காட்ட முடியாமல் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள்! ; ஆண்குறி போல இருப்பது சிவலிங்கம் என்றும் மிருகங்கள் சூழ்ந்த உருவம் பசுபதி என்றும் உளறியவர்கள் நர பலி, புலி ராணி, பேய் முத்திரைகள், ஏழு பெண்கள் , நாகராணி, சுவஸ்திகா சின்னங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள் தற்கால ஆராய்ச்சியாளர்கள்,  இந்த உளறல் பேர்வழிகளுக்குத் தக்க பதிலடி கொடுத்து வாயை மூடி இருக்கிறார்கள். திராவிட அரசியல்வாதிகள் மட்டும் இது தமிழர் நாகரீகமே என்று சொல்லி நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று சொல்லி எல்லோரையும் நகைக்க வைக்கிறார்கள் . கிடைத்த எலும்புக்கூடுகள் எதிலும் திராவிட GENE மரபணுவும் இல்லை; திராவிட குட்டை உருவமும், திராவிட போண்டா மூக்கும் இல்லை. இதுவரை சிந்து சமவெளி மொழியைப் படிக்க ஒரு தமிழனாலும் முடியவில்லை. ஹீராஸ் பாதிரியார் போன்றோர் சொன்ன விளக்கங்கள் எல்லோரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது . அஸ்கோ பர்போலா எழுதிய மிக அருமையான புஸ்தகத்தில் நமது காலத்தில் யாரும் இந்த எழுத்தைப் படிக்க முடியாது என்றே தோன்றுகிறது என்று சொல்லி முடித்துவிட்டார் .

இதன் காலம் 2500 BCE to 1700 BCE

எத்தனை பேர் இது தமிழ் மொழி எழுத்து என்று சாதித்தார்களோ அத்தனை பேர் இது சம்ஸ்க்ருத எழுத்து என்றும் சாதித்து இருக்கிறார்கள் ; எத்தனை பேர் இது திராவிட நாகரீகம் என்று சத்தியம் செய்தார்களோ அத்தனை பேர் இது ஆரிய நாகரீகம் என்றும் சத்தியம் செய்கிறார்கள்!

புதிருக்கு இன்று வரை விடை இல்லை. சிந்து வெளி புஸ்தகங்களைப் படித்தால் மண்டை குழம்பும்; அல்லது நல்ல நல்ல ‘ஜோக்’குகள் கிடைக்கும்!!

முதலில் ஆராய்ச்சி செய்த வெள்ளை முட்டாள்கள், எது எந்த இடத்தில் PROVENANCE , எந்த மட்டத்தில் கிடைத்தது என்று எழுதாததால் அவர்களுக்கு தற்கால ஆராய்ச்சியாளர்கள் முட்டாள் பட்டம் சூட்டுகிறார்கள்.

Neither John Marshal, Director General of Archaeology nor Mackay nor Vats (later excavators) gave any information about the places, layers in their reports.

Later, on examination G.F.Dales did find that Wheeler has misread the archaeological evidence. Neither they belonged to one and the same stratigraphical context nor were there proof of any massacre of Dravidians. Most of the skeletons positively showed that the persons were actually drowned in severe and sudden flood in the river Indus.. K.M Srivatsava aptly remarks “ Indra, therefore ,stands completely exonerated”.

BB Lal says 50 major sites are on Indus river where as 177 early and 283 mature Harappan sites are on the banks of dried Saraswati river that existed before 1700 BC !

***

ஐயர் , ஐயங்கார்

தமிழ்நாட்டிலும் அருகாமை இடங்களிலும் பிராமணர்களுக்கு ஐயர் , ஐயங்கார் என்ற பின்னொட்டு surname suffix இருக்கும் .

உ-ம் பால கிருஷ்ண ஐயங்கார் , சாமிநாத அய்யர்.

ஆர்ய என்றால் கற்றவர் , பாண்பாடு உடையவர், உயர்ந்தோரென்று பொருள்; இது பிராக்ருதத்ததில் அஜ்ஜ என்று மருவி தமிழில் அய்யர் என்று மாறியது. பெரும்பாலும் விபூதி பூசும் சைவர்கள் இப்படி தங்களை அழைத்துக்கொண்டார்கள்; அவர்களிலிருந்து வேறுபடுத்திக்   காட்டுவதற்காகப் பெருமாளை வணங்கும் வைஷ்ணவ பிராமணர்கள் கார் என்ற உயர்வுப் பெயரைச் சேர்த்துக்கொண்டு அய்யங்கார் ஆனார்கள்; இப்பொழுதும் தெலுங்கில் பெரியவர்களுக்கு காரு அடைமொழி உண்டு .

சைவர்களாகிய தமிழ் நாட்டுப் பிராமணர்களில் வடமா, பிரஹத்சரணம், அஷ்டஸஹஸ்ரம் முதலிய பிரிவுகள் உண்டு.

அதேபோல வைவ்ணவர்களில் தென் கலை, வடகலை, செல்லுர் அய்யங்கார் பிரிவுகள் உண்டு.

தென்கலைப் பிரிவினர் ஆங்கில எழுத்து ஒய் Y போல நாமம் இட்டுக்கொள்வார்கள்; தமிழ் மொழிப்   பாஸுரங்களைப் பாடுவார்கள். வடகலைப் பிரிவினர் ஆங்கில எழுத்து யு U  போல நாமம் இட்டுக்கொள்வார்கள் ; சம்ஸ்க்ருத மொழி துதிகளைப் போற்றுவார்கள்.

To be continued ………………………..

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-34; இந்துமத கலைச்சொல் அகராதி-34, இந்திரன், சிந்துவெளி நாகரீகம், அய்யர் , அய்யங்கார்

Leave a comment

Leave a comment