WRITTEN BY R. SESHADRINATHAN
Post No. 15,441
Date uploaded in London – 20 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம். ஓர் ஆய்வு – 4
(ஆர், சேஷாத்ரிநாதன்)
சிறப்பான குணாதிசயங்கள் மற்றும் திறன்கள்:
இதுவே அவர்களை மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் முழுமையாக வேறுபடுத்துகிறது. அவர்கள் அதிமனித (superhuman) சக்திகள் கொண்டிருந்தனர்:
மாபெரும் பலம்:
வாலி ஒரு முழு இராட்சசனை ஒரே கையால் தூக்கி எறியும் அளவுக்கு பலம் வாய்ந்தவன். ஹனுமன் ஒரு மலையைத் தூக்கிச் செல்லும் சக்தி படைத்தவன்.
வடிவம் மாற்றும் திறன்
ஹனுமனால் தனது உருவத்தை மிகச் சிறியதாகவோ அல்லது மலை போல் பெரியதாகவோ மாற்றிக்கொள்ள முடிந்தது.
பறக்கும் திறன்:
அவர்கள் “வானரம்” என்ற பெயருக்கேற்ப, வானத்தில் பறந்து செல்லும் திறன் பெற்றிருந்தனர். இது நவீன குரங்குகளுக்கு இல்லாத ஒரு திறன்.
அறிவாற்றல் மற்றும் தந்திரோபாயம்:
ஜாம்பவான் போன்றவர்கள் முதுமைக் காலத்தின் ஞானத்தையும், போர் தந்திரங்களையும் அறிந்தவர்கள். ஹனுமன் ஒரு சிறந்த தூதர், பேச்சாளர் மற்றும் சூழ்ச்சித் திட்டமிடுபவன்.
ஆக, கிஷ்கிந்தா மக்கள் என்பவர்கள் குரங்கு மற்றும் கரடி இனங்களின் மிகுந்த வலிமை, துடிப்பான தன்மை, காட்டு வாழ்க்கை நடத்தை போன்ற சிறப்புக் குணங்களைக் கொண்டிருந்தனர் மனிதர்களைப் போல அரசியல், மொழி, கலை, அறிவு, நெறிமுறை ஆகியவற்றையும் கொண்ட ஒரு புராணப்பூர்வமான, அதிமனித இனம் ஆவர்.
அவர்களை “குரங்குகள்” என்று அழைப்பது, அவர்களின் உண்மையான தன்மையை மிகைப்படுத்திக் கூறுவதற்குப் பதிலாக, அவர்களின் வெளித்தோற்றம் மற்றும் சில இயல்புகளின் அடிப்படையில் வைத்த ஒரு பெயராகும். இது ஒரு சிம்பல் (Symbol) அல்லது ஒரு புனைவு இனத்தை வரையறுக்கும் ஒரு வழி. இதனால்தான் ஹனுமன் போன்றவர்களை நாம் தெய்வீகமாக வணங்குகிறோம், ஒரு விலங்காக அல்ல.
மேலும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. கிஷ்கிந்தா வாசிகள் அனைவரும் வானரங்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தேவர்கள். இராவணன் தலைமயில் அனைத்து அரக்கர்களையும் ஒழிப்பதில் இராமனுக்கு உதவுவதற்காக பிறவி எடுத்துள்ள தேவர்கள். இதை பாலகாண்டத்தில் உள்ள கீழ்கண்ட தோஹாக்கள் மூலம் துளசிதாசர் தெரிவிக்கிறார்.
. हरिहउँ सकल भूमि गरुआई। निर्भय होहु देव समुदाई॥
गगन ब्रह्मबानी सुनि काना। तुरत फिरे सुर हृदय जुड़ाना॥4
तब ब्रह्माँ धरनिहि समुझावा। अभय भई भरोस जियँ आवा॥5॥
निज लोकहि बिरंचि गे देवन्ह इहइ सिखाइ।
बानर तनु धरि धरि महि हरि पद सेवहु जाइ॥187॥
गए देव सब निज निज धामा। भूमि सहित मन कहुँ बिश्रामा॥
जो कछु आयसु ब्रह्माँ दीन्हा। हरषे देव बिलंब न कीन्हा॥1॥
बनचर देह धरी छिति माहीं। अतुलित बल प्रताप तिन्ह पाहीं॥
गिरि तरु नख आयुध सब बीरा। हरि मारग चितवहिं मतिधीरा॥2॥
* गिरि कानन जहँ तहँ भरि पूरी। रहे निज निज अनीक रचि रूरी॥
यह सब रुचिर चरित मैं भाषा। अब सो सुनहु जो बीचहिं राखा॥3॥
இதையே ஆத்யாதம இராமாயணத்தில் இரண்டாவது சர்கத்தில் சொல்லப்பட்டுள்ளது
ब्रह्म वाच
र्वष्णुमािनुषरूपेण भर्वष्यर्त रघ ः कु ले ॥ २९॥
यूयों सृजध्वों सवेऽर्प वानरेष्वोंशसम्भवान् ।
र्वष्ण ः स ायों कु रत यावर्त्स्न्थास्यर्त भूतले ॥ ३०॥
ஆக தேவர்களே வானர அவதாரம் எடுத்து வந்ததால் அவர்கள் மற்ற வானரங்களைவிட எல்லா வகையிலும் சிறந்து விளங்கினர்.
** தொடரும்