
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,440
Date uploaded in London – 20 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (40)
ராமாயணத்தில் வரங்கள் (40) இந்திரஜித் சிவபிரானிடமிருந்து வரம் பெற்றது!
ச. நாகராஜன்
யுத்தகாண்டத்தில் ‘ராக்ஷஸர்களது வசனம்’ என்ற ஏழாவது அத்தியாயத்தில் ராவணனது மந்திராலோசனை பற்றி குறிப்பிடப்படுகிறது.
அதில் அனைவரும் அவனது வீரத்தைப் புகழ்ந்து அவனது சாதனைகளைப் பட்டியலிடுகிறார்கள்.
அப்போது அவர்கள், “மகாராஜரே! தேவரீர் இங்கேயே இருக்கலாம். ,மகாபாகுவாகிய இந்த இந்திரஜித்து ஒருவனே வானரர்களை நாசம் செய்து விடுவான். தேவரீருக்கு மனக்கவலை ஏன்?” என்று கூறுகின்றனர்.
அனேன ஹி மஹாராஜ் மாஹேஸ்வரமனுத்தமம் |
இஷ்டா யக்ஞம் வரோ லப்த்வா லோகே பரமதுர்லப: ||
யுத்த காண்டம் ஏழாம் அத்தியாயம் ஸ்லோக எண் 19
மஹாராஜ் – மகாராஜா
அனேன ஹி – இவனாலோ
அனுத்தமம் – மிகச் சிறந்ததும்
மாஹேஸ்வரம் – சிவபெருமானுக்கு ப்ரீதியை விளைவிப்பதுமான
யக்ஞம் – யாகத்தை
இஷ்டா – புரிந்து
லோகே – உலகில்
பரமதுர்லப: – மிகவும் கிடைத்தற்கு அரிதாகிய
வர: – வரமானது
லப்த: – அடையப்பட்டிருக்கிறது.
இப்படி இந்திரஜித்தின் பராக்ரமத்தை ராக்ஷஸர்கள் புகழ்கின்றனர். இந்திரஜித்தால் தேவேந்திரன் சிறைப்படுத்தப்பட்டான் என்று மேலும் கூறுகின்றனர்.
இவர்களது கூற்றிலிருந்து இந்திரஜித் சிவபெருமானுக்கு ப்ரீதியை விளைவிக்கும் யாகம் நடத்தப்பட்டதை அறிகிறோம். அதனால் இந்திரஜித் சிவபிரானின் அனுக்ரஹத்தை[ பெற்றிருக்கிறான் என்பதையும் அறிய முடிகிறது. இது வரம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட வால்மீகி முனிவர் இதை இங்கு வரம் என்றே குறிப்பிடுகிறார்.
இந்திரஜித்தின் யாகம் பற்றி உத்த்ரகாண்டத்தில் 25ம் அத்தியாயத்தில் அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமனுக்கு விளக்கமாகக் கூறுகிறார். அதை இந்தத் தொடரில் பின்னால் காண்போம்.
** தொடரும்