HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL – 38; இந்து மத கலைச்சொல் அகராதி-38 (Post No.15,449)

Written by London Swaminathan

Post No. 15,449

Date uploaded in Sydney, Australia –  23 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆங்கில எழுத்து J- ல் துவங்கும் சொற்கள் தொடர்ச்சி………………

Words beginning with “J”.

Tamil version continued…………………..

ஜயத்ரதன் 

சிந்து சமவெளியை ஆண்ட ஜயத்ரதன், துரியோதனன் சகோதரியான துஸ்சலாவை மணந்தான் . மஹாபாரதப் போரில் கெளரவர்கள் தரப்பில் நின்று சண்டையிட்டான். கடுமையான போரில் 13  ஆவது நாளில் அர்ஜுனன் மகனான அபிமன்யுவைக் கொன்றான். உடனே அடுத்த நாள் சூரியன் மறைவதற்குள் ஜெயத்ரதனைத் தீர்த்துக் கட்டுவேன் என்று அர்ஜுனன் சபதம் செய்தான். மறுநாள் சூரியன் அஸ்தமனம் ஆனது போல இருள் கவ்வியது . இது கிருஷ்ணன் தனது சுதர்ஸன சக்கரத்தால் சூரியனை மறைத்தத்தால் ஏற்பட்டதாகச் செப்புவர். உடனே ஜயத்ரதன் தன்னை அர்ஜுனன் கொல்ல முடியவில்லை என்ற வெற்றிக் களிப்பில் வெளியே தலை நீட்டினான். கிருஷ்ண பரமாத்மா சுதர்சன சக்ரத்தை விலக்கவே மீண்டும் சூரிய ஒளி பிரகாசித்தது . உடனே அவனைக் கொல்லும்படி கிருஷ்ணன் சொல்லவே அர்ஜுனன் அவனைக் கொன்றான் என்பது மஹாபாரதக் கதை  

உண்மையில் இது சூரிய கிரகண சம்பவம் ஆகும். பாண்டவ சகோதரர்களில் நகுலனும் சகாதேவனும் சோதிடத்தில், வானவியலில், மஹா மேதாவிகள் மறுநாள் முழு சூரிய கிரகணம் நிகழப்போவதைக் கிருஷ்ணனிடம் கூறியிருந்தனர். அதை கிருஷ்ணன் பயன்படுத்திக்கொண்டு  இந்த வெற்றியை அர்ஜுனனுக்கு ஈட்டித் தந்தான் . மாபாரதப்போர் துவங்கிய நாள் அமாவாசை என்றாலும் ஒரு நாள் விட்டு ஒருநாள்தான் போர் நட ந்தது என்று பார்த்தால் அடுத்த அமாவாசையில் சூரிய கிரகணம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

இன்னுமொரு சம்பவமும் உள்ளது . பாண்டவர்கள் காட்டில் வேட்டையாட்சி ச்  சென்ற சமயா த்தில் அவர்களுடைய மனைவி திரவுபதி தனியாக இருந்தாள்; அப்போது ஜயத்ரதன் அவளை அணுகி உணவு கேட்கவே அவளும் உணவினை வழங்கினாள். அவள் கறுப்பி என்றாலும் பேரழகி. அவளை அடைய ஆசை கொண்ட ஜயத்ரதன் தனது தேரில் அவளைக் கடத்திச் சென்றான் பாண்டவர்கள்  அவனைத் துரத்திச் சென்று திரவுபதியை மீட்டனர்.

***

ஜெயதேவர்

கீத கோவிந்தம் என்னும் புகழ்பெற்ற அஷ்டபதி பாடல் நூலை சம்ஸ்க்ருத மொழியில் இயற்றிய ஒரிஸ்ஸா மாநிலக் கவிஞர் இவர்

ஜெய கோவிந்தரின் கீத கோவிந்தத்தில் உள்ள அஷ்டபதிகளில் மிகவும் ‘விரசமான’ பகுதிகள் என்று கருதப்படும் வசனங்களும் உண்டு. அதாவது கடவுளை நாயக நாயகி பாவத்தில் வழிபடும் ஒரு சிறந்த அணுகுமுறை. உலகில் வேறு எந்த மதத்திலும் இந்த சுதந்திரத்தைக் காணமுடியாது.

ஆனால் கோபியரின் காதல் பற்றி சுவாமி விவேகானந்தர் அற்புதமான சொற்பொழிவாற்றி இருக்கிறார். “முட்டாள்களே (Fபூல்ஸ்) இதை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய தெய்வீக அன்புக்கு ஈடு இணையானது எதுவும் உலகில் இ ல்லை” என்று இடி முழக்கம் செய்கிறார். அது உடல் ரீதியான சிற்றின்ப அன்பு இல்லை. உள்ளம் ரீதியான பேரின்ப அனுபவம். அதைப் புரிந்து கொள்ள வியாசருடைய சுகர் போல உள்ளத் தூய்மை இருக்கவேண்டும்” என்கிறார் சுவாமிஜி.

இந்தப்  புலவருக்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு . விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் புத்தரையும் ஒரு அவதாரமாக்கி புரட்சி செய்தார் . இவர் சுமார் 800  ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஸம்ஸ்க்ருதக் கவிஞர் ஆவார் .இன்றுவரை சம்பிரதாய பஜனைகளில் அஷ்டபதிப் பாடல்களை பாடிவருவதால் இவர் அழியாத புகழ் எய்திவிட்டார் .

***

ஜீவன்

உயிருள்ள எதையும் ஜீவன் என்பர்; எறும்பு முதல் யானை வரை ஜீவனுள்ள பிராணிதான் ; உயிர் மூச்சு, பிராண சக்தி என்பது பொருள். மனிதர்களை ஜீவாத்மா என்றும் இறைவனைப் பரமாத்மா என்றும் உபநிஷத்துக்கள் பகர்கின்றன.

ஜீவ என்பதை பைபிளில் ஈவ் என்றும் ஆத்மா என்பதை ஆடம் என்றும் மாற்றிவிட்டனர்!

Jeev = Eve; Atma= Adam in Bible.

***

ஜீவன் முக்தன்

உயிருடன் உலவும்போதே இறைவனை முழு அளவில் உணர்ந்து விட்டவர்களை ஜீவன் முக்தர்கள் என்பார்கள் ; அவர்களும்  சாதாரண மனிதர்களைப்  போலவே நோயவாய்ப்படுவர்; இன்ப துன்பங்களை அனுபவிப்பர் ஆயினும் அவர்கள் என்றும் பேரின்ப நிலையில் திளைத்து இருப்பர் ; நமது காலத்தில் ராம கிருஷ்ண பரமஹம்சர், சேஷாத்ரி சுவாமிகள், ரமணர், காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோர் இந்த நிலையை அடைந்தவர்கள் ஆவர்.

***

ஞானம்

அறிவு என்று பொருள் ஆங்கிலச் சொற்களான  க்னோ னாலேட்ஜ் Knowledge. Know  என்பன இந்தச் ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்தே பிறந்தன. ஆயினும் இது வரலாறு, விஞ்ஞானம் முதலிய புஸ்தகங்களைப் படிப்பதால் ஏற்படும் அறிவு அல்ல; இது மெய்யறிவு என்னும் பொருளில் பயன்படுகிறது . இறைவன் என்னும் உண்மைப் பொருள் பற்றிய அறிவு இது.

***

ஞானேந்திரியங்கள்

கண் காது மூக்கு தோல்,  நாக்கு என்ற ஐம்புலன்கள் நமக்கு உண்மை அறிவினை நாட்டை உதவுகின்றன .

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.   (குறள்  – 27)

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

***

ஜாதவேதஸ் :

அக்கினியின் பெயர்களில் ஒன்று; எல்லாம் அறிந்தவன் என்பது பொருள்; வேதத்தில் வரும் முதல் சொல் அக்கினி. இந்தப் பிரபஞ்ச்மம்  முழுதும் அக்கினி வியாபித்துள்ளது சூரியன் முதலான நட்சத்திரம் முதல் நமது உடல்வரை அக்கினியால் இயங்குகின்றன. அக்கினி இல்லையேல் பிரபஞ்சசமோ நாமோ இல்லை இதைக் கடவுளின் தூதர் என்று கருதும் இந்துக்கள் அக்கினியில் ஆகுதி செலுத்தி அவைகளை இறைவனுக்கு அனுப்புகின்றனர்  இந்தாளு சமய சடங்குகளில் பிறப்பு முதல் இறப்பு வரை பயன்படுவது அக்கினி.

அக்கினி சாட்சியாகத் திருமணம் செய்வதைச் சங்க இலக்கியமும் வேதங்களும் செப்புகின்றன . அக்கினி சாட்சியாக உடன்படிக்கை செய்ததைக் கல்வெட்டுகளும் இதிகாசங்களும் இயம்புகின்றன.

***

ஜ்வரதேவேர் 

ஜ்வரதேவேர் சிவனின் ஒரு வடிவம் ஆகும் . பஸ்மாசுரனை அழிக்க சிவன் எடுத்த ரூபம் இது ஆகம நூல்களில் இவருடைய வடிவம் வருணிக்கப்படுகிறது . அவருக்கு மூன்று தலைகள் , மூன்று கால்கள், ஆறு கைகள், ஒன்பது கண்கள் உள்ளன . சில இடங்களில் கைகளில் உள்ள பொருள்கள் மாறு படுகின்றன

கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு என்ற இடத்தில் அமைந்துள்ள வீரபத்ரேஸ்வரர் கோயில், திருநெல்வேலி , மதுரை, திருப்பரங்குன்றம், , மயிலாடுதுறை, பவானி உள்பட எண்ணற்ற சிவன் கோவில்களில் ஜ்வரதேவர் சன்னதி உள்ளது.

கும்பகோணத்தில் ஆதி கும்பேஷ்வரர் கோவிலிலும் இவர் சிலை உள்ளது. மூன்று தலைகளில் இரண்டு தலைகள்  பிராணிகளுடையவை ; சிங்கம், மான் ஆகியவற்றின் தலைகள் மனித தலைக்கு இரு புறமும் நீட்டிக்கொண்டு இருக்கின்றன. ஒரு கையில் தீர்க்க கலசம் இன்னொன்றில் திரிசூலம் காணப்படுகின்றன.

சிவபெருமான் உடலுக்கு வரும் நோய்களையும் பிறவிப்பிணி என்னும் நோயையும் தீர்ப்பவர் என்று கருத்து வேதத்திலேயே உள்ளது; அவரை டாக்டர் என்றும் மருந்து என்றும் அழைக்கும் பிஷக், பேஷஜம் என்ற சொற்கள் யஜுர் வேத ருத்ர மந்திரத்திலேயே வருகிறது வைத்தீஸ்வரன் என்ற அவருடைய பெயரும் இதை மெய்ப்பிக்கிறது.

ஜுரம் என்றால் காய்ச்சல்; ஆகவே நோய்களைத் தீர்ப்பதற்கு இவரை கஷாயம் வைத்து வழிபடுவதும் உண்டு.

பிற்கால வைஷ்ணவ நூலான ஹரிவம்சத்தில் கிருஷ்ணன் உருவாக்கிய ஜூர தேவர் இவருடன் சண்டையிட்டதாகவும் கதைகள் இருக்கின்றன.

***

ஜ்யோதிஷ

தமிழில் ஜோதிடம் என்றும் ஜோதிஷம் என்றும் சொல்லுவார்கள் . ஒளி என்று பொருள்; வேத காலப் படிப்பில் உள்ள ஆறு பாடங்களில் ஒன்று ஜோதிடம். உலகின் மிகப்பழைய நூலான ரிக்வேதம் முதல் ஜோதிடக் குறிப்புகள் உள்ளன வானவியல் இதில் அடக்கம் . சங்க இலக்கியத்தில் சுமார் 200  ஜோதிடக் குறிப்புகள் உள்ளன.   

ஜோதிடம் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு; முதலாவது வானில் உலவும் கிரகங்கள், நட்சத்திரங்களின் பாதையைக் கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ப யாக யக்ஞங்களைச் செய்வது. இரண்டாவது அப்படி உலவும் கிரகங்கள் நட்சத்திரங்களைக் கொண்டு இனி என்ன நடக்கும் என்பதைச் சொல்லுவது (Future Predictions)   ஆகும். இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப்  போன்றது.

உலகிலேயே ஜோதிடத்தை சிலபஸில் — பாட திட்டத்தில்  சேர்த்தது இந்துக்கள்தான். வேத பாடசாலைக்குச் செல்லுவோர் ஆறு துணைப்பாடங்களைப் (Six Ancillary Subjects) படிக்க வேண்டும். அப்போதுதான் குருநாதர் கான்வ கேஷன் Convocation தினத்தன்று (பட்டமளிப்பு விழா) சர்ட்டிபிகேட்டைக் கையில் கொடுப்பார் .

தமிழர்களைப் பொருத்த மட்டில் சங்க காலத்திலேயே இந்த நம்பிக்கை ஆழ வேரூன்றிவிட்டது.சங்க இலக்கியத்தில் நூற்றுக்கனக்கான சோதிடக் குறிப்புகளைக் காண்கிறோம். சகுன சாஸ்திரம், பறவை சாஸ்திரம், பல்லி ஜோதிடம், குறி கேட்டல், மணல் ஜோதிடம், கயிறு சோதிடம், சோழி ஜோதிடம் என ஏராளமான விஷயங்களை நம்முடைய இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. ஸம்ஸ்க்ருதத்தை விட அதிகமான பெயர்களை தமிழ் நட்சத்திரப்பட்டியலில் காண முடிகிறது. தும்மல் சாஸ்திரம், கண்துடிப்பு சாஸ்திரம், சகுனங்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இன்றுவரை சூரிய சந்திர கிரகங்கணளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லும் சோதிடர்கள் பொய் சொல்ல முடியுமா? என்ற வினாவை எழுப்புகிறார் அம்பலவாணர் என்ற புலவர் .

ஒருவர் பிறவியின் காரணமாக  குண நலன்கள் வருகிறதா, அல்லது அவரை வளர்க்கும் சூழ்நிலையால் குண நலன்கள் வருகின்றனவா என்ற கேள்விக்கு பிறவிதான் காரணம் என்கிறார்  புலவர். தற்காலத்தில் இரண்டையும் (Nature or Nurture) ஆதரித்து கட்டுரைகள் வந்தவண்ணம் இருக்கின்றன (Environment or Genetics)?

மிருகங்கள் கூட ஜோதிடம் பார்த்ததாக- சகுனம் பார்த்ததாக சங்கப் புலவர்கள் பாடி வைத்தனர். சம்ஸ்கிருதத்தில் கிரஹங்களுக்கு நிறைய பெயர்கள் உண்டு. ஆனால் தமிழில்தான் 27 நட்சத்திரங்களுக்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. அதாவது ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நிறைய பெயர்கள் வருகின்றன.

—subham—

Tags- ஜோதிடம், ஜயத்ரதன்HINDU DICTIONARY , IN ENGLISH AND TAMIL – 38; இந்து மத கலைச்சொல் அகராதி-38,  ஜுரதேவர்

Leave a comment

Leave a comment