ராமாயணத்தில் வரங்கள் (41)  மருகாந்தாரத்திற்கு ராமர்  வரம் அளித்தது! (Post.15,453)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,453

Date uploaded in London – 24 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (41)   

ராமாயணத்தில் வரங்கள் (41) மருகாந்தாரத்திற்கு ராமர்  வரம் அளித்தது!

ச. நாகராஜன்

யுத்தகாண்டத்தில் ‘அணை கட்டுவதும் ஸமுத்திரத்தைத் தாண்டுவதும்’

என்ற இருபத்திரண்டாவது அத்தியாயத்தில் ராமர் மருகாந்தாரத்திற்கு அளித்த வரம் பற்றி குறிப்பிடப்படுகிறது.

லங்கையை அடைவதற்காக வந்த ஶ்ரீ ராமர் சமுத்திரராஜனை வழி விடுமாறு வேண்டினார். ஆனால் சமுத்திரராஜன் வழி விடவில்லை.

இதனால் வெகுண்ட ராமர் தனது அஸ்திரத்தில் பிரம்மாஸ்திரத்திரத்தினால் பாணத்தை அபிமந்திரித்து இழுக்கலானார். உடனே உலகமே இருண்டது. புயல்காற்று அடிக்கத் தொடங்கியது. மின்னல்கள் தோன்றி நெருப்பைக் கக்கின. உடனே சமுத்திரராஜன் ஶ்ரீ ராமர் முன் கை கூப்பியவாறே வந்து வணங்கி ஒரு விண்ணப்பத்தைச் செய்தான்.

“நான் தாண்ட முடியாதவன். அதுவே என் இயற்கைக் குணம். என்றாலும் நீங்கள் சமுத்திரத்தைக் கடக்கும் விஷயத்தில் ஒரு வழி செய்வேன்” என்று உறுதி கூறினான்.

ராமர், “தொடுத்து விட்ட பாணமானது வீணாகாதது. ஆகவே இது எந்த இடத்தில் வீழ்த்தப்பட வேண்டும்” என்று சமுத்திரராஜனைக் கேட்க, அவன், “ வடக்கில் துருமசூல்யம் எனப் பெயர் பூண்ட என்னுடைய தேசத்தை பாபிகள் ஆக்கிரமித்திருக்கின்றனர். அவர்கள் மீது இந்த பாணமானது செலுத்தப்படட்டும்” என்று கூறினான்.

உடனே ராமரும் அங்கு பாணத்தை விடுத்தார்.  அந்தப் பிரதேசம் மருகாந்தாரம் என்ற பெயருடன் விளங்க ஆரம்பித்தது. பாணத்தால் பூமி பிளக்கப்படவே அங்கு ஜலமானது பொங்கி வந்தது. அது விரண கூபம் என்ற பெயருடன் விளங்க ஆரம்பித்தது.

அப்போது ராமர் மருகாந்தாரத்திற்கு ஒரு வரத்தை அளித்தார்.

பஷவ்யஸ்சால்பரோகஸ்ச பலமூலரஸாயுத: |

பஹுஸ்நேஹோ பஹுக்ஷீரசுகந்திவிர்விதௌஷத: ||

ஏவமேதௌர்குணைர்யுக்தோ பஹுபி: சததம் மரு: |

ராமஸ்ய வரதானஸ்ச சிவ: பன்யா பபூவ ஹ |\

யுத்த காண்டம் 22ம் அத்தியாயம் ஸ்லோக எண்கள் 41,42

ராமஸ்ய – ஶ்ரீ ராமரது

வரதானாத் – வரம் பெற்றதனாலேயே

மரு: – மருகாந்தாரமானது

பஷவ்ய ச – பசுக்களுக்கு நன்மை பயப்பதாயும்

அல்ப ரோக: ச- வியாதி என்பதே அபூர்வமாய் விளங்குகிறதாயும்

பலமூலரஸாயுத: – கனி, கிழங்கு, தேன் இவைகள் நிரம்பியதாயும்

பஹுஸ்த்ரேஹ: – ஏராளமான நெய் உடையதாயும்

பஹுக்ஷீர சுகந்தித: – ஏராளமான பாலை உடையதாயும்,

                     நறுமணங்களை உடையதாயும்

விவிதௌஷத: – பல வகை ஔஷதிகளை உடையதாயும்

ஏவம் – இப்படியாய்

எதௌ – மேற்கண்ட

பஹுபி: குணை: – பல நற்குணங்களால்

சததம் – எப்போதும்

யுக்தஸ் ச – விளங்குகிறதாய்

சிவ: பந்தா: – மங்களகரமான இடமாக

பபூவ ஹ – ஆயிற்று.

இப்படியாக மருகாந்தாரத்திற்கு ராமர் அளித்த வரம் பற்றி இந்த அத்தியாயத்தில் நாம் காண்கிறோம்.

சமுத்திரராஜன் நளனை சேது அமைக்க உதவி செய்வான் என்று கூற நளனும் சேது அமைக்க உதவினான்.

சேது அமைக்கப்பட்டது. ராமரும் கடலை சேது வழியே தாண்டினார்.

Leave a comment

Leave a comment