
Post No. 15,459
Date uploaded in Sydney, Australia – 27 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 33
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 33
***
புலி முனிவரும் பாம்பு முனிவரும்

இடர்கலிகள் பிணியோட எனையுமருள் … துன்பங்களும், கிரகக்
கோளாறுகளும், நோய்களும் விலக, என்னையும் ஒரு பொருளாகக் கருதி அருள்வாயாக.
குறமாதின் இணையிளநிர் முலைமார்பின் அணைமார்பா …
குறப்பெண் வள்ளியின் இளநீர் போன்ற மார்பில் அணையும் மார்பனே,
இனிய முது புலிபாதனுடன் … இன்ப நிலையில் உள்ள முதிய முநி* வியாக்ரபாதருடன்,
அரவு சதகோடி யிருடியர்கள் … பாம்பின் உருவில் உள்ள பதஞ்சலி முநிவரும், நூறு கோடி ரிஷிகளும்
புகழ்ஞான பெருமாளே. … புகழ்கின்ற ஞான மூர்த்தியாம் பெருமாளே.
* சிதம்பரத்தில் முதலில் தவத்தில் இருந்த வியாக்ரபாதரை ‘முதிய முநி’ எனக் குறிப்பிட்டார் – தில்லைப் புராணம்.
***
நித்திய கல்யாணி, சிவகாமி, அபிராமி- சொல் நயம்
சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி
எனை ஈண மலை மாது சிவை தற் பரனொடு ஆடும் அபிராமி
சிவகாமி உமை அருள் பாலா … சக்தி, தனித்து விளங்கும் ஜோதி,
அழகிய பார்வதி, பலவித உருவத்தை உடையவள், சுக நிலையிலேயே இருக்கின்ற நித்திய கல்யாணி, என்னைப் பெற்ற தாயாகிய, இமவான் மடந்தை, சிவை, பரமசிவனுடன் நடனம் இடும் அபிராமி, சிவகாமி ஆகிய உமாதேவி அருளிய பாலனே,
சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி
விளையாடி அசுராரை விழ சத்தியினை ஏவி அமரோர்கள்
சிறை மீள நடம் இடுவோனே … சக்ரவாள கிரியும், வலிமை வாய்ந்த
பெரிய மேரு மலையும், கடலும் புழுதிபடுமாறு ரத்தின மயமான மயிலின் மீது ஏறி விளையாடி அசுரர்கள் அழியுமாறு சக்தி வேலைச் செலுத்தி தேவர்களைச் சிறையினின்று மீட்டு நடனம் செய்பவனே,
***
யோக ரகசியங்கள்
நாலு சதுரத்த பஞ்ச அறை மூல கமலத்தில் அங்கியை … நாலு
சதுரப் பிரம பீடமாகிய, ஐந்தாம் வீடாகிய சுவாதிஷ்டானத்தில்*
செல்லும்படி, மூலாதார கமலத்துள்ள அக்கினியை
நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே … பிராணாயாம மந்திர
ஒழுங்கினால் சுழு முனை** நாடி மார்க்கத்தில் செலுத்தி,
நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற …
விஷ்ணு வீடாகிய மணி பூரகத்தில் உள்ள சந்திரகாரமாகிய பீடத்தில் பொருந்திச் சேர்ந்து நல்ல சுடர் தோன்றும்படியாக,
இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் … (அனாகதம் முதலிய மற்ற
நிலைகளிலும்) இணங்கி நடத்தி அக்கினி முதலிய மும்மண்டலங்களிலும்சந்தித்துள்ள ஆறு ஆதாரங்களிலும் பொருந்திய
கோலமும் உதிப்ப கண்டு … பல திருக் கோலங்களையும் பார்த்து,
உள நாலினை மறித்து … சரீர நிலைக்கு ஆதாரமாக உள்ள நாலு அங்குலப் பிராண கலையை (கும்பக வழியில்)** சிறிது சிறிதாகக் கழிந்து போகாதபடித் தடுத்து,
இதம் பெறு கோ என முழக்கு சங்கு ஒலி … இனிமையாகிய
கோ என்று முழங்கும் சங்கின் ஒலியைக் கேட்டு,
விந்து நாதம் கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை
உண்டு … விந்து சம்பந்த (சிவ – சக்தி) நாத ஒலி கூடி இருக்கும் இடத்தில் நின்று இந்திர போகமாகிய தேவாமிர்தத்தைப் பருகி,
ஒரு கோடி நடனப் பத அம் சபை என்று சேர்வேன் …
கணக்கற்ற நடனம் புரியும் குஞ்சிதபாதனுடைய (நடராஜனுடைய) அழகிய பொற் சபையை எக்காலத்தில் அடையப் பெறுவேன்?
** இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு: நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் ‘பூரகம்’ என்றும், வெளிவிடும் காற்றுக்கு ‘ரேசகம்’ என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு ‘கும்பகம்’ என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட ‘ஆதாரங்கள்’ (நிலைகள்,
சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் ‘பிரம கபால’த்தில் உள்ள ‘ஸஹஸ்ராரம்’ (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் ‘மூலாதார’த்தை வந்து அடையும்.சுவாச நடப்பை ‘ப்ராணாயாமம்’ என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால்மன அமைதி ஏற்படும்.
***
ஞான சம்பந்தரின் ஞான வாள்!
ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொ(ண்)டு தலை பறி
அமணர் சமூகம் மாற்றிய தவ முனி சகம் உளர் பாடு பாட்டு
என மறை பாடி … இப்பூமியில் அருள் நிறந்த ஞானமாகிய வாளைக்
கொண்டு, பறித்த தலையை உடைய சமணர்களின் கூட்டத்தை அழித்த
(ஞான சம்பந்தப் பெருமானாகிய) தவ முனியே, உலகத்தில் உள்ளவர்கள் பாடுகின்ற பாட்டுக்கள் போன்ற பாடல்களில் வேத சாரங்களை (தேவாரமாக) அமைத்துப் பாடியவனே,
தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தாவெ
னாச்சில சபதமொடு எழுவன தாள் வாச்சியமுடனே நீள்
அகு குகுகுகு என ஆளி வாய்ப் பல அலகைகள் அடைவுடன்
ஆடும் ஆட்டமும் … தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா என்று இந்த விதமான ஒலிகளைக் கொண்டு எழுகின்றனவான தாளவாத்தியங்களுடன் நெடு நேரம் அகு குகு குகு இவ்வாறான ஒலியுடன் ஆளியின் வாய் போல பல பேய்கள் முறையுடனே ஆடுகின்ற கூத்தும்,
அரன் அவனுடன் எழு காளி கூட்டமும் அகலாதே அரி
துயில் சயன வியாள மூர்த்தனு(ம்) மணி திகழ் மிகு புலியூர்
வியாக்ரனும் … சிவபெருமான் ஆடும் போது அவனுடன் எழுந்து
ஆடுகின்ற காளிகளின் கூட்டமும் உன்னைச் சூழ, திருமால் உறங்கும் படுக்கையான பாம்பாகிய ஆதிசேஷ மூர்த்தியாகிய பதஞ்சலியும், அழகுபொலியும் பேர் பெற்ற புலியூர் என்னும் சிதம்பரத்தில் வியாக்கிர பாதரும்,
அரிது என முறை முறை ஆடல் காட்டிய பெருமாளே. …
நடராஜப் பெருமானின் நடனம் அருமை வாய்ந்தது என்று வியக்க விதம் விதமான கூத்துக்களை ஆடிக் காட்டிய பெருமாளே.
பகவத் கீதையில்
பகவத் கீதையில் ஞானம் ( பகவத் கீதை அத்தியாய எண்களும் ஸ்லோக எண்களும்) பின்வருமாறு
ஞானப் படகு – 4-36
ஞான விளக்கு- 10-11
ஞானத் தீ – 4-3, 19
ஞானக் கண் – 15-10
ஞான வேள்வி – 4-33; 9-15; 18-70
ஞானத் தவம் – 4-10
ஞான யோகம்- 3-3; 16-1
திருமந்திரத்தில்
திருமந்திரத்தில் 406, 877, 1033, 1335, 1423, 1403, 1416, 1454, 1500, 1541, 1605, 1640, 1814, 1860, 1858, 1913, 2000, 2167, 2277, 2285, 2598, 2677, 2695, 2755, 2747, 2782, 2777, 2807, 2803, 2927,
ஞான வாள்
நமன் வரின் ஞான வாள் கொண்டே எறிவன்
சிவன் வரின் நான் உடன் போவது திண்ணம்
பவம் வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம் வரும் சிந்தைக்குத் தான் எதிர் யாரே.
(சைவ சித்தாந்தக் கழகம் வெளியிட்ட திருமந்திரம் நூல் எண்கள் இவை )
ஞானக் கொழுந்து (406), ஞானத் தலைவன் (878), ஞானக் கொம்பு (1033), ஞானப் பொருள் (1335), ஞானபூபதி, ஞானோதயம் (1403) ஞான நிர்வாணம் (1449), ஞான சமாதி (1605) ஞான வேடம் (1640), ஞான முத்திரை (1860), ஞானத் தறி (2000), ஞானம் படர்கின்ற கொம்பு,ஞானத் தலைவன், ஞானானந்தம், ஞான விளக்கொளி, ஞான நெறி, ஞான மார்க்கம், ஞானக் கூத்து
***
பச்சிலைக்கும், எச்சிலுக்கும் மயங்கியவன் சிவன் !
பொக்கணத்து நீற்றை இட்டு ஒருத்தனார்க்கு … விபூதிப்
பையிலிருக்கும் திரு நீற்றை (நெற்றியில்) இட்டு விளங்கிய ஒப்பற்ற (சிவகோசரியார் என்னும்) அந்தணனுக்கு
புத்தி மெத்த காட்டு(ம்) புன வேடன் … உண்மை அறிவை நன்கு
காட்டிய மலைக் கொல்லைக் காட்டு வேடன் (கண்ணப்பன்) தந்த பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் … பச்சிலைப் பூஜைக்கும், அவன் வாயில் இருந்து உமிழ்ந்த எச்சிலாகிய அபிஷேகத்துக்கும்,
வீக்கு பைச் சிலைக்கும் ஆட்கொள் அரன் வாழ்வே … (அவன்)
தோளில் கட்டியிருந்த வலிய வில்லுக்கும் வெகுவாக உகந்து அவனை ஆட்கொண்டருளிய சிவபெருமானுடைய செல்வக் குமரனே,
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட … முறைமையுடன்
வீட்டின்பத்தை உபதேசித்து தந்தையாகிய சிவபெருமானுடைய
உள்ளத்தை வசப்படுத்தியவனே,
பத்தருக்கு வாய்த்த பெருமாளே. … பக்தர்களுக்கு அருமையாகக்
கிட்டியுள்ள பெருமாளே.
–subham—
Tags- பச்சிலைக்கும், எச்சிலுக்கும் , சிவன் ! சம்பந்தரின் ஞான வாள்! – Part 33 திருப்புபுகழ் அருணகிரிநாதர் ,அரிய செய்திகள்