கண்ணபிரானை மடக்கிய கோபிகை! (Post No.15,466)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,466

Date uploaded in London – 28 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கண்ணபிரானை மடக்கிய கோபிகை! 

ச. நாகராஜன் 

கேரள நாட்டில் பரூருக்கு அருகில் பிறந்தவர் மாபெரும் மகானான லீலாசுகர். இவரது காலம் கி.பி, 1220 முதல் 1300 முடிய என வரலாற்று ஆசிரியர்கள் நிர்ணயித்துள்ளனர்.

பெரும் கிருஷ்ண பக்தரான லீலா சுகர் கிருஷ்ணரது லீலைகளை வர்ணிப்பத்தில் மிகுந்த விருப்பமுள்ளவர். அதில் சிறந்தவர்.

அவர் இயற்றிய் அற்புதமான் நூல் ஶ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்.

ஶ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்  நூலில் நமக்குக் கிடைத்துள்ள 109 பாடல்களும் மிக அருமையானவை.

அதில் ஒன்று தான் கோபியுடனான சிலேடை சம்பாஷணை!

கோபிகை கிருஷ்ணனுடன் நடத்தும் குறும்புத்தனமான கேலியின் கிண்டலும் நிறைந்த சம்பாஷணையை இந்த சிலேடை பாடல் வர்ணிக்கிறது.

கோபிகை: விரலால் (அங்குல்யா)

கா: – யார்

கவாடம் – கதவைத்

ப்ரஹாதி – தட்டுகிறது?

இதற்கு கிருஷ்ணர் பதில் அளிக்கிறார்:

குடிலே – வக்கிரப்பெண்னே

மாதவ: – மாதவன்

உடனே அதை வேறு விதமாக அர்த்தம் செய்து கொண்டாற்போல கோபிகை கேட்கிறாள்:

கிம் வஸந்த: – என்ன வஸந்தருதுவா?

கிருஷ்ணர்: நோ சக்ரீ – இல்லை சக்ரபாணி

கோபிகை: கிம் குலால: – சக்கரம் சுற்றுகிறானே அந்தக் குயவன்.

(சக்ரபாணி என்பதை சக்கரம் சுற்றும் குயவன் என்று அர்த்தம் செய்து கொண்டு கோபிகை இப்படி கிண்டலாகக் கேட்கிறாள்!)

கிருஷ்ணர்: ந ஹி தரணீதர: – இல்லை இல்லை, பூமியைத் தாங்குபவன் நான்!

உடனே கோபிகை: கிம் த்விஜிஹ்வா பணீந்த்ர  – இரண்டு நாக்கு படைத்த பாம்பா?(பூமியைத் தாங்குபவன் ஆதிசேஷன் அல்லவா, அப்படி அர்த்தத்தை எடுத்துக் கொண்டு கிண்டலடிக்கிறாள் கோபிகை!)

கிருஷ்ணர்: நாஹம் தாராஹிமர்த்தீ – இல்லை, இல்லை, நான் ஆற்றில் வசித்த பாம்பை அடக்கியவன்!

கோபிகை: கிமஸி ககபதி? – நீ பட்சிராஜனான கருடனா?

கிருஷ்ணர்: நோ ஹரி – இல்லை ஹரி!

கோபிகை – கிம் கபீந்த்ர: – என்ன குரங்கா? (ஹரி என்றால் குரங்கு என்று ஒரு அர்த்தம் உண்டு!)

கிருஷ்ணர் நொந்து போக மாட்டாரா என்ன?

இத்யேவம் – இப்படியாக

கோபகன்யா வசனஜித: – கோப கன்யாவிடம் தோற்கடிக்கப்பட்டவனான

சக்ரபாணி – சக்ரபாணியான கிருஷ்ணன்

வ: – உங்களை

பாது – காப்பாற்றட்டும்.

105வது பாடலாக அமையும் இந்தப் பாடல் இதோ:

அங்குல்யா க: கவாடம் ப்ரஹரதி

  குடிலே, மாதவா, கிம் வஸந்தோ

நோ, சக்ரீ, கிம் குலாலோ, ந ஹி

  தரணீதர: கிம் த்விஜிஹ்வ: பணீந்த்ர:||

நாஹம் தாராஹிமர்த்தீ, கிமஸி

   ககபதிர் – நோ ஹரி: கிம் கபீந்த்ர

இத்யேவம் கோபகன்யா – ப்ரதிவசன

  ஜித: பாது வச்சக்ரபாணி: ||

இந்த நூலுக்கு அருமையான உரையை அண்ணா அளித்துள்ளார். அதை ஶ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர் வெளியிட்டுள்ளது.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே, ஹரே!

**

Leave a comment

Leave a comment