தாராசுரத்துக்கு எனது பயணம் (Post No.15,496)

Written by London Swaminathan

Post No. 15,496

Date uploaded in Kumbakonam, India –  14 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Pictures are taken by London swaminathan

தஞ்சைப் பெரியகோவிலுக்கும் கஙகை கொண்ட சோழபுரத்துக்கும் பல முறை சென்று வந்த நான், இதுவரை தாராசுரத்துக்குச் செல்லாமல் இருந்தேன் இந்த முறை இந்திய விஜயத்தின்போது 2026 மார்ச் பத்தாம் தேதி காலையில் சென்றேன் ; தொல்பொருட்த் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த யுனெசுகோ அங்கீகார பாரம்பர்ய சின்னத்துக்கு  அனுமதிக் கட்டணம் எதுவும் இல்லை.

தாராசுரம் எங்கே இருக்கிறது  ?

தாராசுரம் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து மேற்கே சுமார் 4 கி.மீ இருக்கிறது. இது யுனெஸ்கோ உலக மரபுச் சின்னம்;  வரலாற்றுச் சிறப்புமிக்க ஐராவதேசுவரர் கோயிலை  இரண்டாம் ராஜராஜ சோழன்ய்ங்கே கட்டியதால்  புகழ்பெற்றது. அவன் 12-ஆம் நூற்றாண்டில்  ஆண்ட சோழ மன்னன்.

நான் கும்பகோணத்திலிருந்து ஆட்டோவில் சென்றுவந்தேன் .

தஞ்சசை, கங்கை  கொண்ட சோழபுரம் ஆகிய இரண்டுக்கும் அடுத்த படியாகத்தான் இதை வைக்கவேண்டும் ; அதற்க்கு காரணம் காலம் செய்த கோளாறுதான்! சிலைகள்  மிகவும் பொலிவில்லாமல் இருக்கின்றன சிற்பிகள் தனது செயலைச் செவ்வனே செய்தும் பராமரிப்பு இல்லாததால் அழகு குன்றிவிட்டன.

ஐராவதேஸ்வர் கோவிலில் கொஞசம் டுரிஸ்ட் கூட்டம் சேர்ந்தது. சந்நிதியில் சிவலிங்க  தரிசனம் தீபாராதனையையுடன் கிடைத்தது  .ஐராவதம் என்பது இந்திரனின் யானையின் பெயர் அது  வழிபட்ட இடம் எனலாம்; துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர்  என்றும் தல புராணம் கூறுகிறது.

இங்குள்ள சிறப்புகள்

தேர் போன்ற அமைப்பில் உள்ள கோயில்

கட்டிடம் முழுதும் கெல்மட்டப் பகுதியில் நூறுக்கு கணக்கான குட்டிக் குட்டி சிலைகள்

கமகிகை கொண்ட சோழபுரம் போலவே கோபுரம்

ஒருகாலத்தில் இது சோழனின் தலை நகரம்  அவனுடைய கல்வெட்டுகளும் உள்ளன .கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர்.நிறைய மண்டபங்கள்;

இந்திரன் அமர்ந்திருக்கும் ஐராவதத்தின் சிலை.

மண்டபங்களில் சதுர, செவ்வக, நீள்சதுர, வட்ட, பூக்கள் வடிவிலான குறுக்கும் நெடுக்கிலும் காற்று நுழையும்படி அமைக்கப்பட்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்ட கருங்கல்  சாளரங்கள் .

முக்கிய சந்நிதியின் வெளிப்புறச்ச சுவர்களில் தெய்வங்களின் உருவங்கள்.

பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள்  சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி .

கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்(சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு.

பல கோவில்களில் காணப்படும் யானை மாடு இணைந்த உருவம். இதைக் கைகளைக்கொண்டு ஒருபுறம் மறைத்தால் யானையாகவோ மாடாகவோ தெரியும்.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

இசை எழுப்பும் படிக்கட்டு :பலிபீடத்திற்கு இட்டுச்செல்லும் இந்த 7 பாடும் படிகள் நுணுக்கமாக செதுக்கப்பட்டு ஏழு இசைக் குறிப்புகளைக் குறிக்கின்றன.

மூலவர் பெயர்: ஐராவதேஸ்வரர்

தாயார் / அம்மன் பெயர்:வேதநாயகி

தலமரம்:வில்வமரம்

முதலில் இருந்த பெயர் – இராஜராஜேச்சுரம்

இன்றைய பெயர்- தாராசுரம்

இக்கோயில் விமானம் 85 அடி உயரம் கொண்டது.  இக்கோயிலில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.  விதவிதமான அளவில் விசித்திரமான சிற்பங்கள் நிறைந்த சிற்பச் சரணாலயமாக இக்கோயில் திகழ்கிறது. இக்கோயில் பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும். சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். மூவருலாவில் இக்கோயிலைக் கட்டிய இரண்டாம் இராஜராஜன் சிறப்பிக்கப்படுகிறான். ஒட்டக்கூத்தர் எழுதிய மூவருலா விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜசோழன் ஆகிய மூவருடைய புகழைப் பாடுவதாக அமைந்த இலக்கியமாகும். தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் கண்டது. 63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வேதகால அக்கினி, இந்திரன் முதலிய தெய்வங்களும் தற்காலத்தில் வழி படப்படும் துர்க்கை முதலிய தெய்வங்களும் மாடம்  தோறும் செதுக்கப்பட்டுள்ளன . கட்டணமின்றி பார்க்கக்கூடிய இந்தச் சிற்பக் கலைக்கூடத்துக்கு அனைவரும் சென்று மகிழ வேண்டும். 

–Subham_

Tags-தாராசுரம், எனது பயணம், தேர் போன்ற கோயில், ஐராவதேஸ்வரர், 40,000 சிற்பங்கள்

Leave a comment

Leave a comment