Post No. 15,500
Date uploaded in London – 16 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு புதிர் ஸ்லோகம்!
ச. நாகராஜன்
தமிழிலும் வடமொழியிலும் ஏராளமான புதிர் ஸ்லோகங்கள் உள்ளன.
அவற்றைப் படிப்பதே மகிழ்ச்சியைத் தரும்.
ஒரு வார்த்தையில் பல கேள்விகளுக்குப் பதில்!
ஒரு புதிர் ஸ்லோகம் இதோ:
கோ நிர்தக்த்யஸ்த்ரீபுகா கஸ்ச கர்ணஸ்ய ஹந்தா
நத்யா கூலம் விகடயதி க: க: பரஸ்த்ரீரதஸ்ச |
க: சம்நத்தோ பவதி சமரே பூஷணம் கிம் குசானாம்
கிம் துக்க சங்காத் பவதி மஹதாம் மானபூஜாபஹார: ||
இது ஒரு அற்புதமான ஸ்லோகம். இது ஒரு விடுகதைக் கவிதை!
பல கேள்விகள். ஆனால் இறுதியில் ஒரே வார்த்தையில் பதில்!
யார் சிவபிரானால் எரிக்கப்பட்டவர்? பதில்: மாரா – மன்மதன்
யார் கர்ணனைக் கொன்றது? பதில்: நரா – அர்ஜுனன்
யார் நதிக்கரையை உடைத்தது? பதில் பரா – வெள்ளப்போக்கு
யார் அடுத்தவர் மனைவியின் மீது அன்புடன் இணைவது? – பதில் ஜாரா – கள்ளக் காதலன்
யார் போரில் சண்டையிடத் தயாராக இருப்பது? – பதில் பரா – எதிரி
மார்பகங்களில் அணியும் ஆபரணம் எது? – பதில் ஹாரா – முத்து நெக்லஸ்
(பெரியோர்களுக்கு) கெட்டவர் இணக்கத்தால் ஏற்படுவது என்ன? பதில் – மானபூஜாபஹார: – மரியாதையும் கௌரவமும் கெடுவது தான்!
கடைசி விடை என்ன? மானபூஜாபஹார:
இதில் எல்லா கேள்விகளுக்குமான விடை உள்ளது. எப்படி?
இதில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் கடைசி எழுத்துடன் சேர்த்துப் பார்ப்போம்.
மாரா- மன்மதன்
நரா – அர்ஜுனன்
புரா – வெள்ளம்
ஜாரா – கள்ளக் காதலன்
பரா – எதிரி
ஹாரம் – முத்துமாலை
மந்தக்ராந்தா சந்தத்தில் அமைந்துள்ளது இந்த ஸ்லோகம்.
இது பல சுபாஷித ஸ்லோகங்களின் தொகுப்பில் காணப்படுகிறது.
இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.
*
யார் குருடன்? யார் செவிடன்? யார் ஊமை?
கேள்வி- பதில் ஸ்லோகங்கள் இன்னொரு விதம்!
கோ அந்தோ யோகார்யரத:
கோ பகிரோ ய: ஸ்ருணோதி ந ஹிதானி |
கோ மூகோ ய: காலே
ப்ரியாணி வக்தும் ந ஜானாதி ||
யார் குருடன்? எவன் ஒருவன் செய்யக் கூடாத காரியத்தைச் விரும்பிச் செய்கிறானோ அவன் தான் குருடன்!
யார் செவிடன்? எவன் ஒருவன் நல்லதைக் கொடுக்கும் சொற்களைக் கேட்காமல் இருக்கிறானோ அவனே செவிடன்.
யார் ஊமை? சரியான சமயத்தில் இனிமையான சொற்களை எவன் ஒருவனுக்குப் பேசத் தெரியவில்லையோ அவனே ஊமை!
அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டியவை!
கோ தேஷ: கானி மித்ராணி க: கால: கோ வ்யயாகமௌ |
கஸ்சாஹம் கா ச மே சக்திர் இதி சிந்த்வம் முஹுர்முஹுர்: ||
எது தேசம்? யார் நண்பர்கள்? நேரம் என்ன? எவ்வளவு வரவு வந்திருக்கிறது, எவ்வளவு செலவாகியுள்ளது? நான் யார்? எனது அதிகாரம் என்ன? இவையெல்லாம் அடிக்கடி நினைத்துப் பார்க்கப்படவேண்டியவையாகும்.
**