‘அ’ என்றால் சிவன்; முதல் குறளுக்கு புதுப் பொருள்! (Post No.15,511)

Written by London Swaminathan

Post No. 15,511

Date uploaded in London – 19 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

49திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 49

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 49

அ என்றால் சிவன் ; முதல் குறளுக்கு புதுப் பொருள் !

எட்டாம் எழுத்தை ஏழையேற்குப் பகர்ந்த முத்தா … தமிழில் ‘அ’

என்னும் எழுத்தை (இது சிவத்தைக் குறிக்கும் என்று) ஏழையாகிய எனக்கு உபதேசித்த முக்திக்கு வித்தே,

வலுப்பான போர்க்குள் தொடங்கி எக்காலும் மக்காத சூர்க்

கொத்து அரிந்த சினவேலா … வலிய போரில் தலையிட்டு,

எப்போதும் அழிந்து போகாத சூரனையும் அவன் குடும்பத்தையும்

அரிந்து தள்ளின கோபம் கொண்ட வேலை ஆயுதமாகக் கொண்டவனே,

தச்சா மயில் சேவல் ஆக்கிப் பிளந்த சித்தா … (சூரனாகிய

மாமரத்திலிருந்து) ஒரு தச்சனைப்* போல மயிலையும் சேவலையும்

வரும்படி அதனைப் பிளந்த சித்த மூர்த்தியே,

குறப்பாவை தாட்குள் படிந்து சக்காகி அப்பேடையாட்குப்

புகுந்து மணமாகி … குறப் பெண்ணாகிய வள்ளியின் திருவடியைப்

படிந்து வணங்கி, அவளுக்குக் கண் போல இனியனாகி, (அவள்

இருக்கும் இடத்துக்குப்) போய் அவளை மணந்து,

தப்பாமல் இப் பூர்வ மேற்குத் தரங்கள் தெற்காகும் இப்பாரில்

கீர்த்திக்கு இசைந்த தச்சூர்** வடக்காகு(ம்) மார்க்கத்து

அமர்ந்த பெருமாளே. … தவறுதல் இன்றி இந்தக் கிழக்கு, மேற்கு,

வடக்கு, தெற்கு என்னும் நான்கு திசைகளைக் கொண்ட இந்த உலகில் சிறந்த பெயருடன் விளங்கும் தச்சூர் என்னும் ஊர் வடக்கே அமைந்துள்ள வழியில் (இப்போது ஆண்டார் குப்பம் என வழங்கப்படும் தலத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே.

எக்காலும் அழியாத வரத்தைப் பெற்று சூரன் மாமரமாக போருக்கு வந்தான்..அத்தகைய மாமரத்தை முருக வேள், வேலால் இரு கூறுகளாகப் பிளந்தார். அந்த மரத்துண்டுகளைக் கொண்டு ஒரு தச்சனைப் போல் மயில், சேவல் என்னும் உருவங்களை ஆக்கினார்.

** தச்சூர் வடக்காகும் திசையில் ஆண்டார்குப்பம் என்ற பிரபல முருகத்தலம்; சென்னைக்கு வடக்கே உள்ள பொன்னேரி ரயில் நிலையத்துக்கு அருகே உள்ளது.

முதல் குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

பொருள்:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன; அதுபோல, இவ்வுலகம் கடவுளை (ஆதிபகவன்) அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

உலகின் முதல் இலக்கணப் புஸ்தகத்தை எழுதிய பாணினி, சிவன் உடுக்கையிலிருந்து ஒலித்த 14 எழுத்துக்களில் முதல் எழுத்து அ என்கிறார்.

கண்ணனும் பகவத் கீதையில் எழுத்துக்களில் நான் அ என்கிறார்

अक्षराणामकारोऽस्मि द्वन्द्व: सामासिकस्य च |

अहमेवाक्षय: कालो धाताहं विश्वतोमुख: || 10-33||

அக்ஷராணாம் அஹம் அகாரோஸ்மி 10-33

akṣharāṇām a-kāro ’smi dvandvaḥ sāmāsikasya cha

aham evākṣhayaḥ kālo dhātāhaṁ viśhvato-mukhaḥ 10-33

அக்ஷராணாமகாரோ‌ஸ்மி த்வன்த்வ: ஸாமாஸிகஸ்ய ச |

அஹமேவாக்ஷய: காலோ தாதாஹம் விஶ்வதோமுக: ||10-33||

****

எண்களில் விளையாடும் அருணகிரி!

ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும்

ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் அறுநாலும் ஆறுமாய … மொத்தம்

தொண்ணூற்றாறு (6+6+5+5+6+6+5+5+6+6+5+5+24+6=96) ஆகிய

சஞ்சலஞ்கள் … துன்பங்களுக்கு காரணமான தத்துவங்களுக்கும்*

வேறதா விளங்குகின்ற … வேறுபட்டதாக விளங்குகின்றதும்,

ஆரணாகமங் கடந்த … வேதாகமங்களைக் கடந்ததும்,

கலையான ஈறு கூறரும் … உபதேசக் கலையாகிய சித்தாந்தத்தால்

கூட கூறுதற்கு ஒண்ணாததும்,

பெருஞ்சுவாமியாய் இருந்த நன்றி … பெரும் தெய்வ

நிலையிலிருக்கும் நற்பொருளை

ஏது வேறு இயம்பலின்றி … ஏது (காரணம்) வேறு சொல்வதற்கு

இல்லாமல்

ஒருதானாய் யாவுமாய் … ஒப்பற்ற தானேயாக நின்று, மற்ற

எல்லாமாகவும் விளங்கி,

மனங்கடந்த மோன வீடு அடைந்து … மனம் கடந்ததான மெளன

இன்ப முக்தியை அடைந்து,

ஒருங்கி யான் … சிந்தை ஒருமைப்பட்டு ஒடுக்கமுற்று யான்

அவா அடங்க என்று பெறுவேனோ … ஆசைகள் யாவும் அடங்கும்

நிலையை என்று பெறுவேனோ?

* 96 தத்துவங்கள் பின்வருமாறு:

36 பரதத்துவங்கள் (அகநிலை):

ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.

ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து – 25 (புறநிலை):

மண், தீ, நீர், காற்று, வெளி.

ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):

வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.

***

திருப்புகழில் உபநிஷத மொழிபெயர்ப்பு !

காணொ ணாதது உருவோ டருவது

     பேசொ ணாதது உரையே தருவது

          காணு நான்மறை முடிவாய் நிறைவது …… பஞ்சபூதக்

காய பாசம தனிலே யுறைவது

     மாய மாயுட லறியா வகையது

          காய மானவ ரெதிரே யவரென …… வந்துபேசிப்

பேணொ ணாதது வெளியே யொளியது

     மாய னாரய னறியா வகையது

          பேத பேதமொ டுலகாய் வளர்வது …… விந்துநாதப்

பேரு மாய்கலை யறிவாய் துரியவ

     தீத மானது வினையேன் முடிதவ

          பேறு மாயருள் நிறைவாய் விளைவது …… ஒன்றுநீயே

காணொணாதது … கண்களால் காண்பதற்கு முடியாததும்,

உருவோ டருவது … உருவமும் அருவமுமாக இருப்பதும்,

பேசொ ணாதது … பேசுதற்கு முடியாததும்,

உரையே தருவது … பலவித விளக்கங்களுக்கும் இடம் தருவதும்,

காணு நான்மறை முடிவாய் நிறைவது … காணப்படும் நான்கு

வேதங்களுக்கும் முடிவான பொருளாய் நிறைந்து நிற்பதும்,

பஞ்சபூதக் காய பாசம தனிலே … ஐம்பூதங்களினால் ஆன இந்த

உடம்பின் மேல் உள்ள பாசத்தில்

உறைவது … நிலைத்து நிற்பதும்,

மாய மாயுட லறியா … மாயப் பொருளாக இப்பெரும் உடலால்

அறியமுடியாத

வகையது … வகையில் இருப்பதும்,

காய மானவ ரெதிரே யவரென … சரீரத்தை உடைய மனிதர்கள்

எதிரே அவர்களைப் போலவே மனித உருக்கொண்டு

வந்துபேசிப் பேணொணாதது … வந்து பேசினாலும், இன்னாரென

அறிந்து போற்ற முடியாததும்,

வெளியே யொளியது … ஆகாய வெளியிலே ஒளிப்பிழம்பாகத்

திகழ்வதும்,

மாயனார் அயன் அறியா வகையது … திருமால், பிரம்மா இவர்களால்

அறியமுடியாத வகையில் இருப்பதும்,

பேத அபேதமொடு உலகாய் வளர்வது … வேற்றுமை, ஒற்றுமை

என்ற தன்மைகளோடு உலக ரீதியாக வளர்வதும்,

விந்துநாதப் பேருமாய் … பீடம், லிங்கம் (சக்தி – சிவம்) என்ற

பேருடையதாயும்,

கலை யறிவாய் … நூல்களின் சாரமாகவும்,

துரிய அதீதமானது … யோகியரின் உயர் நிலைக்கும் அப்பாற்பட்டதும்,

வினையேன் முடிதவ பேறு மாய் … நல்வினையால் என் முடிந்த

தவத்தின் பெரும்பயனானதும்,

அருள் நிறைவாய் விளைவது … திருவருள் நிறைவாக

விளங்குகின்றதும்,

ஒன்றுநீயே … இந்த அத்தனையும் பொருந்தி விளங்குபவன் நீ

ஒருவன்தான்.

1. Brahman is the Subject, Not the Object

The core reason Brahman cannot be “seen” is that perception requires a subject (you) and an object (the thing seen). Because Brahman is the ultimate, non-dual Consciousness (Atman) behind everything, it cannot make itself an object to be seen.

The Kena Upanishad states: “That which cannot be perceived by the eye, but by which the eye is perceived—That alone know as Brahman”.

Brihadaranyaka Upanishad (3.4.2) emphasizes: “You cannot see the seer of seeing; you cannot hear the hearer of hearing; you cannot think of the thinker of thinking; you cannot know the knower of knowing”.

2. Beyond Senses and Mind

Brahman is not a “thing” with form, color, or limitations that the sensory organs or mind can grasp.

Taittiriya Upanishad notes that words, along with the mind, return from It unable to reach It.

It is described as Neti, Neti (not this, not this), meaning it is not anything that can be described or perceived.

கேனோபநிஷத், பிருஹத் ஆரண்யக உபநிஷத், தைத்ரீய உபநிஷத் ஆகியவற்றில் பிரம்மம் என்னும் இறைவனை வருணித்திருப்பதை அருணகிரிநாதர் அழகாக தமிழில் வடித்துள்ளார்.

—subham—

Tags- கேனோபநிஷத், பிருஹத் ஆரண்யக உபநிஷத், தைத்ரீய உபநிஷத், பிரம்மம், அ என்றால் சிவன், 49, திருப்புகழில் அருணகிரிநாதர் , அரிய செய்திகள் Part 49, 96 தத்துவங்கள், காணொணாதது ,பேசொ ணாதது 

Leave a comment

Leave a comment