Post No. 15,524
Date uploaded in London – 23 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாழ்க்கைக்கு உதவும் சுபாஷிதப் பொன்மொழிகள்!
ச. நாகராஜன்
1.ராஜா பஷ்யதி கர்ணாப்யாம் யுக்த்யா பஷ்யதி பண்டிதா: |
ராஜா காதால் கேட்டதை வைத்து எதையும் பார்க்கிறார்; ஆனால் பண்டிதரோ தர்க்கரீதியாக எதையும் பார்த்து நிர்ணயிக்கிறார்.
2. ரஸமூலா ஹி வ்யாத்ய:|
உணவின் சுவையை வைத்தே வியாதிகள் உருவாகின்றன.
3. யேன கேன ப்ரகாரேண ப்ரஸித்த: புருஷோ பவேத் |
எந்த வழியினாலாவது ஒருவன் புகழை அடைய வேண்டும்.
4. யாத்ருஷி பாவனா யஸ்ய சித்திர்பவதி தாத்ருஷி|
எதை ஒருவன் மனதில் நினைத்துத் திட்டமிடுகிறானோ அதற்கேற்பவே
விளைவு அமைகிறது.
5. முராரே த்ரூதிய பந்தா: |
முராரிக்கு மூன்றாவது வழி உண்டு!
6. கா ப்ராஞோ வாஞ்சதி ஸ்நேகம் வேஷ்யாஸு சிகத்ஹாஸு ச |
யார் வேசிகளிடத்தும் பாம்புப் புற்றுகளிடத்தும் வாஞ்சை கொள்வார்?
7. தன்யோ க்ருஹஸ்தாஸ்ரம:|
க்ருஹஸ்தாஸ்ரமே சிறந்தது.
8. தர்மசாரவிஹீனானாம் த் ரவ்யம் மலசஞ்சய: |
தர்மவழியில் அல்லாது ஒருவனிடம் இருக்கும் பணம் மலத்திற்குச் சமமாமும்.
9. திக்தானம் ச் ரத்தயா ஹீனம்.
சிரத்தையில்லாமல் தரப்படும் தானம் இழிவானதே.
10. தூர்த்தே: கோ நஹி வஞ்சயதே |
தூர்த்தனால் வஞ்சிக்கப்படாதவர் யார் தான் உண்டு?
11. ப்ரக்ஷாலநாத்தி பங்கஸ்ய தூராதஸ்பர்ஷணம் வரம்|
சகதியைத் தவிர்ப்பதானது அதைக் கழுவுவதை விடச் சிறந்தது.
12. பதிரான்மந்தகர்ண ;ஸ்ரேயான் |
செவிடனாயிருப்பதை விட மந்தமாகக் காது கேட்க வல்லவன் சிறந்தவன்.
**