

Written by London Swaminathan
Post No. 15,567
Date uploaded in London – 2 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அகஸ்தியர்
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.–பாரதியார்
குடத்தில் பிறந்த டெஸ்ட் ட்யூப் பேபி இவர் ; ஆகையால் கும்ப முனி என்று பெயர் ; பெரிய என்ஜினீயர் ; பகீரதன் கங்கை நதியைத் திருப்பிவிவிட்டது போல காவிரியை தமிழ்நாட்டை நோக்கித் திருப்பிவிட்டார்; விந்திய மலையில் சாலை போட்டார்; கடல்கடந்த நாடுகளுக்கு இந்து மன்னர்களை அழைத்துச் சென்றதால் இவரது சிலைகள் தென் கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் உள்ளன. அகத்தியம் என்ற நூலினை யாத்து தொல்காப்பியருக்கு ஆசிரியர் ஆனார்.
லோபாமுத்ரா என்ற மஹாராணியைக் கல்யாணம் கட்டிக்கொண்ட குட்டையான ரிக் வேத அகஸ்தியர் முதல் மருத்துவ நூல்கள் எழுதிய பிறகால அகஸ்தியர் வரை நாம் அறிவோம்; குள்ளமான அகஸ்தியர் சிலைகள் இந்தியாவில் மட்டுமின்றி தென் கிழக்காசிய நாடுகளிலும் இருப்பதால் இந்து சமய முனிவர்களில் பெரும் புகழ் படைத்தவர் அகஸ்தியர் ஒருவரே என்பதையும் உறுதிபட சொல்லலாம் . காளிதாசனின் ரகுவம்சம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அகஸ்தியர்- பாண்டியர் தொடர்பினைக் கூறிவிட்டது. கடைசியாக நமக்கு கவிதை எழுதிய பாரதியாரும் சிவபெருமான் தமிழ் மொழியை உண்டாக்கினார் அதற்கு அகஸ்தியர் என்ற பிராமணன் இலக்கணம் செய்து கொடுத்தான் என்று பாடிவிட்டார்.
இவர் பெயரில் பல மருத்துவ நூல்கள் இருப்பதோடு மலை, கீரை ,ஒரு நட் சத்திரம் , கோத்திரம் ஆகியவற்றிலும் இவர் பெயர் இருக்கிறது
Agastya
Sage Agastya, who was dwarfish in appearance is considered the doyen of Tamil mystics and the father of the Tamil language. He is to the Tamil language what Panini was to Sanskrit. Agastya is famous for teaching the “Āditya Hṛdaya” mantra to Sri Rama on the eve of his battle with the demon Ravana. Rama is believed to have won victory because of the power of the prayer to the Sun taught by Agastya.
Agastya was born as the son of MitraVaruna Rishi (this is different from the dual Mitra-Varuna mentioned in the Rig Veda) and the Apsara Urvashi. Among the many epithets of Agastya are KumbhaSambhava (born in a pot) and MitraVaruni (son of MitraVaruna). From an early age he displayed an aptitude for the scriptures and spirituality.
He married Lopamudra, the daughter of the king of Vidharba.
He is also famous for his curses. He cursed Nahusha who had insulted him, to be born as a giant python. Bheema was instrumental in releasing Nahusha from the curse. He had also cursed a king named Indradhyumna to be born as an elephant, for the King busy with his prayer, was late in receiving the sage.
He was great engineer. He laid roads by levelling the Vindhyas. He took the Pandyas to South East Asian countries. His statues are found all over S E Aia. He wrote first grammar book for Tamil, but that book Agastyam is not available anymore.
A hill, a plant and a star are named after him. Agasthya (or Agastya) i is the name of a plant defined with Sesbania grandiflora
Agastya (अगस्त्य) (or “Canopus”) refers to a star sacred to Agastya who is said to have drunk off the ocean and suppressed the heights of the Vindhya mountains, according to the Bṛhatsaṃhitā (chapter 12), an encyclopedic Sanskrit work written by Varāhamihira mainly focusing on the science of ancient Indian astronomy astronomy (Jyotiṣa).—Accordingly, “The mighty ocean whose waters were swallowed by Agastya, exhibited gems that eclipsed the splendour of the crowns of the Devas and rocks broken by the action of the sharks on them and thus presented an appearance beautiful, though without water. It also exhibited hills with trees, corals and gems and the scene was rendered picturesque by serpents that issued from the rocks. Matter taken from Wisdomlib.org.
****
பதஞ்சலி முனிவர்
பாணினியின் அஷ்டாத்யாயி நூலுக்கு மாபெரும் விளக்க உரையை மஹா பாஷ்யம் என்ற பெயரில் எழுதினார் ; 2200 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் வாழ்ந்தார் . யோக சாஸ்திர நூலையும் எழுதினார் . யோக சாஸ்திரத்தின் தந்தை என்று இவரைப் புகழ்வார்கள் . வடக்கில் தட்சசீலத்தில் கல்விகற்றார்
புராணங்களின் படி இவர் ஆதிசேஷனின் அவதாரம். மஹாவி்ஷ்ணு பூவுலகிற்கு அவதாரங்கள் செய்ய வந்த போது இவர் முனிவராக அவதாரம் செய்வதாய்ச் சொல்கிறார்கள். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் கைகளைக் கூப்பிய வண்ணம் விழுந்ததால் இவர் பெயர் “பதஞ்சலி” என்று சொல்வதுண்டு.
பதஞ்சலி முனிவரின் தோற்றமானது இடுப்புவரை மனித உடலாகவும், இடுப்புக்குக் கீழே நாகத்தில் உடலாகவும் இருக்கும். தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் குடைபோல இருக்கும். இவர் ஆதிசேஷன் அம்சம். யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பாஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலர் சொல்கிறார்கள்
நடராஜரின் ஆடலைக் காண எப்போதும் புலிக்கால் முனிவருடன் இவரும் இருப்பார்
***
Patanjali
Patañjali (पतञ्जलि).—A celebrated commentator in Sanskrit. Patañjali is one of the best commentators of Pāṇini’s Vyākarṇasūtras. Pandits are of opinion that he got his name Patañjali to mean that people should worship (añjali) at his foot (pāda). He was such an adorable person. Pandits believe that Patañjali is the author of Yogasūtra and Carakasaṃhitā. A few believe that Patañjali was the incarnation of Ādiśeṣa. But modern scholars are of opinion that Patañjali, the commentator and Patañjali the author of Yogasūtras are two different persons
He is considered an ardent devotee of Śiva, for whom Śiva had performed one variety of his Tāṇḍava. This sage is usually associated with another sage Vyāghrapāda.
Patañjali is depicted as half human and half serpent. Sometimes, even the hood of the serpent is shown behind his head. A sculpture of Patañjali carved attached to the shaft of the bhadraka pillar of the prākāramaṇḍapa is noticed at the Kailasanatha temple at Taramangalam. He is shown as wearing a long kirīṭa and is in añjalimudra. He is two handed and his body is of a serpent below his waist. This is a sculpture of 16th century. The height is about five feet. This sculpture is carved on a high pedestal.
Patañjali (पतञ्जलि).—The reputed author of the Mahābhāșya, known as the Pātañjala Mahābhāșya after him. His date is determined definitely as the second century B.C. on the strength of the internal evidence supplied by the text of the Mahābhāșya itself. The words Gonardiya and Gonikāputra which are found in the Mahābhāșya are believed to be referring to the author himself and, on their strength he is said to have been the son of Goṇikā and a resident of the country called Gonarda in his days. On the strength of the internal evidence supplied by the Mahābhāșya, it can be said that Patañjali received his education at Takșaśila and that he was,just like Pāṇini, very familiar with villages and towns in and near Vāhika and Gāndhāra countries.
It is believed by scholars that he was equally conversant with other śāstras, especially Yoga and Vaidyaka, on which he has written learned treatises. He is said to be the author of the Yogasūtras which,hence are called Pātañjala Yogasūtras, and the redactor of the Carakasamhitā. There are scholars who believe that he wrote the Mahābhāșya only, and not the other two.
Patañjali is the name of a deity depicted in the Thillai Nataraja Temple in Cidambaram (Chidambaram) which is one of the Pañcasabhā or “five halls where Śiva is said to have danced”.—Patañjali is a little god. The lower part of his body ends as the tail of a snake. He was a Yogi and, not wishing to crush insects with his feet, he obtained from Naṭarāja the boon to be changed to a reptile. His hair is plaited and piled on his head, his hands are clasped before Śiva, and he wears a pointed beard. He holds his hands in añjali-hasta. Matter taken from Wisdomlib.org.
***
வியாக்ரபாதர்
வியாக்ரபாதர், புலிக்கால் முனிவர் என அழைக்கப்படுகிறார். சிவபெருமானின் பூசனைக்குரிய மலை முகடுகளில் ஏறி, மலர்களை பறிப்பதற்கு ஏதுவாக புலிக்கால் வேண்டிப் பெற்றார். வியாக்ரம் என்றால் புலி. பாதம் என்றால் கால். பதஞ்சலி முனிவர் பாம்பின் உடலைக் கொண்டவர். பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கிய அனுசுயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிஷேடன் அவதாரமாகத் தோன்றியவர். இவ்விரு முனிவர்களும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை என்றென்றும் காணும் அருள் பெற்றவர்கள். தில்லையில் இவ்விரு முனிவர்கள் காணவே சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடினார். முனிவர்கள் இருவரும் இறைவனின் ஆடலைக் கண்டு கரம் கூப்பி நிற்கும் சிற்பம் சிதம்பரத்தில் உள்ளது . முனிவர்கள் இருவரும் உருத்திராக்க மாலைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்து ள்ளனர். முனிவர்களுக்கேயுரிய ஜடாமகுடத்துடனும், தாடி, மீசையுடனும் தோற்றமளிக்கின்றனர். பதஞ்சலி முனிவரின் இடையிலிருந்து சுற்றி நாகம் ஒன்று தலைக்கு மேல் படமெடுத்துள்ளது. வியாக்ரபாதருக்கு புலியின் கால் காட்டப்பட்டுள்ளது.
இவர் சிவபெருமானை நோக்கித் தவமியற்றி, தனக்கு புலிக்கால்கள் வேண்டுமெனக் கேட்டு வரமாகப் பெற்றவர்.
சிவ வழிபாட்டிற்குச் செலுத்தப்படும் பூக்களானது தேன் குடிக்க வரும் வண்டுகளால் எச்சில்பட்டு அசுத்தமாகிவிடக் கூடாது என்பதற்காக அதிகாலை நேரத்தில் மரங்களில் ஏறி பூக்களைப் பறிப்பது வழக்கம் அப்போது அவரது கை, கால்களில் காயங்கள் உண்டாயின. தனக்கு உதவ வேண்டுமென்று சிவபெருமானிடம் வேண்டினார். அவரும் கேட்டபடியே புலியின் கால்களை அளித்தார் என்பது தல புராணக் கதை . சிதம்பத்துக்குப் புலியூர் என்ற பெயரும் உண்டு .
Vyāghrapāda
Vyāghrapāda (व्याघ्रपाद).—Vyāghrapāda is another sage associated with Naṭarāja. This sage is depicted in the anthropozoomorphic form wherein his torso is of a human and the portion below his waist is that of a tiger. He is shown as wearing rudrākṣa and has having two hands. He is adorned with jaṭa. One of his sculpture carved attached to the shaft of the bhadraka pillar of the prākāramaṇḍapa is noticed at the Kailasanatha temple at Taramangalam.
Vyāghrapāda is another name for Madyanthinar, whose story is associated with the sthala-purāṇa of the Thillai Nataraja Temple in Cidambaram (Chidambaram) which is one of the Pañcasabhā or “five halls where Śiva is said to have danced”.—According to legends, the origin of the sthala is described thus: […] In Tillaivana he erected a hut for him and worshipped the liṅga everyday. Śiva blessed Madyanthinar with the limbs of a tiger to climb the trees without slipping and the sight to see in darkness too. Siva blessed Madyanthinar with such blessings so that, as per his wish, he could collect the flowers before sunrise even if there was fog everywhere.
The lord, after showering these graces, named him Vyāghrapāda (man with tiger’s limbs) and so the forest came to be called Vyāghrapuram and Puliyūr. Later, Vyāghrapāda married the sister of Sage Vasiṣṭha according to his father’s desire and they lived happily, worshipping the Tirumūlanāda (Śiva in liṅga form). In course of time, a male child was born to Vyāghrapāda and the child was named Upamanyu. The child was brought up in sage Vasiṣṭha’s place. Matter taken from Wisdomlib.org.
***
நந்தீசர்
நந்தீசர் (நந்தி தேவர்) சிவகணங்களின் தலைவர் ஆவார். இவர் யோக, ஞானக் கலைகளை உபதேசித்த குருவாகவும், வைத்தியம், ஜோதிடம் சார்ந்த பல அரிய நூல்களை இயற்றியவராகவும் போற்றப்படுகிறார். : சிவகணங்களில் முதன்மையானவராக, கயிலாயத்தின் காவலராகப் புராணங்கள் நந்தீசரைச் சிறப்பிக்கின்றன.
பதினெண் சித்தர்களில் ஒருவர் ;, சித்தர் மரபைத் தோற்றுவித்தவர். நந்தீசர் கலைஞானம், வைத்திய காவியம், ஞான சூத்திரம், நந்தீசர் நிகண்டு போன்ற பல நூல்களை எழுதி யுள்ளார்.
Nandīśa (नन्दीश)
1. name of Nandi, Siva’S attendant. 2. A name of Siva. 3. A species of musical rhythm. E. nandī Indra’S garden, or nandi a proper name, īśa master.
Nandīśa (नन्दीश) or Śambhu is the name of an ancient teacher (ācārya) of Vāstuśāsta (science of architecture) according to the Matsyapurāṇa.
***
அதிகார நந்தி
சிவ பெருமானை வழிபடுவதற்கு அதிகாரம் கொடுக்கும் நந்தி இவர். இவர்தான் சிவனின் வசிப்பிடத்திற்குக் காவலர். ஏனைய நந்திகள் படுக்கைவசத்தில் இருக்கும் இவர் நின்ற வண்ணம் இருப்பார். சிவன் கோயிலைகளில் உள்ள ஐந்து வகை நந்திகளில் இவரே சிறப்பிடம் பெற்றவர் ; கோவிலுக்கு வந்து வணஙகுவோரின் கணக்கை எழுதி வைப்பார் சிவன் கோவில்களில் இவருக்கு கர்ப்பக்கிரகத்துக்கு அருகில் சந்நிதி இருக்கும் .
தொண்டை நாட்டின் சிவாலயங்களில் மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி சேவை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்
சிவபெருமானின் வாகனமும் கொடியும் நந்தி. அந்த நந்தி தேவர் பொற் பிரம்புடனும், சிவனைப் போலவே மானும் மழுவும் கரங்களில் ஏந்திய கோலமே அதிகார நந்தி கோலம்.
ஞானத்தின் இருப்பிடம் நந்தியெம்பெருமான், சிவபெருமானிடமிருந்து வேதங்களையெல்லாம் கற்று அனைவருக்கும் போதித்தவர் இவர். திருமந்திரம் அருளிய திருமூலருக்கு குரு நந்தியே.
நந்தி தேவர் சிவ பக்தியில் மிகவும் சிறந்தவர். எனவே சிவ அபசாரம் செய்பவர்களுக்கு தண்டனை தருவதில் முன் நிற்பவர் இவரே. இராவணன் கையிலாய மலையை அசைத்து போது கோபம் கொண்டு அனுமனால் இலங்கை அழியட்டும் என்று சாபமிட்டவர் இவரே. முறையில்லாமல் தக்கன் ஆணவம் கொண்டு நடத்திய யாகத்தில் தக்கனின் சிரம் அறுந்து விழவும் அவனுக்கு துணை போன வானவர்கள் சூரபதமனால் துன்பப்படவும் சாபமளித்தவர் இவரே. இவருக்கு பிரதோஷ காலத்தில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறும் சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடும் போது அதற்கு தாளம் போடுபவர் நந்தியெம்பெருமானே.
Adhikara Nandi
Adhikara Nandi is the anthropomorphic, human-like form of Nandi, Lord Shiva’s attendant, depicted with a bull head and human body, often showcasing four arms. He represents authority, devotion, and divine guardianship, frequently portrayed in royal attire, jewelry, and serving as a key figure in Shaivite traditions, especially during festival processions.
- Form: Unlike the common seated bull form, Adhikara Nandi is portrayed in an upright, human-like form to signify his role as the head of Shiva’s attendants (Ganas) and the keeper of Kailasha.
- Symbolism: He embodies devotion, faith, and the ability to act as an intermediary, with devotees often whispering wishes to him.
- Significance: Known for leading the Lord during processions like the notable Adhikara Nandi Seva at Kapaleeshwarar Temple.
- Iconography: He is depicted wearing royal garments, holding weapons or divine instruments, and often faces to the left, adorned with jewels.
***


கருடன்
கருடன் பறவைகளின் அரசன். ரிக் வேதத்தில் சுபர்ணன் என்ற பெயருடன் உள்ளான். சங்க இலக்கியப்பாடல்களிலும் இடம்பெறுகிறான்; கருட மந்திரத்தைச் சொன்னாலே பாம்பின் விஷம் இறங்கிவிடும் .
விஷ்ணுவின் கொடியில் உறைவோன். விஷ்ணுவுக்கு வாகனமும் ஆகும் . தமிழ் இலக்கியத்திலும், விஷ்னு சஹஸ்ரநாமத்திலும் கருடன் கொடி போற்றப்படுகிறது. பறவைகளுக்குள் நான் கருடன் என்று கிருஷ்ணன் பகவத் கீதையில் பகிர்கிறார்.
प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् ।
मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् 10-30
ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் கால: கலயதாமஹம் |
ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ரோऽஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் || 10- 30||
அசுரரில் பிரகலாதன் யான்; இயங்குனவற்றில் காலம் யான்; விலங்குகளில் சிங்கம்; பறவைகளில் கருடன்.
ரிக் வேதத்தில் கருத்மான் என்ற பெயரில் போற்றப்படுகிறார்; யஜுர் வேதத்தைச் சேர்ந்த சதபத பிராமணத்தில் துணிவின் ஆற்றலாக கருடன் சித்தரிக்கப்படுகிறார் . மகாபாரதத்திலும் இவர் புகழ் உள்ளது அமரகோச நிகண்டில் கருத்மான் ,கருட, தார்க்ஷ்ய, வைநதேய, ககே ஸ்வரஹ, நாகாந்தக, விஷ்ணுரதஹ, சுபர்ணஹ, பன்னக நாசனஹ , கருடத்வஜ என்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது .
வேதாந்த தேசிகர் கருட தண்டகம் என்ற நூலை கருட பகவான் மீது பாடியுள்ளார் ; இதை படிப்போருக்கு பயணத்தில் கஷ்டம் வராது
கருடன் காயத்ரீ மந்திரமும் உளது
மஹாபாரதத்தில் கருடன் வடிவில் படைகளை அணிவகுத்து நிறுத்தும் உத்தி பற்றி வருகிறது
யாகம் செய்வோர் கருடன் வடிவத்தில் செங்கல்களை அடுக்கி யாக குண்டம் அமைப்பர்; இதைக் கரிகால் சோழன் செய்ததாக சங்க இலக்கியம் கூறுகிறது,
.சங்க இலக்கியத்தில் கருடனின் கொடியை புள் கொடி என்று புலவர்கள் போற்றுகின்றனர் . விஷ்ணுவைக் குறிப்பிடும்போதெல்லாம் கருடக்கொடி ஏந்தியவன் என்றே பாடுகின்றனர்
புறநானூற்றில் நக்கீரர் பாடுகிறார் :
புறநானூறு 56 Purananuru 56
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
மண்ணுறு திரு மணி புரையும் மேனி, 5
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை, நால்வருள்ளும்,— பாடல் 56
XX
பரி பாடல் 8-2
மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,
மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும், — நல்லந்துவனார் XX

திருமுருகாற்றுப்படை வரி 151
கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிற்று – – – – – – 148
அழல்என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் – – – – – – 150
புள்அணி நீள்கொடிச் செல்வனும் …நக்கீரர் பாடியது
சங்கம் மருவிய நூல்களான சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் எண்ணற்ற இடங்களில் கருடன் கொடி வருகிறது.
XX

கருடத்வஜ என்பது விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும் வருகிறது3.தாய்லாந்து நாட்டின் (சயாம்) தேசீய சின்னம் கருடன்.
இந்தோனேஷியா நாட்டின் அதிகாரபூர்வ விமான சேவையின் பெயர் கருடா ஏர்வேஸ் .
அமெரிக்காவின் தேசீய சின்னமும் கருடன்தான். இது வெள்ளை நிற கழுத்து உடைய கருடன் இனப்பறவை
தென் கிழக்கு நாடுகள் அனைத்தும் நாணயங்களிலும், தபால்தலைகளிலும், கரன்சி நோட்டுகளிலும் சிற்பங்களிலும் கருடனையே பயன்படுத்திவருகிறது . .தென் கிழக்கு ஆசிய நாடுகள் கருடன் சின்னதாய் பல இடங்களில் பயன்படுத்துகின்றன
வேறு பல நாடுகள் கருடர்- நாகர் மோதலை சித்தரிக்கும் வகையில் பாம்புடன் கருடன் படத்தைக் கொடியில் வரைந்துள்ளன.
காஸ்யப ரிஷிக்கும் வினதாவுக்கும் மகனாக கருடன் பிறந்தார். அவருடைய அண்ணன் பெயர் அருணன் ;இந்திரன் செய்த ஒரு வேள்விக்கு கட்டைவிரல் அளவேயுள்ள வாலகில்ய ரிஷிகள் வந்தனர் அவர்கள் மிகவும் குள்ளமானதால் பக்கத்திலுள்ள தண்ணீர் குட்டையில் விழுந்து தவித்தனர். இதைக் கண்டு இந்திரன் சிரிக்கவே, அவனை வெல்லும் ஒருவன் வருவான் என்று வாலகில்ய ரிஷிகள் சாபமிட்டனர்.அதன்படி பலமுள்ள கருடன் பிறந்தான். காஷ்யப மஹரிஷியின் இன்னுமொரு மனைவி கத்ரு ; அவளுக்கும் வினதாவுக்கும் நடந்த போட்டியில் வினதா தோற்றுப்போகவே அடிமையானாள்; அவளை விடுவிக்க அவளுடைய மகன் கருடன் அமிர்தத்தின் ஒரு பகுதியை சிறிய தாய்க்கு கொண்டுவந்து கொடுத்தான் ; அவள் விடுதலை ஆனாள்.
கோவில்களில் கருட வாகன தரிசனமே முக்கிய நாள்; வைஷ்ணவர்கள் அதைக் காண ஆர்வத்தோடு செல்வர்.
நாச்சியார் கோவில் (திருநறையூர்) பெருமாள் கோவிலின் பெருமை கல் கருடனால் அதிகரித்துவிட்டது. மரத்தினால், சுதையினால், உலோகத்தினால் அல்லது இவைகளின் கூட்டினால் ஆன கருட வாகனங்களை அறிவோம். முழு கல்லினால் ஆன கருடனை சுமந்து கொண்டுபோவது அதிசயம்தானே . மேலும் இதன் எடை கோவிலின் வெளியே போவதற்குள் அதிகரிக்கிறது என்ற நம்பிக்கையால் மேலும் மேலும் தூக்கும் சிப்பந்திகள் அதிகரிப்பது இன்னொரு விசேஷம்.
கருட புராணம் : பதினெட்டு புராணங்களில் ஒன்று. சுமார் 16000 ஸ்லோகங்கள் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன. நீண்ட புராணத்தில் சில அத்தியாயங்கள் மட்டும் இறந்த பின்னர் ஆவிக்கு என்னாகும் என்று விளக்குகிறது ; கருட புராணத்தை இறந்தோர் வீட்டில் 13 நாள் துக்க அனுஷ்டிப்பு காலத்திற்குள் ஒருநாள் படிப்பது சம்பிரதாயம் ஆகும்; இறந்த பின்னர் மனிதனின் வாழ்க்கை பற்றிய பகுதிகள் இதில் இருப்பதே காரணம். இதை பொருளுடன் வாசிக்க ஒரு புரோகிதரை அழைப்பது உண்டு.
தன்னை பரம பாகவதன் (கிருஷ்ணபக்தன்) என்று அழைத்துக்கொண்ட கிரேக்க தூதன் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய பிரதேச விதிஷா நகரிலுல் ஒரு ஸ்தம்பத்தை நிறுவியுள்ளான். அதில் பிராமி எழுத்தில் கல்வெட்டு உளது அவன் பெயர் ஹீலியோடோரஸ்
The Heliodorus pillar is a stone column that was erected around 113 BCE in central India in Besnagar/VIDHISA in Madhya Pradesh.
வானத்தில் கருடனைக் கண்டால் உடனே அதை ஒரு ஸ்லோகம் சொல்லி வணங்குவார்கள் ; இது சுப சகுனம் ஆகும்.
வைநதேய மஹாஸத்வ சர்வ பக்ஷி பத்தே விபோ
பிரகிஹ்ருத்யதாம் பலிர் தேவ மந்த்ரபூதோ மயோதியதாக ஹா
वैनतेय महासत्व सर्वपक्षिपते विभो ।
प्रगृह्यतां बलिर्देव मन्त्रपूतो मयोद्यतः ॥
vainateya mahāsatva sarvapakṣipate vibho |
pragṛhyatāṃ balirdeva mantrapūto mayodyataḥ ||
வினதாவின் மகனே; உயர்ந்த உள்ளம் படைத்தோனே , பித்ராபுவே, பறவைகளையும்களின் அரசனே

Meaning – O the son of Vinatā, the high-souled one, the lord, the king of all the birds, accept this my best offering.. என்னுடைய வணக்கத்தை ஏற்றுக்கொள்வாயாக
.நாக பஞ்சமியில் பாம்புகளைப் போற்றுவது போல கருட பஞ்சமியில் கருடனைப் போற்றி வழிபடுகிறார்கள். ஆவணி மாத சுக்ல பக்ஷ பஞ்சமியில் சுமங்கலிகள் அனுஷ்டிக்கும் விரதம் இது. ஒரு அரசனின் 7 குமாரர்களும் பாம்பு கடித்து இறக்கவே அவர்களுடைய தங்கை பாம்புப்புற்றைப் பூஜித்து அரச குமாரர்களை உயிர்ப்பித்தாள் என்பது கதை ; அதைப் பின்பற்றி இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது .
கருட காயத்ரீ மந்திரம் உளது; வேதாந்த தேசிகர் தாண்டக மீட்டரில் எழுதிய –கருட தண்டகம் இருக்கிறது; இடைப் படித்தா ல் பயணம் செல்லும் வழியிலுள்ள தடைகள் அகலும்
கருடன் பற்றிய 4 பழமொழிகள்
1.கருடனைக் கண்ட பாம்பு போல
2.கருடன் இடமானால் , எவன் கையில் பொருளும் தன் கையிற் சேரும் (COMPARE- காகம் வலமானால் ஆயுசு விருத்தியாகும் )
3.கருடன் காலில் சதங்கை (கெச்சை) கட்டியது போல
4.ஏண்டா கருடா சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம்தான்.
(COMPARE – கண்ணதாசன் பாடல்-பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா செளக்கியமா ?)

Garuda
Garuḍa (गरुड), the chief of birds, is descended from Kaśyapa and Vinatā—one of the daughters of Dakṣa. He is the Vehicle of lord Viṣṇu. He is represented as having the head, wings, talons and beak of an eagle and the body and limbs of a man. His face is white, his wings red and his body golden.
1) As to the etymology of the word Garuḍa, the Śabdakalpadruma states: garut+ḍī+ḍaḥ, that which flies with its wings—.
2) Another derivation of Garuḍa is: gṛ+uḍaca—the swallower or devourer.
.jpg)
Name of the king of birds. [He is a son of Kaśyapa by his wife Vinatā. He is the chief of the feathered race, an implacable enemy of serpents, and elder brother of Aruṇa. In a dispute between his mother and Kadrū, her rival, about the colour of उचैःश्रवस् (ucaiḥśravas) Kadrū defeated Vinatā, and, in accordance with the conditions of the wager, made her her slave. Garuḍa brought down the heavenly beverage (Amṛta) to purchase her freedom, not, however, without a hard struggle with Indra for the same. Vinatā was then released; but the Amṛta was taken away by Indra from the serpents. Garuḍa is represented as the vehicle of Visnu, and as having a white face, an aquiline nose, red wings and a golden body.
–subham—
Tags- Agastya, Patanjali, Vyaakrapaathar, nanthithevae athikaara nandhi Last part, Hinduism through 500 Pictures in Tamil and English 50; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம், அகஸ்தியர் பதஞ்சலி கருடன், வியாக்ரபாதர் , புலிக்கால் முனிவர் .