பைரவர்களில் இத்தனை பேரா?  ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரைத் தரிசித்தேன் (Post.15,572)

Written by London Swaminathan

Post No. 15,572

Date uploaded in London – 3 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Sri Sornaakarshana Bhiravar Temple

Sembiyavarambal, (See below for full address and temple history)

கும்பகோணத்திலிருந்து 2026 மார்ச் 12 ஆம் தேதி புறப்பட்டு ஒரு பகல் நேரத்தில் நான்கு கோவில்களில் தரிசனம் செய்தேன் .. முதலில் உப்பிலியப்பன், இரண்டாவதாக அய்யாவடி பிரத்யங்கரா தேவி, அடுத்து திருநறையூர் சிவன் கோவில், கடைசியாக செம்பியவரம்பனிலுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோவில் ஆகிய நான்கு கோவில்களையும் தரிசித்து LUNCH எடுப்பதற்கு கும்பகோணம் கல்யாணபுரத்திலுள்ள ஸ்ரீவத்சம் முதியோர் இல்லத்து கெஸ்ட் ஹவுசுக்குத் திரும்பினேன் . டாக்சிக்கும் 900 ரூபாய் மட்டுமே கொடுத்தேன் 

பைரவர் பற்றி எவ்வளவோ படித்தேன்; எழுதினேன்; ஆனால் அந்தச் சிறிய கோவிலில் சுவர்களில் உள்ள பைரவ மூர்த்திகளின் எண்ணிக்கையைப் பார்க்கையில் வியப்பு ஏற்பட்டது! அத்தனை வகையான பைரவர்களை சுவரில் வரைந்துள்ளனர். சின்னக் கோவிலாக இருந்தாலும் தெய்வ சாந்நித்யம் உள்ள கோவில்; பட்டரும் நானும் மட்டும்தான் . வெளியே வருகையில் தயிர்சாதப் பிரசாதமும் கிடைத்தது. நான் குறிப்பிடும் நான்கு கோவில்களும் அருகருகே இருப்பதால் காரில் செல்வதில் சிரமம் இல்லை . இந்தச் சின்னக் கோவிலை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது; பக்தர்கள் காணிக்கை அனுப்பலாம்.

அர்ச்சகரின் அனுமதியுடன் சுவரிலுள்ள ஓவியங்களை புகைப்படம் எடுத்தேன் ; இணைப்பில் காண்க .

ஸ்வர்ணாகர்ஷண பைரவர், 64 பைரவர்களில் தலைமை பைரவராக, செல்வம் மற்றும் பொன் சேர்க்கை அருளும் மூர்த்தியாக வணங்கப்படுகிறார். இவர் கையில் அக்ஷய பாத்திரம் ஏந்தி, மஞ்சள் ஆடை தரித்து அருள்பாலிக்கிறார்.

அய்யாவடி ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோவில்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவடி (Ayyavadi) ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோயில், செல்வ செழிப்பை அருளும் சிறப்புமிக்க பைரவர் தலம். உப்பிலியப்பன் கோயிலிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில், அகத்தீஸ்வரர் கோயில் வளாகத்திற்கு அருகில் உள்ளது. இங்கு அமாவாசை அன்று நடைபெறும் சிறப்பு யாக பூஜைகள் மிகவும் பிரபலம்.

கோயில் சிறப்பு மற்றும் வழிபாட்டு முறை:

செல்வ செழிப்பு: ஸ்வர்ணாகர்ஷண பைரவர், வறுமையை நீக்கி, தங்கத்தை (ஸ்வர்ணம்) ஈர்த்து தரும் சக்தியாக வணங்கப்படுகிறார்.

அமைவிடம்: கும்பகோணத்தில் இருந்து திருநறையூர் செல்லும் வழியில் அய்யாவாடி கிராமத்தில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள், பைரவர் யாகங்கள் நடத்தப்படுகின்றன.

எப்படி செல்வது?

கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம் வழியாக அய்யாவாடியை எளிதில் அடையலாம். பிரதான சாலையில் இருந்து சற்று உள்நோக்கி இந்த கோவில் அமைந்துள்ளது.

இது அண்மைக்காலத்தில் கட்டாயப்பட்ட கோவில்தான் . ஒரே ஒரு சந்நதியில் பைரவரின் திருவுருவம் வைத்து ஆராதிக்கப்படுகிறது.

அரக்கர்களிடமிருந்து முனிவர்களையும் பூலோக மக்களையும் காக்க, தாருகாவனத்தை எரித்த நெருப்பிலிருந்து பைரவ மூர்த்தியை சிவபெருமான் உருவாக்கினார். எட்டுத் திசைகளையும் காக்கும் பைரவர் என்பதால் அஷ்ட பைரவர் என்று உருவானது. அதைப் போலவே பைரவ மூர்த்தி தாம் செய்யும் 64 பணிகளின் நிமித்தம், அறுபத்து நாலு பைரவராகவும் தோன்றுகிறார். அவற்றுள் ஒன்று, செல்வத்தைப் பெருக்கும், செல்வத்தை  காக்கும் பைரவராக விளங்குவது. இதுவே ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் .இத்திருக்கோலத்தில் பைரவரின் கரத்தில் கபாலமல்லாதுஅஷயபாத்திரம் ஏந்திக் காட்சியளிக்கிறார். இவரை வணங்குவோருக்கு நீங்காத செல்வம் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.

 அஷ்டமி திதிகளில் பைரவ வழிபாடு சிறப்பானது. செவ்வாய்க் கிழமையும் அஷ்டமியும் இணைந்த நாள் மேலும் விசேஷமாகும்.

உலகப் புகழ்பெற்ற வரலாற்று, தொல் பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா. நாகசாமி ஆங்கிலத்தில் பைரவர் பற்றி விரிவான நூலினை எழுதியுள்ளார்

***

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் அய்யாவடி, கேளம்பாக்கம், திண்டுக்கல் தாடிக்கொம்பு மற்றும் விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இவருக்குத் தனிச் சன்னதிகள் உள்ளன. 

முக்கிய ஸ்வர்ணாகர்ஷண பைரவர் தலங்கள்:

  • திருநாகேஸ்வரம் (கும்பகோணம்): அய்யாவடி அருகில் உள்ள இக்கோயில் மிகவும் புகழ்பெற்றது, இங்கே தேய்பிறை அஷ்டமி யாகம் சிறப்பு.
  • கேளம்பாக்கம் (சென்னை): ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆலயம்.
  • தாடிக்கொம்பு (திண்டுக்கல்): அருள்மிகு சவுந்தரராஜ பெருமாள் கோயில்.
  • தவசு மலை (தேவகோட்டை):
  • விருதுநகர்: ரயில்வே காலனி. 

வழிபாட்டு முறைகள்:

  • சிறப்பு நாட்கள்: திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை.
  • சிறப்பு வழிபாடு: தேய்பிறை அஷ்டமி.
  • மந்திரம்: ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அஷ்டகம் மற்றும் காயத்ரி மந்திரம். 

பொன், பொருள், தன விருத்தி மற்றும் தீராத கடன்களைத் தீர்க்க இவரை வழிபடுவது சிறப்பு என நம்பப்படுகிறது. 

***

Please go to my earlier post on Bhairava in English and Tamil with more pictures from older temples.

Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம் -Part 24 (Post.15,175)

***

Following is taken from the temple website

Sri Sornaakarshana Bhiravar Temple

Sembiyavarambal,

Thirunageswaram – Near Iyavadi,

Kumbakonam Taluk,Thanjavur District.

Thiru.T.S.Parameshwara Sivachariyar

Sembiyavarambal

Contact: 6369232784 , 9159758278

Temple History

Chithambaram sornaabhiravar was in the form of sornaakarshanabhiravar in sembiyavarambal

Sornaakarshana ( Swarnaakarshana ) Bhirava should have an yellow coloured body with four arms and three eyes and should be clothed in yellow golden garments.

He should be carrying in his right back hand a vessal filed with gold and precious gems and had a “chamara” and “thomara” and a darge thresula should be resting upon the left shoulder. We have seen sornaakarshana bhirava seated with his daity bhiravi devi on the left with embarrassing Smailly faces.

Bhirava has 64 many forms such as the Vatuka Bhirava, Swarnaakarshana Bhiravar and soforth. The 64 mainfestantions of Khal Bhiravas are the guardians and controllers of eight directions each Bhiravas has other 7 such Bhiravas under him, and all the Bhiravas are controlled by maha Bhirava.

He is considered the supreme, under thr time of universe and the Chief form of Bhirava. Asta Bhiravas with their consort, Vahana,(mount) direction,he guards are gives the consecrated remedy for Thosam.

Ashta Bhirava:

1. Asithanga bhirava gives education and aristry

2. Ruru bhirava gives Kajakesari yoga and Government job

3. Chanda bhirava destruct enemies and dynastic development

4. Chrothana bhirava gives wealthy life

5. Unmatha bhirava demlishes the Black majic (pilli,suniya,eval)

6. kabala bhirava gives tejas and valour

7. Bhisna bhirava sloves court cases and makes unity between relatives

8. Samhara bhirava having ten types of weapons on his ten hands and gives peacefull life with asta aishwarya

–subham—

Tags- ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோவில், Sri Sornaakarshana Bhiravar Temple, Sembiyavarambal, Ayyavadi, Swarna Akarshana Bhairava

Leave a comment

Leave a comment