மன்னிப்பதன் பெருமை! (Post No.15,568)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,568

Date uploaded in London – 3 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மன்னிப்பதன் பெருமை! 

ச. நாகராஜன் 

மன்னிப்பதே தர்மம் 

க்ஷமா தர்ம: க்ஷமா யக்ஞ: க்ஷமா வேதா: க்ஷமா ச்ருதம் |

யஸ்தாமேவம் விஜாநாதி ச சர்வம் க்ஷந்துமர்ஹதி || 

இது மஹாபாரதத்தில் வரும் ஸ்லோகம். 

மன்னிப்பதே தர்மம். மன்னிப்பதே யக்ஞம். மன்னிப்பதே வேதத்தின் சாரம். மன்னிப்பதே வேதம் போதிக்கும் கல்வி. எவன் ஒருவன் மன்னிப்பதை இந்த விதமாக அறிந்து கொள்கிறானோ அவன் அனைத்தையும் மன்னிக்கும் தகுதி உடையவனாகிறான்.

 மன்னிக்கும் தன்மையே தைரியம் 

க்ஷமா த்ருதி: க்ஷமா சத்யம் க்ஷமா தர்மம் க்ஷமா குரு: |

க்ஷமாவதாமயம் லோக: பரலோக: க்ஷமாவதாம் || 

மன்னிப்பதே தைரியம். மன்னிப்பதே சத்தியம். மன்னிப்பதே தர்மம். மன்னிப்பதே குரு. எவர்  மன்னிக்கிறார்களோ அவர்களுக்கே இந்த உலகம் உரியதாகிறது. இந்த உலகிற்கு அப்பாலுள்ள மறு உலகமும் அவர்களுக்கே உரித்தாகிறது.

 மன்னிக்கும் தன்மையே கடந்தகாலமும் எதிர்காலமும் ஆகும்! 

க்ஷமா ப்ரஹ்ம க்ஷமா சத்யம் க்ஷமா பூதம் ச பாவி ச |

க்ஷமா தப: க்ஷமா சௌசம் க்ஷமயா சோத்த்ருதம் ஜகத் || 

மன்னிப்பதே ப்ரஹ்மமாகும். மன்னிப்பதே சத்தியம். மன்னிப்பதே கடந்த காலம். மன்னிப்பதே எதிர்காலம். மன்னிப்பதே தவம். மன்னிப்பதே சுத்தம். மன்னிப்பதாலேயே இந்த உலகம் மேலே உயர்கிறது. 

இது மஹாபாரதத்தில் உள்ள ஸ்லோகம். 

மன்னிப்பவர்களுக்கே வெற்றி! 

க்ஷமாவதாமயம் லோக: பரச்ஸைவ க்ஷமாவதாம் |

இஹ சம்மானம்ருச்சந்தி பரத்ர ச சுபாம் கதிம் || 

யார் மன்னிக்கிறார்களோ அவர்களுக்கே இந்த உலகம் உரியதாகிறது. மறு உலகமும் அவர்களுக்கே உரியதாகிறது. மன்னிப்பதால் அடைய முடியாதது என்ன தான் இருக்கிறது? மன்னிப்பு என்னும் கத்தியைக் கையில் கொண்டிருப்பவனுக்கு தீயவர்கள் என்ன தீமையைத் தான் செய்ய முடியும்?

 மன்னிப்பதே சிறந்த தவம்! 

க்ஷமாதுல்யம் தபோ நாஸ்தி நாஸ்தி க்ரோதசமோ ரிபு: |

அன்னதானாத் பரம் தானம் ந சந்தோஷாத் பரம் தனம் || 

மன்னிப்பதற்குச் சமமான தவம் இல்லை; கோபப்படுவனுக்கு கோபத்தை விட அதற்குச் சமமான வேறு எதிரி இல்லை. உணவைத்

தருவதற்குச் சமமான தானம் வேறொன்றுமில்லை; திருப்தியை விட அதற்குச் சமமான வேறு செல்வம் இல்லை.

**

Leave a comment

Leave a comment